சமீபத்துல என் அப்பாவோட ஃப்ரெண்ட் பொண்ணு கல்யாணத்துக்கு போய் இருந்தேன்.., மரத்திலிருந்து விழுந்த ஆப்பிள், எப்படி நியூட்டனை யோசிக்க வெச்சதோ?! அதேப்போல என்னையும் அங்கு நடக்குற சடங்குகள் ஏன், எதுக்கு செய்யுறாங்கன்னு யோசிக்க வச்சது!! உங்களுக்கு கல்யாணம் நடக்கும்போது இந்த சடங்குலாம் செஞ்சாங்களே!? அப்போ ஏன்னு கேக்கலியா? இல்ல எதுக்குன்னு யோசிக்கலியான்னு யாராவது அமெரிக்காவுல இருந்து வந்து கமெண்ட் போட்டா நான் கடுப்பாகிடுவேன்..., அதெல்லாம் யோசிக்குற நிலமைலயா அப்போ இருந்தேன்!! அட, வெட்கப்பட்டுக்கிட்டு இருந்தேன்ன்னு சொல்ல வந்தேன்பா!!
அம்மி மிதிப்பது: அம்மி மிதிக்குறது எதுக்குன்னா கல்யாணத்துக்கப்புறம் புருசனை தூக்கி போட்டு மிதிக்குறது, எப்படின்னு தெரிஞ்சுக்குறதுன்னுதான் இத்தனை நாள் நினைச்சுண்டு இருந்தேன்.., ஆனா, “ நான் ”கற்பு தன்மை”யில
அம்மியை போல.., அதாவது, கல்லு மாதிரி உறுதியா
இருப்பேன்ன்னு அர்த்தமாம்..,
அருந்ததி பார்ப்பது: இந்த சடங்கு செய்யும்போது மேல அருந்ததி தெரியுதான்னு பாருங்கன்னு ஐய்யர் சொன்னா..., பொழுது விடிஞ்சு சூரியன் பல்லை காட்டுற நேரத்துல அதுவும் மண்டபத்துக்குள்ள நட்சத்திரம் தெரியுமா? வாட் நான்சென்ஸ்ன்னு கிண்டல் அடிச்சிருக்கேன். ஆனா, பகல்ல ஒரு நட்சத்திரத்தை பார்க்க எவ்வளவு கூர்மையான பார்வையும், விழிப்புணர்வும் வேணுமோ அதே மாதிரி விழிப்புணர்வோடு என் குடும்ப
கெளரவத்தை காப்பாத்துவேன்னு அர்த்தமாம்...,
அக்னி வளர்ப்பது: எவ்வளவு காசு போட்டு பார்லர் போயி அழகா!! மாறி இருக்கோம். இப்போ போய் புகையை போட்டு கண்ணுல தண்ணி வரவச்சு மேக்கப்லாம் ஸ்பாயில்ன்னு நொந்துக்கிடுவேன்.., கல்யாணம் கட்டிக்கும் நாம, இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும், அன்யோன்யமாகவும் இருப்போம். உன்னை அறியாமல் நானும், என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால்!! இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் இருவரின் மனசாட்சியையும் சுட்டு பொசுக்கட்டும்ன்னு அர்த்தமாம்...,
வாழை மரம் கட்டுதல்: கல்யாண வீட்டுல ஏன் வாழை மரம் கட்டுறாங்க? கட்டலைன்னா கீழ விழுந்துடுமேன்னு ஜோக் அடிக்கத்தான் எனக்கு தெரியுமே தவிர, அதுக்கு அர்த்தம் தெரியாது.., வாழை மரம் வளர்ந்து, குலைதள்ளி தன்னோட ஆயுள் முடியுற நிலைக்கு வந்தாலும் கூட..., தனக்கு பிறகும் , மனிதருக்கு பலன் தர, தனது வாரிசை விட்டு செல்லுமே தவிர தன்னோடயே பலனை முடிச்சுக்காது. அதனால, கல்யாணம் கட்டிக்குறவங்க நீங்கரெண்டு பேரும் இந்த சமுதாயம் வளர வாழையடி வாழையா வாரிசுகளை தந்து உதவனும்ன்னு அர்த்தமாம்...,
மூணு முடிச்சு: ஒரே ஒர் முடிச்சு போட்டா கழட்டிக்கும்ன்னு கடி ஜோக் சொன்னதுண்டு. மாங்கல்யத்தில் போடும் முதல் முடிச்சி நீ
தெய்வத்திற்கும், மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள்.., ரெ ண்டாவது முடிச்சி ”குலபெருமையை நீ பாதுகாப்பாய்”ன்னும்
மூணாவது முடிச்சி ”குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீ”ன்னு அர்த்தமாம்
உலக
முழுக்க நடக்குற எல்லா கல்யாணத்துலயும் எதாவது ஒரு சாட்சி பொருள் பொண்ணுக்கு போடுறாங்க.., ஒரு சிலர் மோதிரம், ஒரு சிலர் கருகமணி, தமிழர்கள் தாலி, சில பழங்குடிகள்ல மிருகத்தோட பல்லு, எலும்புலாம் கூட அடையாளப்பொருளாம்.., எல்லா பொருளுமே எதோ ஒருவகையில நான் குடும்பஸ்தன்னு தனிச்சு காட்டவே இப்படிலாம் செய்யுறாங்க.. அப்படிப்பட்ட வழக்கங்களில்
ஒண்ணு தான் தாலிகட்டும் பழக்கமாகும் சங்ககாலத்தில் ”தாலி”ன்ற வார்த்தை
இலக்கியங்கள்ல அதிகமா பயன்பாட்டுல இல்லை. அதுக்காக பழங்கால தமிழர்கள் தாலி
கட்டாம வாழ்ந்தாங்கன்னு அர்த்தம் இல்லை..,
”தாலி”ன்ற வார்த்தை இல்லையே தவிர, அதே அர்த்தம் கொண்ட “மங்கலநாண்”ன்ற வார்த்தை இலக்கியங்கள்ல இருக்குது.., சிலப்பதிகாரத்துல கோவலன், கண்ணகி திருமணத்தை பத்தி குறிக்கும்போது, இளங்கோவடிகள் தாலிகட்டுவதை பற்றி பேசவே இல்லை அதனால தமிழர் திருமணங்களில் தாலியே இல்லைன்னு கூப்பாடு போடும் கூட்டமும் இருந்துச்சு.. ஆனா, அவங்களே ”மங்கள் வாழ்த்து படல”த்துல ”மங்கல அணி” ன்ற வார்த்தைக்கு அர்த்தம் என்னன்றதை தெரியாமலே போய்ட்டாங்க..,
“முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை
அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது”'''
ன்னு இளங்கோ அடிகள் மிக அழகா சொல்லியிருக்கார். அதாவது, திருமண நேரத்துல முரசுகள் ஒலிக்கின்றன, வெண்குடை உயர்கிறது வாழ்த்துக்கள் முழங்குகின்றன, மங்கல அணி எழுத்து போல் பதிகிறது. இதுதான் மேல சொன்ன பாட்டுக்கு இதான் அர்த்தம்.
”தாலி”ன்ற வார்த்தை இல்லையே தவிர, அதே அர்த்தம் கொண்ட “மங்கலநாண்”ன்ற வார்த்தை இலக்கியங்கள்ல இருக்குது.., சிலப்பதிகாரத்துல கோவலன், கண்ணகி திருமணத்தை பத்தி குறிக்கும்போது, இளங்கோவடிகள் தாலிகட்டுவதை பற்றி பேசவே இல்லை அதனால தமிழர் திருமணங்களில் தாலியே இல்லைன்னு கூப்பாடு போடும் கூட்டமும் இருந்துச்சு.. ஆனா, அவங்களே ”மங்கள் வாழ்த்து படல”த்துல ”மங்கல அணி” ன்ற வார்த்தைக்கு அர்த்தம் என்னன்றதை தெரியாமலே போய்ட்டாங்க..,
“முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை
அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது”'''
ன்னு இளங்கோ அடிகள் மிக அழகா சொல்லியிருக்கார். அதாவது, திருமண நேரத்துல முரசுகள் ஒலிக்கின்றன, வெண்குடை உயர்கிறது வாழ்த்துக்கள் முழங்குகின்றன, மங்கல அணி எழுத்து போல் பதிகிறது. இதுதான் மேல சொன்ன பாட்டுக்கு இதான் அர்த்தம்.
ஆண், பெண்ணை அடிமையாக்குவதோ!! இல்லை பெண், ஆணை அடிமையாக்குவதோ குடும்பம் மற்றும் சமுதாய பிரச்சனையே தவிர.., அது, சடங்கு பிரச்சனை இல்லை.எல்லா திருமண சடங்கிலும் நீ தாலி அல்லது அதற்கு இணையான ஒரு அடையாளாத்தை அணிந்திருக்கிறாய் அதனால எனக்கு நீ அடிமை ன்ற வாசகம் கிடையவே கிடையாது.

கல்யாணத்தப்போ ஒரு அடையாள பொருள் அணிவிக்குறதுக்கு காரணம், “ஆண்மகனான நான், உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாகவும், உன் வாழ்வில் இனி வரும் இன்ப, துன்பங்களில் பிரியாமல் துணை இருப்பேன்ன்னுதான்..
எல்லா திருமண சடங்குகளும் ஆணையும்,
பெண்ணையும் சமமாதான் பார்க்குதே தவிர ஆண், பெண் ஏற்ற தாழ்வு கற்பிக்கும் படி
எதுவும் கிடையாது . அதுல இருக்குற உண்மைகளை கண்டறிய வேண்டியது தான் பக்குவப்பட்ட மனிதர்களின் வேலை.. அந்த பக்குவப்பட்ட மனிதர்களாக நாமிருப்போமே!?



