Thursday, June 27, 2013

கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிரா?!சமீபத்துல என் அப்பாவோட ஃப்ரெண்ட் பொண்ணு கல்யாணத்துக்கு போய் இருந்தேன்.., மரத்திலிருந்து விழுந்த ஆப்பிள்,  எப்படி நியூட்டனை  யோசிக்க வெச்சதோ?! அதேப்போல என்னையும் அங்கு நடக்குற  சடங்குகள் ஏன், எதுக்கு செய்யுறாங்கன்னு யோசிக்க வச்சது!! உங்களுக்கு கல்யாணம் நடக்கும்போது  இந்த சடங்குலாம் செஞ்சாங்களே!? அப்போ ஏன்னு கேக்கலியா? இல்ல எதுக்குன்னு  யோசிக்கலியான்னு யாராவது அமெரிக்காவுல இருந்து வந்து கமெண்ட் போட்டா நான் கடுப்பாகிடுவேன்..., அதெல்லாம் யோசிக்குற நிலமைலயா அப்போ இருந்தேன்!! அட, வெட்கப்பட்டுக்கிட்டு இருந்தேன்ன்னு சொல்ல வந்தேன்பா!!


அம்மி மிதிப்பது:  அம்மி மிதிக்குறது எதுக்குன்னா கல்யாணத்துக்கப்புறம் புருசனை தூக்கி போட்டு மிதிக்குறது, எப்படின்னு தெரிஞ்சுக்குறதுன்னுதான் இத்தனை நாள் நினைச்சுண்டு இருந்தேன்.., ஆனா,  நான் ”கற்பு தன்மை”யில அம்மியை போல..,  அதாவது,  கல்லு மாதிரி  உறுதியா இருப்பேன்ன்னு அர்த்தமாம்..,

 அருந்ததி பார்ப்பது:  இந்த சடங்கு செய்யும்போது மேல அருந்ததி தெரியுதான்னு பாருங்கன்னு ஐய்யர் சொன்னா...,  பொழுது விடிஞ்சு சூரியன் பல்லை காட்டுற நேரத்துல அதுவும் மண்டபத்துக்குள்ள  நட்சத்திரம் தெரியுமா? வாட் நான்சென்ஸ்ன்னு கிண்டல் அடிச்சிருக்கேன். ஆனா,கல்ல ஒரு நட்சத்திரத்தை பார்க்க எவ்வளவு கூர்மையான பார்வையும்,  விழிப்புணர்வும் வேணுமோ அதே மாதிரி  விழிப்புணர்வோடு என் குடும்ப கெளரவத்தை காப்பாத்துவேன்னு அர்த்தமாம்...,  
                                            
அக்னி வளர்ப்பது:  எவ்வளவு காசு போட்டு பார்லர் போயி அழகா!! மாறி இருக்கோம். இப்போ போய் புகையை போட்டு கண்ணுல தண்ணி வரவச்சு மேக்கப்லாம் ஸ்பாயில்ன்னு நொந்துக்கிடுவேன்..,   கல்யாணம் கட்டிக்கும் நாம,  இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும், அன்யோன்யமாகவும் இருப்போம். உன்னை அறியாமல் நானும்,  என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால்!! இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் இருவரின் மனசாட்சியையும் சுட்டு பொசுக்கட்டும்ன்னு அர்த்தமாம்...,

வாழை மரம் கட்டுதல்:  கல்யாண வீட்டுல ஏன்  வாழை மரம் கட்டுறாங்க? கட்டலைன்னா கீழ விழுந்துடுமேன்னு  ஜோக் அடிக்கத்தான் எனக்கு தெரியுமே தவிர, அதுக்கு அர்த்தம் தெரியாது.., வாழை மரம் வளர்ந்து,  குலைதள்ளி தன்னோட ஆயுள் முடியுற  நிலைக்கு வந்தாலும் கூட...,  தனக்கு பிறகும் , மனிதருக்கு  பலன் தர,  தனது வாரிசை விட்டு செல்லுமே தவிர தன்னோடயே  பலனை முடிச்சுக்காது. அதனால,  கல்யாணம் கட்டிக்குறவங்க  நீங்கரெண்டு பேரும்  இந்த சமுதாயம் வளர வாழையடி வாழையா வாரிசுகளை தந்து  உதவனும்ன்னு அர்த்தமாம்...,
                
 மூணு முடிச்சு:  ஒரே ஒர் முடிச்சு போட்டா கழட்டிக்கும்ன்னு கடி ஜோக் சொன்னதுண்டு.  மாங்கல்யத்தில்  போடும் முதல் முடிச்சி நீ தெய்வத்திற்கும்,  மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள்..,  ரெ ண்டாவது முடிச்சி ”குலபெருமையை நீ பாதுகாப்பாய்”ன்னும்  மூணாவது முடிச்சி ”குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீ”ன்னு அர்த்தமாம் 
 லக முழுக்க நடக்குற எல்லா கல்யாணத்துலயும் எதாவது ஒரு சாட்சி பொருள் பொண்ணுக்கு போடுறாங்க..,  ஒரு சிலர் மோதிரம், ஒரு சிலர் கருகமணி, தமிழர்கள் தாலி, சில பழங்குடிகள்ல மிருகத்தோட பல்லு, எலும்புலாம் கூட அடையாளப்பொருளாம்.., எல்லா பொருளுமே  எதோ ஒருவகையில நான் குடும்பஸ்தன்னு தனிச்சு காட்டவே இப்படிலாம் செய்யுறாங்க.. அப்படிப்பட்ட வழக்கங்களில் ஒண்ணு தான் தாலிகட்டும் பழக்கமாகும் சங்ககாலத்தில் ”தாலி”ன்ற வார்த்தை இலக்கியங்கள்ல  அதிகமா பயன்பாட்டுல  இல்லை. அதுக்காக  பழங்கால தமிழர்கள்  தாலி கட்டாம வாழ்ந்தாங்கன்னு அர்த்தம் இல்லை..,

”தாலி”ன்ற வார்த்தை  இல்லையே தவிர,  அதே அர்த்தம் கொண்ட “மங்கலநாண்”ன்ற வார்த்தை இலக்கியங்கள்ல இருக்குது.., சிலப்பதிகாரத்துல  கோவலன், கண்ணகி திருமணத்தை பத்தி  குறிக்கும்போது,  இளங்கோவடிகள் தாலிகட்டுவதை பற்றி பேசவே இல்லை அதனால தமிழர் திருமணங்களில் தாலியே இல்லைன்னு கூப்பாடு போடும் கூட்டமும் இருந்துச்சு..  ஆனா,  அவங்களே ”மங்கள் வாழ்த்து படல”த்துல  ”மங்கல அணி” ன்ற வார்த்தைக்கு அர்த்தம் என்னன்றதை தெரியாமலே போய்ட்டாங்க..,

முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை
அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது”'''

ன்னு  இளங்கோ அடிகள் மிக அழகா சொல்லியிருக்கார். அதாவது,  திருமண நேரத்துல முரசுகள் ஒலிக்கின்றன,  வெண்குடை உயர்கிறது வாழ்த்துக்கள் முழங்குகின்றன,  மங்கல அணி எழுத்து போல் பதிகிறது. இதுதான் மேல சொன்ன பாட்டுக்கு இதான் அர்த்தம். 

ஆண், பெண்ணை அடிமையாக்குவதோ!!   இல்லை பெண்,  ஆணை அடிமையாக்குவதோ குடும்பம் மற்றும் சமுதாய   பிரச்சனையே தவிர.., அது, சடங்கு பிரச்சனை இல்லை.எல்லா திருமண சடங்கிலும்  நீ தாலி அல்லது அதற்கு இணையான ஒரு அடையாளாத்தை அணிந்திருக்கிறாய் அதனால எனக்கு நீ அடிமை ன்ற வாசகம் கிடையவே கிடையாது.


                                              

கல்யாணத்தப்போ ஒரு அடையாள பொருள் அணிவிக்குறதுக்கு காரணம், “ஆண்மகனான நான், உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாகவும், உன் வாழ்வில் இனி வரும் இன்ப, துன்பங்களில் பிரியாமல் துணை  இருப்பேன்ன்னுதான்..

எல்லா திருமண சடங்குகளும்  ஆணையும், பெண்ணையும் சமமாதான் பார்க்குதே தவிர ஆண், பெண் ஏற்ற தாழ்வு கற்பிக்கும் படி எதுவும் கிடையாது . அதுல இருக்குற உண்மைகளை கண்டறிய வேண்டியது தான் பக்குவப்பட்ட மனிதர்களின் வேலை..  அந்த பக்குவப்பட்ட மனிதர்களாக நாமிருப்போமே!?


24 comments:

 1. தூக்கி போட்டு மிதிக்குறது உட்பட நீங்கள் நினைத்தது கலக்கல்...

  ReplyDelete
 2. திருமணம் சடங்களை முன் நிறுத்தி
  எத்தனை உண்மைகளை விளக்கியிருகிறது ..!

  ReplyDelete
 3. இவுளவு விஷயங்கள் இதில் இருப்பது என்னைபோல பலருக்கும் தெரியாது நல்ல உதாரணங்களுடன் அருமையாக விளக்கம் கொடுத்துளீர்கள் இன்றைய தலைமுறையினர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. அம்மி மாதிரி புருசனை தூக்கிப் போட்டு மிதிககறதா... பாவம் மாப்ளை. விளக்கங்கள் அருமை.

  ReplyDelete
 5. அம்மி மாதிரி புருசனை தூக்கிப் போட்டு மிதிககறதா... பாவம் மாப்ளை. விளக்கங்கள் அருமை.

  ReplyDelete
 6. //உங்களுக்கு கல்யாணம் நடக்கும்போது இந்த சடங்குலாம் செஞ்சாங்களே!? அப்போ ஏன்னு கேக்கலியா? இல்ல எதுக்குன்னு யோசிக்கலியான்னு யாராவது அமெரிக்காவுல இருந்து வந்து கமெண்ட் போட்டா நான் கடுப்பாகிடுவேன்..., அதெல்லாம் யோசிக்குற நிலமைலயா அப்போ இருந்தேன்!! அட, வெட்கப்பட்டுக்கிட்டு இருந்தேன்ன்னு சொல்ல வந்தேன்பா///


  வெட்கமா உங்களுக்கா? ஹாஹஹஹா.... நம்ம கிட்ட ஒரு அடிமை வந்து மாட்டிகிட்டான் என்ற சந்தோஷத்தல தலைகால் புரியாம நீங்க இருந்தது எனக்கு தெரியாதா என்ன

  ReplyDelete
 7. ///ம்மி மிதிக்குறது எதுக்குன்னா கல்யாணத்துக்கப்புறம் புருசனை தூக்கி போட்டு மிதிக்குறது, எப்படின்னு தெரிஞ்சுக்குறதுன்னுதான் இத்தனை நாள் நினைச்சுண்டு இருந்தேன்.///

  அடக்கடவுளே இத்தனை நாளா இப்படிதான் புருசனை தூக்கி போட்டு மிதிச்சீங்களா.. அட வயசான காலத்திலேயாவது படிச்சு தெரிஞ்சுகிட்டீங்களே நல்லதுதான்

  ReplyDelete
 8. ///வாட் நான்சென்ஸ்ன்னு கிண்டல் அடிச்சிருக்கேன். ///

  உங்களை மாதிரி ஆளுங்க இப்படி பேசுவீங்கனு தெரிஞ்சுதான் மண்டபத்திலே பெரிய ஸ்டாரா கட்டி தொங்கவிட்டிருந்தாங்கா ஆனா கல்யாணத்தன்று நீங்க சோடா புட்டி கண்ணாடியை போட மறந்தீட்டுங்கள நீங்க. அது இப்போ ஞாபகம் இல்லையா என்ன

  ReplyDelete
 9. அக்னி வளர்ப்பது எதற்கு என்றால் என்னதான் நீங்க மேக்கப் போட்டிருந்தாலும் கிச்சன்ல அடுப்பு மூட்டுறது நீங்கதான் என்று சொல்லாமல் சொல்லுகிறாரகள் ஆனா நீங்க என்னென்ன வேற விளக்கம் தரீங்க

  ReplyDelete
 10. ///உலக முழுக்க நடக்குற எல்லா கல்யாணத்துலயும் எதாவது ஒரு சாட்சி பொருள் பொண்ணுக்கு போடுறாங்க.//

  அப்படியா எங்க கல்யாணத்தில சாட்சியாய் நண்பர்கள் வந்து கையெழுத்து போட்டாங்க அவ்வளவுதாங்க தாலியா அப்படின்னா என்னங்க

  ReplyDelete
  Replies
  1. ஐயோ! இந்த ஆட்டத்துக்க்கு நான் வரலை.., ஏற்கனவே தாலின்ற பேர்ல சூடான விவாதம் ஓடிட்டு இருக்கு.. இதுல நான் வேற கருத்து சொல்லி மாட்டிக்கனுமா?! எல்லாம் சரி, எனக்கு நேரமில்லைன்னு உங்க பிளாக்குல போட்டுட்டு இங்க வந்து என்னை கலாய்க்குறீங்களே! இதுக்கு மட்டும் எங்கிருந்து நேரம் கிடைச்சுதாம்

   Delete
 11. இறுதியாக பிள்ளைக்கு கல்யாணம் பண்னுகிற நேரத்துலயாவது இதற்கெல்லாம் அர்த்தம் தெரிஞ்சுகிட்டீங்கன்னு சந்தோசமாக இருக்குது சகோ

  ReplyDelete
 12. இந்த மதுரை தமிழனை இன்னும் சரியா அவங்க மனைவி கவனிக்கவில்லை போல....இவ்ளோ கேள்வி கேட்கப்படாதே.

  ReplyDelete
 13. கொஞ்சம் ” மாடர்ன் “, கொஞ்சம் “பழமை”, கொஞ்சும் “சிலம்பு” வரிகளுடன் ஒரு நல்ல பதிவு.

  ReplyDelete
 14. திருமணச் சடங்குகளுக்கான விளக்கம் அருமை ராஜி. சிலப்பதிகாரத்திலிருந்து காட்டிய மேற்கோள் சிறப்பு. திருமண சடங்குகளுக்கான விளக்கமாக நீங்கள் நினைத்திருந்த கமெண்ட் அனைத்தும் கலக்கல்.

  ReplyDelete
 15. அக்கா அருமையான விளக்கங்கள்...

  ReplyDelete
 16. நல்ல விளக்கங்கள்!ஆய்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 17. ஓ.... கல்யாணத்துல இவ்வளவு இருக்கா...?

  எனக்கு காலாங்கத்தால கல்யாணம் ஆச்சி.
  துாங்கி விழிச்சப்போ கழுத்துல தாலி தொங்குச்சி...
  அப்புறம் ஆறு நாளில் பிரான்சுக்கு வந்தாச்சி..
  அதனால... இவ்வளவு விசயங்கள் இருக்கிறதை எல்லாம
  உங்களை மாதிரி பெரியவர்கள் எழுதினால் அதைப்
  படிச்சி தெரிஞ்சி கொண்டால் தான் உண்டு... ம்ம்ம்...

  நன்றிங்க ராஜி மேடம்.

  ReplyDelete
 18. கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிரா? இதுலே பொருள் குற்றம் கீதுங்க!
  பயிர் என்றால் மூணு மாசம், ஆறு மாசம் அல்லது பத்து மாதம் (கரும்பு ஒரு பயிர் என்று ஒத்துக்கொண்டால்). அதற்க்கு மேல் இருந்தால் களைங்க--அதுக்கும் மேலே இருந்தால் ஆது குப்பைங்க...!

  ReplyDelete
 19. வில்லங்கமான விளக்கம் அருமை

  ReplyDelete
 20. அருமையான விளக்கங்கள்.

  ReplyDelete
 21. தூக்கிப் போட்டு மிதிக்கறதா!.... பாவங்க..... :)

  ReplyDelete