ஹோட்டல்ல விதம் விதமா சாப்பாட்டு ஐட்டம் இருந்தாலும், பசங்களை ஈர்ப்பதுலாம் பரோட்டா, நூடுல்ஸ், ஃப்ரை ரைஸ்தான். ஆனா, ஃப்ரை ரைஸ் கடையில் வாங்கினால் காரம் அதிகமா கொட்டி கொடுத்துடுறாங்க. இல்லன்னா, பச்சகுழந்தை வாயில் முத்தம் கொடுத்தமாதிரி சப்ப்புன்னு இருக்கும். அதனால, இப்பலாம் நானே வீட்டுலயே ஃப்ரை ரைஸ் செஞ்சுடுறது. ஹோட்டல்ல, அஜினோமோட்டோலாம் சேர்க்குறாங்கன்னு வேற டிவி நியூஸ்ல பயமுறுத்துறாய்ங்க. வீட்டில் செஞ்சா இந்த பயம்லாம் இல்ல பாருங்க...
தேவையான பொருட்கள்...
உதிர் உதிரா வடிச்ச சாதம்..
கேரட், பீன்ஸ், கோஸ், குடை மிளகாய், வேகவச்ச பட்டாணி, வெங்காய தாள்ன்னு கைக்கு கிடைக்கும் காய்கறிகள்,
உப்பு,
சோயா சாஸ்,
கொத்தமல்லி
எண்ணெய்
அரிசியை ஊற வெச்சு, சாதமா வேகவைக்கும்போது கீறின ப.மிளகாய், பட்டை, லவங்கம், உப்பு போட்டு வடிச்சுக்கனும். ஊற வெச்ச பட்டாணி/ சென்னாவை வேக வச்சுக்கனும். கேரட், பீன்சை பொடுசா நறுக்கி உப்பு போட்டு லேசா வேகவச்சு வடிச்சுக்கனும். குடைமிளகாய், முட்டைக்கோஸ், வெங்காய தாள்லாம் பொடுசா வெட்டிக்கனும்.
தேவையான பொருட்கள்...
உதிர் உதிரா வடிச்ச சாதம்..
கேரட், பீன்ஸ், கோஸ், குடை மிளகாய், வேகவச்ச பட்டாணி, வெங்காய தாள்ன்னு கைக்கு கிடைக்கும் காய்கறிகள்,
உப்பு,
சோயா சாஸ்,
கொத்தமல்லி
எண்ணெய்
அரிசியை ஊற வெச்சு, சாதமா வேகவைக்கும்போது கீறின ப.மிளகாய், பட்டை, லவங்கம், உப்பு போட்டு வடிச்சுக்கனும். ஊற வெச்ச பட்டாணி/ சென்னாவை வேக வச்சுக்கனும். கேரட், பீன்சை பொடுசா நறுக்கி உப்பு போட்டு லேசா வேகவச்சு வடிச்சுக்கனும். குடைமிளகாய், முட்டைக்கோஸ், வெங்காய தாள்லாம் பொடுசா வெட்டிக்கனும்.
வாணலியில் எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் குடைமிளகாய் போட்டு வதக்கிக்கனும்.....,
அடுத்து முட்டைக்கோஸ், வெங்காயதாள்லாம் சேர்த்து வதக்கிக்கனும்...
வேகவச்சு வடிச்சிருக்கும் பட்டாணி/சென்னா, பீன்ஸ், கேரட்டை சேர்த்துக்கனும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து ஈரமில்லாத அளவுக்கு வதக்கிக்கனும்...
வடிச்சு வச்சிருக்கும் சாதத்தை கொட்டி நல்லா கிளறிக்கனும். சோயா சாஸ் சேர்த்து நல்லா கிளறி கொ.மல்லி இழை பொடுசா நறுக்கி போட்டு பரிமாறிக்கலாம்.
ஃப்ரை ரைசின் சுவையை கூட்ட உருளையை சின்ன சின்ன சதுரமா வெட்டி எண்ணெயில் பொறிச்செடுத்து இதில் சேர்க்கலாம். சாப்பிடும்போது அது தனி ருசியை கொடுக்கும். காளிஃப்ளவரை அப்படியே சேர்க்காம, காளிஃப்ளவரை சுத்தம் செஞ்சு தயிர், மிளகாய்தூள், உப்பு, கார்ன்ஃப்ளவர் மாவு, இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து ஊற வச்சு எண்ணெயில் பொறிச்சு காளிஃப்ளவர் பக்கோடாவை சேர்க்கலாம். இப்பலாம் கடையில் ஃப்ரை ரைஸ்க்குன்னு மசாலா பொடி விக்குது. அதை சேர்த்தாலும் ஹோட்டல் டேஸ்ட் வாசனை வந்திடும். பீன்ஸ் கேரட்டை ஹோட்டல்ல வேகவைக்க மாட்டாங்க. ஆனா வீட்டில் செய்யும்போது அப்படி வேகாது. அதனால அரைவேக்காட்டில் வேகவச்சு சேர்த்துக்கலா
அசைவ பிரியர்கள் முட்டையை வாணலியில் உடைச்சு ஊத்தி, உப்பு, மஞ்சள் சேர்த்து கிளறி சேர்க்கலாம். ஆனா, முட்டையை ரொம்ப பொடிசா கிளறிக்கக்கூடாது. காளிஃபிளவரை போலவே, சிக்கனுடன், கார்ன்ஃப்ளவர், தயிர், உப்பு, மிளகாய்தூள், இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து ஊற வச்சு எண்ணெயில் பொறிச்சு சேர்த்தால் ஹோட்டல் டேஸ்ட் வரும்...
கிச்சன் கார்னர் தொடரும்...
ராஜி