Tuesday, April 24, 2018

வெஜ் ஃப்ரை ரைஸ் - கிச்சன் கார்னர்

ஹோட்டல்ல விதம் விதமா சாப்பாட்டு ஐட்டம் இருந்தாலும், பசங்களை ஈர்ப்பதுலாம் பரோட்டா, நூடுல்ஸ், ஃப்ரை ரைஸ்தான். ஆனா, ஃப்ரை ரைஸ் கடையில் வாங்கினால் காரம் அதிகமா கொட்டி கொடுத்துடுறாங்க. இல்லன்னா, பச்சகுழந்தை வாயில் முத்தம் கொடுத்தமாதிரி சப்ப்புன்னு இருக்கும்.  அதனால, இப்பலாம் நானே வீட்டுலயே ஃப்ரை ரைஸ் செஞ்சுடுறது. ஹோட்டல்ல, அஜினோமோட்டோலாம் சேர்க்குறாங்கன்னு வேற டிவி நியூஸ்ல பயமுறுத்துறாய்ங்க. வீட்டில் செஞ்சா இந்த பயம்லாம் இல்ல பாருங்க...

தேவையான பொருட்கள்...
உதிர் உதிரா வடிச்ச சாதம்..
கேரட், பீன்ஸ், கோஸ், குடை மிளகாய், வேகவச்ச பட்டாணி, வெங்காய தாள்ன்னு கைக்கு கிடைக்கும் காய்கறிகள்,
உப்பு,
சோயா சாஸ்,
கொத்தமல்லி
எண்ணெய்

அரிசியை ஊற வெச்சு, சாதமா வேகவைக்கும்போது கீறின ப.மிளகாய், பட்டை, லவங்கம், உப்பு போட்டு வடிச்சுக்கனும். ஊற வெச்ச பட்டாணி/ சென்னாவை வேக வச்சுக்கனும்.  கேரட், பீன்சை பொடுசா நறுக்கி உப்பு போட்டு லேசா வேகவச்சு வடிச்சுக்கனும். குடைமிளகாய், முட்டைக்கோஸ், வெங்காய தாள்லாம் பொடுசா வெட்டிக்கனும்.

வாணலியில் எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் குடைமிளகாய் போட்டு வதக்கிக்கனும்....., 

அடுத்து முட்டைக்கோஸ், வெங்காயதாள்லாம் சேர்த்து வதக்கிக்கனும்...

வேகவச்சு வடிச்சிருக்கும் பட்டாணி/சென்னா, பீன்ஸ், கேரட்டை சேர்த்துக்கனும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து ஈரமில்லாத அளவுக்கு வதக்கிக்கனும்...
வடிச்சு வச்சிருக்கும் சாதத்தை கொட்டி நல்லா கிளறிக்கனும். சோயா சாஸ் சேர்த்து நல்லா கிளறி கொ.மல்லி இழை பொடுசா நறுக்கி போட்டு பரிமாறிக்கலாம்.
ஃப்ரை ரைசின் சுவையை கூட்ட உருளையை சின்ன சின்ன சதுரமா வெட்டி எண்ணெயில் பொறிச்செடுத்து  இதில் சேர்க்கலாம். சாப்பிடும்போது அது தனி ருசியை கொடுக்கும். காளிஃப்ளவரை அப்படியே சேர்க்காம, காளிஃப்ளவரை சுத்தம் செஞ்சு தயிர், மிளகாய்தூள், உப்பு, கார்ன்ஃப்ளவர் மாவு, இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து ஊற வச்சு எண்ணெயில் பொறிச்சு காளிஃப்ளவர் பக்கோடாவை சேர்க்கலாம். இப்பலாம் கடையில் ஃப்ரை ரைஸ்க்குன்னு மசாலா பொடி விக்குது. அதை சேர்த்தாலும் ஹோட்டல் டேஸ்ட் வாசனை வந்திடும். பீன்ஸ் கேரட்டை ஹோட்டல்ல வேகவைக்க மாட்டாங்க. ஆனா வீட்டில் செய்யும்போது அப்படி வேகாது. அதனால அரைவேக்காட்டில் வேகவச்சு சேர்த்துக்கலா

அசைவ பிரியர்கள் முட்டையை வாணலியில் உடைச்சு ஊத்தி,   உப்பு, மஞ்சள் சேர்த்து  கிளறி சேர்க்கலாம். ஆனா, முட்டையை ரொம்ப பொடிசா கிளறிக்கக்கூடாது. காளிஃபிளவரை போலவே, சிக்கனுடன், கார்ன்ஃப்ளவர், தயிர், உப்பு, மிளகாய்தூள், இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து ஊற வச்சு எண்ணெயில் பொறிச்சு சேர்த்தால் ஹோட்டல் டேஸ்ட் வரும்...

கிச்சன் கார்னர் தொடரும்...
நன்றியுடன்,
ராஜி

14 comments:

  1. சிறப்பு. உணவகங்களில் மேலதிகப் பொருட்கள் சேர்க்கப் படுகின்றன. அவை உடலுக்கு நல்லதல்ல. மேலும் சுத்தமும் குறைவு. ஆகவே இம்மாதிரியான உணவு வகைகளை வீட்டிலேயே செய்து உண்பது நல்லது. வாசம் மூக்கைத் துளைக்கிறது. இங்கே அனுப்பி வைத்தால் ஒரு பிடி பிடிக்கலாம்.

    ஐ.பி.எல்-2018 | டெல்லியை வென்று முதலிடத்தைப் பிடித்தது பஞ்சாப்!
    http://newsigaram.blogspot.com/2018/04/Kxip-v-dd-game22.html
    #ஐபிஎல் #ஐபிஎல்2018 #கிரிக்கெட் #விளையாட்டு #சிகரம் #IPL #IPL2018 #VIVOIPL #CRICKET #DDvKXIP #MIvSRH #CSKvRCB

    ReplyDelete
    Replies
    1. எங்கிட்டாவது வெளியில் செல்லும்போது ஹோட்டலில் சாப்பிடுவதோடு சரி. மத்தபடி வீட்டு உணவுதான். அதேப்போல ரெடிமேட் பொடிலாம்கூட வாங்குறதில்ல. வீட்டுலயே அரைச்சுக்குவேன்.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

      Delete
  2. அருமையான சமையல் குறிப்பு/ரெசிப்பி.......//// பச்சகுழந்தை வாயில் முத்தம் கொடுத்தமாதிரி சப்ப்புன்னு இருக்கும்.////பார்றா......... நன்றி பதிவுக்கு.

    ReplyDelete
    Replies
    1. இந்த வார்த்தையை அடிக்கடி என் அப்பா சொல்வார்ண்ணே

      Delete
  3. ஃப்ரைடு ரைஸ் எல்லாம் பாக்க நல்லாத்தான் இருக்கு, அது என்ன தொட்டுக்க சாஸ்.....ஏன் ஒரு பொரியல் பண்ண என்னவாம்.

    ReplyDelete
    Replies
    1. இட்லிக்கு சாம்பார், தோசைக்கு சட்னி, பொங்கல் சாம்பார், சட்னி, பூரி கிழங்கு மாதிரி ஃப்ரை ரைசுக்கு சாஸ்.

      Delete
  4. கலக்குங்க சகோ ஸூப்பர்

    ReplyDelete
  5. பொதுவாக ப்ரைட் ரைசில் போடக் கூடிய காய்கறிகள் பச்சை காய்கறிகளாக கூட சாப்பிடக் கூடிய காய்கறி வகையை சார்ந்ததுதான் அதனால்தான் அதை அதிகம் வேக வைக்கமாட்டார்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ண்ணா. ஆனா, இங்கிட்டு இருக்குறதுக்குலாம் பச்சை வாசனை இருக்கக்கூடாது . அதனால லேசா அரை பதத்துக்கு வேக வச்சுப்பேன். பச்சையா சேர்த்தால் சீக்கிரம் கெட்டு போகும். லேசா வேக வச்சா கொஞ்ச அதிக நேரம் தாக்கு பிடிக்கும்

      Delete
  6. ஃப்ரைட் ரைஸ்! அசத்துங்க.

    எனக்கு ஏனோ இது பிடிக்காது.

    ReplyDelete
    Replies
    1. கடைகளில் வெஜ் ஃப்ரை ரைஸ் கேட்டாலும் சிக்கன், முட்டை ஃப்ரை ரைஸ் செஞ்ச பாத்திரத்தில்தான் செய்றாங்க. அதனால இருக்குமோ!!

      Delete
  7. சோயா சாஸ் சேர்க்கறதில்லை. பட்டை லவங்கம் சேர்த்ததில்லை. வெள்ளை மிளகுத் தூள் இறக்கும் முன் சேர்ப்போம். மற்றபடி இதே போல செய்வதுண்டு. நீங்கள் சொல்லி இருப்பவற்றில் காலிப்ளவர் போடுவது போல, பிரெட் சிறு துண்டுகளாக்கி வறுத்து சேர்க்கலாம்.

    ​ஃபிரைட் ரைஸ் என்று வரும்போது நாங்கள் காலிப்ளவர், ப்ரெட் எல்லாம் சேர்க்க மாட்டோம். வெஜ் புலாவ் போன்றவற்றில் சேர்க்கலாம்!​

    ReplyDelete
    Replies
    1. ஃப்ரெட்டும் சேர்க்கலாம். செஞ்சு பார்த்திடலாம்...

      Delete