பொங்கல் பண்டிகையின்போது நவதான்ய குழம்பும், கருணைக்கிழங்கு காரக்குழம்பு அத்தோடு வெந்தயக்கீரை சாம்பாரும் வைப்போம். டிசம்பர் , ஜனவரி மாதத்தில் மட்டுமே இந்த கீரை கிடைக்கும். கண்ணுக்கு அகப்படும்போதெல்லாம் வாங்கி வந்து சமைப்பதுண்டு. மத்த நாளில் இந்த குழம்பை வச்சாலும் பொங்கல் அன்னிக்கு வச்ச ருசி வருவதில்லை. அதன் காரணம் என்னன்னு தெரில :-(
தேவையான பொருட்கள்..
வெந்தயக்கீரை - ஒரு கட்டு
து.பருப்பு - 1/2 ஆழாக்கு
ப.மிளகாய் - காரத்துக்கேற்ப
காய்ந்த மிளகாய் - 1
பூண்டு - 10பல்
தக்காளி- 2
வெங்காயம் = 1சிறியது
எண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
கடுகு/வடகம்
கீரையை நல்லா அலசிட்டு ஆய்ஞ்சுக்கனும்... துவரம்பருப்பை நல்லா வேகவிடனும்...
வெந்த பருப்பில் பூண்டு,, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்க்கவும்...
பச்சைமிளகாயை கீறி சேர்த்துக்கனும்., காரத்துக்கு தகுந்த மாதிரி சரிபாதியாய் காய்ந்த மிள்காயை சேர்த்துக்கலாம். சிலர் ப.மி சேர்க்காம மிளகாய்தூள் சேர்த்துப்பாங்க.
லேசா கொதிச்சதும் ஆய்ந்து வச்சிருக்கும் வெந்தயக்கீரையை சேர்த்துக்கனும்..
கீரை வெந்ததும் தேவையான அளவு உப்பும், புளியும் சேர்த்துக்கனும்.. சிலர் புளியை கரைச்சு சேர்ப்பாங்க. நான் அப்படியே சேர்த்துப்பேன்.
கல்சட்டியில் போட்டு நல்லா கடைஞ்சுக்கனும். வடகம் போட்டு தாளிச்சு கொட்டினால் செம வாசனையாவும் ருசியாவும் இருக்கும்.வீட்ல வடகம் இல்லாட்டி எண்ணெய் ஊற்றி காய்ஞ்சதும் கடுகு போட்டு பொரிஞ்சதும் பொடுசா நறுக்கிய வெங்காயம், நசுக்கிய பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி கொட்டினாலும் வாசம் செமயா இருக்கும்.
வெந்தயக்கீரை சாம்பார் ரெடி... நெய் சேர்த்து சாப்பிட்டா செமயா இருக்கும். வெந்தயக்கீரை உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும்..
நன்றியுடன்,
ராஜி

நன்றியுடன்,
ராஜி