Tuesday, March 05, 2019

உடலுக்கு குளிர்ச்சியை தரும் வெந்தயக்கீரை சாம்பார் - கிச்சன் கார்னர்

பொங்கல் பண்டிகையின்போது நவதான்ய குழம்பும், கருணைக்கிழங்கு காரக்குழம்பு அத்தோடு வெந்தயக்கீரை சாம்பாரும் வைப்போம். டிசம்பர் , ஜனவரி மாதத்தில் மட்டுமே இந்த கீரை கிடைக்கும்.  கண்ணுக்கு அகப்படும்போதெல்லாம் வாங்கி வந்து சமைப்பதுண்டு. மத்த நாளில் இந்த குழம்பை வச்சாலும் பொங்கல் அன்னிக்கு வச்ச ருசி வருவதில்லை. அதன் காரணம் என்னன்னு தெரில :-(

தேவையான பொருட்கள்..
வெந்தயக்கீரை - ஒரு கட்டு
து.பருப்பு - 1/2 ஆழாக்கு
ப.மிளகாய் - காரத்துக்கேற்ப
காய்ந்த மிளகாய் - 1
பூண்டு - 10பல்
தக்காளி- 2
வெங்காயம் = 1சிறியது
எண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
கடுகு/வடகம்

கீரையை நல்லா அலசிட்டு ஆய்ஞ்சுக்கனும்...  துவரம்பருப்பை நல்லா வேகவிடனும்...
வெந்த பருப்பில் பூண்டு,, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்க்கவும்...
பச்சைமிளகாயை கீறி சேர்த்துக்கனும்., காரத்துக்கு தகுந்த மாதிரி சரிபாதியாய் காய்ந்த மிள்காயை சேர்த்துக்கலாம். சிலர் ப.மி சேர்க்காம மிளகாய்தூள் சேர்த்துப்பாங்க.
லேசா கொதிச்சதும் ஆய்ந்து வச்சிருக்கும் வெந்தயக்கீரையை சேர்த்துக்கனும்..

கீரை வெந்ததும் தேவையான அளவு உப்பும், புளியும் சேர்த்துக்கனும்.. சிலர் புளியை கரைச்சு சேர்ப்பாங்க. நான் அப்படியே சேர்த்துப்பேன்.

கல்சட்டியில் போட்டு நல்லா கடைஞ்சுக்கனும். வடகம் போட்டு தாளிச்சு கொட்டினால்  செம வாசனையாவும் ருசியாவும் இருக்கும்.வீட்ல வடகம் இல்லாட்டி எண்ணெய் ஊற்றி காய்ஞ்சதும் கடுகு போட்டு பொரிஞ்சதும் பொடுசா நறுக்கிய வெங்காயம், நசுக்கிய பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி கொட்டினாலும் வாசம் செமயா இருக்கும்.
Image may contain: food
வெந்தயக்கீரை சாம்பார் ரெடி... நெய் சேர்த்து சாப்பிட்டா செமயா இருக்கும். வெந்தயக்கீரை உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும்..

நன்றியுடன்,
ராஜி

16 comments:

  1. சூப்பர் ரெசிப்பி ராஜி. இங்கு வெந்தயக்கீரை நல்லாவே கிடைக்குது. இதே போன்று செய்வதுண்டு....வெங்காயம் தக்காளி கொஞ்சமா வதக்கியும் சேர்த்துச் செய்வதுண்டு...

    சூப்பரா இருக்கு உங்க குழம்பு. குழம்புபக்கத்துல இருக்கறது என்ன துவையல்?? பருப்புத் துவையல்? தேங்காய்த்துவையல்?

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இங்கன தைமாதம் தவிர்த்து வெந்தயக்கீரை கிடைக்காது.

      கொள்ளு, து.பருப்பு, வேப்பம்பூன்னு எல்லாம் கலந்தது..

      Delete
  2. கொளுத்தும் வெயிலுக்கு மிகவும் நல்லது...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். ஆனா இப்ப கிடைக்காதே!

      Delete
  3. வடகம் போட்டு தாளிச்சு செஞ்சா இந்த குழம்பு ரொம்ப சுவையா இருக்கும் கா

    இங்க அடிக்கடி செய்வோம் ..

    ReplyDelete
  4. செய்து பார்க்க சொல்லுகிறேன் சகோ.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றியண்ணே

      Delete
  5. ஆஹா.,. இங்கேயும் வெந்தயக் கீரையா..... நடத்துங்க.....

    ReplyDelete
    Replies
    1. ஆமா. இது திட்டமிட்ட சதியான்னு தெரியலை

      Delete
  6. வெங்காயம் தக்காளி, பூண்டு இல்லாமலும் செய்ததுண்டு. குழம்புவடகம் என்றே கிடைக்கும் அதைச் சேர்க்கலாம். சுவையான சாம்பார்.

    ReplyDelete
    Replies
    1. எல்லாருக்குமே வடகம் பிடிப்பதில்லை சகோ

      Delete
  7. புளியைக் கரைத்தே விடுவோம். அப்படியே போடுவதில்லை.

    படங்கள் அழகாய் இருக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. என் மாமியார் வீட்டில் புளியை கரைச்சுதான் சேர்ப்பாங்க. அம்மா அப்படியே சேர்ப்பாங்க.

      Delete
  8. அருமையான வெந்தய கீரை சாம்பார் ரொம்ப நாள் ஆச்சு பிலாக் பக்கம் எல்லாம் கமென்ட் செய்து இப்ப தான் ஓவ்வொருத்தர் பதிவா பார்க்கிரேன் ராஜி

    ReplyDelete
  9. இங்கு துபாயில் எல்லா நேரமும் கிடைக்கும் நான் ட்ரை மேத்தியும் வாங்கி வைத்து கொள்வேன்

    ReplyDelete