Monday, November 29, 2010

நீயில்லாத நிகழ்காலம்





என்னுள் மட்டும் அல்ல‌
என் கவிதையிலும்
வெறுமை தெரிகிறது
நீ இல்லாத தருணங்களில்...,

உன்னிடம் சொல்ல நினைத்து
ஞாபகத்தில் சேமித்து வைத்தவை
நிறைந்து வழிந்து ஓடுகின்றன‌
நீ வருவாய் என்ற மலட்டு நம்பிக்கையில்..??!!

சர்க்கரை இல்லாமலே இனிக்கிறது
உன் நினைவுகள்.
நீ கன்னத்திலிட்ட முத்தமும்,
கைவிரல் கோர்த்து நடந்த பயணமும்
நினைவில் மெல்ல நகர்கிறது
அந்தக்கணத்தின் தீராதத் தாகத்தோடு..,

அணுஅணுவாய் சுகம் கண்டு
ஆசைத் தீரப் பேறுப் பெற்று
ஆயுள்வரைக் கூட வருவேன் என்று
தோளில் சாய்ந்து நீ உரைத்ததைக் கேட்டு,
நமக்கு நிழல் கொடுத்த மரம்
உறைந்துக் கிடக்கின்றது இன்று

மௌ சாட்சியாய் ..,


உன் ஆசை மொழிகளை பகிர வந்த

அலைப்பேசி அழைப்புகளையும்,
உன் காதலை சொல்ல வந்த

குறுஞ்செய்திகளையும்,
உன் அன்பை சுமந்து வந்த

பரிசுகளையும்
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்..,!!
அவை அறியாப்
பல நெருடல்களோடு..,

என்னை விட்டுவிட்டு
உன்னால் எப்படி முடிந்தது
வேறொருவன் கரம்பிடித்துப் போக
ஒரு பூவைப்போல்...,

தான் மலர்ந்த செடியை மறந்து??!!...,





குறிப்பு: அடுத்த பதிவு எனது நூறாவது பதிவு , மற்றும் எனது மகளின் உற்ற தோழி ஓவியாவின் பிறந்த நாள் டிசம்பர் 3 ம் நாள் வருகிறது. அதற்கும் சேர்த்து மிகப்பெரிய ட்ரீட் வைக்கலாமினு இருக்கேன். எனவே, டிசம்பர் 3 ம் தேதி, வெள்ளிக்கிழமை இரவு சுமார் எட்டு மணியளவில் பார்ட்டி இருக்கு. பதிவுலக நண்பர்கள் அனைவரும் கலந்துக் கொள்ள வேண்டுகிறேன். .
இடம்: அவரவர் வீடு.
தவறாது கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுகிறேன். .

நன்றி! நன்றி! நன்றி!


இவள்தான் ஓவியா


இவள்தான் என் மகள் தூயாவின் உற்ற தோழி. இவள் எனது மகளுக்கு இதே நாளில் வடபழனி முருகன் கோவிலில் பரிசாக கிடைத்தாள். என் மகளுக்கு எங்கள் வீட்டருகே யாரும் தோழிகள் இல்லாததால் இவள்தான் எல்லாமே.(பொம்மை என்று சொன்னால், கோவப்படுவாள்.) அது அவளுக்கு எந்த அளவு பிடிக்குமென்றால், எங்களுக்கு எதாவது அவளிடம் காரியம் சாதிக்க வேண்டுமென்றால், தூயாவை கொன்னுடுவோமினு என் மகனும், குப்பையில் தூக்கிப்போட்டுடுவேன்னு நானும் மிரட்டுமளவுக்கு அதன் மீது பைத்தியம் அவளுக்கு. தூங்கும்போது, அருகிலும், படிக்கும்போது அருகிலும், வெளியில் எங்காவது செல்லும்போது பத்திரமா இரு நு சொல்லி தன் அலமாரியில் வைத்து பூட்டிவிட்டுதான் செல்வாள். இன்று அது தனக்கு கிடைத்த நாளை அதன் பிறந்த நாள் என்று கூறி அதன் மீதுள்ள அலங்காரப் பொருட்களை அவளே செய்தாள்.

*******************************************************************************************************************



இன்று உன் பிறந்த நாளில்லை
ஒரு தேவதை எனக்காக
ம்ண்ணில் இறங்கி வந்த நாள்.
- தூயா




Friday, November 26, 2010

ஐ வில் கில் யூ


நான் ஆறாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்புக்கு சென்ற முதல் நாள்...,
(மைண்ட் வாய்ஸ் : ஹேய் நீ அம்புட்டு பெரிய படிப்புலாம் படிச்சு இருக்கியா?)

முதல் பீரியட்.., தமிழ் ஆசிரியர் வந்தார் "என் கோடை விடுமுறை" என்ற தலைப்பில் கட்டுரை எழுத சொன்னார். தமிழ் என்பதால் அசத்திட்டோமில்ல. பத்துக்கு எட்டு எடுத்து குட் வாங்கியாச்சு.

அடுத்த பீரியட் ஆங்கிலம். சார் வந்தார். வெளியூரிலிருக்கும் உன் நண்பனுக்கு பிறந்த நாளுக்கு வாழ்த்துக் கூறி கடிதம் எழுதுங்கள் என்றார்.


என்னவோ கருவாச்சிக் காவியம் எழுதுற வைரமுத்து போல மத்தப் பிள்ளைகளை ஒரு பார்வை பார்த்துட்டு .., சார்கிட்ட நல்லா பேரு வாங்கணுமின்னு வேகமா எழுத ஆரம்பிச்சேன்.., (மைண்ட் வாய்ஸ்: நல்ல பேரு வாங்குறது யாரு? நீயா? பார்ப்போம்..,)


பதட்டத்துல என்ன எழுதணும் னு மறந்து போச்சு . அப்படி இப்படி னு ஒப்பேத்தி முதல் ஆளா பேப்பரை குடுத்துட்டு ரிசல்ட்டுக்காக காத்திருந்தேன்.
( மைண்ட் வாய்ஸ்: ஆமா பெரிய I.A.S ரிசல்ட்)

எல்லாருக்கும் பேப்பரைக் குடுத்துட்டு பசங்களோட பேரும் மார்க்கும் சொன்னார்.
எல்லாரும் அஞ்சு, ஆறு மார்க் எடுத்து இருந்தாங்க. என் பேப்பர் மட்டும் வரலை. ஆஹா, நாமதான் முதல் மார்க்கு போல, கடைசியா நம்ம பேரு, மார்க் சொல்லிட்டு குடுப்பருனு நினைச்சு மனசு ரெக்க கட்டி பறக்குது.


கடைசியா ராஜி இங்க வா னு சார் கூப்பிட,

நானும் எதோ பத்மபூசன் விருது வாங்குற மிதப்புல போய் சார்கிட்ட நின்னேன்.

@@## $%% @@##$%%^&!@$%&* !!@#%&***** ணு சார் திட்ட

பசங்கலாம் "கொள்"னு சிரிக்குறாங்க.

நான் பேப்பரைக் கையில வாங்கிகிட்டு, மூஞ்சிய தொங்கப் போட்டுக்கிட்டு, என் இடத்துக்கு வந்து பேப்பரை எடுத்து பார்க்குறேன் அதுல இப்படிதான் இருந்தது...,

நீங்களே பாருங்க இதுக்கு போய் எங்க சார் அசிங்க அசிங்கமா திட்டுனார்.

To,
R.Sujatha,
No.132, NH Road,
Nehru nagar,

calcutta.

Hai Suji,


I am Raji. I am fine. How are you? you fine?

my father, mother, sister, my house cow fine. your father, mother, brother, sister, your house dog fine?

I vill (WILL) kill You. Happy birth day to you. Who are you? mani mani haappi retans off the day(many many Happy returns of the day)

With Love,

Your loving friend,
Raji.


(உங்க சாரா இருக்கப் போகவே உன்னை திட்டுரதோட விட்டுட்டார். நானாஇருந்தால் உன்னை அன்னிக்கே T.C. குடுத்து அனுப்பி இருப்பேன். இந்த பிளாக் உலகம்மவது நிம்மதியா இருந்திருக்கும். யாரு, யார் அது? வேற யாரு மைன்ட் வாய்ஸ்தான்)

Tuesday, November 23, 2010

இரவல் தா

என் கருத்துக்களை உன்னோடு
பகிர்ந்துக்கொள்ள அனுமதி கொடு...

உன்னோடு எனைச் சேர்த்த
வாழ்வொன்றை நினைத்துப்பார்..??!!!
ஒரு நொடியில், ஒரு கணமாவது...,

களவுப் போகாமல்
பத்திரப்படுத்திவைத்திருக்கிறேன்.,
என்னைப் பைத்தியமாக்கிய
உன் கண்களின் நட்சத்திரத்தை..,

புது அர்த்தங்கள் தேடி கொடு
பழமை மாறாத இன்பங்களுக்கு..,

எந்நேரமும் பிரிந்திருந்து
என்ன செய்யப் போகிறது
இணைத்து வைக்க உதவி செய்
நம் இரு கரங்களுக்கு..,

கோடி துன்பங்களும் கால்தூசிதான்
உன் மூச்சுக்காற்று
என்னை முத்தமிடும்போது..,

அழவை, அசிங்கப்படுத்து, ஆத்திரப்படுத்து,
இன்னும் செய்துக்கொள்
என்னை என்னவெல்லாமோ..,

என்னை நீ என்ன செய்தாலும்
மற(று)க் காமல் நினைவில்
மட்டும் வைத்திரு..,



என் வாழ்வின் கடைசி
மரண நொடிகளில்
உன் மடியினை
கடன் கேட்க வருவேன்...,



(சில வரிகள்
வலையில் சிக்கியவை)

Monday, November 22, 2010

பிரதிபலிப்பு

எந்த ஒரு
விசயத்திலும்..,
உன் முகம் காட்டும்..,

கோபமோ, மகிழ்ச்சியோ
மட்டுமே நான் பிரதிபலிக்கிறேன்..??!!

பெண்ணாகப் பிறந்ததைவிட,
நீ பார்க்கும் கண்ணாடியாகப்
பிறந்திருக்கலாம்??!!!..,

வலிகளாவது மிஞ்சியிருக்கும்.,



(இந்த வாரம் விகடனில்)

வெறுமையின் மொழியில்...

பகிர்தலுக்கு எதுவுமற்றுப் போனாலும்
ஒரு வெற்றுக்
குறுஞ்செய்தி அனுப்பு.

என் அலைபேசி
ஒலி எழுப்பட்டும்
எங்கோ உன்
இருப்பை அறிவித்து!

நிறுத்தம்

அலைபேசி அழைப்பில்
'எங்கே இருக்கிறாய்?'
எனக் கேட்கிறாய்
நீ விரல் பிடித்து
அழைத்துச் சென்று
நிறுத்திய இடத்தில்தான்
இருக்கிறேன் இன்னமும்...

சொல்...
நான் எங்கே இருக்கிறேன்?



எப்படி மறந்தாய்?

ஒரு வார்த்தையோ சிறு அசைவோ
போதுமானதாக இருக்கிறது
என் மீதான உனது வன்முறைக்கு...

எப்போதும் கூரிய ஆயுதங்களுடன்
எனைத் தாக்கக் காத்திருக்கிறாய்
காரணங்களுக்காக...

எப்படி மறந்தாய்
என்னிடமும் உண்டு
காரணங்களும் சில ஆயுதங்களும் என!


Thursday, November 18, 2010

கண்ணாமூச்சி கொடுமை


வயதைத் தொலைத்தேன்..,
அதில் சலனமில்லை ?!!

வாழ்க்கையை தொலைத்தேன்...,
அதிலும் வருத்தமுமில்லை ??!!!

என்னையும் தொலைத்தேன்....,!!!
ஏனோத் தேடிடவில்லை??!!!

உன்னையும் தொலைத்தேன்...,
உடலில் உயிருமில்லை??

ஒரு சொந்தம் போனால்..,
ஒரு சொந்தம் கிடைக்கும்
என்றே நினைத்திருந்தேன் ...,

கிடைத்ததும் இன்று
தொலைந்ததும் ஏனோ?
தனிமையில் தேம்புகிறேன்..,

மின்மினி சிரிப்பும்
காதில் வந்து போகுதே..,

கடலலை எல்லாம்
உந்தன் அழகைப் பார்க்குறேன்..,
காலடிஎல்லாம் உந்தன்
அளவைப் பார்க்குறேன்...,

இறைவா நீயும் உன் துணைப்
பிரிந்தால் என் நிலைப் புரியுமையா!!

கண்ணாமூச்சி ஆடிடும்
உன் கொடுமை புரியுமையா !!

உள்ளுக்குள்ளே ஊசி ஒண்ணு குத்துதையா
காற்றோடு உன் குரலே கேட்குதையா...,