Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Monday, March 25, 2019

ஒரு கடிதம் எழுதேன்.. ப்ளீஸ்... - ஐஞ்சுவை அவியல்

ஏன் மாமா?! நிலாவிலிருந்து பார்த்தால்  சீனா பெருஞ்சுவர் தெரியுமாமே! உண்மையா?!  

உலக அதிசயம்ன்னு ஒப்புக்கிட்ட ஏழில் எதுக்கும் இல்லாத சிறப்பு, சீனா பெருஞ்சுவருக்கு மட்டும் உண்டு. நிலாவிலிருந்து பார்த்தால் சீனப்பெருஞ்சுவர் தெரியும்ன்னு சொல்றாங்கதான். ஆனா, எந்தளவுக்கு உண்மைன்னு தெரில.  அப்படி தெரியுறமாதிரி ஒரு படத்தைக்கூட நான் இதுவரை பார்த்தில்லை. அதனால் அது உண்மையா?! பொய்யான்னு தெரில. நீ கேட்டதுக்காக வேணும்ன்னா சீன பெருஞ்சுவரை பத்தி சில விசயங்களை சொல்றேன்.  சீனா நாட்டின் வரைபடத்தில் இயற்கையே வரைந்த கோடுபோல் சுமார் 7500 கிலோமீட்டர் பரந்து விரிந்திருக்குது இந்த சீனப்பெருஞ்சுவர். இது கட்டி முடிச்சு இரண்டாயிரம் வருசம் ஆகிடுச்சு. இந்த சுவர் உருவாக காரணமானவர் பேரு ஷி ஹூவாங்டி (Shi Huangdi). இவரோட சாதனை சீனப் பெருஞ்சுவரை கட்டியது மட்டுமில்ல. சிற்றரசுகளாக சிதறிக் கிடந்த சீனப் பெருநிலத்தை ஒருங்கினைத்து ஒன்றுபட்ட சீனாவாகவும் ஒருங்கினைத்தவர்தான் இந்த  ஷி ஹூவாங்டி. 
Great Wall of China, Beijing, China

 கி.மு 259-ஆம் ஆண்டு சீனாவில் பிறந்தார் ஷி ஹூவாங்டி. அவர் பிறப்பதற்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை சீனாவை Zhao மன்னர்கள் ஆண்டு வந்தாங்க.. ஆயிரம் ஆண்டு காலமாக நடந்த அந்த மன்னர்களின் ஆட்சி சிறிது சிறிதாக வலுவிழந்து,  நிறைய சிற்றரசுகளா  சீனா சிதறுண்டு போனது.  சிற்றரசர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் தங்களுக்குள் அடிக்கடி  சண்டை போட்டுக்கிட்டாங்க. சண்டையில் சில சிற்றரசுகள் அழிந்து போனது. மிச்சமிருந்த சிற்றரசுகளில் பலம் பொருந்தியதா சின் (Qin) அரசு இருந்தது. அந்த அரச வம்சத்தில்தான் பிறந்தவர்தான் செங் (Zheng) என்ற ஷி ஹூவாங்டி.
The walls of Kumbalgarh Fortress in Rajasthan, India


ஷி ஹூவாங்டி தன்னோட 13வது வயசில் ராஜாவானார். ஆனா, 21வது வயசில்தான் ஆட்சியின் முழு அதிகாரமும் அவர் கைக்கு வந்துச்சு. மிகச்சிறந்த அறிவாளியாக இருந்த இளவரசர் செங் தகுதி வாய்ந்த தளபதிகளை தேர்ந்தெடுத்து தன் படை வலிமையைப் பெருக்கினார். ஏற்கனவே வலிமை குன்றியிருந்த எஞ்சிய சிற்றரசுகள்மீது படையெடுத்து அவற்றை ஒவ்வொன்றாக கைப்பற்றத் தொடங்கினார். சீனாவின் ஆக கடைசி சிற்றரசு கி.மு.221-ஆம் ஆண்டு அவர் வசமாகி ஒட்டுமொத்த சீனாவும் அவரது ஆட்சியின்கீழ் வந்தது. அப்போது அவருக்கு வயது 38தான் ஆனது. அந்த சமயத்தில் அவர் தனக்கு சூட்டிக்கொண்ட பெயர்தான் ஷி ஹூவாங்டி .

ஷி ஷூவாங்டின்னா முதல் பேரரசர்ன்னு அர்த்தம். ஒட்டுமொத்த சீனாவும் தனது ஆளுமையின்கீழ் வந்ததும் அவர் உடனடியாக பல அதிரடி மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் செயல்படுத்தத் தொடங்கினார். ஒற்றுமையின்மைதான் சீனா சிதறுண்டு இருக்க காரணம்ன்னு புரிஞ்சுக்கிட்ட   அவர் 'பியூடல் சிஸ்டம்' எனப்படும் பிரபுத்துவ அரசுமுறையை முற்றாக ஒழித்தார். சீனாவை மொத்தம் 36 மாநிலங்களாக பிரித்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் ஆளுநரை நியமித்தார். அதுமட்டுமல்ல ஒரே பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து ஆளுநராக இருந்த முறையையும் ஒழித்தார். ஆளுநர்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதையும், அதிக செல்வாக்கை உருவாக்கிக் கொள்வதையும் தவிர்க்க அவர்களை சில ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொரு மாநிலமாக மாற்றினார். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் ஆளுநரோடு ஓர் இராணுவ தலைவரையும் நியமித்தார். அனைவருமே மன்னரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்டவர்கள்தான். அவர் அறிமுகம் செய்த அந்த மாற்றங்களால் சீனா ஒற்றுமை உணர்வோடு வலுப்பெறத் தொடங்கியது. நாடு முழுவதும் நல்ல சாலைகள் அமைக்கப்பட்டன. எந்த மாநிலத்திலாவது கலகமோ, உட்பூசலோ நேர்ந்தால் உடனடியாக அந்தப் பகுதிக்கு மத்திய அரசின் இராணுவத்தை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அரசியல் மற்றும் இராணுவ மாற்றங்களோடு வர்த்தகத்திலும் மாற்றங்களை கொண்டு வந்தார் ஷி ஹூவாங்டி. பொருட்களை அளக்கும் கருவிகளையும், அளவை முறைகளையும் ஒருங்கினைத்தார். நாடு முழுவதும் பொதுவான நாணய முறையை அறிமுகப்படுத்தினார். சாலைகள் மற்றும் கால்வாய்களின் கட்டுமானத்தை நேரடியாக மேற்பார்வையிட்டார். சீனா முழுவதற்கும் ஒருங்கினைந்த சட்டத்தை அறிமுகம் செய்ததோடு எழுத்து வடிவத்தையும் சீராக்கினார்.
The Great Wall, one day I will see it in person
விளக்கின் அடியிலே இருள் இருக்குமென்ற நியதிக்கேற்ப இத்தனை நல்லது செஞ்ச ஷி ஹுவாங்டி ஒரு கெட்ட செயலையும் செய்து வரலாற்றின் பழிச்சொல்லுக்கும் ஆளானார்.  அது என்னன்னா, கி.மு 213-ஆம் ஆண்டு அவர் வேளாண்மை, மருத்துவம் போன்ற முக்கியத்துறை சம்பந்தபட்டவற்றை தவிர்த்து சீனாவில் உள்ள மற்ற நூல்கள் அனைத்தையும் எரித்துவிடும்படி கட்டளையிட்டார். அதற்கு ஒரு முக்கிய காரணம் 'கன்பூசியஸ் சித்தாந்தம்' உட்பட போட்டி சித்தாங்கள் அனைத்தையும் அவர் அழிக்க நினைத்துதான். ஆனால் எல்லா நூல்களையும் அழித்துவிடாமல் தடை செய்யப்பட்ட நூல்களின் சில பிரதிகளை அரசவை நூலகத்தில் வைக்குமாறு உத்தரவிட்டார். சீனாவின் தென்பகுதியில் படையெடுத்து பல பகுதிகளை கைப்பற்றி சீனாவுடன் இணைத்துக்கொண்டார் ஷி ஹுவாங்டி. வடக்கிலும், மேற்கிலும் பல பகுதிகளை கைப்பற்றினாலும் அந்தப் பகுதிகளை முழுமையாக அவரது ஆட்சிக்குகீழ் கொண்டு வரமுடியவில்லை. Zhao மன்னர்கள் ஆட்சிக்காலத்திலேயே வடக்குப் பிரதேசங்களிலிருந்து சீனாவுக்குள் அடிக்கடி நுழைந்து தாக்குதல்களை நடத்தி வந்தனர் சிங் நு (Xiongnu) இன மக்கள். அந்த தாக்குதலை தடுத்து நிறுத்த சீன எல்லை நெடுகிலும் சிறிய, சிறிய சுவர்களை அமைக்கத் தொடங்கினர் சீனர்கள். அப்படி சிறுசிறு சுவர்களாக இருந்ததை இணைத்து ஷி ஹூவாங்டி அமைக்கத் தொடங்கியதுதான் மிக நீண்ட சீனப் பெருஞ்சுவர் ஆனது. சீனப் பெருஞ்சுவரை கட்டுவதற்காகவும், போர் செலவுகளுக்காகவும் பொதுமக்கள்மீது கடுமையான வரிகளை விதித்தார் ஷி ஹூவாங்டி. அதனால் அவரை மக்கள் வெறுக்கத் தொடங்கினர். அதனால் அவர்மீது கொலை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அவற்றுக்கெல்லாம் ஈடுகொடுத்து வந்த ஷி ஹூவாங்டி கி.மு.210-ஆம் ஆண்டில் தனது 49-ஆவது வயதில் இயற்கையாகவே காலமானார். அவர் கல்லைறையைச் சுற்றி மிக விமரிசையாக ஆறாயிரம் டெரகோட்டா (Terracotta Army) களிமண் வீரர்களின் சிற்பங்கள் புதைக்கப்பட்டன. மரணத்திற்கு பிறகும் அவருக்கு சேவை புரிய அந்த சிற்பங்கள் உதவும்ன்ற நம்பிக்கையில் அப்படி செய்யப்பட்டதாம். சீன வரலாற்றில் ஷி ஹூவாங்டி என்ற மன்னன் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகப்பெரியது. அவர் மறைந்து இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகியும் அவர் உருவாக்கித்தந்த அரசாட்சி முறையும், சட்ட முறையும்தான் நவீன சீனாவுக்கு அடிப்படையாக விளங்குகின்றனது. மன்னன் ஷி ஹூவாங்டியின் 'சின்' பேரரசின் ஆட்சி பலம் பொருந்தியதாக இருந்ததால்தான் அதன் பெயரிலேயே அந்த தேசம் சீனா என்றழைக்கப்படுகிறது. புத்தகங்களை எரித்ததிலும், போட்டி சித்தாந்தங்களை அழிக்க நினைத்ததிலும் மன்னன் ஷி ஹூவாங்டி தவறு செய்திருந்தாலும், சீன வரலாற்றில் அவரது ஒட்டுமொத்த பங்களிப்பை எவராலும் மறுக்க முடியாது. பாதுகாப்புக்காகவும், எதிரிகளை அண்ட விடாமல் தடுப்பதற்காகவும் கட்டப்படத் தொடங்கிய ஓர் உன்னத கட்டுமான அதிசயம்தான் சீனப் பெருஞ்சுவர். இன்றும் சீனாவின் செல்வாக்கை அது உலகுக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த உலக அதிசயத்தையும், அதற்கு ஒத்த ஓர் அதிசய ஆட்சி முறையையும் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வழங்க மன்னன் ஷி ஹூவாங்டிற்கு உறுதுணையாக இருந்தது, அவரது ஆராய்ந்து முடிவு எடுக்கும் அறிவு, முடிவெடுத்து அதனை அச்சமின்றி செயல்படுத்தும் திறன், எதிரிகளை திணறடிக்கும் தைரியம், ஒற்றுமையே பலம்ன்ற அவரது நம்பிக்கையும்தான். இப்படி ஒரு தலைவன் தான் எல்லா நாட்டிற்கும் தேவை..ஆனா, எல்லா நாட்டுக்கும் இந்த வரம் கிடைக்கவில்லை. 

அது மன்னராட்சி மாமா! அப்படி ஒரு தலைவன் வர கொடுத்து வச்சிருக்கனும். எல்லாருக்கும் அது வாய்க்காது. ஆனா, நம்மோட நாடு  மக்களாட்சி முறையை கொண்டது. நல்லா சிந்திச்சு சரியான ஆளை தேர்ந்தெடுத்து ஓட்டு போட்டா நல்ல தலைவன் கிடைப்பான் மாமா.

ம்க்கும்.  எரியும் கொள்ளில, எந்த கொள்ளி நல்ல கொள்ளின்னு பார்த்துதான் ஓட்டு போடனும். அதுக்குதான் நான் ஓட்டு போடவே போறதில்லை.

அது தப்பு மாமா! அது கள்ள ஓட்டு போடுறவங்களுக்கு வசதியாகிடும். கண்டிப்பா உன் ஓட்டை பதிவு பண்ணனும் நீ. 
அப்படின்னா நான் நோட்டாவுக்கே என் ஓட்டை போட்டுடுறேன்.

அதும் தப்பு மாமா நோட்டாவுக்கும் போடக்கூடாதுன்னு சொல்ற இந்த வீடியோவை பாரு. நோட்டாவாலயும் ஒன்னும் மாற்றம் நிகழாது. அதனால் கட்சி, இனம், ஜாதி, பணம் கொடுக்குறவங்கன்னு பார்க்காம நம்ம பகுதில சமூக சேவை செய்து சுயேட்சையா நிற்கும் பணம், பதவியால் மாறாத ஆளுக்கு நம்ம ஓட்டை போடலாம். அதுவே சரியான தீர்வாகும்.  

ம்க்கும், அந்த மாதிரி ஒரு ஆளை தேடி கண்டுபிடிக்குறதுக்குள் மண்டை காய்ஞ்சு மூளை உருகி வெளிய வந்திடும். 

அதுலாம் மூளை இருக்கவுங்க  சொல்லனும். நீ அதுக்கெல்லாம் கவலைப்படாத மாமா. உன்னைய இந்த பாப்பா மாதிரி தண்ணி ஊத்தி மண்டை சூட்டை ஆத்துறேன். 

இப்படிலாம் கலாய்ச்சா நான் சாமியாரா போய்டுவேன்.

நீ சாமியாரா போனால், பழனி பாரதி மாதிரி  கவிதை எழுதுவேன்.
Awesome! pin  #blackandwhitelandscapephotography


பயணியைப்போல்
புறப்படக் காத்திருக்கும் பனியை
பெட்டி பெட்டியாய்த் தேடி
வழியனுப்ப
ஓடிவருகிறது சூரியன்

இந்தப்
பொங்கல்நாள் ரயில்நிலையம்
எவ்வளவு அழகு.

எத்தனைப் பெண்கள்
கோலம் போட்டாலென்ன
எந்தப் பெண்ணுக்கும்
உன்னுடைய விரல்கள் இல்லை,,,

எத்தனைப் பெண்கள்
என்னைப் பார்த்தாலென்ன
எந்தப் பெண்ணுக்கும்
உன்னுடைய விரல்கள் இல்லை..

எந்த நிழலிலும்
உன் ஆறுதல் இல்லை..
எந்த வாழ்த்திலும்
உன் குரல் இல்லை..

உனது கோலத்தில்
மையம் கொள்ளப்
பூத்திருக்கிறது இந்த  பூசணிப்பூ..


உன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது
விலைபோகாமல்
ஒரு பானை..

நீராட நீ வராமல்
உறைந்து நிற்கிறது
நம் ஊர் நதி..

நீதான்
சொல்லிக்கொள்ளாமலேயே
புறப்பட்டு விட்டாய்!!!


உனது ஊரிலாவது
கரும்புகள் இனித்தால் 
ஒரு கடிதம் எழுது..!

 - பழனி பாரதி

ஆகமொத்தம் எங்க போனாலும் என்னைய நிம்மதியா இருக்க விடக்கூடாதுன்னு கங்கணம் கட்டிக்கிட்டிருக்கே! அப்படித்தானே?!....................................................................

நன்றியுடன்...
ராஜி

Monday, August 28, 2017

இலவு காத்த கிளிக்கும் இன்றைய அரசியலுக்கும் சம்பந்தமுண்டா?! - ஐஞ்சுவை அவியல்

எங்கெங்கோ சுத்தி வந்த கிளி ஒண்ணு ஒரு பறவைல வந்து உக்காந்துச்சாம்... அங்க இருக்கும் புழு, பூச்சிலாம் தின்னு பசியாறிக்கிட்டு இருந்துச்சாம்.. கொஞ்ச நாள்ல அந்த மரத்துல பூ வச்சுச்சாம்... கிளிக்கு ரொம்ப கொண்டாட்டம். அடடா! பூ காயாகும், காய் கனியாகும்.. நாம சாப்பிடலாம்ன்னு காத்திக்கிட்டிருந்துச்சாம்.. அது நினைச்ச மாதிரியே, பூ காயாச்சாம்... சரி சீக்கிரத்துல பழுத்துரும், நாம பசியாறலாம்ன்னு  கத்தி, ஸ்பூன், தண்ணி, தட்டுலாம் எடுத்து வச்சிக்கிட்டு காயையே பார்த்துக்கிட்டிருந்துச்சாம்.  எத்தனையோ காத்திருந்தும் காய் கனியவே இல்லியாம். ஆனா, காத்திருக்குறதையும் கிளி விடலியாம்.. ஒருநாள் காய் வெடிச்சு பஞ்சாய் மறந்து போச்சாம். அப்பதான் கிளிக்கு தான் ஏமாந்த கதை தெரிஞ்சுச்சாம்... இந்த கதையை இன்றைய அரசியலோடு ஒப்பிட்டு பார்க்காதீங்க ப்ளீஸ்....
குருஷேத்திரப்போர் முடிந்தபின்   மரணப்படுக்கையில் இருந்த பீஷ்மரை  பார்க்க பாண்டவர்கள், கிருஷ்ணர், திரௌபதி சூழ எல்லாரும்  வந்தாங்க.   க்ருஷ்ணர் தருமரிடம் , தருமா! அஸ்தினாபுரத்தின் அரியணையில் அமரப்போகிறாய். உங்கள் குலத்தின் அத்தனை பெரியவர்களும் போரில் மாண்டதால் உனக்கு ஆலோசனை யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, பீஷ்மரிடம் ஒரு மன்னன் எப்படி இருக்கவேண்டுமென கேட்டு தெரிந்துக்கொள் என கூறினான். தருமனும் அவ்வாறே வேண்டி நிற்க, மன்னன் கடைப்பிடிக்க வேண்டியவைகளை பீஷ்மர் கூறிக்கொண்டே வந்தார். திரௌபதி நகைப்பதை கண்டு ஏன் மகளே! நகைக்கிறாய் என பீஷ்மர் வினவினார். இத்தனை நியாய, அநியாயம் பேசும் நீங்கள், அத்தனை பேரும் நிறைந்திருந்த ராஜ்ஜிய சபையில் என் துகில் உரியப்படும்போது துரியோதனனை எதிர்த்து குரல் கொடுக்காதது ஏன் என கேட்டாள். மகளே! அப்போது நான் துரியோதன் ஆட்சியில் இருந்தேன். அவன் அளித்த உணவை உண்டேன். அதனால், அவன் குணம் என் உடலிலும் இருந்திருக்கும்,  அதனால, அநீதியை கண்டு அமைதியா இருந்தேன்., இப்ப அர்ஜுனன் எய்த அம்பு என்னுடலில் இருந்த அத்தனை ரத்தத்தை வெளியேத்திடுச்சு, அதான் என் நிலைக்கு திரும்பிட்டேன்.  அதுமிட்டுமில்லாம உப்பிட்டவருக்கு எதிராய் நடப்பதும் பாவம்ன்னு சொன்னாராம்... இந்த கதைக்கும் இன்றைய அரசியலுக்கும் சம்பந்தமில்லைன்னு நான் சொன்னா நீங்க நம்பிதான் ஆகனும்....

பார்த்ததில் வருந்தியது..
பார்த்ததில் யோசித்தது...

நம்ம பொழப்பு இப்படியாகிட்டுதே!

பெயர்: செவ்வாய் ,
ஊர்: கேலக்சி
தொழில்
படித்ததில் பிடித்தது...
-முகநூலில் படித்ததும் சிரித்தது.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை..
ராஜி.

Monday, February 25, 2013

வூட்டுக்காரரை கைக்குள்ள வெச்சுக்குறதுங்குறது இதானோ?!

(எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டா! இவன் ரொம்ப நல்லவன்ன்ன்ன்ற வடிவேலு காமெடிதான் நினைவுக்கு வருது...,)


(அம்மாக்கும், மம்மிக்கும் உள்ள வித்தியாசம்...)


(வாழ்க்கைன்னா இதான்..)
(நினைவுலயும் நீயே! கனவுலயும் நீயே...,)



(இஞ்சினியர்ஸ் பண்ற ஓவர் சீன்!!)

   (ரொம்ப அலெர்ட்டா இருக்குறாராம்!!!)


(வூட்டுக்காரரை கைக்குள்ள வெச்சுக்குறதுங்குறது இதானோ?!)


(இதுக்குத்தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்ங்குறது..,)

( பாப்பா  தூங்கும்போது.., அப்பாவும்.., அம்மாவும்...,)

( கூகுளாண்டவருக்கே தெரியலியாம்!!)


(ரொம்ப வெவரம்தான்...,)

Wednesday, August 01, 2012

ஊடலுக்குப் பின் கூடல்


                                                 
'அம்மா'வின் இல்லத்திலிருந்தும் உள்ளத்திலிருந்தும்  உ.பி.ச விலகிய போது ஓர் அதிமுக தொண்டனின்  மனநிலையை இப்படி வடித்திருந்ததாக  நன்பரொருவர் மெயில் அனுப்பியிருந்தாங்க.  இப்போது திரை விலகி, நாடகம் முடிந்துவிட்ட நிலையில் அப்படியே பின்னவரைப் பார்த்து முன்னவர் பாடுவதாக  பாடலாசிரியர் நாஞ்சில் வேணு அவர்கள் எழுதியுள்ள பாடலொன்று.  "வாராயோ தோழி வாராயோ!" மெட்டில்...


வாராயோ தோழி வாராயோ
வழக்கம்போல் ஆள வாராயோ!
அதிகாரம் கையில் இருக்கிறவரைக்கும்
ஆதாயம் தேட வாராயோ?
வாராயோ தோழி வாராயோ
வழக்கம்போல் ஆள வாராயோ!


வழக்குண்டு இங்கு நூறு!- அதில்
வாய்தாவை வாங்கப் பாரு!
எதிர்க்கின்ற பேர்கள் யாரு?-இது
எதற்கும் தேறாத ஊரு!

தமிழ்நாட்டில் ஏது தகராறு!
தலையாட்டும் பொம்மை வரலாறு!


வாராயோ தோழி வாராயோ
வழக்கம்போல் ஆள வாராயோ!

அவர் செய்த ஊழல் பெரிதா-இல்லை
இவர் சேர்த்த செல்வம் பெரிதா

வழக்காடு மன்றம் புதிதா-அவர்
வாய்பூட்டும் வழிகள் அரிதா
மகத்தான கொள்கை பணம்தானே?
மடசாம்பிராணி ஜனம்தானே?

வாராயோ தோழி வாராயோ
வழக்கம்போல் ஆள வாராயோ!



பொதிமாடு போல தினமும்-சுமை
புலம்பாமல் தூக்கும் ஜனமும்
அரைக்கில்லை முண்டுத்துணியும்-என்றும்
அடிமாடு போலப் பணியும்
அவலங்கள் தீர எதுவுண்டு?
அரசாங்கம் தந்த மதுவுண்டு!


வாராயோ தோழி வாராயோ
வழக்கம்போல் ஆள வாராயோ!
டிஸ்கி: எனக்கு அரசியல் புரியாது அதனால பிடிக்காது. ஆனா, வலையில படிச்சதும் இந்த பாடல் பிடிச்சுட்டுது. அதனால இந்த பதிவு.