வெள்ளி, டிசம்பர் 28, 2012

ஊருக்குள்ள அவசியம் கோவில் இருக்கத்தான் வேணுமா?!

 மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாங்க...,

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்... கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.


இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இுக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!


ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!


அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.

டிஸ்கி: என்ன பதிவு தேத்தலாம்ன்னு முழிச்சுக்கிட்டு இருந்த நேரத்துல மெயில் அனுப்பி உதவிய மரியாதைக்குரிய என் கொழுந்தனாருக்கு நன்றி  

19 கருத்துகள்:

 1. நல்ல தகவல்கள் சொல்லி இருக்கீங்க.உயர்ந்து நிற்கும் அந்த கோபுரங்களைப் பார்த்தாலே மனசுக்கு சந்தோஷமா இருக்கும்.

  பதிலளிநீக்கு
 2. அட இவ்வளவு விசயம் இருக்கா !!...
  எனது நன்றியையும் சேர்த்துச் சொல்லுங்கள் சகோதரி
  உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியும்
  வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .......

  பதிலளிநீக்கு
 3. அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இுக்கிறது

  பன்னிரண்டு வருடங்கள் கழித்து அந்த தானியத்தை நிலத்தில் விதைத்தால் முளைக்கும் திறனுடனும் இருக்கிறதாம் ...

  பதிலளிநீக்கு
 4. நல்ல தகவல் தந்தீர்கள் நிச்சயம் பாராட்டு பெறுவீர்கள்
  இன்னொன்றும் சொல்ல விரும்புகிறேன்"கோயில் இல்லாத ஊருக்கு பொண்ணு கொடுக்காதீங்க " என்றும் பழமொழி உண்டு

  பதிலளிநீக்கு
 5. உண்மைகளை உரக்கச் சொன்னாய் தங்கையே! அருமை!

  பதிலளிநீக்கு
 6. முன்னோர்கள் சொன்னவையில் முக்கிய விடயங்களும் உண்டு....

  பதிலளிநீக்கு
 7. இதுவரை அறியாத அரிய தகவல்
  பகிர்வுக்கு நன்றி
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. ஊருக்குள் கோயில் இருப்பது எவ்வளவு அவசியம் என்பதை உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன் அது போல பதிவர்க்குள் தெய்வம் இருப்பதும் அவசியம்..அப்பதான் பதிவு உலகமும் நல்லதை அறிய முடியும்... பதிவுலகில் தெய்வம் யாருன்னு கேட்கீறீங்களா? சகோ நீங்கதான் எங்க தெய்வம்.....

  பதிலளிநீக்கு
 9. இதுவரை அறிந்திடாத தகவல்.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com/

  பதிலளிநீக்கு

 10. வணக்கம்!

  அரிய கருத்தினை அள்ளி வழங்கிப்
  பெரிய மகிழ்வைப் பிணைத்தீா்! - உரியநல்
  ஆற்றல் உயா்க! அழகு வலையுலகு
  போற்றல் உயா்க பொலிந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன் - பிரான்சு

  பதிலளிநீக்கு

 11. வணக்கம்!

  தரமான ஆக்கம்! தமிழ்மணம் தட்டி
  உரமாகச் செய்தேன் உவந்து

  கவிஞா் கி. பாரதிதாசன் - பிரான்சு

  பதிலளிநீக்கு
 12. அருமையான தகவல்கள் அம்மனி.

  பேஸ்புக்ல ஒருத்தர் இதை எழுதிருந்தார், போன மாசம் நான் அதை அங்கே ஷேர் பண்ணிருந்தேன்.

  பதிலளிநீக்கு

 13. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


  அன்புடன்
  மதுரைத்தமிழன்

  பதிலளிநீக்கு
 14. ஆண்டவா இந்த இடியே இல்லாம செய்திருக்க கூடாதா?

  அது ஏன் இந்த கோபுரத்துல மட்டும் ஐம்பொன் கலசம் வைத்தான். அதன் கீழ் தினண வகைகளை வைத்தான். என்ன அறிவியில்.......... என்ன அறிவு...........

  இடிகாக்கும் தினண என கண்டுபிடித்தவன் அதை கோபுரத்தில் வைத்தால்தான் இடி தாங்கும் என எப்படி கண்டு பிடித்தான். அறிவு

  பதிலளிநீக்கு
 15. இது நம்மாட்கள் ஆண்மீகவியாதிகள் செய்யும் கூத்து...அப்படி சொன்னதான் இப்படி செய்வீங்க...இப்படி சொனாத்தான் அப்ப்டிசெய்வீங்க...அறிவியில் என்ற பேரில் அவர்கள் கட்டும் சப்பபைக் கட்டு..

  அதனால் தான், இங்குள்ள எல்லா பெரிய கட்டிடங்கள் மீது எல்லாம் ய்தாநியக் கலசம் வைத்துள்ளார்களோ? ஒரு இரும்பு கம்பியை நட்டு வைத்தால் போதும்....

  பதிலளிநீக்கு
 16. whenever lightning release the charge, it choose shortest best discharging path only. no one can use simple iron road for lighting arrester.

  பதிலளிநீக்கு
 17. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : நேசன் அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தனிமரம்

  வலைச்சர தள இணைப்பு : !நெஞ்சில் உலா!!!

  பதிலளிநீக்கு