திங்கள், டிசம்பர் 03, 2012

மரணத்தை வென்றது...


விழி மூடும் மெல்லிசையில்...,
உதட்டோரப் புன்னகையி..,ல்
மென்மையாய் வருடிச் செல்லும்
உன் நினைவுகள்....,

என் மரணத்தோடு 
மடிந்துவிடுவதில்லை நம் காதல்!!??
என் மரணம் தாண்டியும்...,
 அது வாழும்!!

உன்னையும், என்னையும் போல்....,
எத்தனையோ ஜீவன்கள்....,
நிஜத்தையே காணமுடியாத
நிழல்களாய் போனாலும்....,

நினைவுகளின் உயிர் குடித்தபடி
வாழ்வதால்தான்.......,
வாழ்கிறது
வாழ்வும்,உலகமும் .....,

16 கருத்துகள்:

 1. நினைவுகளின் உயிர் குடித்தபடி வாழட்டும் வாழட்டும்.

  பதிலளிநீக்கு
 2. தலைப்பும் உங்கள் கவிதையும் அருமை

  பதிலளிநீக்கு
 3. முதல் பத்தி அசத்தல் வரிகள் .. ம்ம்ம் நல்ல சிந்தனை தொடர்ந்து எழுதுங்கள்

  பதிலளிநீக்கு
 4. வாழ்க வளமுடன் நினைவோடு மட்டும்

  பதிலளிநீக்கு
 5. நினைவுகளின் உயிர்குடித்தபடி! சிறப்பான வரிகள்! அருமை! நன்றி!

  பதிலளிநீக்கு
 6. சிந்திக்க வைத்த பகிர்வு ராஜி.... உண்மையே.. நேசமும் அன்பும் மட்டும் இல்லைன்னா இந்த உலகம் இருக்கும் நிலை நினைக்கவே முடியவில்லை.... என்ன ஒரு ஆழ்ந்த காதல்....


  அன்பு வாழ்த்துகள்பா...

  பதிலளிநீக்கு
 7. மனிதர் உணர்ந்து கொள்ள மனிதக் காதலல்ல..
  அதையும் தாண்டி புனிதமானது எனும் வரிகளை ஞாபகப் படுத்திகிறது

  ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 8. நினைவுகளின் உயிர் குடித்தபடி
  வாழ்வதால்தான்.......,
  வாழ்கிறது
  வாழ்வும்,உலகமும் .....,
  //இரசித்தேன்! நன்றி! வாருங்கள் என் வலைப்பக்கம் "எது ஊனம்?" படிக்க! நன்றி!

  பதிலளிநீக்கு
 9. எத்தனையோ காதல் இப்படித்தான் வாழ்கிறது! கவிதை அருமை!

  பதிலளிநீக்கு
 10. இறுதி வரிகள் மிக மிக அருமை
  மனம் கவர்ந்த அருமையான கவிதை
  பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 11. மீண்டும் பிரிவின் வலியை உணர்த்திய வரிகள். காலங்கள் மாறினாலும் இந்த கதைகளும் கவிதைகளும் என்றும் மாறாது போலும். கவிதைக்கும், கவிதாயினிக்கும் என் நன்றிகள்

  பதிலளிநீக்கு