Saturday, August 24, 2013

கடன் வாங்கிய நெய் - பாட்டி சொன்ன கதை

சின்ன குட்டி பாப்பா! வா! வா! 

இந்தா பாத்தி ஆரஞ்சு பழம். அம்மா கொதுக்க சொன்னாங்க.

எனக்கு வேணாம் ப்ரீத்திக்குட்டி. 

ஏன் பாத்தி?!

அது புளிக்கும்டா செல்லம்!! 

பாட்டி ஆரஞ்சு பழத்துல எவ்வளவு நல்ல விசயம்லாம் இருக்கு தெரியுமா?! வயசுல பெரியவங்கள இருந்துக்கிட்டு சின்ன புள்ளைக போல புளிக்கும் வேணாம்ன்னு பாப்பாக்கிட்ட சொல்றீங்களே! இட்ஸ் டூ பேட்!!

வாப்பா சீனு, வா. அப்படி என்னதான் இருக்கு அந்த பழத்துல?! வைட்டமி சி மட்டும்தான் இருக்கு அதுல.

ம்க்கும் உனக்கு தெரிஞ்சது அவ்வளவுதானா?! என் புத்தகத்துல ஆரஞ்சு பழத்தை பத்தி வந்திருக்கு. நான் படிச்சதை உனக்கு சொல்றேன் கேளுங்க!

சரிங்க சார்! சொல்லுங்க சார் கேட்டுக்குறேன்!!

கிண்டல் பண்ணாதே பாட்டி!!ஆரஞ்டு பழத்துல அதிகமான மருத்துவ குணம்லாம் இருக்காம்!! அதனால, இது உடம்புக்கு நல்லதுன்னு சயின்டிஸ்ட்லாம் சொல்றாங்க!! உடம்புல என்ன பிரப்ளம்ன்னாலும் ஆரஞ்சு பழத்தை சாறு பிழிஞ்சு குடிக்கலாம். அதனாலதான், ஹாஸ்பிட்டல்ல இருக்குறவங்களை பார்க்க போகும்போது ஆரஞ்சு பழத்தை வாங்கிட்டு போறாங்க. இதனால, ஆரஞ்சு ஜூஸ் குடிச்சா உடம்புல இருக்கும் ஹீட், வயத்து வலி இல்லாட்டி வயறு சமந்தமான பிராப்ளம்னாலும் சரியாகுதாம். 

இதுல இருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும். இதனால, எப்பவும் யூத்தா இருக்கலாம். இதுல  ஏ, பி, சி ஆகிய வைட்டமின்களும், ஏழு வகையான தாதுக்களும்இருக்குறதால ப்ரெக்னெண்ட் லேடீசும், சில்ட்ரன்சும் சாப்பிடனும்.

இதில்லாம, ஆரஞ்சு பழத்தை வெட்டி ஃபேஸ்ல தேச்சு டென் மினிட்ஸ் கழிச்சு கழுவினா ஃபேஸ் சாஃப்டாவும், பிரைட்டாவும் இருக்கும். டெய்லியும் ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டு வந்தா டைஜிஸ்ட் பார்ட்லாம் நல்லா வேலை செய்யுமாம்! கூடவே கோல்ட், ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண், நெஞ்சுவலி, இதய நோய், எலும்பு மெலிவு லாம் கூட குணமாகுதாம்! இதை போயி வேணாங்குறியே பாட்டி!!

சரிடா பேராண்டி!! இனி சாப்பிடுறேன் போதுமா?! சரி வாங்க கதை சொல்றேன்!! எனக்கு நிறைய வேலை இருக்கு.

என்ன வேலை பாட்டி?!

அடுத்த வாரம் சென்னை போறேண்டப்பா!! அங்க நெட்டுல பிளாக்குன்னு ஒண்ணு இருக்கு. அதுல எழுதுறவங்கலாம் மீட் பண்ண போறோம்!!


அட, அதான் அம்மாவும், அத்தையும் கூட ரெடியாகிட்டு இருக்காங்களா?!

ம்ம்ம்ம்ம்ம் சரி கதைக்கு போலாமா?!


ஓர் ஊருல ரெண்டு விவசாய பொண்ணுங்க இருந்தாங்க.   அவங்க ரெண்டு பேர் வீடும் எதிர் எதிர்க்க. அதுல ஒருத்தி பேரு யசோதை, இன்னொருத்தி பேரு துர்கா.

யசோதைகிட்ட நிறையப் பசுக்கள் இருந்துச்சு. துர்காவிகிட்டகொஞ்சம் மாடுங்கதான் இருந்துச்சு. ரெண்டு பேரும் பால், மோர், தயிர், நெய் வித்து காசாக்கி வாழ்ந்து வந்தாங்க.  யசோதை ஊதாரித்தனமாச் செலவுகள் செய்றவ. ஆனா, துர்காவோ சிக்கனமானவ.

ஒரு நாள் யசோதை வீட்டுக்கு நிறைய கெஸ்ட் வந்துட்டாங்க. அவங்களுக்கு விருந்து வைக்கப் பலகாரங்கள் செய்ய போதுமான அளவு நெய் அவக்கிட்ட இல்ல. அதனால, எதிர் வீட்டு துர்காவிடம் போய் ஒருபடி நெய் கடன் வாங்கி வந்தா. ரொம்ப நாளகியும் நெய்யை யசோதை திருப்பி தந்த பாடில்லை. அதனால, ஒரு நாள் துர்கா, யசோதை வீட்டுக்கு போய் நெய்யைக் கொடுன்னு கேட்டா.

அதுக்கு யசோதை,  உன்கிட்ட நான் எப்போ நெய் வாங்கினேன்? ஏன் இப்படி பொய் சொல்லுறேன்னு கேட்டா.

இப்படி ஒரு பதில எதிர்பாராத துர்கா ஷாக்காகிட்டா.  தனக்கு வர வேண்டிய  நெய் போனாலும் பரவாயில்லை,  இந்த துரோகத்தை நான் வெளிப்படுத்தாம  விடக் கூடாதுன்னு அந்த ஊரு பெரிய மனுஷனான மரியாதை ராமனிடம் போய் கம்ப்ளெயிண்ட் பண்ணாள்.

இந்த வழக்கைக் கேட்ட மரியாதை ராமன் இருவரின் நடவடிக்கைகளையும் கொஞ்சம் நோட்டம் போடன்னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டு ஒரு காரியம் செய்தான். ஓர் ஆழம் இல்லாத பள்ளம் வெட்டி அதில் சேரும் சகதியும் உண்டாக்கச் செஞ்சான். கூடவே, ரெண்டு கிளிஞ்சல்களும், ரெண்டு சொம்புகள் நிறைய தண்ணீரும் பள்ளத்துக்கு கிட்ட வைக்கச் சொன்னார்.

முதலில் யசோதையையும், ரெண்டாவது துர்காவையும் சேற்றில் இறங்கி நடந்து வந்து, சொம்பிலிருக்குற தண்ணியால காலைக் கழுவி வரச் சொன்னார். முதலில் யசோதை சேற்றில் வேகமா நடந்து வந்து பின் செம்பிலுள்ள தண்ணியால காலைக் கழுவினாள்.கால்ல இருந்த சேறும் சரியா போகலை. சொம்பு தண்ணி மொத்தத்தையும் காலியும் பண்ணிட்டா.

அடுத்து துர்கா சேற்றில் இறங்கி மெதுவா நடந்தா. கரைக்கு வந்ததும் கிளிஞ்சலால் காலிலுள்ள சேறைச் சுத்தமாக்கிட்டு, சொம்பிலுந்த தண்ணியால காலை கழுவினா. காலும் சுத்தமாச்சு. சொம்புலயும் கொஞ்சம் தண்ணி மிச்சம் இருந்துச்சு!! 

சேத்துல இறங்கி காலை கழுவுறதுக்கும், கடன் வாங்குன நெய்யுக்கும் என்ன சம்பந்தம் பாட்டி?! இப்படில்லாம் பேசிட்டு இருந்தா டைம்தான் வேஸ்ட் ஆகும்.

அப்படி இல்லை சீனு, தவறிக்கூட தப்பான தீர்ப்பை சொல்லக்கூடாதுன்னு தான் இப்படிலாம் டெஸ்ட் வச்சு தெரிஞ்சுக்கிட்டாங்க அந்த காலத்து மனுசங்க.  இனி கதைக்கு போலாம்.

 மரியாதை ராமன், யசோதையை கூப்பிட்டு அவள் கருத்தைக் கேட்டார்.  என்கிட்ட நிறையப் பசு இருக்கு. எனக்கு பாலும், வெண்ணையும்,நெய்யும் நிறைய கிடைக்குது. அப்படி இருக்கும்போது என்னைவிட கம்மியான பசு வச்சிருக்குற துர்காகிட்ட நெய் வாங்க வேண்டிய அவசியமென்ன?!

 நெய்யுக்கும், என்னை அவமானப்படுத்தனும்னுதான் துர்கா இப்படிலாம் சொல்றான்னு சொன்னா யசோதை. இதயெல்லாம் பொறுமையாக் கேட்ட மரியாதை ராமன் தன் தீர்ப்பைச் சொல்ல ஆரம்பித்தான். 
துர்கா, சேற்றில் வேகமா நடந்தா இன்னும் அதிகமான சேறு காலில் ஒட்டும்ன்னு மெதுவா நடந்தா. அதுமட்டுமில்லாம,  கால்ல இருக்கும் சேறைக் கிளிஞ்சல்களால் வழித்து எடுத்துட்டு தண்ணியால சுத்தமா கால்களை கழுவியும் சொம்புல கொஞ்சம் தண்ணியையும் மிச்சம் பிடிச்சு வச்சா. ஆனா, நீ சேத்துல வேகமா நடந்து கால் ஃபுல்லா சேறை அப்பிக்கிட்டு, சொம்பு தண்ணி ஃபுல்லா ஊத்தி கழுவியும் சேறு போகாத காலோடு நிக்குற. இத்ல இருந்து துர்கா சிக்கனக்காரி.  நீ ஊதாரி ன்னு தெரியுது. அதனால, கண்டிப்பா நீ யசோதைக்கிட்ட நெய்யை கடன் வாங்கியிருப்பே”ன்னு புரியுது. அதனால, உண்மையை ஒப்புக்குறியா?! இல்ல ஜெயிலுக்கு போறியான்னு மரியாதை ராமன் கேட்டான். 

ம்ம்ம் என் குற்றத்தை ஒப்புக்குறேன் ஐயா!  இனி இதுமாதிரி பொய் சொல்ல மாட்டேன். துர்கா கிட்ட வாங்குன நெய்யையும் கொடுத்துடுறேன். என்னை மன்னிச்சுடுங்கன்னு யசோதை கெஞ்சினா.

மரியாதை ராமனும் அவளை மன்னிச்சும், கண்டிச்சும் அனுப்பினான். மரியாதை ராமனின் சமயோசித அறிவை எல்லோரும் பாராட்டினாங்க.

கதை பிடிச்சுருக்கா குட்டீஸ்?!

பிடிச்சிருக்கு பாட்டி. அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட அன்போடு பழகனும் அவங்களுக்கு தீங்கு செய்யக்கூடாதுன்னும், தீர்ப்பு சொல்லும் இடத்துல நாம இருந்தா எல்லாத்தையும் ஷார்ப்பா நோட் பண்ணி யாரு தப்பு பண்ணி இருப்பாங்கன்னு கண்டுபிடிச்சு தண்டனை தரனும்ன்னு தெரியுது பாட்டி.

கரெக்ட்தான் சீனு! சரி, நீ கிளம்பு, நான் போய் புடவைக்கு எம்ப்ராய்டரி போடுறேன். பதிவர் சந்திப்புக்கு போறதுக்கு கட்டி போகனும்!!

சரி பாத்தி. பை! பை!

14 comments:

 1. நீங்க ஒருவேள இப்போ எம்ப்ராய்டிரி பண்ணிட்டு
  இருக்கீங்களோ ?
  கதை அருமை.

  ReplyDelete
 2. சீனு வாத்தியாரின் ஆரஞ்சு வியாக்கியானம் அருமை. மரியாதை ராமன் கதையும் அருமை. ம்ஹூம்... அப்போல்லாம் ஒரு தடவை கேட்டவுடனேயே தப்பை ஒத்துக் கொண்டார்கள்...! :)))

  ReplyDelete
 3. http://dindiguldhanabalan.blogspot.com/2013/08/Tamil-Pathivarkal-Festival-2013.html ஸ்ஸ்... யப்பா...!!!

  ReplyDelete
 4. //சமந்தமான பிராப்ளம்னாலும் சரியாகுதாம். //

  ஆரஞ்சு சாப்பிட்டா "சமந்தா" ப்ராப்ளம் சரியாகுமா அக்கா? ;-)

  ReplyDelete
  Replies
  1. கோவை ஆவி.....:))))))))))))))))))))

   Delete
  2. ஸ்பெல்லிங் மிஸ்டேக்தான். எல்லாம் சரி சமந்தா”ன்னு வருதா?! நஸ்ரியா மயக்கத்துல இருந்து வெளி வந்தாச்சா?!

   Delete
 5. பாட்டி கதை மிக பிரமாதம். குட்டி சொன்ன ஆரஞ்சுபழத்தின் பயன்களும் அருமை. உங்கள் நகைச்சுவையும் நல்லொதொரு டானிக் தான்.
  நன்றி.
  பதிவர் சந்திப்பு திருவிழாவுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. நல்ல குறிப்பு/

  ReplyDelete
 7. பதிவர் திருவிழாவிற்கு மகிழ்ச்சியாக சென்று வருவதற்கு வாழ்த்துக்கள்.
  ஆரஞ்சு பழத்தின் அருமையும் , மரியாதை ராமனின் புத்திசாலித்தனமும் அறிந்து கொண்டேன்.
  நன்றி.

  ReplyDelete
 8. நினைவில் உள்ள நல்லனவற்றைச் சின்னஞ் சிறுவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் சொல்லும் ஆற்றல் தங்களிடம் நிறைய உள்ளது. குழந்தைகளுக்கான கதைகள் / பாடல்கள் கூறுவோர் குறைவாகவே உள்ளனர். முயன்றால் உங்களுக்கென்று தனியானதொரு இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம். இன்னும் சிறிது சுருக்கமாகவும், பிழைகளின்றியும் இருத்தல் நன்று. வளர்க. வெல்க!

  ReplyDelete
 9. ஆரஞ்சு விஷயமும் நெய் கதையும்
  மிக மிக அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. if the story in video format will be good

  ReplyDelete