வெள்ளி, ஆகஸ்ட் 30, 2013

அத்தை மகனே போய் வரவா?! அம்மான் மகனே போய் வரவா?!

ஏங்க! நான் கை ஃபுல்லா மெகந்தி வச்சுக்கவா?! இல்ல, மருதாணி அரைச்சு தொப்பி டிசைன் வச்சுக்கவா?!

தொப்பி டிசைன் வேணாம், அது குஷ்டம் வந்த கை மாதிரி இருக்கும். (ஏற்கனவே அப்படிதான் உன் கை இருக்கும், இன்னும் ஏன் பயமுறுத்துற!!)
ஏங்க, உங்க கிரடிட் கார்டு தாங்களேன்!

எதுக்கு?!

நம்ம லலிதா ஜுவல்லரில பச்சை, செவப்பு கல்லு வச்ச வைர நெக்லஸ் வந்திருக்காம்! வாங்கலாம்ன்னு!!

ராஜிம்மா! உன் புன்னகைக்கு ஈடாகுமா, அந்த பொன்னகைலாம்?! (நீ இளிக்குறதை கூட தாங்கிக்கிலாம். ஆனா, மாசா மாசம் பேங்க்காரனுக்கு யார் தண்டம் அழறது?!)ஏங்க, நீங்க ஆஃபீசுக்கு போகும் போது என்னையும் கூட்டி போறீங்களா?!

எதுக்கு?!

மூஞ்சிக்கு பேஷியலும், ப்ளீச்சும் பண்ணிக்கதான்!!

ஏன்டி, மூஞ்சில துப்புற?! அதெல்லாம் அழகில்லாதவங்க செஞ்சுக்குறது!! நீதான் பொறப்புலயே அழகாச்சே! என்ன திடீர்ன்னு பேஷியல், ப்ளீச்லாம்?! (ம்க்கும் ஏற்கனவே பார்க்க சகிக்காது. இதுல மூஞ்சிக்கு சுண்ணாம்பு வேற அடிக்கனுமா?!) ஏங்க! இங்க வாங்களேன் ஆன்லைன்ல வந்த விளம்பரத்துல ரெண்டு சேலை செலக்ட் பண்ணி வச்சிருக்கேன். எனக்கு, இதோ இந்த பச்சை கலர் பட்டுப்புடவை நல்லா இருக்குமா?! இல்ல இந்த டிசைனர் சேலை எடுப்பா இருக்குமா?!

எதை கட்டுனாலும் உனக்கு அழகாதான் இருக்கும்ம்மா!(இப்படி சொன்னாதான் போஜனம் கிடைக்கும்.) நீ ஏன்ம்மா!  அடுத்தவங்க டிசைன் பண்ண புடவைலாம் கட்டுறே! உனக்குதான் எம்ப்ராய்டரி, ஸ்டோன் வொர்க்லாம் பண்ண தெரியுமே! நீயே பண்ணிக்கோயேன் ( ப்ளெயின் புடவை 700 ரூபாய், பட்டு சேலை கல்லுலாம் ஒரு 240 ரூபாய் ஆக மொத்தம் 1000 ரூபாய்ல ஒரு புடவை ரெடி. இவ காட்டுறதுலாம் பத்து, பனிரெண்டாயிரம்ன்னு எட்டுதே!!)இந்தா கத்தரிப்பூ கலர் ப்ளெய்ன் புடவை,  ஒட்டுறதுக்கு கம், பட்டுசேலை கல். உனக்கு பிடிச்ச மாதிரி டிசைன் பண்ணிக்கோ!! எல்லாம் சரி! ஏன் இந்த ஆர்பாட்டம்?! உங்க அம்மா வூட்டுல எதாவது விசேசமா?!ஆமாங்க! முந்தில சின்ன, சின்னதா பூ டிசைன் போட்டுகுறேன்.

ம்ம் போட்டுக்க, கூடவே! பெருசா எதாவது டிசைன் பண்ணிக்கோ! அப்போதான் தூர இருந்து பார்த்தாலும் பளிச்சுன்னு டிசைன் தெரியும். சரி, என்ன விசேசம்?! உங்க அத்தை பொண்ணு அகிலாக்கு வரன் தேடிண்டு இருந்தாங்களே! அவளுக்கு வரன் அமைஞ்சுடுச்சா?! (உங்க வம்சத்துக்கு அடுத்து மாட்டுன என்னை மாதிரி இளிச்சவாயன் எவனோ?!)

சரிங்க, சேலை முந்தானைல பூ டிசைனும் கூடவே பெருசா பூ டிசைன் போட்டுக்குறேன். அகிலா கல்யாணம் முடிஞ்சு மாசம் மூணாச்சு! அது கூட ஞாபகத்துல இல்லாம என்ன பண்ணுறீங்க?!

ம்க்கும், இதெல்லாம் ரொம்ப முக்கியம் பாரு ஞாபகம் வச்சுக்குறதுக்கு!!


ஸ்ஸ்ஸ்ஸ் அப்ப்பாடா! ஒரு வழியா புடவைல கல்லுலாம் பதிச்சாச்சு. ஏங்க, புடவை நல்லா இருக்கா?! 

ம்ம் கூடவே இருந்து நான் டிசைன் சொல்லி குடுத்ததால புடவை நல்லா வந்திருக்கு! எல்லாம் சரி, என்ன விசேசம்ன்னு சொல்லவே இல்லியே!

அதுவா, சென்னை, வட பழனி, கமலா தியேட்டர் பக்கத்துல இருக்கும்    நடக்குற பதிவர் சந்திப்புக்கு மீட்டிங்க்க்கு போக போறேன். அதான்.

அடிப்பாவி! நீ பண்ண பில்ட் அப் பார்த்து என்னமோ நீ உங்கம்மா வீட்டுக்கு போக போறதா இல்ல நினைச்சேன்!!

ம்ம்ம் இதும் எனக்கு அம்மா வீடு போலதான். எங்கல்லாமோ இருந்து என் இன்ப துன்பங்களை காது கொடுத்து கேட்கும் என் சகோதர, சகோதரிகள் வர்றாங்க!!

ம்ம்ம் அப்படியா!? உன் சகோதரர்கள்லாம் வர்றாங்கன்னு சொல்லுறே! பார்த்து, நிதானமா பேசி, படம் எடுத்து எல்லோரையும் வழி அனுப்பிட்டு வா! (உன் இம்சை இல்லாம நான் ரெண்டு நாளைக்கு நிம்மதியா இருப்பேன்!!)

டிஸ்கி: ராஜி, கட்டு சோறு கட்டிக்கிட்டு, ஸ்டோன் வொர்க் செஞ்ச புடவையை மூட்டைக் கட்டிக்கிட்டு நடராஜா சர்வீசுல புறப்பட்டுட்டா சென்னைக்கு. அதனால, சனி, ஞாயிறு பிளாக்கு விடுமுறை. உங்களுக்கு விடுதலை!! டாட்டா!! பை!! பை!! சீ யூ!!

14 கருத்துகள்:

 1. பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள். தாங்கள் பங்களிப்பின் மூலம் இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. Your preparation for attending the SPECIAL Meet has become the matter for one blog post. When you are making all arrangements for so many days, how your better half did not know about bloggers meet ? Conversations particularly the mind voice are very nicely brought out. Congrats.

  பதிலளிநீக்கு
 3. பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. கல்வைச்ச புடவை மிக அழகு. எம்ப்ராய்டரி , கைவண்ணம் மிக அழகாய் செய்து இருக்கிறீர்கள்.பதிவர் சந்திப்பில் மகிழ்ச்சியாக கலந்து கொண்ட பதிவை எதிர்ப்பார்கிறோம். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. அப்படியே நிறைய நன்கொடையும் தாங்க

  பதிலளிநீக்கு
 6. தாய்வீட்டுக்குப் போகும் உற்சாகத்தோடு ஒவ்வொன்றாய் பார்த்துப் பார்த்து எடுத்துவைத்துக் கிளம்பும் அழகே அழகு. அருமையான கல்பதித்த பட்டு கண்ணைக் கவர்கிறது. பாராட்டுகள் ராஜி. பதிவர் சந்திப்பு சிறக்க இனிய வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. புடவை நல்ல எனக்குப் பிடித்த கலர்.
  அழகாக வந்துள்ளது.
  பதிவர் சந்திப்பில் கலக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. நடராஜா சர்வீஸ்ல சென்னைக்கா, அதுவும் ரெண்டு நாளைக்கா? மாநாடு ஒரு நாள் தானே...

  பதிலளிநீக்கு
 9. எத்தனை சிரத்தையா குழந்தை ஒவ்வொன்னா பார்த்து பார்த்து அழகுப்படுத்தி... எவ்ளோ தைரியம் இருந்தா இந்தப்பிள்ளையை உற்சாகப்படுத்தி கூட இருந்து எல்லாம் அதான்பா வைர நெக்லஸ் பட்டுப்புடவை வாங்கித்தராம.. சரி சரி.. வாங்கித்தரலன்னா கூட பரவாயில்ல... இப்டியா புள்ளைய மனசுக்குள்ள திட்றது.. எம்புட்டு சமர்த்துக்குழந்தை.... புடவை வாங்கி அழகா கல் எல்லாம் தானே பதிச்சுக்கறது... இப்படி இருக்கிற மனைவி கிடைக்க பாக்கியம்ல செய்திருக்கணும்... மாப்பிள்ளையை நான் இந்தியாவுக்கு வரும்போது கவனிச்சுக்கிறேன்... அழகா மெஹந்தி வெச்சுக்கோ புள்ள, டிசைனும் போட்டுக்கோ.... தொப்பியும் கை விரல்களுக்குப்போடு.. உனக்கு அழகா இருக்கும்.. வைர நெக்லஸ் எல்லாம் வேண்டாம் இருக்கும் நகைகள் போடலைன்னாலும் பரவாயில்ல.. உன்னோட நகைச்சுவையும் உள்ளம் நிறைந்த அன்பும் தான் எல்லோரையும் போன முறை... என்னையும் தான் புள்ள கவர்ந்தது.... அதே எளிமை போறும் கண்ணாட்டி.... அப்புறம் புடவைல கண்டிப்பா நீ பதித்த வர்க் ஔட் பண்ணின கல் வெச்சு பதிச்ச புடவையே கட்டிக்கோ... எடுப்பா இருக்கும்... ஆகமொத்தம் அங்க பதிவர் மாநாடு இல்ல இல்ல நம்ம தாய் வீட்டுக்கு போறச்சே.. மறக்காம எலுமிச்சை சாதம் கொண்டு போ புள்ள..... சுப்பு அப்பாவுக்கு கொண்டு வரேன்னு சொல்லி இருக்கே.. கூடவே உருளை வறுவல் கொண்டு போ நல்லாருக்கும்... உன்னோட சிரிப்பும் நகைச்சுவை பேச்சும் சுவாரஸ்யம் கூட்டும் நம்ம தாய் வீட்டில்... மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் ராஜி.. ஏக்கத்தை உண்டுப்பண்ணிட்டியே புள்ள மறுபடி என் மனசுல :)

  பதிலளிநீக்கு
 10. இந்த புடவையை செலக்ட் பன்றது தான் பெரிய தொந்தரவா இருக்கு பரவாயில்ல நீங்க எப்படியோ தயாராகிட்டிங்க..வாங்க வாங்க.

  பதிலளிநீக்கு
 11. [[டிஸ்கி: ராஜி, கட்டு சோறு கட்டிக்கிட்டு, ஸ்டோன் வொர்க் செஞ்ச புடவையை மூட்டைக் கட்டிக்கிட்டு நடராஜா சர்வீசுல புறப்பட்டுட்டா சென்னைக்கு. அதனால, சனி, ஞாயிறு பிளாக்கு விடுமுறை. உங்களுக்கு விடுதலை!! டாட்டா!! பை!! பை!! சீ யூ!!]]

  எங்களுக்கு சரி! நேரா விழாவிற்கு வருபவர்கள்?

  பதிலளிநீக்கு