Saturday, August 03, 2013

பழையச்சோறும், சின்ன வெங்காயமும் - பாட்டி சொன்ன கதைசீனு சாப்பிட்டியா?! ப்ரீத்தி நீ சாப்பிட்டியா?!!

ம்ம் நான் சாப்பித்தேன் பாத்தி. நம்ம சீனுதான் சாப்பிதலை!!

அப்படியா!! ஏன் சீனு சாப்பிடலை?!

நேத்து நைட் அப்பா வெளில சாப்பிட்டு வந்ததால சாதம் மீந்துட்டுது. நைட் அதுல தண்ணி ஊத்தி வச்சுட்டா அம்மா.  இட்லி சாப்பிடுறதுக்கு முன்னாடி என்னை ஒரு டம்ப்ளர்  சாப்பிட சொன்னா. நான் மாட்டேன்னு சொன்னதால, பழைய சாதம் கொஞ்சமாவது சாப்பிட்டாதான் இட்லி போடுவேன்னு சொல்லிட்டா. அதான் வேணாம்ன்னு சொல்லி சாப்பிடாம இருக்கேன்.

சீனு இது தப்பில்லையா?! சாதம் வேஸ்டாகிடக்கூடாதுன்னு உன் அம்மா நினைக்குறதுல என்ன தப்பு?!

போ பாட்டி, நீயும் அம்மா கூட சேர்ந்துக்கிட்டே. அதெல்லாம் புவர் பீப்பிள்ஸ்தான் சாப்பிடுவாங்க. அதில்லாம அது ஒரு மாதிரி புளிச்ச வாடை வீசுது!!

அபடிலாம் சொல்ல கூடாது சீனு. முதல் நாள் செஞ்ச சாதத்துல தண்ணி ஊத்தி வெச்சுட்டு மறுநாள் நாம சாப்பிடும் இந்த பழைய சாதத்தில்  வைட்டமின்பி6 பி12 இருக்குன்னு அமெரிக்க டாக்டர்கள் ஆராய்ச்சிலாம் பண்ணி சொல்லி இருக்காங்க. குறிப்பா நம்ம உடம்புல இருக்குற  சிறுகுடலுக்கு நன்மை செய்யும் ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ் அதிகமாகி நம்மளோட  உணவுப் பாதையை ஆரோக்கியமா வெச்சிருக்க உதவுதாம்

ம் ம் ம்  அப்புறம் பாட்டி!!

பொதுவா கிராமத்துல பழைய  கஞ்சி சாப்பிடும்போது கஞ்சியுடன் வெங்காயம் சேர்த்து சாப்பிடுவது தான் பழக்கம். சிறிய வெங்காயத்தை சேர்த்து சாப்பிடும்போது நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதால் வைரஸ் காய்ச்சல் ன்னு எந்த காய்ச்சலும் நம்மை அண்டாதாம். அதுமட்டுமில்லாம ராத்திரி நேரத்துல சாதத்துல தண்ணி ஊத்தி வைக்குறதால அதிகமா நல்லது செய்ய்ற பேக்டீரியா உருவாகுதாம். இதை காலைல சாப்பிட்டா உடம்பு சூட்டை தணிச்சு, குடல் புண், வயிற்று வலிலாம் இல்லாம உடம்பை சுறுசுறுப்பா வச்சிருக்குதாம். இதுல இருக்குற  நார்ச்சத்து, மலச்சிக்கல், பிரச்சனைகளை தீர்த்து உடலை வேலை செய்ய வைக்குதாம்.

சாதம் சூடா இருக்கும்போது தண்ணி ஊத்திட்டா காலைல பழைய சாதம் சொதசொதன்னு இருக்கும். அதனால, சாதம் ஆறி இருக்கனும். சாதம் வடிச்ச தண்ணி ஒரு பாகம், பச்சை தண்ணி 3 பாகம்ன்னு உப்பு போட்டு கலந்து ஆறின சாதத்துல ஊத்தி வெச்சுட்டு காலைல கொஞ்சம் தயிர்  கலந்து சின்ன வெங்காயம் இல்லாட்டி ஊறுகாய் தொட்டுக்கிட்டு சாப்பிட்டா உடலுக்கும் நல்லது சுவையும் அலாதிதான். இனி நீயும் சாப்பிட பழகிக்க சீனு.

சரி பாட்டி!! இவ்வளவு விசயம் இருக்கா!! இத்தனை நாள் தெரியாம போச்சே!! இனி நான் சமர்த்தா சாப்பிட்டுடுவேன். சரி சரி,  நீ கதையை சொல்லு. கேட்டுட்டு போய் பழைய சாதம் சாப்பிடுறேன்.


ஒரு ஊருல ஒரு பெரிய ஆலமரம் இருந்துச்சு. அதுல ஒரு ஆண் காகமும், அதோட பெண் காமும், அதன் குட்டிகளும் ரொம்ப மகிழ்ச்சியா வாழ்ந்து வந்துச்சு.

அந்த ஆலமரத்தடியில ஒரு மரப்பொந்து இருந்துச்சு. அதுல ஒரு கருநாக பாம்பும் வந்து சேர்ந்துச்சு. பெண்காகம் தன் கூட்டில் முட்டையிட்டு அடைக்காக்கும். ஆண் காகம்  இரை தேடி வர எங்காவது பறந்து போய் வரும். கூட்டுக்கு தேவையான குச்சிகளை பொறுக்க பெண்காகம் எங்காவது போய் வரும்போது அந்த கருநாகம் மரத்து மேலேறி காக்கா குஞ்சுகளை தின்னுடும்.

ஐயையோ!! பாவம் பாட்டி, அந்த அப்பா, அம்மா குரோஸ் வந்து பாப்பா குரோஸ் இல்லாம வருத்தப்படுமே!!

ஆமா சீனு, கூட்டுக்கு திரும்பி வந்து பார்க்கும்போது தன் குழந்தைகளை காணாம ரொம்ப வருத்தப்படும். இதுமாதிரி ஒருமுறை, இருமுறை இல்லாம பலமுறை நடந்துச்சு.  ஆனாலும் யார் காரணம்ன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருந்துச்சு. அந்த பக்கமா வந்த நரியண்ணாதான் அந்த காகங்கள்கிட்ட இதுக்கு காரணம் அந்த பாம்புதான்ன்னு சொல்லி புரிய வச்சுது.

தன் குழந்தைகளை தொடர்ந்து அந்த பாம்புக்கு இரை கொடுக்க மனசில்லாத அந்த பெண் காகம், நரியண்ணா! நாம போய் அந்த பாம்புக்கிட்ட போய்  பேசி பார்க்கலாமா?!ன்னு கேட்டது.

ஏம்மா! உனக்கு அறிவிருக்கா?! அது கொடிய ஜந்து அதுக்கிட்ட போய் பேசி பார்க்கலாம்ன்னு சொல்றியே!!  அது நம்மையும் சாவடிச்சு சாப்பிட்டா என்ன பண்ணுவே!! கொஞ்சம் பொறு. எதாவது ஐடியா தோணும். அதுப்படி செய்யலாம்ன்னு  சொல்லுச்சு நரியண்ணா!

அப்போ,  எதோ மனுசங்க கூட்டமா வரும் சத்தம் கேட்டுச்சு. என்னன்னு பார்த்து வர சொல்லி ஆண் காகத்தை அனுப்பிச்சுது நரி,  பார்த்துட்டு வந்த காகம், நரியண்ணே! பக்கத்து நாட்டை ஆளும் ராஜா தன் ராணியோடு ரெஸ்ட் எடுக்க நம்ம காட்டுக்கு வந்திட்டிருக்கார் அதான் சத்தம்ன்னு சொல்லிச்சு.

என்னது?! ராஜா ரெஸ்ட் எடுக்க காட்டுக்கு போறாரா?! ஏன் பாட்டி?!

இப்போ நம்ம  நாட்டு பிரதமர், கவர்னர், மந்திரிங்கலாம் பொருளாதாரம், போர், உள்நாட்டு விவகாரம், வெள்நாட்டு விவகாரம்லாம் கவனிச்சு மண்டை காய்ஞ்சு போய் வெளிநாட்டுக்கு சுத்து பயணம் போறாங்கல. அதுப்போல ராஜா காட்டுக்கு போறார்.

ஓ புரிஞ்சுது பாட்டி!!

நரியண்ணாவுக்கு ஒரு ஐடியா தோணுச்சு. அதை ஆண்காகத்துக்கிட்ட சொல்லிச்சு.

ஒரு நாள்,

ராணி வழக்கமா குளிக்குற ஆத்தங்கரையோரம்  இருக்குற மரத்துல போய் உக்காந்துக்கிட்டு அரசி வர்றதுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்துச்சு காகம்...,

கொஞ்ச நேரத்துல குளிக்க தன் தோழிகளோடு வந்தாங்க ராணி, தான் போட்டுக்கிட்டு இருந்த காஸ்ட்லி ஜுவல்ஸ்லாம் கழட்டி கரையில வச்சுட்டு குளிக்குறதுக்காக ஆத்துல இறங்குனாங்க.

இதுதான் சமயம்ன்னு காகம் ஒரு முத்து மாலையை தூக்கிட்டு மெதுவா பறக்க ஆரம்பிச்சது.

ம்க்கும் போ பாட்டி!! காகத்துக்கு எதுக்கு முத்து மாலை. அப்படியே எடுத்தாலும் வேகமா பறந்தாதானே  சோல்ஜர்கிட்ட பிடிபடாம தப்பிக்க முடியும்!!??

தேய் சீனு,   அந்த நரி பண்ணுன பிளான் இதெல்லாம்!! என்ன நடக்க போகுதுன்னு பாத்தி சொல்லத்தும். நீ குறுக்க புகுராதே!! பாத்தி நீ சொல்லு...,

ப்ரீத்தி தான் குட், சமர்த்தா கதை கேக்குறா. நீ அவசரக்குடுக்கடா சீனு!! இதை பார்த்த ராணி தன் முத்து மாலையை காகம் தூக்கிட்டு போய்டுச்சுன்னு கத்துறா. அதை கேட்டு  காவல் காக்குறவங்கலாம் அந்த காகத்தை துரத்திக்கிட்டு ஓடுறாங்க.

காகம் பறந்து போய் தன் கூடு இருக்கும் ஆலமரத்து பொந்துல அதான் அந்த பாம்பு இருக்குற பொந்துல அந்த முத்து மாலையை போட்டுட்டுது.

ம்ம் இப்போ புரிஞ்சு போச்சு பாட்டி ஐடியா!! அந்த முத்துமாலையை எடுக்குறதுக்காக அந்த பொந்துல செர்ச் பண்ணுவாங்க, அப்போ அந்த பாம்பு மாட்டிக்கிட்டு சாகும் அதானே நரியோட பிளான்.

ஆமா சீனு, முத்துமாலையை எடுக்க மரப்பொந்துக்குள்ள கையை விடும்போது கருநாகம் சீறிக்கிட்டு வந்துச்சு. அதை பார்த்த வீரர்கள் அந்த பாம்பை அடிச்சு கொண்ணுட்டு  அந்த முத்து மாலையை கொண்டு போய் ராணிக்கிட்ட கொடுத்தாங்க,

அதுக்கப்புறம், பெண் காகம் முட்டையிட்டு அடைக்காத்து 4 அழகான  காகக்குஞ்சுகள் வெளிவந்துச்சு. அதை பார்க்க வந்த நரியண்ணாவுக்கு நன்றி சொல்லி  ஆண் காகமும், பெண் காகமும் ரொம்ப சந்தோசமா தன் குழந்தைகளோடு வாழ்ந்துச்சு. இதுல இருந்து என்ன தெரிஞ்சது சீனு?!

அடுத்தவங்களுக்கு தீமை செஞ்சா நமக்கு தீமைதான் விளையும்ன்னு புரிஞ்சுது பாட்டி.

ம்ம்ம் குட் சீனு. கதையோட அர்த்தத்தை நல்லா புரிஞ்சுக்கிட்டே சீனு.

சரி பாட்டி நான் போய் பழைய கஞ்சி குடிச்சுட்டு ஹோம் வொர்க் செய்யுறேன். பை பாட்டி.

பை சீனு!! பை பிரீத்தி!!

26 comments:

 1. நல்ல கதையுடன் "சுவை"யான பகிர்வு... வாழ்த்துக்கள் சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், முதல் கருத்துக்கும் நன்றி அண்ணா!

   Delete
 2. நான் எப்போதாவது சாப்பிடுவதுண்டு

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம் நம்ம வயதுக்காரர்கள்லாம் சாப்பிடுவோம். ஆனா, இப்போ இருக்கும் பிள்ளைகள்தான்?!

   Delete
 3. பழைய சோற்றின் வாசமும் பாட்டியின் கதைசொல்லும் நேசமும் மனம் ஈர்க்கின்றன. பாராட்டுகள் ராஜி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கீதா!

   Delete
 4. பழைய சாதமும் கடிக்க வெங்காயமும் எவ்வளவு சுவையோ அதே போல பாட்டி சொன்ன கதையும்....

  ReplyDelete
  Replies
  1. பதிவை ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி சகோ!

   Delete
 5. எனக்கு மிகவும் பிடித்தது பழைய சாதம் நம் ஊர் முறையில் தண்ணிர் ஊற்றி சாப்பிடுவது... சாப்பிட்டு பல ஆண்டுகாலம் ஆகிவிட்டது. அது போல இங்கு உள்ள சாதத்தில் தண்ணிர் ஊற்றி சாப்பிட்டால் அந்த அளவு டேஸ்ட் இருக்காது. இந்தியா வரும் போது மைச்சினி வீட்டில் பழைய சாதம் இருந்தால் நானும் என் மனைவியும் அந்த சாதத்திற்காக அடித்து கொள்வோம்.


  எங்க ஊரில் பழைய சாதம் என்பது மீந்து போன சாதத்தை ப்ரிஜ்ல் வைத்து சாப்பிடுவதுதானுங்க சகோ இங்கு சமைத்த சாதத்தை குளிர் காலங்களில் 2 அல்லது 3 நாள் வெளியிலே வைத்து கூட சாப்பிடலாம் ப்ரிஜ் தேவை யில்லை

  ReplyDelete
  Replies
  1. ம் ம் ம் பழைய சாதத்துக்கு கூட அயல் நாடு நமக்கு கைக்கொடுக்கலை. எல்லாத்துக்கும் நம்ம ஊரு போல வருமா?!

   Delete
 6. சத்துள்ள பழைய சோறோடு
  சத்தான கதையையும் சேர்த்துத்
  தந்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. கதையையும், கருத்தையும் ரசித்து பாராட்டியமைக்கு நன்றிப்பா!

   Delete
 7. அருமையான கதை பாட்டி வடை சுட்டு காகம் தூக்கிட்டு போன கதைதான் படிதிருந்தோம் இதில் இரண்டுமே இணைந்து விட்டனவோ ..ஒருவேளை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளை பார்த்து படித்து இருக்குமோ எப்ப வெட்டிகுவாங்க எப்ப சேருவாங்கன்னு தெரியல ..கதை அருமை ..

  ReplyDelete
  Replies
  1. ஐயோ! இதுல ஏன் அரசியல் கலக்குறீங்க?! எனக்கும் அரசியலுக்கும் ரொம்ம்ம்ம்ம்ம்ப தூரம்

   Delete
 8. நல்ல விஷயத்தைக் கதை கலந்து சுவை படச் சொல்லிட்டீங்க!

  ReplyDelete
  Replies
  1. கதையை படித்து ரசித்தமைக்கு நன்றி ஐயா!

   Delete
 9. ஒ அமெரிக்காகாரன் ஆராய்ச்சி பண்ணி வைட்டமின் 5 வைட்டமின் 16 இருக்குன்னு சொன்னாதான் நம்புவான்களோ அவ்வ்வ்வ்....

  ReplyDelete
 10. இப்போல்லாம் அம்மாவுக்கு நடக்க முடியாததுனால ஊருக்கு போனால் அம்மா கையால் சாப்பிடமுடியாது, அதனால மும்பையில உங்க அண்ணி பழைய சாதத்துல தயிர் ஊற்றி வெங்காயம் மற்றும் மிளகாய் நறுக்கி பொன்னிறமாக உப்பு போட்டு வறுவல் செய்து தருவாள் சூப்பராக இருக்கும், நாள்தோறும் இதுதான் சாப்பாடு காலையில்...!

  ReplyDelete
 11. பழைய சோறு ருசியே தனி தான். எங்கே புரிகிறது இக்காலத்தவர்களுக்கு.
  பழைய சோற்றின் ருசியைப் போலவே அலுக்காத கதை ஒன்றும் சொல்லியிருக்கிறீர்கள் . இரண்டையும் சுவைத்தேன். சுவை மிக அருமை.

  ReplyDelete
 12. எவ்வளோ காலை உணவு இருந்தாலும், நான் விரும்பி உண்பது பழைய சோறும் வடு மாங்காவும் தான். அதுல இவ்வளோ சத்து இருக்குன்னு இப்பதான் தெரியுது..

  ReplyDelete
 13. பழைய சாதமும் அருமை காக்கா கதையும் அருமை

  ReplyDelete
 14. பழைய சாதமும், பாட்டி சொன்ன கதையும் மிக அருமை.

  ReplyDelete
 15. பழைய சாதத்தை ஒரு மண்சட்டியில்
  ஊற்றி வைக்க வேண்டும்.
  அதில் தான் பலன்கள் அதிகம் .
  கதை சிறிய வயதில் பள்ளி பாடத்தில்
  படித்த நினைவு வந்தது .
  நன்று !

  ReplyDelete
 16. வணக்கம். கதையை புதுவிதமாக எழுத முயற்சி செய்துள்ளீர்கள். மகிழ்ச்சி. அதே நேரம் மொழியில் கவனம் செலுத்தத் தவறியதோடு மொழியைக் கொலை செய்துள்ளீர்கள். காகம் என்றைக்குக் குட்டி போட்டது. தயவு செய்து புதுமை என்ற பெயரில் எம் தாய்மொழியைக் கொலை செய்யாதீர்கள்.

  ReplyDelete