Tuesday, August 27, 2013

பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளும் பதிவர்களை வாழ்த்தும் பிரபலங்கள்!!


உலக தமிழ் பதிவர் சந்திப்பு நாள் கவுண்ட் டவுன் ஸ்டார்ட் ஆகிட்டுது....,  எப்பவுமே ஒரு பண்டிகை வந்தா பிரபலங்கள் வாழ்த்து சொல்லுவது வழக்கம். அதுப்போலதான் பதிவர் சந்திப்புக்காக பிரபலங்கள் தங்களுக்கு பிடிச்ச பதிவர்களை பத்தி ரெண்டு வார்த்தை சொல்லி அவங்களுக்கு வாழ்த்து சொல்லி இருக்காங்க....

 முதல்ல வயசுல பெரியவரான கலைஞர் ஐயா:
எனதருமை உடன்பிறப்புகளே! நான் எப்படி தமிழை வளர்க்க பாடு படுகிறேனோ அப்படிதான் தம்பி மகேந்திரன், அம்பாளடியாள், எனதருமை சகோதரர்களான ராமனுஜமும், ரமணியும் தங்கள் அழகான பாடல்கள் மூலம் தமிழை வளர்த்து வருகிறார்கள். அவர்களின் சேவை அளப்பரியது. நான் அவர்களின் வலைப்பூவை தவறாமல் வாசித்து வருகிறேன். தொடரட்டும் அவர்தம் சேவை!

அடுத்து அம்மா: 
எனதருமை பதிவர்களே! எனது தலைமையினாலான ஆட்சியிலே பதிவர்கள் அனைவரும் தினந்தோறும் பதிவு போட என்னால ஆன முயற்சிகள் அனைத்தும் செய்து கொண்டுதான் இருக்கிறேன். அவர்களுக்காகவே, கண்ணுறக்கம் பாராமல் யோசித்து நான் பல திட்டங்கள் தீட்டி வைக்கிறேன். பதிவர்கள் பற்றி ஒரு கதை சொல்லலாம்ன்னு இருக்கேன். ஒரு ஊருல 4 பசு மாடு இருந்துச்சாம். அதுலாம் ஒத்துமையா புல் மேஞ்சுக்கிட்டு இருக்கும்போது ஒரு சிங்கம் அதுகளை அடிச்சு திங்க வந்துச்சாம். ஆனா, ஒத்துமையான மாடுகள் ஒண்ணா சேர்ந்து அந்த சிங்கத்தை அடிச்சு விரட்டிடுச்சாம். என்ன செய்யுறதுன்னு நரிக்கிட்ட யோசனை கேட்டுச்சாம். நரி ஒரு தந்திரம் பண்ணி அந்த மாடுகளை பிரிச்சு விட்டுச்சாம். மாடுகள் ஒவ்வொரு மூலைல போய் புல் மேஞ்சுக்கிட்டு இருந்துச்சாம். ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு மாடுன்னு அடிச்சு சாப்பிட்டுடுச்சாம் சிங்கம். அதுப்போல பதிவர்கள்லாம் ஒத்துமையா இருந்தாதான் நல்லது. இல்லாட்டி, மாடுகள் போலதான் அழிஞ்சு போகனும்ங்குறதை மனசுல வச்சுக்கிட்டு செயல்படுங்க.

ரஜினி:
ஹா! ஹா! கண்ணா நான் இமய மலைக்கு போறதே உடம்பும் மனசும் ஃப்ரெஷ் ஆக்கிக்கத்தான். ஆனா, இமயமலைக்கு போகாமயே இங்கயே உக்காந்து “திண்டுக்கல்” தனபாலன்ன்னு ஒரு நண்பர் எழுதுற பதிவை படிச்சாலே ஃப்ரெஷ் ஆகிடுறேன். என்னை போல புது புது ஸ்டைல்ல தன் பிளாக்கை அழகா வச்சிருக்கார். அவருக்கு என் வாழ்த்துகள். எனக்கும் அவருக்கும் ஒரே வித்தியாசம்தான், நான் எப்போ வருவேன்?! எப்படி வருவேன்?!ன்னு யாருக்கும் தெரியாது!! ஆனா, நீங்கலாம் பதிவு போட்டதும் தனபாலன் முதல் ஆளாய் வந்து நிப்பார்ன்னு உலகத்துக்கே தெரியும்!! 

கமல்:
யூ சீ,  நான் என் தொழில்ல புது புது உத்திகளை புகுத்த வெளிநாட்டுக்குலாம் போயி அங்கிருக்கும் விசயங்களை தெரிஞ்சுக்கிட்டு வருவேன். அதுமில்லாம, நம்ம ஊரு பொண்ணுங்க கிட்ட இல்லாத ஏதோ ஒரு ஈர்ப்பு வெளிநாட்டு அம்மணிங்க கிட்ட இருக்கு. வெல், எப்படி சொல்லுறதுன்னா, கலை உலகில என் வாரிசுங்க நிறைய பேரு இருக்காங்க. பட், பதிவுலகில என் வாரிசுன்னா அது “கோவை நேரம்” ஜீவாதான்.

டைரக்டர் ஷங்கர்:
என் படத்தை எடுக்கும்போது வெளிநாட்டு லொக்கேஷன்லாம் நெட்ல போய் தேடிப்பேன். இருந்தாலும், உளாநாட்டு, வெளிநாட்டு லொக்கேஷன் பத்தி எனக்கெதாவது டவுட்ன்னா நம்ம “கடல் பயணங்கள்” சுரேஷ்குமார் பிளாக்கை படிச்சுட்டுதான் போவேன். அங்கிருக்கும் ஹோட்டல், எங்க சாப்பாடு நல்லா இருக்கும், எங்க தங்கலாம், என்ன செலவு ஆகும்ன்னு பக்காவா போட்டிருப்பார்.

நமீதா:
மச்சான்ஸ், ஷூட்டிங், கடை திறப்பு, பார்ட்டின்னு தமிழ்நாடு ஃபுல்லா நான் சுத்தும். அப்படி போகும்போது அங்க சரியான சாப்பாடு என்க்கு கிட்க்காது. அந்த மாதிரியான டைம்ல டக்குன்னு லேப்டாப் தட்டி மச்சான் “வீடு திரும்பல்” மோகன் குமார்  மச்சான் பிளாக்கை பார்த்துட்டு அங்க போய் சாப்பிட்டு வந்துடுவேன்.

சந்தானம்:
என் படத்துல எதாவது காமெடி சீன் வைக்கனும்ன்னா எதும் தோணலைன்னா நேரா கவிதை வீதி சவுந்தர் பிளாக் போவேன். அங்க போனா, எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக்குல வந்த ஜோக்லாம் அப்டேட் பண்ணி வெச்சிருப்பார். அங்க பார்த்து எதாவது ஜோக் நானும் தேத்திப்பேன்.

ப.சிதம்பரம்:
அரசியல்லயும் சரி, பொருளாதாரத்துலயும் சரி எனக்கு எதும் டவுட் வராது.அப்படி டவுட் வந்தா நான் அவர்கள் உண்மைகள் பிளாக் ஓனருக்கு ஒரு ஃபோன் போட்டு டவுட் கிளியர் பண்ணிப்பேன். எப்பேற்பட்ட ஜீனியஸ் தெரியுங்குளா அவரு?!

கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி:
வயசாகிட்டதால இப்போல்லாம் என்னை யாரும் நடிக்க கூப்பிடுறதில்லை. எப்பவாச்சும் ஒரு சில நாள்தான் ஷூட்டிங் இருக்கும். மத்த நாள்ல வீட்டுல சமைக்குறது, கூட்டுறதுன்னு பொழுதை போக்குவேன். வேலை எதும் இல்லாட்டி சிவாஜி, எம்ஜிஆர் கூட நடிச்ச நாட்களை நினைச்சு பார்த்துப்பேன். எனக்கு கூட தெரியாத விசயங்கள் கூட சில சமயத்துல மின்னல் வரிகள் கணேஷ் அடிக்கடி அந்த காலத்துல பத்திரிகைகளில் வந்த ஜோக், சினிமா துணுக்குகளை பகிர்ந்துப்பார். அவர் இல்லாட்டி எனக்கு போரடிச்சு போகும்!!

ஏ.ஆர். ரகுமான்:
நான் பாட்டுக்கு இசை அமைச்சு தருவேன். எப்பவாவது பாடுவேன். ஆனா, கோவை ஆவி தானே பாட்டெழுதி, இசை அமைச்சு பாடவும் போறாராம்!! என் எதிர்காலத்தை நினைச்சா எனக்கு கொஞ்சம் கிலியாதான் இருக்கு. ம்ம் எல்லாம் இறைவன் அருள்.

தனுஷ்:
என்னை மாதிரியான பசங்களை பார்த்தா புடிக்காது. பார்க்க பார்க்கதான் புடிக்கும். அதேப்போலதான் ராஜியக்கா பதிவுகளும், படிச்ச உடனே புரியாது! படிக்க, படிக்கதான் புரியும்!!

ராமராஜன்:
நம்முடைய கலாச்சாரம், பழக்க வழக்கங்களை பத்தி தெரிஞ்சுக்கனும்ன்னா   கிராமத்துக்குதான் போகனும். சிட்டில இருந்தாலும் நான் இன்னும் கிராமத்தான். என்னை போலவே ஒருத்தர் இருக்கார் அவர் பேரு சங்கவி, நான் மாட்டை பத்தி பாட்டு படிப்பேன். அவர் லட்சுமிமேனனை பத்தி பாட்டு படிப்பார். 

ராஜ்கிரன்:
அம்மாவை, பொண்டாட்டியை பத்தி யாராவது தப்பா பேசினா கொக்க மக்கா கொன்னேப்புடுவேன். நான் இங்கிருந்து அருவாவை வீசுவேன். ஆனா, குவைத்துல இருந்துக்கிட்டே “நாஞ்சில் மனோ”  குறி பார்த்து அருவா வீசுவேன். என்ன, ஹோட்டல்ல சேச்சிகள்கிட்ட போடுற கும்மாளங்கள்தான் அவர்கிட்ட பிடிக்காதது. என்கிட்ட இருக்குற லுங்கிகள்ல ஒண்ணை அவருக்கு பார்சல் பண்றேன். ஏன்னா, பேண்ட், கோட்டு, சூட்டுலாம் போட்டுக்கிட்டா அருவா வீச முடியாது. ஆனா, லுங்கியை கட்டிக்கிட்டு அப்படி முழங்காலுக்கு மேல தூக்கி கட்டி அருவாவை வீசுனா சும்மா நச்சுன்னு போய் விழும்.

கேப்டன்:
இன்னிக்கு நம்ம கட்சில சேர வந்திருக்கும் உலக தமிழ் வலைப்பதிவாளர்கள் அவர்களுக்கு நான் சொல்லிக்குறது என்னன்னா!!
மதுமதி: ஐயா! இவங்கலாம் கட்சில சேர்றதுக்காக வரலீங்கயா!
கேப்டன்: அப்புறம் எதுக்கு வந்திருக்காங்க.
மதுமதி: வருசத்துக்கு ஒரு தரம் இப்படி மீட் பண்ணுறது வழக்கம். அதான், அவங்களை வாழ்த்தி பேசுங்கன்னு உங்களை கூப்பிட்டு இருக்கோம்!
கேப்டன்: என்னது இவனுங்களை வாழ்த்தி நான் பேசனுமா!? எனக்கு ஆர்டர் போட நீ யாருடா?!
மது மதி: ஐயா! நான் இவங்கள்லாம் கலந்துக்குற இந்த நிகழ்ச்சி நல்லபடியா நடக்க என்னால முயற்சிகளை செஞ்சவன்.
தமிழ்வாசி: யோவ் கேப்டன், நானும் மதுரைக்காரந்தான். ஒழுங்கு மரியாதையா எங்களை, எங்க பதிவுகளை வாழ்த்தி பேசு இல்லாட்டி உன்னை பத்தி தாறுமாறா எழுதிடுவோம்.
கேப்டன்: டேய்! நீ மதுரைக்காரன்னா, நான் உனக்கு பயப்படனுமா?! போன எலக்‌ஷன்ல ஓட்டு போட்டியாடா?! ப்ப்ப்பளார்
தமிழ்வாசி: என்னையே அடிச்சுட்ட இல்ல, இன்னில இருந்து உனக்கு ஆப்புதாண்டி மாப்ள!

20 comments:

 1. வித்தியாசமான சிந்தனையுடன் கூடிய சிறப்பான பதிவு
  நெருங்கி வந்து கொண்டிருக்கும் பதிவர் திருவிழா வை வரவேற்கும் விதமான பதிவு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. கேப்டன் ஸ்டைலே ஸ்டைல்தான். அப்படியே வந்துருக்கு:))

  ReplyDelete
 3. ஒரே ஒரு ஸ்டைல் மிஸ்ஸிங் அதையும் நானே சொல்லிடுறேன் ..அந்த கொசுவர்த்தி காயில சுத்த விடுங்கப்பா டுரிங் கடந்த வருட பதிவர் சந்திப்பு அடுத்து காணமல் போன ராஜி ..சீ ..காணமல் போன கனவுகள் ராஜி ..அமமுணி மேடை ஏறி வராங்க விசில் பறக்குது ..ஹெலோ ..நான் ..நான் .தான் காணமல் ..போன ..கனவுகள் ராஜி ..சசு .ஸ்.என்ன வெறும் காத்து மட்டும் வருது ..அதுதான் ராஜி ஸ்டைல் ..இந்த வருஷமாவது வானம் விளைகிறது..பூமி பொழிகிறதுன்னு ..பேசுவீங்களா ..

  ReplyDelete
 4. அடடா என்ன ஆளாளுக்கு ஒரே ரகளை பண்ணிக்கிட்டு.. செப்டம்பர்-1 முழுக்க முழுக்க சந்தோஷ அலைகள்தான் வீச போவுதுன்னு உங்க ஒவ்வொருத்தர் மனசும் சொல்லுது.. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. அடேயப்பா ஒவ்வொருத்தரும்
  அவர் அவர் பாணியிலேயே
  சொல்லும்படியா சொல்லிப்போனது
  மிக மிக அருமை
  குறிப்பா யாரையும் அறிமுகம் செய்யாமல்
  ஒரு அறுவைக் கதை சொன்ன அம்மாவையும்
  பளார் என அறிவிட்ட எங்க ஊர்
  அண்ணனையும் சொன்னவிதத்தை
  மிகவும் ரசித்தேன்
  உங்களிடம் நாங்கள் கற்றுக் கொள்ள
  நிறைய இருக்கிறது என்பதை மீண்டும்
  நிரூபித்துப்போகும் அருமையான பதிவு
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. யோவ்...

  ஏன்யா எங்களை வாழ்த்தி பேச மாட்டிங்கற????

  பேசுயா... பேசு.... ம்அக்காங்...

  ReplyDelete
 7. ஹா ஹா ... இப்படி பல குரலில் மேடையில் பேசி அசத்தலாமே, பதிவர் தனித்திறமை கலை நிகழ்ச்சியில்

  ReplyDelete
 8. சூப்பரா கலக்கறீங்க ராஜி...இந்தப் பதிவை படித்தாலே எல்லோரும் இப்பவே கிளம்பி சென்னை வந்து சேர்ந்திடுவாங்க....

  ReplyDelete
 9. ரொம்ப யோசிக்கறாங்கப்பா...அருமை,,,

  ReplyDelete
 10. அப்பப்பப்பா...
  என்ன ஒரு கற்பனா சக்தி...
  சும்மா அசத்திட்டீங்க போங்க...
  நல்ல சுவாரஸ்யமா அழகாக இருக்குது பதிவு...

  ReplyDelete
 11. சூப்பர் !பதிவர் திருவிழாவுக்கு அதிக சிந்தனை செய்யும் ராஜி அவர்களுக்கு விருது வழங்கும்படி விழாக் கமிட்டிக்கு பரிந்துரை செய்கிறேன் !

  ReplyDelete
 12. ஹா... ஹா... கலக்கல்...

  வாழ்த்துக்கள் + நன்றி சகோதரி....

  ReplyDelete
 13. செம கலக்கல் அக்கா ///

  ReplyDelete
 14. You have proved your talent again by this post. Congrats.

  ReplyDelete
 15. நமீதா, சரோஜாதேவி சொன்னவற்றைத்தான் அவற்றின் எழுத்துக்களின் வர்ணம் (பச்சை, லைட் நீலம்) காரணமாக சரியாகப் படிக்க முடியவில்லை.

  ReplyDelete
 16. ஹஹா விஜய் அஜித் லாம் வரலயா

  ReplyDelete
 17. // ராஜியக்கா பதிவுகளும், படிச்ச உடனே புரியாது! படிக்க, படிக்கதான் புரியும்!!//

  உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..

  ReplyDelete
 18. கடைசில எதுக்கு அரசியல்?? செம்ம காமெடி.. ரகுமானே சொல்லிட்டாரா.. :-)

  ReplyDelete