திங்கள், நவம்பர் 11, 2013

மயானத்தில் வேலை செய்யும் ஒரு மனுஷி - ஐஞ்சுவை அவியல்

ஏ புள்ள! எப்ப வந்தே!? கோடி வீட்டு தாத்தா செத்து போயிட்டாரு! உன் அம்மா வீட்டுக்கு போயிருந்த நீ, வர்றதுக்குள்ள எடுத்துட்டாங்க. செத்த முந்தி வந்திருந்தா தாத்தா முகத்தை கடைசியாப் பார்த்திருக்கலாம். 

ஆமா மாமா! தாத்தாக்கு என் மேல பாசம் அதிகம். என்னாலதான் தாத்தாவை பார்க்க முடியல.

இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகலை. வா மாமா! இன்னும் தாத்தாவை புதைச்சிருக்க மாட்டாங்க. வா! போய் சுடுகாட்டுல பார்த்துட்டு வந்துடலாம்.

ஐயோ! சுடுகாட்டுக்குலாம் பெண்கள் வரக்கூடாது மாமா!
ம்க்கும் யார் சொன்னது!? சுடுகாட்டு சூழலையும், பிணங்களை எரிக்கும்போது சில சமயம் எலும்புகள் விறைச்சிக்கிட்டு மடங்கும், அப்ப பிணம் எழுந்து உக்காருற மாதிரி இருக்கும். இதை பார்க்கும் ஆண்களுக்கே சிலசமயம் பயம் வரும்.ஆண்களுக்கே இந்த நிலைன்னா பெண்கள் தாங்க மாட்டாங்கன்னுதான் அவங்களை சுடுகாட்டுல சேர்க்குறதில்ல. 
கோவை சொக்கம்புதூரை சேர்ந்த பெண்ணொருத்தி வெட்டியான் வேலை பார்க்குறாங்க.  அவங்க பேரு வைரமணி. அவங்கப்பா கருப்பசாமிதான் இந்த வேலையை பார்த்துக்கிட்டு இருந்தாங்களாம். படிப்பறிவில்லாத இவங்களை சின்ன வயசுலயே கல்யாணம் கட்டிக் கொடுத்துட்டாங்களாம். மூணு பிள்ளைகளாயும், தீராத குடிப்பழக்கத்தால குடும்பம் வறுமைல சிக்கி தவிச்சாங்களாம்!!  அந்த நேரத்துலதான் அவங்கப்பா இறந்துட்டாராம். குடும்ப சூழ்நிலை கருதி இந்த வேலையை தானே செய்யலாம்ன்னு முன் வந்திருக்காங்க.15வருசமா இந்த வேலையை செய்யுறதால பேய், பிசாசுன்னு எந்த பயமும், தயக்கமுமில்லாமதான் இந்த வேலையை செய்யுறாங்களாம்.

ஒரு பிணத்தை அடக்கம் பண்ண 2000 ரூபாய் வாங்குவாங்களாம். இங்க வந்தும் பேரம் பேசுற ஆளுங்களை நினைச்சும், பிறந்த உடலோடு இருக்கும் பிணத்தின் எதிரவே, பிணத்து மேல இருக்கும் கால் பவுன் நகைக்காக அடிச்சுக்கும் உறவினர்களை பார்த்தும் தனக்குள்ளயே சிரிச்சுக்குவாங்களாம். ராத்திரி 10  மணிக்கு கூட எரிகிற பிணத்தோடு தனியா இருப்பாங்களாம்.

அனாதை பிணங்கள் வந்தால் பணத்தை எதிர்பார்க்காம உறவினர்கள் போல சடங்கு சம்பிராதயம் செஞ்சு அடக்கம் பண்ணுவாராம். தான் பிணத்தோடு பிணமாய் இருந்தாலும் தன் பிள்ளைகளை நல்லா படிக்க வச்சு நல்ல வேலைக்கு அனுப்பி வைக்கனும்ன்ற வைராக்கியத்துல இருக்காங்க வைர மணி.

பேருக்கேத்த மாதிரியே ”வைரமணி” பெண்குலத்துக்கே ஒரு விலைமதிப்பில்லா வைரம்தான்.  துன்பம் வரும்போது துவண்டு போயிருக்காம இப்படி தைரியமா போராடினா வாழ்வும் வளமாகும். சமூகமும் நல்லப்படியா முன்னேறும். நீங்க பெண்குலத்துக்கு வைரமா நிற்கும் ஒரு பெண்ணை பத்தி சொன்னீங்க. ஆண்குலத்துக்கே பெருமை சேர்க்கும் ஒரு நல்ல மனிதரை இப்ப நான் சொல்றேன் மாமா!

ஆரணி அடுத்த தேவிகாபுரத்துல பிறந்து இப்ப சென்னைல செட்டில் ஆன 45 வயசு ”மணி”ன்ற மனக்கண் மட்டுமே கொண்ட மாற்றுத் திறனாளி ஒருத்தர் தனது Bombay Rh +ve ன்ற பிரிவை சேர்ந்த ரத்தத்தை மூன்று மாதத்திற்கொரு முறை தவறாமல் ரத்த வங்கிக்கு போய் கொடுத்துட்டு வர்றராம். அதுமட்டுமில்லாம தன்னோட உடல் உறுப்புகளை தானம் செய்யுறதா எழுதி கொடுத்துமில்லாம, தன்னோட மனைவி, குழந்தைகளையும் அதேப்போல எழுதித்தர வைத்திருக்கிறார். அவரை பாராட்டி நம்ம ஊரு லயன்ஸ் கிளப்ல அவரை கூப்பிட்டு கௌரவிச்சாங்க.

ரொம்ப நல்ல விசயம்தான் புள்ள. இப்படி பாராட்டிட்டு போய்டுறதோட சரின்னு நாம இருக்கோம். ஆனா, ஒவ்வொருத்தரும் இப்படி செஞ்சா ரத்தமில்லாம ஒரு உயிரும் போகாது. அத்தோட, எந்த மனிதனும் ஊணத்தோடவும் இருக்க மாட்டாங்க.

நெகிழ்ச்சியான விசயத்தையே பேசிட்டோம். அதனால ஒரு ஜோக் சொல்லவா!? 

ம்ம்ம் சொல்லுங்க மாமா! வெளியூரில் இருக்கும் திருமணமான பொண்ணு தன் அப்பாவுக்கு போன்ல.....

மகள்: அப்பா! உங்க மாப்பிள்ளைக்கு நீங்க வைர மோதிரம் போட்டாதான் தலைதீபாவளி கொண்டாட நம்ம வீட்டுக்கு வருவாராம்.
அப்பா: நல்லாதா போச்சு! நான் போட்ட லெட்டரை மதிச்சு வந்துருவாரோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன்!

ஹா! ஹா! ஜோக் நல்லாதான் இருக்கு. நீங்க ஜோக்ன்னு சொன்னதும்தான் எனக்கொரு ஞாபகம் வந்துச்சு. ராஜியோட எப்பவாவது சாப்பிட அடம்பிடிப்பான். அவன் சின்ன பிள்ளையா இருக்கும்போது கோலங்கள் சீரியல் ரொம்ப ஃபேமசா போச்சு. அதுல வர்ற ஆதித்யான்ற வில்லன் கேரக்டரை காட்டி, அவன்கிட்ட புடிச்சு கொடுத்துடுவேன்னு மிரட்டி சாப்பிட வைப்பா. அவனும் சமர்த்தா சாப்பிட்டுடுவான்.

அப்ப, ராஜியோட சித்தப்பா பையனுக்கு கல்யாணம்ன்னு சொல்லி பத்திரைகை வைக்க அவ சித்தப்பா வந்திருந்தார்.   கல்யாணப் பையன் பேரு ஆதித்யா. ஆதித்யா கல்யாணம் கட்டிக்கிட்டு அமெரிக்காவுல போய் செட்டில் ஆகப்போறான்மா, இனி ரெண்டு வருசத்துக்கு ஒரு முறைதான் வருவான்னு சொல்லி இருக்கார். இதை கேட்ட ராஜி பையன், ஹை! இனி ஆதித்யா டெய்லி எங்க வீட்டுக்கு வரமாட்டானா!? இனி ஜாலிதான். சாப்பிடாட்டி ஆதிக்கிட்ட புடிச்சு குடுத்துடுவேன்னு அம்மா மிரட்ட மாட்டா”ன்னு சொல்லி சந்தோசப்பட்டிருக்கான். அதைக் கேட்டு ராஜியும், அவ வீட்டாளுங்களும் சிரிச்சு மாளலியாம். 

சரி நான் ஒரு விடுகதை கேக்குறேன் பதில் சொல்லுங்க பார்க்குறேன். ஒரு கிணற்றில் ஒரே ஒரு தவளை! அது என்ன!?

இரு யோசிச்சு சொல்றேன்.

சரி, யோசிச்சு பதில் தெரிஞ்சா கூப்பிடுங்க. நான் போய் சமைக்குறேன்.

31 கருத்துகள்:

 1. சுவையான தகவல்கள் அக்கா.. கோவை பெண்மணிகள் தைரியசாலிங்க.. விடுகதையா ஆள விடுங்க சாமி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் தம்பிகள்லாம் அதி புத்திசாலின்னு நினைச்சேனே!!

   நீக்கு
 2. வெட்டியான் வேலை செய்யும் பெண்மணியின் உறுதி பாராட்டத்தக்கது! சுவையான பகிர்வு! விடுகதையின் விடை கண்விழி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்விழி இல்ல சகோ! வேற! கொஞ்ச நேரம் போகட்டும். யாராவது சொல்றாங்களான்னு பார்த்துர்ட்டு விடை சொல்றேன்.

   நீக்கு
 3. அருமையான பகிர்வு... இரண்டு மணிகளுக்கும் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க எழில்!

   நீக்கு
 4. வணக்கம்
  பெண்கள் எல்லாம் அடுப்பங்கரைதான் என்று சொல்லும் புத்திசாலிகளுக்கு வீரப்பெண்மணி பற்றி சொல்லிய விதம் நன்று வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரூபன்

   நீக்கு
 5. நல்ல அறிமுகங்கள்!அவியல் சுவையாக இருக்கிறது!நிஜ அவியலும் சுவையாகச் செய்வீர்களோ?!

  பதிலளிநீக்கு
 6. ஒரு கிணற்றில் ஒரே ஒரு தவளை! - நாக்கு

  பதிலளிநீக்கு
 7. நாம அனைவரும் அறிந்திருக்கவேண்டிய
  வணங்கத்தக்க அருமையான மனிதர்கள்
  பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்ள்
  விடுகதைக்குப் பதில் நாக்காயிருக்கலாமோ ?

  பதிலளிநீக்கு
 8. Penmani oru kanmani. parada thakavarkal eantha vara aviyal superb!

  ans solla konjam late ayiduchu.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சுபா!

   நீக்கு
 9. வைரமணி என்ற அந்தப் பெண்மணியின் உறுதி! எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெண் மனசு வெச்சா எல்லாமே முடியும். அவளுக்கே தெரியாமல் அவள் சக்திகள் அனைத்தும், பலவேறு காரணங்களால் முடக்கப்பட்டிருக்கு.

   நீக்கு
 10. துணிச்சாலான அப் பெண்மணிக்கு வாழ்த்துக்கள் .விடுகதையில்
  ஒரு குட்டூண்டித் திருத்தம் ஒரு கிணற்றில் ஒரே ஒரு தவளை
  அது யார் ?...(இப்போது பதில் சுலபமாகி விட்டதே !!) அது வேற யாரும்
  இல்லீங்க அம்பாளடியாளே தான் .நான் சொன்னது சரிதானே ?...
  இப்போதே சுவீற்றக் கொடுங்க தங்கச்சி நேரமாவுது :))))))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்வீட்தானே!? உங்க வீட்டு மாமாக்கிட்ட என் சார்பா செஞ்சு கொடுக்க சொல்லி சாப்பிடுங்க!

   நீக்கு
 11. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சீனு

   நீக்கு
 12. மயானத்தில் வேலை செய்யும் வைரமணி என்ற பெண்மணியைப் பற்றிய தகவலுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!

   நீக்கு
 13. வைரமணி அறிமுகம் வைரத்தில் பொறிக்கப் படவேண்டியது.
  ஆதித்யா....சிரிக்கவும் வைத்துவிட்டார். ராஜி பையனின் மூலமாக.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சீரியல் முழுக்க சிரிக்காத ஆதி, என் மகன் மூலமா சிரிக்க வச்சுட்டார்.

   நீக்கு
 14. வைரமணி அவர்களின் சிறப்பான தகவலுக்கு நன்றி சகோதரி...

  பதிலளிநீக்கு
 15. வைரமணி ! நவரத்தின மணி! அவியல் நன்று!

  பதிலளிநீக்கு
 16. இருமணிகளுமே போற்றப்படவேண்டியவர்கள்.

  ஆதித்யா :)

  விடுகதை சரியாக சொல்லிவிட்டேன்.

  பதிலளிநீக்கு
 17. கோவையில் பல வருடங்களாகவே இது போல ஒரு தாயும் மகளும் அந்திமக் காரியங்களை நடத்தி வைக்கிறார்கள்......

  ஐஞ்சுவை அவியல் அருமை.....

  பதிலளிநீக்கு