Thursday, November 14, 2013

வெங்காயம் - கவிதைன்னுதான் பேருவெள்ளையாய்..., சிவப்பாய்...,
சின்னதாய்..., பெரிதாய்...,
நீ பிறந்தது வடமேற்கு இந்தியாவா!? இல்லை
ரஷ்யாவா!? இல்லை ஆப்கானிஸ்தானா!?

கிடு கிடுவென விலையேற்றம்...,
உன் மதிப்பை!? எண்ணி,
ஆனந்த நர்த்தனம் ஆடுகின்றாயோ!
அச்சிவனைப் போல்!!??

வெங்காய ஊத்தப்பமும், 
பொன்னிறமான 

வெங்காயப் பக்கோடாவும்
கனவாய்ப் போனது!! எங்களுக்கு.

குடி”மகன்களுக்கு சைட் டிஷ்சாக 
முட்டை ஆம்ளேட்டும்,
பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைக்கு 
வெங்காய பஜ்ஜியும், எட்டாக் கனியானது!!

 என் சமையலறையே கமகமக்கும்,
உன்னைச் சேர்த்து செய்த
சமையலாலே! ஆயிரம் காய்கறிகள் 
அடுக்களையில் இருந்தாலும்,
நீயின்றி ஒன்றுமே வேகாதே!

விலையாலும், நெடியாலும்,
கண்ணீர் சிந்த வைத்தாலும்,
உனக்காகவே காத்திருக்கிறோம்...,
விரைவில் தரை இறங்கி வருவாய்
சாமான்யனும் வாங்கும் விதத்தில்!!

32 comments:

 1. ஆயிரம் காய்கறிகள்
  அடுக்களையில் இருந்தாலும்,
  நீயின்றி ஒன்றுமே வேகாதே!

  super !

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரிஷபன் சார்

   Delete
 2. விலையாலும், நெடியாலும்,
  கண்ணீர் சிந்த வைத்தாலும்,
  உனக்காகவே காத்திருக்கிறோம்...

  ஆஹா... அருமையான கெஞ்சல்!

  வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. அப்படி கெஞ்சினாலாவது மனசு இறங்கி விலை குறையுதான்னு பார்த்தேன் அருணா!

   Delete

 3. தாயோடு அறுசுவைபோம் தந்தையோடு கல்விபோம்
  சேயோடு தான்பெற்ற செல்வம்போம் ஆயவாழ்வு
  உற்றாருடன் போம் உடன்பிறப்பால் தோள்வலிபோம்
  பெரியாரோடு வெங்காயம் போம்..!

  காணாமல் போன வெங்காயத்தை நினைவுபடுத்தி
  வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி
  கண்ணீர் வரவைத்த வெங்காயக் கவிதைக்கு
  தமிழ்மணம் வோட்டு ஒன்று போடுவோம்!

  ReplyDelete
  Replies
  1. கண்ணீர் சிந்த வச்சுட்டேனா!? மன்னிச்சு!

   Delete
 4. உனக்காகவே காத்திருக்கின்றோம் நீயின்றி சுவையில்லை.

  அருமை....அருமை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி!

   Delete
 5. உண்மை உண்மை! விரைவில் இறங்கட்டும் வெங்காயவிலை!

  ReplyDelete
  Replies
  1. வெங்காய விலை குறைந்தால் எல்லோருக்கும் நல்லதுதானே!

   Delete
 6. வெங்காயமே இரங்கி , இறங்கி வந்தால் தான் உண்டு. இல்லத்தரசிகளைத் தவிர யாருமே வெங்காயத்தைப் பற்றி யாருமே கவலைப்படுவதாயில்லை. என்ன செய்வது?

  ReplyDelete
  Replies
  1. ம்ம் நிஜம்தானுங்க. சாம்பாருக்கு கால் வெங்காயம் போடலாமா! இல்ல அரை போடலாமான்னு யோசனை செஞ்சு சமைச்சதுல ஆயிரம் நொட்டை சொல்லும்போது அப்படியே சாமபாரை தலைல ஊத்தலாமான்னு இருக்கும்.

   Delete
 7. onion rate eaka Rs.80/- small onion Rs.125/- romba kodumaipa. daily fish kuzhambu vaipathal small onion thevai athikam. eana than panurathu.eapa tomato rate um Rs. 65/-.romba kastam than nama eallam. kavithai superb.onion illatha samayal araiya?

  ReplyDelete
  Replies
  1. எங்க ஊர்லலாம் பெரிய வெங்காயம்தான் எல்லாத்துக்க்கும். அதனால கொஞ்சம் தப்பிச்சோம்!!

   Delete
 8. அருமை அருமை அருமை !...இந்த வெங்காயக் கவிதையைப்
  பார்த்து அந்த வெங்காயம் இரங்கிச்சோ இல்லையோ இந்த
  வெங்காயத்தின் (நானே தான் ) மனம் சிலிர்த்துப் போச்சு ராஜிம்மா ..
  வாழ்த்துக்கள் விரைவில் உங்கள் எண்ணம்போல் வெங்காயத்தின்
  விலைக்குறைப்பு நிகழ வேண்டும் .அருமையான இக் கவிதைக்கும்
  என் மனமார்ந்த பாராட்டுக்கள் .

  ReplyDelete
  Replies
  1. சீக்கிரம் விலைக்குறைஞ்சிடும்ன்னு நம்புவோம்க்கா

   Delete
 9. 1 million is 10 lakhs and 1 crore is 100 lakhs. So, 1 crore is 10 millions.
  முதலில் பாராட்டுக்கள்..... இப்போது உங்கள் தளத்தில் வித்தியாசமாக பலவிதமான பதிவுகள் வருகின்றன. அதில் அனைத்து மிக அருமை... இந்த லெவலில் நீங்கள் பதிவு இட்டால் கூடிய சீக்கிரத்தில் நீங்கள் நம்பர் ஒன்றாக ஆகி ( தமிழ் மணத்தில் வருவதை சொல்லவில்லை மக்கள் மனத்தில் ) பெரிய ஆளாக ஆகிவிடுவீர்கள். யாரு கண்டா அடுத்த சட்டமன்ற தேர்தலில் நீங்கள் முதல்வராக வருவதற்கு வாய்ப்புகள் உண்டு...

  ReplyDelete
  Replies
  1. நான் இப்பவே நம்பர் 1தான். இத்தனை பேர் மனசுல அக்காவாய் இருக்கேனே! இதுப்போதாதா!? அதுமட்டுமில்லாம நமக்கு இந்த முதலமைச்சர் பதவிலாம் ஆசை இல்லை. நேரா அமெரிக்க ஜனாதிபதிதான். எங்க சொல்லுங்க அமெரிக்க ஜனாதிபதி ராஜி வாழ்க! வாழ்க!ன்னு.

   Delete
 10. வெங்காயத்தை நினைச்சி கண்ணுல தண்ணீர் ம்ம்ம்ம் இறங்கி வா வெங்காய ராசா....

  ReplyDelete
  Replies
  1. சீக்கிரம் மனம் இரங்கி விலை இறங்கி வந்திடுவார்ண்ணா!

   Delete
 11. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சீனி!

   Delete
 12. முன்பெல்லாம் வெங்காயத்தை உரித்தால்தான் கண்ணில் நீர் வரும், இப்பொழுது நினைத்தாலே நீர் வரும் போலிருக்கிறது

  ReplyDelete
 13. // என் சமையலறையே கமகமக்கும்,
  உன்னைச் சேர்த்து செய்த
  சமையலாலே! ஆயிரம் காய்கறிகள்
  அடுக்களையில் இருந்தாலும்,
  நீயின்றி ஒன்றுமே வேகாதே!//
  சுவையான வரிகள்!

  ReplyDelete
  Replies
  1. பதிவை ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிங்கயா!!

   Delete
 14. வெங்காயத்தை கண்ணில் பார்த்ததற்கு கடைக்காரர் காசு கேட்கும் காலம் வந்து விடும் போல. அடுத்தவர்களைத் திட்ட பயன்படுத்தும் போடா வெங்காயம் வார்த்தைக்கூட இன்று காஸ்டிலியானதாகி போகி விட்டதே. அழகான வெங்காயக் கவிதை. அற்புதம். பகிர்வுக்கு நன்றி. தொடர வாழ்த்துக்கள் சகோதரரி.

  ReplyDelete
 15. உங்களை நினைத்தால் சிப்பு சிப்பாய் வருகிறது.நீங்க சொல்லியா கீழே வரப்போகுது? ஆனாலும் கவிதை அருமை.தொடருங்கள்

  ReplyDelete
 16. வெங்காயம் விலை ஏறியதால்தான் அதனை நினைந்து நினைந்து வெங்காயத்தை உரிக்காமலேயே ஒரு கண்ணீர்க் கவிதையை தந்து விட்டீர்கள். அதெல்லாம் சரி! வெங்காய மோதிரம் என்ன விலை? பெரியார் இருந்திருந்தால் தொண்டர்கள் இதனையே அவருக்கு அணிவித்து மகிழ்ந்து இருப்பார்கள்.  ReplyDelete
 17. படமும் கவிதையும்
  (தங்கத்தில் வைரம் )
  மிக மிக அருமை
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. வெங்காய கவிதை! நல்லா இருக்கு ராஜி..... படமும் அசத்தல்!

  ReplyDelete