Wednesday, March 05, 2014

SONYயின் தந்தை - மௌனச்சாட்சிகள்

இனி இந்நாட்டின் எதிர்காலம் அவ்வளவுதான் என அண்டை நாடுகளின் அனுதாபம் ஒரு புறம். புல், பூண்டு இனி இங்கு முளைக்காத மாதிரி செஞ்சுட்டோம். சோத்துக்கு சிங்கிதான் அடிக்கனும்ன்ற எதிரிநாட்டின் வெற்றி கெக்கலிப்பு மறுபுறம்.  போரில்தான் தோற்றோம் பொருளாதாரத்திலாவது ஜெயிப்போம்ன்னு நம்மால் முடியும்ன்ற தன்னம்பிக்கையோடு  விடாமுயற்சியுடனும், கடின உழைப்போடு உழைத்த ஜப்பானியர்களுக்கு காலம் கொடுத்த பரிசு அமெரிக்காவுக்கு நிகராக பொருளாதாரரீதியாக 30 ஆண்டுகளில் தலை நிமிர்ந்து நிற்க வைத்தது. 

 ஜப்பானை இந்த நிலைக்கு கொண்டு வந்தவர்கள் நிறையப் பேர் இருந்தாலும் SONY கம்பெனிப் பொருட்கள் மட்டுமல்லாது ஜப்பானியத் தயாரிப்புக்கென்று உலக அளவில் நற்பெயரைப் பெற்றுத்தந்த ஜப்பானிய தொழிலதிபரான அக்யோ மொரிட்டோவும் ஒரு காரணம்.

1921 ஆம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி மெஹோயான்ற இடத்தில் மூத்தப் பிள்ளையாய் பிறந்தார்.  அவரது குடும்பம் 400 ஆண்டுகளாக செய்து வந்த சாக்கே என்னும் மதுபானம் தயாரிக்கும் தொழிலையே அவரும் தொடர வேண்டுமென விரும்பிய அவரது தந்தை, சிறு வயது முதலே நிறுவன கூட்டங்களில் கலந்துக்கொள்ளச் செய்தார். எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கழட்டிப் பார்த்து மறுபடியும் சரியாக மாட்டுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். படிக்கும் காலத்தில் இயற்பியலும், கணிதமும் கைவந்த கலையாயிற்று மொரிட்டோவுக்கு.....,

மேற்படிப்புக்காக ஒசாக்கா இன்டீரியல் பல்கலைகழகத்தில் இயற்பியல் பாடத்தில் படித்து பட்டம் பெற்றார். பின், ஜப்பான் கடற்படையில் அதிகாரியாக பணியாற்றினார். அப்போது இபுக்கான்ற பொருளியல் வல்லுனருடன் நட்பு ஏற்பட்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் தன் குடும்பத்தொழிலான மதுபான தயாரிப்பில் ஈடுபட அவருக்கு விருப்பமில்லாமல் போனது. அதற்கு காரணம் உலகத்தையே தன் பக்கமும், ஜப்பான் பக்கமும் திரும்ப வைக்க வேண்டுமென விரும்பினார்.

தனது 25 வயதில், 1946ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி தனது நண்பர் இபுக்காவுடன் சேர்ந்து வெறும் 190 ஆயிரம் யென்(375டாலர்) மூலதனத்தில் 20 ஊழியர்களைக் கொண்டு “டோக்கியோ டெலிகம்யூனிகேஷன்ஸ் கார்ப்பரேஷன்” என்ற நிறுவனத்தை தொடங்கினார். போரில் பாதிக்கப்பட்ட ஒரு பாழடைந்த இடம்தான் அவருடைய தொழிற்சாலை. கூடிய விரைவிலேயே டேப் ரெக்கார்டர்ன்ற ஒலிப்பதிவுக் கருவியை உருவாக்கியது இவரது நிறுவனம்.ஆனால், தான் தயாரிச்ச டேப் ரெட்க்கார்டர் மிகப்பெரியதாய் இருந்ததால் அதிக வரவேற்பைப் பெறாது என மொரிட்டா உணர்ந்தார். கூடவே, போருக்குப் பிந்தையக் காலம் என்பதால் அதிக விலைக் கொடுத்து வாங்கும் நிலையில் ஜப்பானியர்கள் என்பதையும் உணர்ந்து அமெரிக்காவி பெல் லேப்ஸ்ன்ற நிறுவனத்திடமிருந்து உரிமம் பெற்று கையடக்க வானொலியை உருவாக்கினார். அமெரிக்கர்களின் தொழில்நுட்பத்தைக் கொண்டு புதிய பொருள் படைக்கும் திட்டம் மொரிட்டாவுக்கு நல்லப் பெயரைப் பெற்றுத் தந்தது. நல்லபெ பெயருக்குக் காரணம் தரக்கட்டுப்பாடுக்கு முக்கியத்துவம் தந்து அதுக்கென்று தனித்துறையை உருவாக்கினதுதான்.


தன்னுடைய புதுப் பொருள் உலகம் முழுக்கப் பரப்ப முடிவு செய்த மொரிட்டாவுக்கு எல்லோராலும் உச்சரிக்கக் கூடிய எளிதானப் பெயரைத் தேடினார். அவரும், அவருடைய ஊழியர்களின் தேடலில் சிக்கியதுதான்  சோனஸ் ன்றச் சொல். இலத்தீன் மொழியில் சோனஸ் என்றால் ஒலி என்று பொருள். அந்த சொல்லையும் அப்போது அமெரிக்காவில் புகழ் பெற்றிருந்த “சானி பாய்ஸ்” ன்ற இசைக்குழுவின் பெயரையும் இணைத்து 1958 ல் ”சோனி(SONY) கார்ப்பரேஷன்” என்று தன் நிறுவனத்திற்கு பெயர் மாற்றினார் மொரிட்டா.

சில வருடங்கள் கழித்து அமெரிக்காவில் சோனி நிறுவனக்கிளையைத் தொடங்கி தன் குடும்பத்தோடு அங்கு குடிப்போனார், அங்கு சென்று, வாடிக்கையாளர்களைத் திருப்திப் படுத்தும் விதமாக புதுப் புது மின்சாதனப் பொருட்களைக் கண்டுப்பிடித்து வெளியிடத் தொடங்கினார்.

ஒரு முறை தன் குடும்பத்தோடு சுற்றுலா செல்லும்போது டேப் ரெக்கார்டர் கொண்டு வருவதில் இருந்த சிக்கல்களைக் கண்ட மொரிட்டோ வாக்மேனைக் கண்டுப் பிடித்தார். ஒலிவாங்கியை காதில் மாட்டிக்கொண்டு தெருவில் யாராவது நடப்பாங்களா!?ன்னு சுற்றத்தார் கேலி செய்தனர். ஆனாலும், மொரிட்டோ சோர்ந்து விடவில்லை. வாக்மேன் சந்தைக்கு வந்து சக்கைப் போடு போட்டதை நீங்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்து விடமுடியாது.

தொலைக்காட்சி, வீடியோ ரெக்கார்டர்ன்னு இவர்களின் தயாரிப்பு பட்டியல் நீள ஆரம்பித்தது. அமெரிக்கா மட்டுமல்லாது உலகம் முழுதும் சோனியின் புகழ் பரவ ஆரம்பித்த்டது. எல்லா சாதனை மனிதர்களையும் போலவே மொரிட்டோ மிக சுறுசுறுப்பானவ. தன் 60 வயதில் நீசறுக்கு, ஸ்கூபா முக்குளிப்பு டென்னிஸ் விளையாடக் கற்றுக்கொண்டார். ஓவியம், இசையை பெரிதும் விரும்பினார், 72 வயதில் பக்கவாதப் பாதிப்பால் எல்லாப் பொறுப்புகளிலிருந்தும் விலகினார்.

தரம் ஒன்றே தாரகமந்திரம்ன்னு சாதனைப் புரிந்த மொரிட்டா 1999ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி தனது 78 வயதில் டோக்கியோவில் காலமானார்.   அவர் இறந்தபோது உலகப் பணக்காரர்களின் வரிசையில் 386வது இடத்தில் இருந்தார்.  அவரின் கடின உழைப்புக்கு கிடைத்த மற்றொரு பரிசு இங்கிலாந்தின் உயரிய ஆல்பர்ட் விருது, ஃப்ரான்ஸின் ஆக உயரிய லெஜெண்ட் ஆப் ஹானர் விருது, ஜப்பானிய மன்னரின் பர்ஸ்ட் க்ளாஸ் ஆர்டர் விருது உட்பட கணக்கிலடங்கா விருதுக்கு சொந்தக்காரர் மொரிட்டா.

தன் சுய சரிதையில்..., வாழ்க்கையிலும் தொழிலிலும் வெற்றிப்பெற பள்ளியில் வாங்கும் மதிப்பெண்கள் முக்கியம் அல்ல  ஆர்வம் மட்டுமே படைப்புத்திறனுக்கான திறவுகோல். ஆர்வத்தோடு, கடின உழைப்பு, தரமும் சேர்ந்தால் உலகை வசப்படுத்தலாம் ”ன்னு குறிப்பிட்டுள்ளார். அவர் சொன்னதைப் போலவே எல்லோர் வீடுகளிலும் சோனி தயாரிப்பின் எதாவது ஒரு பொருள் இருக்கும்தானே!?


மீண்டும் அடுத்த வாரம் மௌனச் சாட்சிகள் பகுதிக்காக சந்திக்கலாம்.

22 comments:

 1. சோனி தயாரிப்பின் எதாவது ஒரு பொருள் கண்டிப்பாக இருக்கும் சகோதரி...

  /// தரம் ஒன்றே தாரகமந்திரம்...
  ஆர்வம் மட்டுமே படைப்புத்திறனுக்கான திறவுகோல்... ///

  உன்னத உண்மை வரிகள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா!

   Delete
 2. இன்றைய பதிவில் சில குறிப்புகள் உங்களுக்கு உதவக் கூடும்... (UK, US போன்ற மற்ற நாடுகளில் உங்கள் தளத்தை பார்க்கவே முடியவில்லையாம்... தகவல் வந்தது...)

  6. .in என்பதை .com-யாக மாற்றி எல்லா நாட்டவரையும் வாசிக்க வைக்க...!

  லிங்க் : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisdom-3.html

  முடியவில்லை என்றால் கூப்பிடுங்க சகோதரி... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. பார்த்துவிட்டேன் அண்ணா!

   Delete
 3. சோனி நிறுவனர் பற்றிய தகவல்கள் அறிந்திராதது! சுவையாக தொகுத்து தந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

   Delete
 4. அறியாத தகவல்கள் அறிந்து கொண்டேன் நன்றி !

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா!

   Delete
 5. நல்ல பதிவு. நிறைய தெரிந்து கொண்டேன்.
  நன்றி தோழி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருணா!

   Delete
 6. சுவையான தகவல்தான். ஆனால் சோனி இப்போது சோனியாகி மறைந்து கொண்டு வருகிறது என்பதுதான் இப்போது உள்ள நடப்பு நிலமை

  ReplyDelete
 7. வாழ்க்கையிலும் தொழிலிலும் வெற்றிப்பெற பள்ளியில் வாங்கும் மதிப்பெண்கள் முக்கியம் அல்ல ஆர்வம் மட்டுமே படைப்புத்திறனுக்கான திறவுகோல். ஆர்வத்தோடு, கடின உழைப்பு, தரமும் சேர்ந்தால் உலகை வசப்படுத்தலாம் ”// என்ன ஒரு தீர்க்க தரிசனமான கருத்து! நல்லதொரு பதிவிற்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

   Delete
 8. அருமையான எழுத்து... தெரியாத விஷயங்கள் தெரிஞ்சிகிட்டேன்.. நான் உங்க பதிவுகள் ஆரம்பத்துல படிச்சதுக்கும் இதில் படிக்கதுக்கும் நிறையவே நிறைவான வித்தியாசங்கள்.. உண்மைய சொன்னா புக்காவே போடலாம் :-)

  ReplyDelete
  Replies
  1. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதான் ஆவிப்பா போன்ற இம்சைகளும், அரசன் எழுதி 500ரூபாய்ல வெளி வரப்போற இம்சைலாம் பதிவுலகம் தாங்கிட்டு இருக்கு. இதுல என் இம்சை வேறயா!?

   Delete
 9. அந்த டிரம்ஸ் கீ போர்ட் சூப்பர்.. தற்செயலா மவுஸ் அது மெல்ல பட்டு சத்தம் வந்தப்பதான் அதையே கவனிச்சேன்... அதுல தான் இசை கத்துக்கிட்டு இருக்கேன்.. :-)

  ReplyDelete
  Replies
  1. ஏதோ ஒரு தளத்தில் பார்த்துவிட்டு அப்புவுக்காக வெச்சேன் சீனு.

   Delete
 10. ஒரு சாதனையாளரைப் பற்றி பலரும் அறியாத தகவல்களைத் திரட்டித் தந்து அறியத் தரும் முயற்சிக்குப் பாராட்டுகள் ராஜி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதாம்மா!

   Delete
 11. மிகச் சிறப்பான ஒரு தன்னம்பிக்கை மனிதர் பற்றிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete