Thursday, July 17, 2014

தையல் வகுப்பு ஆல்பம் - கிராஃப்ட் கார்னர்

பசங்கலாம் பெருசாகிட்டு,  அதுங்க வேலைகளை அதுங்களே பார்த்துக்குதுங்க. காலைல எல்லோருக்கும் சமைச்சுக் கொடுத்து அனுப்பி, மாலை அவங்கலாம் திரும்பி வரும் வரை சும்மாதான் இருக்கனும். டிவி பார்க்கப் பிடிக்காது. அதிகப்பட்சம் இணையத்துல வந்து கும்மியடிப்பேன். கொஞ்ச நேரம் எம்ப்ராய்டரி செய்வேன்.

ரொம்ப நாளாய் தையல் கத்துக்கனும்ன்னு ஆசை. தையல் வகுப்பு நடக்கும் இடம் எங்க வீட்டுல இருந்து 4கிமீ தூரம்க்குறதால அந்த ஆசை நிறைவேற ரொம்ப நாளாய் தள்ளிப் போட்டுக்கிட்டே போச்சு. தற்செயலாய் எங்க ஊர்ல  ரோட்டரி சங்கத்துல இருந்து வந்து தையல் வகுப்பு சொல்லித் தர்றதா சொன்னாங்க. அதும் எங்க வீட்டுக்கு  பக்கத்துலயே வகுப்பு நடக்கும் இடம்ன்றதால உடனே சரின்னு சொல்லிட்டேன்.  

மூணு மாசம் சின்சியரா வகுப்புக்குப் போறேன்ற பேர்ல வகுப்புக்குப் போய் அரட்டை அடிச்சுட்டு வந்தேன். போன வாரத்துல ஒருநாள் திடீர்ன்னு இதுவரை கத்துக்கிட்டதையெல்லாம் சின்ன அளவுல செஞ்சு சாட் பேப்பர்ல ஒட்டி ஆல்பமா கொண்டு வரனும்ன்னு குண்டைத் தூக்கிப் போட்டாங்க. அப்புறம் என்ன மாங்கு, மாங்குன்னு உக்காந்து ஆல்பம் ரெடிப் பண்ணி மேடம் கிட்ட வாங்கி குட்ன்னு பேரும் வாங்கியாச்சு.


மகிழ்ச்சியோ, துக்கமோ, கஷ்டமோ, நஷ்டமோ எதாயிருந்தாலும் உங்கக்கிட்ட பகிர்ந்துக்குறதுதானே என் வழக்கம்!? அதான் அந்த ஆல்பத்தையும் உங்கக்கிட்ட காட்ட படமெடுத்து பதிவாக்கிட்டேன். நல்லா இருக்கான்னு பார்த்துச் சொல்லுங்க சகோ’ஸ்.


முதல் பக்கத்துலயே தேசியக்கொடியை எம்ப்ராய்டரி செஞ்சு ஒட்டனும்ன்னு சொன்னாங்க. 

நெளிவு சுளிவுகள் அதிகமிருக்குற வட்டங்களும்.., இதயமும்.....


அடுத்து சுடிதார் மற்றும் ஜாக்கெட்களுக்கான பின்கழுத்து மாதிரிகள்..., ”ரவுண்ட்” கழுத்தும், ”பானை” கழுத்து மாதிரியும்...,

அடுத்து ”பா” கழுத்து மாதிரி...,


அடுத்து “வி”கழுத்து, படிக்கட்டு கழுத்து மாதிரி....,

இரண்டு விதமான “ஸ்டார்” கழுத்து மாதிரி...,

”மாங்காய்” கழுத்தும், “அரும்பு” கழுத்து மாதிரியும்....,

பைப்பிங் கழுத்து மாதிரி....,


“நெக்லெஸ்” கழுத்து மாதிரி...., 

இப்பலாம் உள்ளாடைகளை வீட்டிலயே தைச்சி யாரும் பயன் படுத்துறதில்ல. ஆனாலும் தையல் வகுப்பில் இதான் முதல் பாடம்..,

அடுத்து நிக்கர்....,



சின்ன குழந்தைக்களுக்கான “ஃப்ராக்”...,

அடிப்படையான சுடிதார் டாப்...,

சுடிதார் ஃபேண்ட்...,

 பெண்பிள்ளைகளுக்கான பாவாடை மாதிரி..., 

கடைசியாய்தான்  ஜாக்கெட். 

 இனி தையல் வகுப்புக்கு போறேன்ற பேர்ல அரட்டை அடிக்க முடியாது. இனி பொழுது போக்க வழி!!??

ம்ம்ம்ம் இனி உங்களுக்கெல்லாம் வகுப்பெடுக்குறேனே!!?? ப்ளீஸ்!!!

 

9 comments:

  1. அருமையாக உள்ளது...
    வாழ்த்துக்கள். பதிவிற்கும் கற்றுக்கொடுப்பதற்க்கும்.

    ReplyDelete
  2. ஆல்பம் அழகா இருக்கு. ஆமா! இனி எங்களுக்கு சொல்லிக் கொடுங்க. நானும் தில்லியில் தையல் வகுப்புக்கு சென்றேன். அப்போ 1 வயது ரோஷ்ணியுடன். கைல சுத்தற மெஷின் தான் அங்கெல்லாம். கீழ உட்கார்ந்து கத்துக்கறதுக்குள்ள ரோஷ்ணியின் விஷமம் தாங்கலை. அதோடு விட்டுட்டேன்.....:)

    அப்புறம் வீட்டுலயே மெஷின் வாங்கி ( உஷாவோடது கைல சுத்தறது தான்) என்னவர்கிட்ட தான் கத்துகிட்டேன்....:)

    புடவை ஓரம் அடிக்க, தலையணை உறைகள், கிழிஞ்சது தைக்க என்று.... என் ”தையல் மாஸ்டர்” என் கணவர் தான்....:))

    என் மாமியார் 40 வருஷமா தைக்கிறாங்க. இப்ப தான் கண் சரியில்லை. அவங்க தான் எனக்கு பத்து வருஷமா ப்ளவுஸ் தைக்கிறாங்க. இப்ப தான் வெளில குடுக்கறேன். ஆனா ஒண்ணு அவங்களோட மிஷின தொட விடமாட்டாங்க....:)) வெட்டும் போது ப்ளவுஸ் கட்டிங்கெல்லாம் பார்த்திருக்கேன்....:)

    ReplyDelete
  3. கில்லாடி சகோதரி நீங்கள்... பாராட்டுக்கள்...

    எம்மாம் பெரிய பா-ஆஆஆ.....!

    ReplyDelete
  4. ஆல்பம் சூப்பர் ராஜி. இப்படி ஒரு தொகுப்பாக இருந்தால் தேவைப்படும்போது சட்டென்று எடுத்துப் பார்த்துக் கொள்ளலாம். நிறைய பொறுமை இருக்கிறது உங்களுக்கு. பாராட்டுகள் ராஜி.

    ReplyDelete
  5. ராஜி...அழகான ஆல்பம்.
    சீக்கிரம் கிளாஸ் ஆரம்பியுங்க ...நான் முதல் ஸ்டூடண்டா வரேன்

    ReplyDelete
  6. அரட்டை அடிச்சேன்னு சொல்லிட்டு மூணு மாசத்துல இவ்ளோ கத்துக்கிட்டு இருக்கீங்க! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. எம்மாடி ராஜிம்மா உன்னோட செல்லக் கைகளால அக்காவுக்கு இந்தச்
    சட்டையைத் தைத்துக் குடும்மா என் அன்புத் தங்கை இவ்வளவு அழகாக
    தைக்கும் போது வடக்கால ஏன் போகணும் ?...:)))))))
    வாழ்த்துக்கள் தங்கையே !

    ReplyDelete
  8. really super....continue..all the best..

    ReplyDelete