Saturday, July 19, 2014

முதன் முதலாய் அன்னையென பட்டம் தந்தவளின் பிறந்த நாள் இன்று!!

தூயா பிறந்து 20 நாட்களில் என் உறவினர் வீட்டு கல்யாணத்திற்கு போனபோது எடுத்த படம்.  என் அப்பாக்கு தெரிந்ததும் ஃபோட்டோ எடுத்தா ஆயுசு குறைவு, அதுலயும் குழந்தை தூங்கும்போது எடுத்திருக்கியே!! அறிவில்லையா உனக்குன்னு புலம்பித் தீர்த்துட்டாரு.

20 வருசங்கழிச்சு எனக்கப்புறம் பிறந்த குழந்தைன்றதால மேடம்க்கு ரொம்ப மரியாதை, கவனிப்பு. அவ இருக்கும் இடத்தில் ஃபேன் ஓடிட்டே இருக்கனும். எப்பவாவது கரண்ட் நின்னுட்டா ஆள் மாத்தி ஆள் விசிறிக்கிட்டே இருப்போம். தன்னோட எட்டாவது மாசத்தில் என் ஃப்ரெண்ட் கல்யாணத்தின் போது... வேர்த்துக் கொட்டி கசகசன்னு இருக்குன்னு என் அம்மாக்கிட்ட சொல்லுது..,


முதல் பிறந்த நாளின் போது.., வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் தன் அப்பாவோடு...,  மேடம் அப்பதான் நடக்க ஆரம்பிச்சாங்க. அதனால, ஒரு நிமிசம் கூட நிக்காம ஓடிட்டே இருப்பாங்க. இந்த ஃபோட்டோவை நான் எடுக்கப் பட்டப் பாடு இருக்கே! ஸ் அபா!

 ஒரு சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது, அவ அப்பா சட்டையில் குத்தியிருந்த தேசியக்கொடியை பார்த்து தனக்கும் வேணுமின்னு அடம்பிடிச்சு தன் மார்பில் குத்திக்கிட்டா. எனக்குதான் குண்டூசி குத்திடுமோன்னு பயம்.

பேத்தியை ஈ, எறும்பு மொய்த்தால்கூட கலங்கும் என் அப்பா, காது குத்தி வலியில் அழும்போதும் சிரித்தப்படி.. பெரியவ பொறந்த சமயத்துல என் அப்பாவோட பங்காளி வீட்டுல யாரோ இறந்துட்டாங்க. அதனால,  அவ பேர் சூட்டும்போது புது துணியும், தங்கமும் சீர் செய்யக்கூடாது. குழந்தையோட மூணாவது மாசம் செய்தால் போதும்ன்னு என் மாமியார் சொல்லிட்டாங்க. முதல் பேத்தி கழுத்துல எதுமில்லாதது என் அப்பா கண்ணை உறுத்த, புதுசுதானே போடக்கூடாதுன்னு, என் அம்மா தாலிக்கொடியிலிருந்த கால்காசை எடுத்து ஒரு சிவப்பு கலர் கயிறில் கோர்த்து பாப்பா கழுத்தில் போட்டுவிட்டார்.

மூணாவது மாசம் கொலுசு, மோதிரம், செயின்லாம் போட்ட பிறகு, அந்த சிவப்பு கயிற்றை கழட்டி பீரோ லாக்கர்ல வச்சுக்கிட்டார். நான் என் வீட்டுக்குப் போனப்பின், பேத்தி நினைவு வரும்போதெல்லாம் அந்தக் கயிற்றை வாசம் பிடிச்சுப்பார். குழந்தைக்குண்டான வாசனை, சோப்பு, பவுடர், பாப்பாவோட வேர்வைலாம் சேர்ந்து கலவையா ஒரு வாசனை அந்தக் கயிற்றில் இருக்கும். அதைத்தான் வாசம் பிடிப்பார். ரொம்ப நாளாய் இருந்துச்சு. வீடு மாத்தும்போது அந்தக் கயிறு மிஸ்ஸிங். அதுக்கு எனக்கும், என் அம்மாவுக்கும் விழுந்த டோஸ் இருக்கே! அப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா அதை சொல்லி மாளாது.


அக்காவும், தங்கையும் எப்பவும் திக் ஃப்ரெண்ட்ஸ். ஒண்ணை ஒண்ணு பிரியாது. அவங்களுக்குள் எதும் மறைச்சுக்கவும் மாட்டாங்க. அவங்க இருவர் உலகத்துக்குள்ளும் என்னாலயே நுழைய முடியாது.

தூயாக்கு தம்பின்னா கொள்ளை இஷ்டம்..., ஆனா, அப்புதான் அக்காவோடு மல்லுக் கட்டுவான் காரணம் அவனுக்கு அவள்மீது கொள்ளை அன்பு மட்டுமல்ல. எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவா. சின்ன அக்கா மாதிரி திருப்பி அடிக்காத காரணமும்கூட...,
முதல் மகளாய் பிறந்தாய்
முதன்முதலாய் “அம்மா”வென்னும்
புதுப்பட்டம் பெற்றேன் உன்னால்...,
அன்றையத் தினத்தை
நினைத்துப் பார்க்கிறேன்...,
ஆடிமாதம், முற்காலை வேளையில்
வெண்துகிலுக்கிடையில்
சிவப்பு ரோஜாவான உன்னைக் கண்டதும்..,
வலியும், சோர்வும், மயக்ககடலில்
இருந்த எனக்கு சிறந்த களைப்பாறல்!!

சின்னஞ்சிறு பொன்மலர்,
செம்பவழ வாய், வெள்ளிக்காசின்
இரைச்சலாய் உன் அழுகை, இதுவரை
பழகியிறாமலே ஆராரோ பாடியது
மனமும்.., வாயும்...,

பேர் வைக்கும் நாளன்று.., 
பட்டுத்துணி விரிப்பில்
தங்கம் போல் ஜொலித்த உன்னைக் 
கண்டு பொன்னே வெட்கியது!!
உறவினர்கள் தேன் தடவி வாழ்த்த...,
எனக்கோ பூரிப்போடு கவலையும்!!!!
எவர் கண்படுமோவென்று!!!

”ங்கா” பேசி மயக்கிய நீ
“அம்மா”வென அழைத்து
என்னை உன் சேவகி ஆக்கிவிட்டாய்!!
கவிழ்தல், முட்டிப்போடுதல்
நடைப்பயில்தல், உண்ணுதல்
போன்ற இயல்பான விசயங்களுக்குக் கூட
சிறகடித்துப் பறந்தேன்.

காலண்டர் படி பத்தொன்பது முடிந்து,
 இருபதாம் வயதாம் உனக்கு!!
ஆனால், முதள் நாள் கண்டு பூரித்த,
அதே குழந்தைதான்  இன்றும் நீ எனக்கு!!
நாளாக, நாளாக
வயது மட்டும்
கூடினால் நலமா!?
இனி, கழியும் ஒவ்வொரு நாளும்
உன் சரித்திரத்தில் நன்னாளாய்
பொரிக்கப்பட வேண்டும்...,

போட்டாப் போட்டி, பொறாமை,
சூது, சண்டைகள்லாம் பொதுவாய் உள்ள உலகில்,
போராட..., மனவலிமை, முயற்சி, உழைப்பு
மட்டும் போதாதம்மா!!
சோர்வு தரா, உடல்வலிமையும்
வேண்டுமென நினைவுக் கொள்.

பருவத்துக்கே உண்டான குறும்பு, துடுக்குத்தனம்,
வேண்டாத ஆசைகளை நீக்கி
விடாமுயற்சியோடு, பயிற்சியும்
எந்நாளும் தொடர்ந்தால் எழுச்சி
காண்பாய். எழுச்சியோடு...,
வேகமும், விவேகமும் 
சேர்ந்தால் “வளர்ச்சி” கைக்கூடும்.
வளர்ச்சியினால் எந்நாளும் உன்வாழ்வில்
மலர்ச்சி உண்டாகும்.

உன் வாழ்வில் என்றும் மாறா மலர்ச்சி 
உண்டானால்......, உனை
நினைந்துருகும்
தாய் மனசு குளிர்ந்து

பார் போற்ற வாழ்ந்திடுவாய்.
அந்நிலையில்  உன்னைக்
காணுகின்ற நாளில் 
உன் அன்னையின் துயரம் 
மறந்தல்ல.. பறந்தே போகும்!!

43 comments:

 1. குட்டி செல்லத்திற்கு இனிய பிறந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஹிஷாலீ

   Delete
 2. தூயாவுக்கு என் ஆசீர்வாதங்கள் +இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி உஷா!

   Delete
 3. தூயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பாப்பாவை வாழ்த்தியமைக்கும் நன்றிங்க சகோ!

   Delete
 4. தூயாவிற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! இனிய நினைவலைகள் அருமை! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. என் உயிர் மூச்சே இந்த நினைவலைகளில்தானே இருக்கு சகோ!?

   Delete
 5. தூயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்து ஓக்கே! தாய்மாமன் கிஃப்ட் எங்கே!?

   Delete
 6. பதிவு அருமைங்க வித்தியாசமான முறையில் சொல்லிஸ் சென்றது மனதை கவர்ந்தது

  ReplyDelete
  Replies
  1. என்ன சகோ! மருமகள் பதிவுன்றதால கலாய்ப்பு மிஸ்ஸிங்கா!?

   Delete
  2. அவர் இப்போ எல்லாம் நல்ல பிள்ளை ஆயிட்டாரு இல்ல.

   Delete
 7. மகளுக்குப் படைக்கப்பட்ட கவிதை அருமை! தூயாவிற்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! மற்ற இருவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்! மூவருமே மிகவும் கொள்ளை அழகு போங்கள்! சுத்திப் போடுங்க சகோதரி!

  சகோதரி ராஜியின் கனவுகள் போல தூயாவின் கனவுகள் மெய்பட எங்கள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தூயாவின் கனவுகாள் மெய்ப்பட வாழ்த்தியமைக்கு நன்றிங்க சகோ!

   Delete
 8. மறக்க முடியாத நினைவுகளை மகளுக்காக படைத்திருக்கிறீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. எந்த நாளில் மறக்க முடியாதவையாச்சே மழலைகளின் நினைவுகள்

   Delete
 9. தூயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

  நீண்டநாளா உங்களை ஆளே காணாமே,எப்படி இருக்கீங்க??

  ReplyDelete
  Replies
  1. கொஞ்ச்ம உடல்நிலை சரியில்லீங்க ஸாதிகா அக்கா! இனி தொடர்ந்து வருவேன். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிக்கா!

   Delete
 10. தூயாவிற்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.

  உங்களுக்கும் வாழ்த்துக்கள் சகோ. வித்தியாசமாக சொன்னதுக்கு. உங்களுடைய இந்த பதிவைப் பார்த்தவுடன், இங்கு 21வது பிறந்த தினத்தை மிக விமர்சையாக கொண்டாடுவார்கள். 21வது பிறந்த நாள் விழாவின் காரணகர்த்தாவின் வளர்ச்சியை மலரும் நினைவுகளாக போட்டுக்காட்டுவார்கள். அது தான் எனக்கு நியாபகத்துக்கு வந்தது.

  ReplyDelete
  Replies
  1. ஓ! ஆனா, என் பிள்ளைகளின் திருமணத்தின் போது அவர்களின் ஒவ்வொரு வளார்ச்சியையும் படமா போட்டுக் காட்டனும்ன்னு ஆசை! அதுக்காகத்தான் ஒவ்வொரு படங்களா சேகரிச்சு வச்சிருக்கேன்.

   Delete
 11. தூயாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி கும்மாச்சி!

   Delete
 12. பிள்ளைக்கு ஒரு தாய் இதை விட பெரிதாக எதுவும் அளிக்க முடியாது. அருமை. வாழ்த்துக்கள்.. நான் மட்டும் 9000 மைல்களுக்கு பதிலாக அருகில் இருந்தால், ஏற்கனவே தாயார் நிலையில் உள்ள ஒரு பரிசு அனுப்பி இருப்பேன்.

  ReplyDelete
  Replies
  1. அண்ணே! நான் ஏற்கன்வே சொன்னதுப் போல அன்புக்கு தூரம் பெரிசில்ல. அதுமில்லாம கொரியர்க்காரனும் பொழைக்கனும்ல்ல. கிஃப்டை பார்சலில் அனுப்பவும்.

   Delete
 13. தூயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஸ்பை!

   Delete
 14. இதுவல்லவோ சந்தோசம்... செல்லத்திற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 15. குட்டிம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா...

  ReplyDelete
 16. தூயாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. தூயாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். பெருமையும் பெருமிதமும் நெகிழ்வும் மகிழ்வுமாய் மகளுக்களித்த வாழ்த்து சிறப்பு. வாழ்த்துக்கள் தாய்க்கும் மகளுக்கும்.

  ReplyDelete
 18. சிறப்பான பகிர்வு. வாசிக்க வாசிக்க பரவசமாய் இருந்தது. மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அழகான அறிவுரை. அனைவருக்கும் பொருந்தும் படியாய் சொன்னது உங்கள் திறமை. நமது வலைத்தளம் : சிகரம்

  ReplyDelete
 19. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்,பொண்ணுக்கு!

  ReplyDelete
 20. இதை விட மிக சிறந்த பிறந்த நாள் வாழ்த்தா வேற எதுவுமே இருக்காது அக்கா..... தூயாவிற்க்கு என்னுடைய வாழ்த்துக்களும் :) :)

  ReplyDelete
 21. தங்கள் அன்பு மகள் தூயாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  த.ம.8

  ReplyDelete
 22. தூயாவுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete
 23. அனுபவப் பதிவு....நல்லா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க ராஜியக்கா வாழ்த்துக்கள்

  ReplyDelete
 24. அழகு மகளைப் பெற்றெடுத்த அன்னைக்கு முதல் வாழ்த்துக்கள்.
  உங்களின் இனிய மகளுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. தூயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். தாமதமாய்...

  ReplyDelete
 26. தூயாவுக்கு என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்...! தூயா, இனியா அழகான பெயர்கள் இல்லையா ராஜி .ம்..ம்...ம்...அதற்கேற்ப கவிதையும் அருமை அதற்கு தங்களுக்கும் என் வாழ்த்துக்கள். தொடருங்கள் ....

  ReplyDelete
 27. இன்னிக்குத்தான் இந்தப் பதிவை சகோதரர் துளசிதரன் பதிவைப் பார்க்கப் போனப்போ கண்டு உடனே ஓடி வருகிறேன்.

  கால தாமதமானாலும் உங்க கண்மணிக்கு என் உளமார்ந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!

  படங்களும் உங்க கவிதையும் உள்ளத்தை அள்ளிச் சென்றது.
  அருமை! வாழ்த்துக்கள் சகோதரி!

  ReplyDelete
 28. துயாவுக்கு எனது நல்வாழ்த்துகள்

  ReplyDelete