ஏங்க! இன்னிக்கு ஞாயித்துக்கிழமை. அதனால காலை டிஃபனுக்கு என்ன செய்யட்டும்!? அப்புக்கு பிடிச்ச மொறு மொறு தோசையும் சாம்பாருமா!? பெருசுக்கு பிடிச்ச பூரி, குருமாவா??! இல்ல சின்னதுக்குப் பிடிச்ச சப்பாத்தியும் தக்காளித் தொக்குமா!?
ம்ஹூம் எதும் வேணாம். புது மாவுல செஞ்ச இட்லியும், மைல்டா காரமில்லாத தேங்காய் சட்னியும் செஞ்சிடேன்.
ஐயையே! எப்பப் பாரு சப்புன்னு சட்னியும், இட்லியும்தானா!? உங்களோட பெரிய இம்சையா போச்சு! உங்களுக்கு பிடிச்சதைத்தான் நாங்களும் சாப்பிடனுமா!? எங்களுக்குன்னு தனிப்பட்ட ஆசை இல்லையா!?....,
அம்மா! தாயே! உனக்கு எது செய்யத் தோணுதோ அதையே செய். நான் சாப்பிட்டுக்குறேன்.
இப்படிச் சொன்னா எப்படிங்க!? அப்புறம் நான் உங்களை கொடுமைப்படுத்துறதா உங்க அண்ணன், தம்பி, அம்மாக்கிட்டலாம் போய் ஒப்பாரி வைக்காதீங்க.
டேய் அப்பு! நான் முடி வெட்டிக்க கடைக்குப் போறேன். அம்மாக்கிட்ட சொல்லிடு.
ஏங்க! நாளைக்கும், நாளன்னிக்கும் கவர்ன்மெண்ட் லீவாச்சே! எங்காவது போய் வரலாமா!?
டெய்லியும் நாப்பது கி.மீ தூரத்தில் இருக்குற ஆஃபீசுக்கு பஸ்சுல போய் வரேன். அங்க போய் சீட்டு தேய்க்குற ஆஃபீஸ் உத்தியோகம்ன்னு நினைச்சியா!? அவங்க சொல்ற இடத்துக்கு ஓடனும்டி. எப்படா லீவு கிடைக்கும், ஆயில் பாத் எடுத்து, அக்கடான்னு தூங்கலாம்ன்னு நினைச்சா, அங்க போலாம், இங்க போலாம்ன்னுட்டு...,
ம்க்கும், உங்களுக்கென்ன!? ஆஃபீஸ் போறேன்னுட்டு சாக்குச் சொல்லிட்டு காலைல போய் நைட்தான் வர்றீங்க. சில சமயம் ஞாயித்துக்கிழமைல கூட ஆஃபீசுக்குப் போயிடுறீங்க. ஆனா, வாரத்துல ஏழு நாளும், வருசத்துல 365 நாளும் நீங்க பெத்ததுங்கக்கிட்ட நாந்தானே லோல் படுறேன்!! உங்களைக் கட்டிக்கிட்டு ஒரு பார்க் உண்டா?! கோவில் உண்டா? இல்ல சொந்தக்காரங்க வூட்டுக்குதான் போனதுண்டா!?
வேணும்ன்னா உங்கம்மா வீட்டுக்குப் போயிட்டு வாயேன்!!
நல்லா வந்துடும் என் வாயில. பக்கத்து தெருவில் இருக்கும் அம்மா வீட்டுக்கு போனால் என்ன? போகாட்டி என்ன?! போய் அக்கடான்னு ரெண்டு நாள் இருக்க முடியுமா!? வாசல் தெளிக்க ஓடி வரனும், வீட்டைக் கூட்ட ஓடி வரனும்.
குட்டிம்மா! காலைலயே ரவி போன் பண்ணான். போய் என்னான்னு கேட்டுட்டு வந்துடுறேன். அம்மாக்கிட்ட சொல்லிடு.
ஏம்மா! என் கல்யாணத்துக்கு முன்னாடி படிச்சு என் சமபாத்தியத்துல கார், வீடுன்னு செட்டிலாகனும், பெரிய, பெரிய கல் வச்ச நகை வாங்கனும், பெரிய மண்டபத்துல பண்னனும், மாப்பிள்ளைக்கு சமைக்க தெரிஞ்சிருக்கனும்ன்னு என் எதிர்பார்ப்பு பெரிய லிஸ்டே இருக்கு. உன் கல்யாணத்தப்போ அப்படி எதும் எதிர்பார்ப்பு இல்லியா!?
அது மாதிரிலாம் எதுமில்லம்மா! ஆனா, பட்டுச்சேலைன்ற பேர்ல 25000 ரூபாய்க்கு மேல தார் பாயை கொண்டு வந்துக் கொடுக்கக்கூடாது.சிம்ப்ளா, பச்சைக்கலர்ல இருந்தா போதும்ன்னு ஒரு கண்டிசன் மட்டும் போட்டேன்.
அப்பா!! உனக்குப்பா!?
இருந்துச்சுமா!? எதாவது ஊனமுற்ற பொண்ணுக்குதான் வாழ்வுக் கொடுக்கனும்ன்னு மனசுக்குள் நினைச்சுட்டிருந்தேன். உன் தாத்தாதான் உங்கம்மாவை காட்டி கட்டிக்கனும்ன்னு சொன்னார். மறுக்க முடியல, உங்கம்மாவோட அப்பா, அம்மா ரொம்ப நல்லவங்க, பொண்ணும் சிவப்பா, அழகா!!?? இருந்துச்சு. கட்டிக்கிட்டேன். அதனால,என் ஆசை நிறைவேறாம போச்சு.
அப்பா! அம்மாவை கட்டிக்கிட்டும், ஊனமுற்றப் பெண்ணைத்தான் கட்டிக்கனும்ன்ற உங்க எண்ணம் நிறைவேறிடுச்சு.
என்னடா சொல்றே!? அதான் உங்கம்மா, கை, கால், கண்ணுலாம் நல்லா இருக்கே!!
ஆனா, மூளை வளர்ச்சி இல்லியே! அதும் ஊனமுற்றவங்க லிஸ்ட்லதானே வருது.
அடிசெருப்பால! எப்பப் பாரு, கும்பலா உக்காந்துக்க வேண்டியது, என்னைப் பத்தி புரணி பேச வேண்டியது இதே வேலையாப் போச்சு இதுங்களுக்கு.....................................................................................,
எங்களுது அரேஞ்ச்டு மேரேஜ். இவர் எங்கம்மா வழில சொந்தம். பாட்டி வீட்டுக்கு எதிர் வீடு. பாட்டி வீட்டுக்கு போகும்போதெல்லாம் பார்த்து, பேசி சீன் போட்ட்டிருக்கேன். அதனால, அவர் , மனசில் என்னைப் பத்தி உயர்ந்த நினைப்புப் போல. என்னை அவர் அப்பா கைக்காட்டினதும் சம்மதிச்சுட்டார். விதி வலியதாச்சே!
பெண் பார்க்கும் படலம் ரெண்டு முறை நடந்துச்சு. முதல் முறை சொந்தம் பந்தங்களுக்காக சொந்தக் கிராமத்துல நடந்துச்சு. அப்போ, மண்ணுக்கு மரியாதை கொடுத்த பாரதிராஜா பட ஹீரோயின் போல வீட்டுத்தூணைக் கட்டிக்கிட்டு நின்னுட்டு காஃபி கொடுத்துட்டு வந்ததோடு சரி. அவர் முகத்தைப் பார்க்கவே இல்ல. அடுத்து நட்புக்களுக்காய், அந்த நேரத்துல நாங்க குடியிருந்த திருத்தணி வீட்டுக்கு மறுபடியும் பெண் பார்க்கும் படலம் நடந்துச்சு.
ஷூ போட்டிட்டு வந்த இவர் ஷூவை தெருவில் விட்டுட்டு சாக்ஸோடு சேர்ல உக்காந்திட்டிருந்த இவரைப் பார்த்து, தம்பி! அந்த துணியைக் கழட்டு உன் கால் விரல்லாம் நல்லா இருக்கான்னு பார்க்கனும்ன்னு என் ஃப்ரெண்டோட பாட்டிச் சொல்லி இவரோட கால் விரல், கைவிரல்லாம் செக் பண்ணாங்க.
கல்யாணம் ஆகி என் பவுசு என்னன்னுத் தெரிஞ்சதுக்குப் பின்.., பொண்ணை ஒழுங்கா வளர்க்கத் துப்பில்ல..., இதுல என் கால், கைவிரல்லாம் செக் பண்ணாங்கன்னு பசங்கக்கிட்ட சொல்லிக் கிண்டலடிப்பார்.
எங்க கல்யாணத்தப்போ எங்க வீட்டுல ஃபோன் கிடையாது. நல்லது, கெட்டதுன்னா பக்கத்துல இருந்த கல்யாண மண்டபத்துக்குதான் போன் பண்ணி எங்களைக் கூப்பிட்டு பேசுவாங்க. என் அம்மாவும், அப்பாவும் பத்திரிக்கை வைக்க இவர் வீட்டுக்கு போயிருந்த நேரம் என்கிட்ட பேச ஆசைப்பட்டு, ஃபோன் செய்துக் கூப்பிட, பேச கூச்சப்பட்டுக்கிட்டு எதிர்வீட்டு மாமியை பதில் சொல்ல வச்சேன்.
அன்னிக்கு பேசாம சாவடிச்சா. இன்னிக்கு பேசியே சாவடிக்குற உங்கம்மான்னு அடிக்கடி பசங்கக்கிட்ட சொல்வார்.
நான் தீவிரவாதி. அவர் மிதவாதி.ஆசை,கோவம், வெறுப்பு, சிரிப்புன்னு எதாயிருந்தாலும் உடனே கொட்டித் தீர்த்துடனும் எனக்கு.., ஆனா, எதையும் வெளிக்காட்டாம இருக்குறது அவரோட இயல்பு. மார்கழி இரவுலயும் ஐஸ் வாட்டர் வேணும் எனக்கு.., சித்திரை வெயில்லயும் சுடுதண்ணி வேணும் அவருக்கு. ஊர் உலகமே என்னோடு நட்பாயிருக்கனும் எனக்கு..., தாயாய் பிள்ளையாய் இருந்தாலும் தள்ளியே இருக்கனும் அவருக்கு...., எதிலயும் வேகம், பரபரப்பு வேணும் எனக்கு...., புயலே அடிச்சாலும் நிதானம் அவருக்கு...,
பசங்க எதிர்காலம், படிப்பு, அப்பா, அம்மா ஹெல்த்ன்னு எல்லாத்தையும் மனசுல போட்டு குழப்பிக்கிட்டே இருப்பேன் நான்..., எல்லாமே அவன் செயல், அவன் பார்த்துப்பான்னு அசால்ட்டா இருப்பார் அவர்...., லீவுன்னா ஊர் சுத்தனும் எனக்கு..., அக்கடான்னு படுத்து தூங்கனும் அவருக்கு..., பொண்ணுங்க படிச்சு வேலைக்கு போய் சம்பாதிச்சு அப்புறம்தான் கல்யாணம் கட்டிக்கனும்ன்ற நினைப்பு எனக்கு..., ப்ளஸ்டூக்கு மேல் படிச்சா திமிர் ஏறிடும்ன்ற நினைப்பு அவருக்கு...,
இப்படி எல்லாத்துலயும் எதிர் மறையா இருக்குற எங்களைத்தான் கடவுள் முடிச்சுப் போட்டு சேர்த்து வச்சுட்டார் கடவுள்....,
ஏம்பா! உனக்கும், அம்மாக்கும் எதுக்குமே மேட்ச் ஆகலியே! அப்புறம் இதை எப்படி 20 வருசமா சமாளிச்சிட்டிருக்கே!!??
எல்லாம் உங்க பாட்டி, தாத்தா முகத்துக்காகத்தான். ஒரே பொண்ணுன்னு இதுமேல பாசம் வச்சிட்டாங்க. இவ கண் கலங்குனா அவங்க தாங்க மாட்டாங்க. அதான் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டிருக்கேன்.
அடப்பாவி மனுசா! இருபது வருசம் முடிஞ்சு இருபத்தோராம் வருச கல்யாண நாளன்னிக்குதான் உண்மைலாம் சொல்லத் தோணுதோ!!?? எப்படியோ, இப்பவாவது தைரியமா உண்மையைச் சொல்லனும்ன்னு தோணுச்சே! அதுக்காகவே உனக்குப் பிடிச்ச கேசரி செஞ்சு எடுத்து வந்திருக்கேன். இந்தாங்க சாப்பிடுங்க....,
ஏங்க! இன்னிக்கு நம்ம கல்யாண நாள். எப்படிங்க கொண்டாடலாம்!? நான் ஆஃபீஸ் போறேன். நீ எப்பவும் போல கம்ப்யூட்டர்ல உக்காந்து உங்காளுங்களோடு குப்பையைக் கொட்டு...., பசங்க ஸ்கூல் போகட்டும்...,
ம்க்கும், இத்தனை கல்யாண நாளா என்னத்தக் கண்டேன். இன்னிக்கு மட்டும் புதுசா காண!? ஒவ்வொரு வருசமும் இதே கதையாத்தானே இருக்கு. புது புடவை உண்டா!? நகை உண்டா!?...,
உங்க ராஜி வைப்ரேஷன் மோடுக்குப் போய்ட்டா. நான் ஆஃபீசுக்கு கிளம்புறேன். தைரியம் இருக்குறவங்க அவக்கிட்ட சொல்லிடுங்க....
Oh my God. one of the best blog that my eyes fell upon. Brilliant. keep writing. Loved reading it. Now I have gotta go and find a copy of my wedding invitation.....
ReplyDeleteஉங்க கல்யாண அழைப்பிதழ்களையும் பதிவா போடுங்க. பார்த்துக்கலாம்.
Deleteஎப்படி எழுதினாலும் உங்களுக்குள் என்றைக்கும் இருக்கும் மகிழ்ச்சியை இன்றைய ரவாகேசரியும் பதிவின் தலைப்பும் காட்டி விட்டன. எனது நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteத.ம.3
வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி சகோ!
Deleteவிஜய் டிவி நம்ம வீட்டுக் கல்யாணம் பார்த்த மாதிரி இருந்தது.. மாமாவோட ஊனமுற்ற பெண்ணை கட்டிக்கனும்ங்கற உயர்ந்த நோக்கு பிடிச்சிருந்தது..
ReplyDeleteஆனா, அதுதான் நிறைவேறலியே ஆவி!
Deleteஆனா, மூளை வளர்ச்சி இல்லியே! அதும் ஊனமுற்றவங்க லிஸ்ட்லதானே வருது.///
ReplyDeleteஹஹஹா
மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteமலரும் நினைவுகளை கிளப்பி விட்டுட்டீங்க.
"//புது புடவை உண்டா!? நகை உண்டா!?...,//"
எனக்கு இந்த வரியை படிச்சவுடன், எதிர் நீச்சல் படத்தில் வரும் "அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா" பாட்டுத்தான் நியாபகத்துக்கு வந்தது.
நிஜமாவே சில சமயம் புடவை, நகை கேட்டு நச்சரிப்பேன். கடைக்கு கூட்டிப் போனால் விலையைப் பார்த்து வாங்கவே மனசு வராது. வாங்காமயே திரும்பி வந்துடுவேன். இனிக் கேட்டுப்பாரு கொலை விழும்ன்னு சொல்லுவார்.
Deleteஅக்கா இந்த விஷயத்தில் நாம ரெண்டு பேரும்ஒரே மாதிரி தான் போல நானும்இது வேனும் அதுவேனும்னு கேட்பேன் ஆனா வாங்க மனசு வராது.
Deleteநல் வாழ்த்துக்கள்
ReplyDeleteவருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி சகோ!
Deleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ராஜி. உங்க கல்யாணத்துக்கே வந்த மாதிரி ஆயுடுச்சு..ஆனா பந்தி மட்டும் இல்லை. பரவால்ல கேசரி கொடுத்திட்டீங்க, அதுவரைக்கும் ஓகே. :)
ReplyDeleteகால் விரல் எல்லாம் check பண்ண பாட்டி சூப்பர்ங்க :)
முதல் போட்டோல என்ன ஒரு பார்வை!!
போட்டுவைக்கும்போதும் கண்ண மூடாம எப்டி ஒரு தீர்க்கமான பார்வை..அங்க தான் நிக்குறீங்க ராஜி!
*பொட்டு :)
Deleteபந்தி போட்டோ ஆல்பத்துல இருக்கு. இதுக்கே இதெல்லாம் டூ மச்ன்னு பசங்க கிண்டல் அடிக்குறாங்க.
Deleteடூ மச்சும் இல்லை, த்ரீ மச்சும் இல்லை,,.பாத்து எவ்ளோ சந்தோசமா இருந்துச்சு தெரியுமா?
Deleteஉங்க வீட்டுக்கே வந்து முழு ஆல்பம் பாத்துடுறேன் :)
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்! உங்கள் பாணியில் இதையும் அழகா எழுதி கலக்கிவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்! கல்யாண போட்டோவுல நீங்கதானா அது?! நம்பவே முடியலைங்க!..
ReplyDeleteநானேதான்! நானேதான் ஐயா! அராத்து பார்ட்டியான எனக்கு கல்யாணம்ன்ற பேர்ல ஒரு அடிமை சிக்கிட்ட ப்ப்ப்ப்ப்ப்பூரிப்பில் இப்படியாகிட்டேன்.
Deleteவாழ்த்துக்கள் ..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி கருண்!
Deleteமனமார்ந்த திருமண நாள் நல்வாழ்த்துகள் ராஜி......
ReplyDeleteகேசரி போலவே பதிவும் சுவையாக இருந்தது......
நான் சமைக்குறதுலயே என் வீட்ட்டுக்காரருக்கு பிடிச்சது கேசரி மட்டும்தான். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றியண்ணா!
Deleteஅட....நம்ம வீட்டுக் கல்யாணம்.
ReplyDeleteஎன் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.. பல்லாண்டு காலம் இந்த இனிய தம்பதி மகிழ்ச்சியோடு வாழ ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ!
Deleteதிருமணநாள் வாழ்த்துக்கள் அக்கா!!
ReplyDeleteபோடோஸ் சூப்பர்!! அதிலும் உங்க கண்ணு சான்சே இல்ல.....சூப்பர்!!
சின்ன வயசுல எல்லோரு ”முட்டக்கண்ணி”தான் செல்லமா கூப்பிடுவாங்க சகோ!
Deleteஇது நிஜமாகவே உங்கள் திருமண நாள்தானா? புகைப்படங்கள் உங்களுடையவைதானா? நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்! சுவையாக, வித்தியாசமான உத்தியைப் பயன்படுத்தி எழுதியிருக்கிறீர்கள். அனுபவசாலி என்றால் சும்மாவா?
ReplyDeleteஃபோட்டோ, கல்யாண பத்திரிக்கை போட்டும் நம்பலியா நீங்க!?
Deleteமனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteமலரும் நினைவுகளை மிக அழகாகவும் அதுவும் நகைச்சுவை உணர்வோடு பகிர்ந்த உங்களின் திறமைக்கு மிக மிக பாராட்டுக்கள்.. உங்க எழுத்து நடையில் மிக பெரிய மாற்றம் சொல்வதை மிக தெளிவாகவும் அழகாகவும் சொல்லி செல்லும் உங்கள் வண்ணம் மிக அருமை.... வாழ்க வளமுடன்....
நான் எழுதுறது உங்களுக்கு புரியுதா!? ஏன்னா, நான் பேசினாலே எங்க வீட்டுல யாருக்கும் புரியுறதில்ல அதான்.
Deleteதிருமணநாள் வாழ்த்துக்கள் தோழி.
ReplyDeleteபடங்கள் அனைத்தும் அருமை.
வருஅகிக்கும், வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றி அருணா!
Deleteவாழ்த்துகள் ராஜி
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ!
Deleteதிருமண நாள் வாழ்த்துக்கள் சகோதரியாரே
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ!
Deleteதம 11
ReplyDeleteமகிழ்வான நல்வாழ்த்துகள் தங்கைக்கு. அவர் அடிச்ச இன்விடேஷன்ல .ஜி.கல்யாணகுமார்னு போட்ருக்காரு. உங்கவூட்டு இன்விடேஷன்ல கே.கல்யாணகுமார்னு போட்ருக்கீங்க. அவரு கே யா? ஜி யா? ஹா.... ஹா... ஹா...
ReplyDeleteஅவர் அப்பா பேர் பெ.கணேசன். அதனால, ஜி.கல்யாணகுமார்தான் சரிண்ணா. பத்திரிக்கைல தவறுதலா பிரிண்டாகி வந்துடுச்சு. அப்புறம் அதை திருத்தி எழுதி எல்லோருக்கும் கொடுத்தது தனிக்கதை
Deleteமனம் நிறைந்த மணநாள் வாழ்த்துக்கள் அக்கா..
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ!
Deleteகாமெடி ரைட் அப் ல கலக்கறீங்க. போட்டோல அப்ப அப்பவியாத்தான் தெரியறீங்க. பாவம் ஏமாந்துட்டார்
ReplyDeleteஇதே நிலையில் பல்லாண்டு வாழ்க
நான் எப்பவுமே அப்பாவிதான் சகோ! இப்பவும் என்னை சிறு பிள்லைங்க கூட ஏமாத்திடும். அதனால என்னை நம்பவே மாட்டார். வீட்டுப்பொறுப்பு எல்லாத்தையும் அவரே பார்த்துப்பார்.
Deleteமனமார்ந்த வாழ்த்துகள். என்றும் இனிமை தொடரட்டும்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ஆதி!
Deleteமனம் நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி சசி!
Deleteஎங்கள் மனமார்ந்த, நல் வாழ்த்துக்கள் சகோதரி! முதலில் தாமதமாக வந்து உங்களுக்கு வாழ்த்து சொல்றதுக்கு மன்னிச்சுடுங்க! நிறைய தளங்கள் எங்கள் கணினியில் வரவே இல்லைங்க.....எரர் எரர் நு வந்துச்சு....அதுல உங்க தளமும்....இன்னிக்கும் முயன்றோம்....வந்துருச்சு....அதான் வந்துட்டோம்...கமென்ட் வரும்னு நினைக்கிறோம்....ஏன்னா நிறைய வர்ர தளங்கள்ல் போடற கமென்ட் போகவே மாட்டேங்குதுங்க....
ReplyDeleteசெம நகைச்சுவை உணர்வோடு உங்க மணநாளை எழுத்யிருக்கீங்க! நாங்க ரொம்பவே ரசிச்சோம்...அதுவும் கடைசில அந்த கேசரியும் செஞ்சு கொடுத்துட்டு அதுக்கு கீழ சொல்லியிருக்கீங்க பாருங்க....ஹாஹாஅஹஹ...செம...ஆமாம் இந்த மாதிரி பதிவ காமிச்சு..."என் மூளை வளர்ச்சி ரொம்பவே நல்லாருக்குனு " சொல்லிட வேண்டியதுதானேங்க....அருமையான நடை, ரொம்பவே நல்ல எழுதறீங்க சகோதரி! வாழ்த்துக்கள்! உங்க மணவாழ்க்கைக்கு மட்டுமல்ல...உங்கள் எழுத்துக்களுக்கும்!
தொடர்வோம்!
ஆஹா மச்சான் வகையா மாட்டுன தினமாச்சே...
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க பல்லாண்டு சுகமாக....
எனக்கு இன்று பிறந்த நாள் என் தங்கைக்குத் திருமண நாள் !மொத்தத்தில் இது இனி என்றுமே மறக்க முடியாத நாளாகிறது என் வாழ்விலும் .வாழ்த்துக்கள் சகோதரி ஆயுசுக்கும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து இருங்கள் .எனக்கு கல்யாண நாள் சாப்பாட்டைப்
ReplyDeleteபோட்டால் போதும் :))
இதே பொய்க்கோபத்தோடும்
ReplyDeleteசெல்லச் சிணுங்களோடும்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
tha.ma 18
ReplyDeleteமிதமான புன்னகையோடு முழுவதும் வாசித்தேன்.. நன்று.. வாழ்த்துக்கள்
ReplyDelete