Tuesday, May 23, 2017

மெதுவடையில் ஓட்டை ஏன் போடுறாங்க?! - கிச்சன் கார்னர்

உளுந்து அல்லது உழுந்துன்ற  செடில இருந்துதான் உளுத்தம்பருப்பு கிடைக்குது.  உழுந்து என்பது சங்க இலக்கியங்களில் உளுதின் பெயராகும். இது தெற்காசியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த உளுத்தம்பருப்பு இந்தியர்களின் குறிப்பாக தென்னிந்தியாவின் தினசரி உணவுகளில் முக்கியம் இடப்பிடித்துள்ளது.  இட்லி, தோசை, வடை, முறுக்கு, வடை, களின்னு தமிழர் உணவுகளில் உளுத்தம்பருப்பு இடம்பெறுது.    தோல் நீக்கிய உளுத்தம்பருப்பைவிட தோல் நீக்காத கருப்பு உளுந்தில் சத்துகள் அதிகம் உள்ளது.

நீண்ட நாள் நோயின் தாக்கத்திலும், மருத்துவமனையிலும் இருந்துவந்தவர்கள் உடல்பலம் பெற இப்பருப்பு பெருதும் உதவுது.  கஞ்சியாகவும், களியாகவும், இட்லியாகவும் எந்த வயதினரும், எந்த நோயின் பிடியிலிருந்தாலும் உட்கொள்ளலாம்.  எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு உளுந்து பெரிதும் பயன்படுது.
பொதுவாய் உளுந்து நீர்ச்சத்து நிறைந்துள்ளதால் குளிர்ச்சியை தரக்கூடியது. கருப்பு உளுந்துடன், தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டா தூக்கமின்மை, ஓயாத உழைப்பு, மன உளைச்சலால் வரும் உடல்சூட்டை சரிச்செய்யும்.
தோல் நீக்காத கருப்பு  உளுந்தை காய வைத்து  அரைத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும். உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும். உளுந்தை ஊறவைத்து வடை செய்து சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு பசியையும் போக்கும்.  

எலும்பு, தசை முறிவு மற்றும் ரத்தக்கட்டிகள் குணமாக உளுந்து சிறந்தது. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து அதோடு தேவையான அளவு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து கலக்கி அடிப்பட்ட இடத்தில்  தடவி கட்டு போட்டால் ரத்தக்கட்டு குணமாகும். 

இடுப்பு எலும்பு வலுப்பெற உளுந்து களி  தினமும் சாப்பிட்டு வந்தால் பலம் பெறும். வளரும் பிள்ளைகளுக்கு இட்லி பெரும்பங்கு வகிக்கிறது. எந்த சூழ்நிலையிலும் சாப்பிடலாம்.  நாற்பது வயது நெருங்கும் பெண்களுக்கும், பருவம் அடைந்த வளரிளம் பெண்களுக்கும் உளுந்து கஞ்சி உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. பூப்பெய்திய பெண்களுக்கு உளுந்து கஞ்சியும், களியும், லட்டும்  கொடுப்பது வழக்கம். 
இனி  மெதுவடை செய்யும் முறையை பார்க்கலாம்....:

தேவையான பொருட்கள்...
உளுத்தம்பருப்பு,
ப.மிளகாய்,
இஞ்சி,
உப்பு,
சமையல் எண்ணெய்,
கறிவேப்பிலை கொத்தமல்லி..

உளுத்தம்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்...

ப.மிளகாய், இஞ்சியை சுத்தம் செய்து உளுத்தம்பருப்போடு  உப்பு சேர்த்து லேசா தண்ணி தெளிச்சு அரைச்சுக்கோங்க.

அத்தோடு பொடியா நறுக்கிய வெங்காயம் சேர்த்துக்கோங்க...

சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நல்லா பிசைஞ்சுக்கோங்க..

வட்ட வடிவமா தட்டி...



வாணலில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் போட்டு ரெண்டு பக்கமும் சிவக்க விட்டு எடுத்தா ....... 

சுவையான மெதுவடை தயார்,....  உளுந்தை ஒன்றிடண்டா அரைச்சு மிளகு சேர்த்து வடை சுட்டெடுத்தால் மொறுமொறுப்பா ருசியா இருக்கும்..  மீந்துடுச்சுன்னா கவலைப்படத்தேவை இல்ல. லேசா சுடவெச்சு  தயிர்வடை, சாம்பார்வடையா  மாத்திடலாம். மோர்க்குழம்பிலும் போட்டு சாப்பிடலாம். உளுந்தை வெச்சு செய்யும் வடை ரொம்ப ஸ்பெஷல். இந்த வடையை ரசம், சாம்பார், தயிர்ன்னு எதுல போட்டாலும் அதோட ருசியை தனக்குள்  இழுத்துக்கிட்டாலும் வடையோட ருசில இருந்து மாறாது.   நம்மை சுற்றி இருக்கும்   விஷயங்களை கிரகிச்சு  சேர்த்து பல்கலை வித்தகராய் விளங்கினாலும் நம்மோட தனித்தன்மையை மாத்திக்கக்கூடாதுன்னு சொல்லாம சொல்லுது இந்த வடை.

இனி டிப்சுக்கான நேரம்.....

உளுந்தை ரொம்ப நேரம்  ஊற வெச்சா வடை எண்ணெய் இழுக்கும்... உளுந்தோடு கொஞ்சம் பச்சரிசி சேர்த்துக்கிட்டா வடை மொறுமொறுப்பா இருக்கும். வடை மாவுல தண்ணி அதிகமாகிட்டா அரிசி மாவு சேர்த்துக்கலாம். இல்லன்னா அப்பளத்தை ஊறவெச்சு அரைச்சு சேர்த்துக்கலாம்...   வடை தின்னா ஏப்பம் வரும். செரிக்காது. நெஞ்சு எரிச்சல், எண்ணெய்ன்னு  சொல்வாங்க. ஆனா அது அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. அதனால ஒன்னிரண்டு எடுத்துக்குறதுல ஒன்னும் ஆகிடாது. 

பருப்பு வடையில் ஏன் ஓட்டை போடலை, உளுந்து வடையில் ஏன் ஓட்டை போடுறாங்கன்னு விஜய் மதுர படத்துல குடிச்சுட்டு கலாய்ப்பார். மெதுவடையில்ஓட்டை  போட காரணம்.... உளுந்து மாவு பிசுபிசுப்பா இருக்குறதாலயும்  கொஞ்சம் தடிமனா வடை பொறித்தால் சீக்கிரத்துல வேகாது. அதனால, சீக்கிரம் வேக வடை தட்டும்போது ஓட்டை போடுவாங்க. அந்த ஓட்டை வழியாவும் எண்ணெய் உள்ள போய் சீரா வேகும்.... இதான் மெதுவடைல ஓட்டை போட காரணம்...

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை தெரியாதவங்களுக்காக....
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1460911
நன்றியுடன்,
ராஜி.

20 comments:

  1. Replies
    1. ம்ம்ம்ம்ம் இதேதான் காரணம்

      Delete
  2. வடை மகாத்மியம் அருமை

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றிப்பா

      Delete
  3. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  4. வடை பதிவு அருமை...என்ன திங்க முடியலை...

    நன்றி ஓட்டு லிங்க் கொடுத்தமைக்கு..பெட்டி தெரிய மாட்டேங்குது...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வீட்டுக்கு வாங்க கீதா. மொறுமொறுன்னு வடை சுட்டு தரேன். அத்தோடு வடை திங்குற ஆசையே போய்டும்.

      Delete
  5. அவ்வப்போது உளுத்தங்கஞ்சி குடிப்பேன்.

    உளுந்து அதிகம் சேர்த்துட்டா காது செவிடாகும்னு சொல்வாங்களே. சரியா?

    ReplyDelete
    Replies
    1. அப்படி எதும் கேள்விப்பட்டதில்லையேப்பா

      Delete
  6. எங்க விட்டில் அடிக்கடி செய்யக்கூடிய எண்ணெய் பலகாரம் இது ஒன்றுதான்... மாவை அரைத்து அன்றே செய்யும் வடையில் சுவை அதிகம்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். ப்ரிட்ஜ்ல வெச்செடுத்தா வடை சீக்கிரம் சிவந்துடும்

      Delete
  7. உளுந்த வடையில் ஒட்டை போடுவது அதை மாலையாக செய்ய்து ஸ்வாமிக்கு போடுவதற்காகவும் இருக்கும் இந்த வடையை மட்டும்தான் ஸ்வாமிக்கு வடை மாலையாக செய்து போடுவார்கள்

    ReplyDelete
    Replies
    1. இதும் ஒரு காரணம்தான். ஆனா நான் இதை சொன்னா சாமி கதை சொல்லி போரடிக்குறியேன்னு முகம் சுளிப்பீங்களே

      Delete
  8. சரக்கு அடித்து கொண்டே ஹெல்தியான சைடிஸ் சாப்பிட இந்த வடை உதவுகிறது சரக்கு அடித்துவிட்டு வீட்டிற்கு போகும் போது மனைவியிடம் அடிவாங்க தேவையான உடல் பலத்தை இந்த வடை கொடுக்கிறது

    ReplyDelete
    Replies
    1. எப்பப்பாரு இதே நினைப்பு. அண்ணிக்கிட்ட பூரிக்கட்டையால அடிச்சும் திருந்துன பாடில்ல

      Delete
  9. மகளே வடை தின்ன ஆசைதான் !

    ReplyDelete
    Replies
    1. விரைவில் சென்னை வருவேன்பா. வரும்போது செஞ்சு தரேன்

      Delete
  10. நான் விரும்பி உண்ணும் ரெஸிபி
    படங்களுடன் பகிர்வு அருமை
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete