Saturday, November 03, 2018

பெண் தேவதையாகும் தருணம் எது?!


பெண்களின் கூந்தலுக்கு இயற்கையாவே மணமுண்டான்னு பாண்டிய மன்னனுக்கு உண்டான சந்தேகம் போல, ஒரு பெண், தன் மனதில் என்ன நினைக்கிறாள் என இன்னொரு மன்னனுக்கு சந்தேகம் உண்டானது. தன் சந்தேகத்தை தீர்த்து வைப்போருக்கு தன் ஆளுமைக்குட்பட்ட நாட்டில் ஒன்றை தருவதாய் அறிவித்தான். பலபேர் பலவிதமா பதில் சொல்லியும் மன்னன் மனம் சமாதானம் அடையலை. குடும்பத்தின் வறுமையை போக்க எண்ணிய ஒரு இளைஞன், மன்னனின் சந்தேகம் தீர்க்க வேண்டி பதிலுக்காய் நாடு நகரமென சுற்றி ஒரு சூனியக்கார கிழவியிடம் சென்றான்.  எனக்கு பதில் தெரியும். பதில் சொன்னால் உனக்கு நாடு கிடைக்கும் எனக்கு என்ன கிடைக்குமென கேட்டாள் கிழவி.

நீ என்ன கேட்டாலும் தருகிறேன் என அந்த இளைஞன் வாக்களித்தான். (பாவம்! பொண்ணுங்களை பத்தி தெரியாம வாக்கு கொடுத்துடுச்சு பயபுள்ள) . டீலுக்கு ஓகே சொன்ன சூனியக்காரி கிழவி,  தன் சம்பந்தமான முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே அவளின் ஆழ்மன எண்ணமாகும்” என ப்தில் சொல்லி அனுப்பினாள்.  இளைஞன் சொன்ன பதில் மன்னனின் சந்தேகத்தினை தீர்த்தது. மன்னன் அறிவிச்சபடி ஒரு நாட்டை இளைஞனுக்கு கொடுத்தான். நாடு கிடைத்ததும் இளைஞனின் வறுமை நீங்கி அவன் குடும்பம் மகிழ்ச்சியடைந்தது.

கொடுத்த வாக்கை காப்பாத்துவது ஆண்களுக்கு அழகாச்சுதே! அதனால், சூனியக்காரி கிழவியை பார்க்க இளைஞன் போனான்.  கிழவியிடம், தான் வெற்றிப்பெற்றதை சொல்லி,இப்ப ஒரு நாட்டுக்கு தான் ராஜான்னு சொல்லி, அன்று நான் வாக்களித்தபடி, உனக்கு என்ன வேண்டுமென கேள். செய்ய காத்திருக்கேன் என சொன்னான். தன்னை மணக்க வேண்டுமென சூனியக்காரி கிழவி சொல்லிச்சு. இப்பத்திய ஆளுங்கன்னா ஜெர்க்காகி பேக் அடிச்சிருப்பாங்க. ஆனா, அந்த இளைஞன் அப்படி செய்யலை. வாக்களித்தபடி அந்தக்கிழவியை மணக்க சம்மதிச்சான். உடனே, கிழவி அழகிய தேவதையாய் மாறிச்சு. அவனை மணக்கனும்ன்னா ஒரு நிபந்தனை விதிச்சுது. அது என்னன்னா,  இருவரும் தனியாக இருக்கும்போது கிழவியாக இருந்தால், வெளியே உன்னுடன் பொது இடங்களுக்கு வரும்போது தேவதையாக இருப்பேன். அல்லது தனியாக இருக்கும்போது அழகிய பெண்ணாக – தேவதையாக இருந்தால், வெளியே பொது இடங்களில் சூனியக்காரக் கிழவியாகி விடுவேன். இதில் உனது விருப்பம் என்ன? என தேவதை கேட்டது.


அந்த இளைஞன் சட்டுன்னு  “இது உன் சம்பந்தப்பட்ட விஷயம்; முடிவை நீதான் எடுக்க வேண்டும்” பதில் சொன்னான். அதற்கு அத்தேவதை, “முடிவை என்னிடமே விட்டு விட்டதால், நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்” என பதிலளித்தாள். இந்த கதை எதுக்கு சொல்றேன்னா, பெண்ணை அவள் இயல்போடு இருக்க விட்டா பெண்ணாய் இருப்பா. ஆளுக்காள் வளைச்சு ஒடிச்சு வளர்த்தால், அரக்கியா, தாடகியா, சூனியக்காரியாதான் இருப்பா.

என்னதான் டிவி, போன், புடவை, நகை, ஃப்ரிட்ஜ், சினிமா, ஹோட்டல், டூர்ன்னு இருந்தாலும்,  பெண்ணின் ஆழ்மனசில் தனக்கே தனக்கான ஆசைகள், எதிர்பார்ப்புகள் அதிகம்.  ரொம்ப பேர் வெளில சொல்லமாட்டாங்க. ஏன், சில பெண்களுக்கு தன் மனசில் இப்படிலாம் ஆசை இருக்கான்னே உணர மாட்டாங்க.  என் அம்மாக்குன்னு எந்த ஆசையுமில்லன்னு பிள்ளைகளும், என் பொண்ணுக்கு வெளி உலகமே தெரியாதுன்னு அப்பா அம்மாவும், புடவைகூட நாந்தான் செலக்ட் செஞ்சு கொடுப்பேன், ஒரு மண்ணும் தெரியாதுன்னு வீட்டுக்காரரும் பெருமையாவும், எரிச்சலாவும் சொன்னாலும், சாதாரண குடும்ப பெண்களுக்கே ஏகப்பட்ட விசயம் தெரியும். 

என்னதான் சொந்த வீடாய் இருந்தாலும் பெண்கள் முழு சுதந்திரமா இருக்குறதில்லை. மாமாக்கு நைட்டி பிடிக்காது. பிள்ளைக்கு ஸ்வீட் பிடிக்காது. அம்மாக்கு மருதாணி வச்சா பிடிக்காதுன்னு பெண் ஒதுக்கி வைப்பது ஏராளம். பிடிச்ச பாட்டுக்கு இடுப்பை வெட்டினா குடும்ப பொம்பளையான்னு விமர்சனம் வரும்.  எதிர் கருத்து சொன்னா வாயாடி, அழகா உடை உடுத்தினா மேனாமினுக்கி இப்படி பெண்களுக்கு கொடுக்கும் பட்டங்கள் ஏராளம். அதனால், ஆமை தன் ஓட்டுக்குள் மறைஞ்சுக்குற மாதிரி பெண்


ஆண்கள் இல்லாத தேசம் சாத்தியமில்லாதது. அர்த்தமில்லாததும்கூட. ஆனா, ஆண் இல்லாத ஓரிடத்தில் பெண்கள் கூடினால்?! அதும் வீட்டு ஆண்கள் இல்லாத இடம்ன்னா?! பெண்கள் முழு சுதந்திரமா தன் மனசுக்கு பிடிச்ச மாதிரி இருப்பாங்க. இதை உணர்ந்ததாலோ என்னமோ போன சனிக்கிழமை ஹலோ எப்.எம்மின் வேலூர் கிளை சார்பா மகளிர் மட்டுமான நிகழ்ச்சி நடத்துனாங்க. வேலூருக்கு இப்படி ஒரு நிகழ்ச்சி இதுதான் முதல்முறை.
ஹலோ எப்.எம் ஆர்.ஜேக்கள், டெக்னீசியன்கள் தவிர்த்து மத்த ஆண்களுக்கு அனுமதி இல்லை.  காலைல 9 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும்ன்னு அழைப்பிதழில் போட்டிருந்தாலும் எட்டு மணில இருந்தே பெண்கள் வரத்தொடங்கிட்டாங்க. 
நிகழ்ச்சி அரங்கத்துக்குள் வந்ததும், தங்கள் பேர், ஊர், மொபைல் நம்பரோடு ரிஜிஸ்டர் பண்ணிக்கனும். அவங்க ஒரு டோக்கன் கொடுத்தாங்க. அதுல மதிய லஞ்சுக்கான கூப்பனும் இருந்துச்சு.  அந்த டோக்கனின் மறுபாதியை நம்ம கையாலயே அங்க இருந்த பாக்சுல போடனும். நிகழ்ச்சியின் முடிவில் அதிலிருந்து மூன்று அதிர்ஷ்டசாலிகளை தேர்ந்தெடுத்து எல்.ஈ.டி டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங்க்மெஷின் கொடுத்தாங்க. 
வேலூர் ஆர்.ஜேக்கள் மட்டுமில்லாம சென்னைல இருந்தும் வந்திருந்தாங்க.  போட்டியில் கலந்துக்குறவங்க முன்கூட்டியே பதிஞ்சுக்கனும்ன்னு சொல்லி இருந்தாங்க. சமையல் போட்டி, ஆக்‌ஷன் குயில், அல்லி தர்பார், டான்ஸ் போட்டி, மெகந்தி, கோலம்ன்னு பல போட்டிகள் இருந்துச்சு.
அதுமட்டுமில்லாம அங்க வரும் பெண்கள்  பொழுது போக்க இன்னும் சில விளையாட்டுகளை வச்சிருந்தாங்க. ஒரு பாத்திரம் மற்றும் எலக்ட்ரானிக் கடை சார்பா ஒரு ஸ்டால் வச்சிருந்தாங்க. அவங்க கொடுக்கும் மூணு வளையத்துல ஒன்னு சரியா விழுந்தாலும் அந்த நம்பரில் இருக்கும் பொருள் நமக்குதான். அப்படி ஜெயிச்ச பெண்கள் ஏராளம். எல்லாம் வீட்டுக்காரங்க மேல குறிபார்த்து பாத்திரம் வீசி பழகுன பழக்கமே இங்க கைக்கொடுத்தது.
அடுத்து உறியடின்னு சொல்லி பலூன்ல நீர் நிரப்பி அதை கயித்தால் இணைச்சு அடிக்க வச்சாங்க. மாமியார் மண்டைய பதம் பார்த்தது இதுக்கு உதவுச்சு. இதுக்குலாம் கிஃப்ட் இல்ல. 
அடுத்து குழந்தைகளுக்காக ஸ்னோபவுலிங்க்...

ரெண்டு நிமிசம் நீங்களும் ஆர்.ஜே ஆகலாம்ன்ற நிகழ்ச்சில கலந்துக்கிட்டு நிகழ்ச்சியை பல பெண்கள் நேரடியா தொகுத்து வழங்கினாங்க.
காலத்துக்கு ஏத்த மாதிரி செல்பி ஜோன்...  வீச்சறுவா மீசை, கலர்கலரான விக், தொப்பி, ஆங்கிரி பேர்ட், கத்திலாம் அங்க வச்சிருந்தாங்க.
வயசு பாகுபாடில்லாம எல்லாரும் செல்பி எடுத்துக்கிட்டாங்க. அதில்லாம வயத்து  பசி போக்கும் கேண்டீன், அறிவு பசி போக்க தினத்தந்தி சார்பா புத்தக கண்காட்சின்னு எல்லாமே இருந்துச்சு.
பொழுது போக்கு அம்சங்கள்லாம் முடிய 11 மணி ஆகிட்டுது. கூட்டமும் கணிசமா சேரவே 11 மணிக்கு தமிழ்தாய்  நிகழ்ச்சிகள் ஆரம்பமாகிட்டுது. வேலூர் மாநகரின் முக்கிய பொறுப்பிலிருக்கும் பெண்களும், சமூக ஆர்வலரா இருக்கும் பெண்களும் குத்து விளக்கேத்த நிகழ்ச்சி தொடங்குச்சு.
வழக்கம்போல ஒரு பாரம்பரிய நடனத்தோடு நிகழ்ச்சி தொடங்குச்சு,ஒரு குட்டியூண்டு பொண்ணு என்னமா சுழண்டு ஆடுச்சு. யப்பா! பேர் கேட்கனும்ன்னு நினைச்சேன். ஆனா, நிகழ்ச்சி முடியும் முன்னமேயே பாப்பா வீட்டுக்கு போயிட்டுது.
பெண்கள் மனம் சார்ந்த பிரச்சனைகள், அதுக்கு தீர்வுகள் என உற்சாகமூட்டும் உரை...
கோலபோட்டி ஒரு பக்கம்... மெகந்தி போட்டி  ஒருபக்கம்ன்னு ஜரூராய் பெண்கள் ஈடுபட்டாங்க.

சமையல் போட்டிக்கு வீட்டிலிருந்தே செஞ்சு கொண்டுவந்த இனிப்புகளை , அங்க வந்த வேலூரிலிருக்கும் பிரபல ஸ்டார் ஹோட்டலின் செஃப் முதல் மூன்று ஆட்களை தேர்ந்தெடுத்தார்.
அடுத்து டான்ஸ் போட்டி.. விஜய் டிவி கிங் ஆஃப் டான்ஸ் நிகழ்ச்சியின் டான்ஸ் மாஸ்டரான சூர்யா நடுவரா இருக்க நடந்துச்சு. 5 வயசு பாப்பா முதற்கொண்டு 60 வயசு பாட்டி வரை குத்தாட்டம்தான். காலேஜ் பொண்ணுங்கக்கூட அப்படி ஆடல.  ஆனா,  இந்த குடும்ப இஸ்திரிகளா இருக்கும் நடுத்தர வயது பெண்கள் கெட்ட ஆட்டம் போட்டாங்க. மேடை ஏற கூச்சப்பட்டவங்ககூட இருந்த இடத்துல இருந்தே செம குத்துதான். 

டான்ஸ் மாஸ்டர் சூர்யா...  இதுக்கப்புறம் 1லிருந்து 2 மணி வரை சாப்பாட்டு நேரம்.  அதுமுடிஞ்சதும் உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டுன்னு தெரிஞ்சதாலயோ என்னமோ எல்லாரையுமே டான்ஸ் ஆட வச்சாங்க. 
காலை 7 டூ 8 மணிவரை சில்லுன்னு ஒரு காலை  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஆர்.ஜே வான பிரியங்காவை வேலூர் ஹலோ எப்.எம் ஸ்டேஷன் மேனேஜர்  மாயா அறிமுகம் செஞ்சு வச்சார். ஹலோ எப்.எம் வாசகர்களுக்கு இவரை நல்லாவே தெரியும்., உங்க பக்கமிருப்பேன். பக்கபலமாவும் இருப்பேன்னு சொல்லும் டைரி மாயாதான் இவரு. அவர் அறிமுகப்படுத்திய அந்த பிரியங்கா வேற யாருமில்ல! என்ற பொண்ணுதான். தூயான்ற பேரில் இங்க பலருக்கு அவளை தெரியும்.
அடுத்து எல்லா ஆர்.ஜேக்களையும் அறிமுகப்படுத்திய பின், மீண்டும் பிரியங்காவை அறிமுகப்படுத்தினார். ஏன்னா, மதியம் 2 டூ 4 வரை மேட்னி மெலோடீஸ்ன்ற நிகழ்ச்சியை பண்றா. இந்தம்மாவுக்குதான் டூயல் ரோல்ன்னு சொல்லி பேசினார். ஆனா, வீட்டில் ஒரு குண்டூசியை நகர்த்துவதில்லைன்னு எனக்குதானே தெரியும் :-(
வீட்டு பிரச்சனையில் விட்டு கொடுத்து போவது மருமகளா?! மாமியாரா?!ன்ற தலைப்பில் வந்திருந்த பெண்களை பேச சொல்லி அதிலிருந்து நல்ல கருத்துகளை முன்வச்ச  20 பெண்களை தேர்ந்தெடுத்து அல்லி தர்பார்ன்னு பேச வச்சாங்க.  
அல்லி தர்பார் முடிஞ்சதும்  மணப்பெண் அலங்காரம்ன்ற தலைப்பில் பேஷன் ஷோ நடந்துச்சு. பல பெண்கள் அழகா பட்டு சேலை கட்டி, கல்யாண பொண்ணு மாதிரியே வந்தாங்க. 
அதுல மீரான்னு ஒரு 60 வயசுக்காரம்மா அழகா பட்டு சேலை கட்டி, தலை ஜடை வச்சி, ஒட்டியாணம், வங்கின்னு எல்லா நகையும் போட்டு ரோஸ் பவுடர் தீட்டி மாலையோடு அழகா வந்தாங்க. பத்து பேர் கலந்துக்கிட்ட அந்த போட்டியில் முதல் 5 இடத்தில் அந்தம்ம்மா வந்தாங்க
வாழ்க்கைக்கு அழகு மட்டும் போதாதே! அதனால் கேள்வி கேட்க மீராவால் நடுவரை திருப்தி செய்யுற அளவுக்கு பதில் சொல்ல முடியாததால் முதல்  3 இடத்துக்கு வரமுடில. ஆனாலும், இந்த வயசுலயும் கூச்சம் பாராம மேக்கப் போட்டு மேடை ஏறியதால் அவங்களுக்கு ஆறுதல் பரிசு கொடுத்தாங்க. நிகழ்ச்சியின் முடிவில் கலந்துக்கிட்டவங்க கூப்பனை குலுக்கி பம்பர் பரிசா டிவி, ப்ரிட்ஜ், வாஷிங்க் மெசின்னு கொடுத்து விட்டாங்க.

டிவில இந்த மாதிரி நிகழ்ச்சிகளை பார்க்கும்போது நானும்,போகனும் ஒரு குத்தாட்டம் போடனும்ன்னு ஆசைப்படுவேன். ஆனா பாருங்க, பாப்பா வேலை செஞ்சதால் எந்த போட்டில கலந்துக்க கூடாதுன்னும், வந்து ஆடி என் மானத்தை வாங்கதன்னு பொண்ணு சொன்னதால கப்சிப்ப்ப்ப்ப்ப்ப்ப். இதுக்கு நான் போகாமலேயே இருந்திருக்கலாம். ஆங் சொல்ல மறந்துட்டேனே! எதாவது நிகழ்ச்சிக்கு போனால் எதாவது மிஸ் பண்ணனும்ன்னு எனக்கு விதிச்சிருக்கும் விதி போல!இரண்டாவது வலைப்பதிவர் மாநாட்டுல கலந்துக்கிட்ட போது கேமரா. இப்ப போன்.... என்ன பேசிக் மாடல் போனுங்கறதால் தப்பிச்சேன்.

அடுத்த தபா, மூஞ்சில மரு, தலையில் தலப்பாகையோடு மாறுவேசத்துல போய் நிகழ்ச்சில கலந்துக்க்கிட்டு ஒரு குத்தாட்டம் போட்டு வரனும்ன்னு ஆசை.. இல்லல்ல பேராசை..

நன்றியுடன்
ராஜி.

8 comments:

  1. ஐயோ சாமீ... வாழ்த்துகள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. இப்ப எதுக்கு அலுத்துக்குறேள்?!

      அலுத்துக்கிட்டே வாழ்த்துகள் சொன்னா ஏத்துக்க மாட்டாது. சிரிச்சுக்கிட்டே சொன்னாதான்.....

      Delete
  2. சுவாரஸ்யமான கவரேஜ்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  3. வாழ்த்துகள். நிகழ்ச்சி பற்றிய காணொளிகள் நன்று.

    தூயாவிற்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  4. இதே போன்ற நிகழ்ச்சி திருச்சியில் இருந்தபோது நடந்த நினைவு

    ReplyDelete
    Replies
    1. திருச்சியில் ஹலோ எப்.எம் ரேடியோவினாலயும் நடத்தப்பட்டிருக்குன்னு யூட்யூப் சொல்லுது.

      எங்க ஊருக்கு இது புதுசு.

      Delete