சிலரை பார்த்ததும் பிடிக்கும், சிலரை பார்க்க பார்க்க பிடிக்கும்.. சிலரை எப்ப பார்த்தாலும் பிடிக்காது.. இது சினிமா டயலாக். நம்ம வீட்டில் இருக்கும் பழைய போட்டோக்களை பார்க்கும்போது எப்படி இருந்த நான் இப்படியாகிட்டேன்னு ஆச்சர்யப்படுவது வழக்கம். இது மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், நம்மை சுற்றியிருக்கும் கலைபொக்கிஷங்கள், கட்டிடங்கள், இடங்களுக்கும் பொருந்தும்.... எப்படி இருந்த இடம், இப்படியாகிட்டதுன்னு வியப்பாய், ஆச்சரியமாய், கோவமாய், வருத்தமாய் நம் மனதில் எண்ணங்கள் அலைமோதும். அதுமாதிரியான எப்படி இருந்த நீ இப்படியாகிட்டியேன்ன்னு நினைக்க தோணும் மகாபலிபுரத்தின் சில இடங்களை பார்ப்போம்.
இந்த பதிவில் வரும் மகாபலிபுரத்தின் பழைய படங்கள்லாம் நிக்கோலசும் அவர்தம் குழுவினரால் 1880-ம் ஆண்டு எடுக்கப்பட்ட படங்களாகும். வரலாற்று சிறப்புமிக்க இந்த இடம் சிறந்த மல்யுத்த வீரனும், பல்லவ மன்னருமான முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி 630-ல் சுமார் 668) பெயரில் மாமல்லபுரம் என அழைக்கப்படுவது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் இவரது காலத்தில்தான் நிறைய குடைவரைக்கோவில்கள் செதுக்கப்பட்டன என்பது வரலாற்று உண்மை... சரி, நூறாண்டுகளுக்குமுன் மாமல்லபுரம் எப்படி இருந்துச்சுன்னு பார்க்கலாம்.. வாங்க...
மாமல்லபுரத்தின் காவல் தேவதையாகிய
பிடாரியின் கோயில் அருகில் இந்த இரதங்கள் இருக்குறதால பிடாரி இரதங்கள்ன்னு பேர்
வந்திருக்கலாம்ன்னு சொல்லப்படுகிறது. இதுபற்றிய விரிவான பழைய பதிவு நம் பிளாக்கில் இங்க இருக்கு. ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்திடுங்க.
மேல இருக்கும் படத்தில் உள்ள பாறை கோவில்களின் சிறப்பம்சம்
என்னன்னா, கோவில்களின் அடிப்பகுதி, அதாவது கருவறைக்கு முக்கியத்துவம் கொடுக்காம மேற்பகுதி மட்டும் அதிகக் கவனம்
செலுத்தி அழகாவும், ஒழுங்காவும், சிறப்பாவும் வடிவமைக்கபட்டிருக்கு. வலையன் குட்டைக் கோயிலும்,
பிடாரிக் கோயிலும் மூன்று நிலையுள்ள
இளங்கோயில்கள் வகையைச் சார்ந்தவை என்றாலும், இவ்விரண்டிற்கும் சில வேறுபாடுகள் இருக்கு. இந்த இரண்டு
கோவில்களிலும் விமானங்களின் சிறப்பினை மட்டும் வெளிப்படுத்துற மாதிரி
செதுக்கபட்டுள்ளன.
இந்த இடத்தை பற்றிய
விரிவான விவரங்களுக்கு இங்க ஒரு எட்டு போய் பார்க்கவும்
மாற்றங்களை சந்தித்தாலும் நல்ல பராமரிப்பில் இருப்பதால் மகிழ்ச்சி யே ராஜி அக்கா...
ReplyDeleteமாமல்லபுரம் 10 வருடங்களுக்கு முன் குடும்பத்தோடு சென்று பார்த்தது.
ReplyDeleteதுளசிதரன்
ராஜி லேட்டஸ்ட் படங்கள் நீங்க எடுத்ததா? நல்லாருக்கு.
பழைய படங்கள் பார்க்கும் போது இப்பவும் நல்லாத்தான் இருக்கறாப்ல இருக்கு. பாருங்க கடல் ஒட்டி இருக்கு கடற்காற்றுல கல் அரிச்சுப் போனா இப்ப நமக்குப் பார்க்கக் கிடைக்காது இல்லையா. அதனால பராமரிப்பு அப்புறம் உலகத்தினர் எல்லாரும் வந்து பார்க்கணும்னா இப்பெருமை தெரியணும்னா பழைய படத்துல இருக்காப்ல இருந்தா யாரும் வந்து பார்க்கறது கஷ்டம்தானே. ஸோ கொஞ்சம் சுத்தி நல்லா கல்லு முள்ளு இல்லாமல் நடக்க சௌகரியம் செஞ்சாத்தானே மக்களும் வருவாங்க இல்லையா? விவரங்கள் நல்லாருக்கு ராஜி. நாலஞ்சு தடவை போய்ப் பார்த்திருக்கிறேன். படங்களும் எடுத்திருக்கிறேன் படங்கள் இருக்கா என்று பார்க்க வேண்டும்.
கீதா
பழங்காலப் படங்களில் இருக்கும் அழகு, வண்ணப்படங்களில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்
ReplyDeleteஇயற்கை தான் என்றும் அழகு...
ReplyDeleteஇன்று மனிதன் காலடி பட்டால், (சில இடங்கள்) கெட்டு விடுகிறது...
அப்போது இயற்கை அழகு. இப்போது பராமரிப்பு அழகு.
ReplyDeleteஅன்றைய அழகும், இன்றைய அவலமும் ரசிக்கவும், வேதனைப்படவும் வைத்தது.
ReplyDeleteஒப்புநோக்கும்போது பல புரிதல்கள் நமக்கு ஏற்படுவது இயல்பே. இதிலும் அது காணப்படுகிறது. பழைய புகைப்படங்களின் அழகு மிகவும் சிறப்பு.
ReplyDeleteமாமல்லை ஒரு அதிசயம்
ReplyDeleteபடங்கள் நன்று.
ReplyDeleteகண்டு கொண்டோம்.
ReplyDeleteநான் முதலில் கண்டமாமல்லபுரம் 1983 இல். அதன் பின்பும் சென்று இருக்கிறேன்.