Showing posts with label குடும்பம். Show all posts
Showing posts with label குடும்பம். Show all posts

Thursday, June 06, 2013

மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள்



1. சின்ன விசயத்திற்கெல்லாம் கணவனை துணைக்கு அழைப்பது

2. ஏதோ சொல்ல வந்து பின் ‘அதை விடுங்க’ என பொடி வைத்து பேசுவது . மூடி மறைத்து கணவனை உஷ்ணபடுத்துவது.

3. ‘அன்பு’ என்ற பெயரில் ஆயிரம் ‘போன்கால்’ பண்ணி நச்சரிப்பது

4. எதற்கெடுத்தாலும் அழுது வடிவது

5. ‘இவங்க தப்பா நினைப்பாங்க அவங்க தப்பா நினைப்பாங்க’ என்று தனக்காக வாழாமல் சமூகத்திற்கு பயந்து பயந்து வாழ்வது

6. சாப்பிடும் நேரம் பார்த்து குடும்ப பிரச்சினைகளை கிளறுவது. நமக்காக இரவில் சாபிடாமல் காத்து கொண்டிருப்பது .

7. வீட்டை அலங்கோலமாக போட்டு வைப்பது

8. நண்பர்களை பற்றி தவறாக பேசுவது

9. வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தால் ‘ரூல்ஸ்’ போடுவது

10. எதற்கெடுத்தாலும் கணக்கு கேட்பது

11. கணவன் வேலைவிட்டு வீட்டுக்கு திரும்பும் போது சொர்ணாஅக்கா ரேஞ்சுல முகத்தை வைச்சுக்கிட்டு பேசுவது…

12. எப்ப பாத்தாலும் நான் அழகாயில்லையாங்கன்னு கேட்டு நச்சரிச்சு அடிக்கடி கணவனைப் பொய் சொல்ல கட்டாயப்படுத்துவது.


  டிஸ்கி: ஃபேஸ்புக்குல ரசித்தது...,

Wednesday, February 20, 2013

எங்கே செல்லும் இந்த பாதை!!??


           இன்ன்னிக்கு  எங்க வீட்ட்டுக்கு பக்கத்துல  குடியிருக்கும் பெண்மணி வந்து, கூடிய சீக்கிரம்  நாங்க குடியிருக்கும்  வீட்டை காலி செய்துட்டு , வேறு வீட்டுக்கு போகபோகிறோம்ன்னு சொன்னாங்க. அப்புறம் பேச்சு எங்கெங்கோ போய் கடைசியில்  தோட்டத்தில் உள்ள பூச்செடிகள் பக்கம் போச்சு...,

                 இங்கிருக்குற  ”டிசம்பர் பூச்செடி” என் பொண்ணு ஆசையாசையாய் வச்சுது. இப்போதான் தளதளனு வந்திருக்கு. இந்த சீசனில் கண்டிப்பா பூக்கும். ம்ஹும், போகும்போது வெட்டிப் போட்டுவிட்டுதான் போகணும் என்றாரேப்  பார்க்கலாம்.  சில நொடிகளுக்கு  எனக்குப் பேச்சே வரலை. ஒருவாறாக அவர்களை வழியனுப்பிவைத்துவிட்டு, யோசித்தேன்.

                      ஒருப் பூச்செடியே  அடுத்தவங்களுக்கு விட்டுக் கொடுக்காத அளவிற்கு மனித மனங்கள் (என்னையும் சேர்த்துதாம்ல)  இன்று சுருங்கி விட்டதை எண்ணி வேதனைப் பட்டேன்.

                    இந்த அறிவியல்  யுகத்தில் கிடைக்கும் வசதிகளால் உலகமே சுருங்கிப் போய்விட்டது என்று பெருமையுடன் மார் தட்டும்போது.,, மனங்கள் சுருங்கிப் போய்விட்டதை எண்ணி கண்டிப்பாக வெட்கித் தலைக் குனிய வேண்டியதுதான்.
                 என்னோட நினைப்பு நான் சின்ன புள்ளையா இருந்த கால்த்துக்கு டைம் மெஷின் இல்லாமலயே போய்ட்டுது..(கொசுவர்த்தி சுருள் ஏத்திட்டீங்களான்னு கேக்கப்படாது? )
                                    
                  அன்னிக்கு, பெரும்பாலும் எல்லா வீட்டிலும் திண்ணை வைத்துதான் வீடுக் கட்டுவார்கள்.  அது எதுக்குன்னு எல்லாருக்குமே தெரியும்.  வெளியூரிலிருந்து வர்றவங்க கொஞ்ச நேரம் தங்கி ரெஸ்ட் எடுத்துட்டு போக கட்டுனது.  . அந்த திண்ணை இப்போ எங்கே?

                  ஒவ்வொரு வீட்டு திண்ணையும் எத்தனை, எத்தனை சுகம், துக்கம், பிறப்பு, இறப்பு, மகிழ்ச்சி, சோகம், காதல் வலியை சுமந்திருந்தன? என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

                    சாயந்தர நேரத்துல  (அப்போலாம்  T.V.என்ற முட்டாள் பெட்டி இல்லை). அந்த திண்ணை  பல வேசமெடுக்கும் . சின்ன பிள்ளைங்க  தங்களோட வயசு பசங்களஓட செட்டு சேர்ந்து  விளையாடுவாங்க. அம்மாக்கள் ஒருபுறமும், அப்பாக்கள் ஒருபுறமும், அண்ணன்கள்,அக்காக்கள் மறுபுறமும் தத்தம்  வயதுகேற்ப பிரிந்து உக்கார்ந்து பேசிக்க்கிட்டு இருப்பாங்க.  சில சமயம் குடும்ப பிரச்சனைகள் கூட அங்கே பேசப்பட்டு அங்கேயே அதுக்கு தீர்வு கிடைச்சுடும்

                       குழந்தையின் உடல்நிலையிலிருந்து. வீடு கட்டுவது, பணமுடை, ஊர்பயணம், மகனின் திருமணம், அப்பாவின் தெவசம்  வரை அங்கேயே செலவில்லாமல் பிரச்சனை சுமூகமாய் முடிந்த கதை உண்டு.

                        அப்புறம்,  தண்ணி எடுக்க போவது. பெரும்பாலும் குடிநீர் கிணறு ஊருக்கு வெளியே ஆற்றங்கரை அல்லது குலத்தங்கரையில்தான்    இருக்கும், அதற்கு வயதுவந்த பெண்களும், சின்ன பிள்ளைகளும், பெரியவங்களும் தனியாகப் போகாம ஒரு கேங்காதான் போவாங்க.. அந்தகேங்குல  நம் வீட்டு அண்ணனோ இல்லை கோடி வீட்டு சித்தப்பாவோ சைக்கிளை உருட்டிக் கொண்டு கண்டிப்பா போவார். ஏன்? தண்ணி எடுக்கவும்,  தண்ணி எடுக்க போறவங்களை காபந்து பண்ணி கூட்டிவர  மட்டுமின்றி  சந்து வீட்டு  யசோதாக்கவை கடலை போடவும் .அதுக்கு துணை நம்மை போன்ற சின்ன பிள்ளைகள்தான்.   (25 வருடத்திற்கு முன் நான் சின்ன பிள்ளையாக்கும்) அண்ணனிடமிருந்து வளையலோ, சாந்தோ அங்கிட்டு போகும், அங்கிருந்து  பலகாரங்களோ கடிதமோ இங்கிட்டு வரும் அதில் கண்டிப்பாக நமக்கு பங்குண்டு. .(அவிங்க மாட்டுனா முதல் அடி  நமக்குதான்). காதலோடு கூட மத்தவங்களை  பாதுக்காக்க வேண்டி வரும் மனிதநேயம் இன்று எங்கே?

                       ஆனா, இன்னிக்கு  வீட்டுக்கு வீடு குழாய், மோட்டார் இருந்தும் பக்கத்து வீட்டுக்காரங்க கூட தண்ணி தகராறு.  பெரும்பாலும் பக்கத்து வீட்டுக்காரங்க கூட வர்ற முத மோதல்   தண்ணிதான்.

                      அன்னிக்கு அக்கம் பக்கத்து வீட்டுல விட்டுட்டு  பெத்தவங்க  விட்டுவிட்டு   ஊருக்குலாம் போவாங்க.  அவங்க  வர்றவரை, குழந்தை   அவர்கள் வீட்டிலியே  சாப்பிட்டுட்டு அங்கேயேத்  தூங்கும். ஆனா, இன்னிக்கு யாரை நம்பி நாம நம்ம  குழந்தைகளை நாம வுட்டுட்டு போறோம். குழந்தைகளை வீட்டுக்குள்ள வெச்சு  பூட்டிட்டு  கடைக்கு போய்வரும் பெத்தவங்க எத்தனை பேரு இருக்காங்க?!

                ரோட்டில் அடிபட்டு விழுபவனை தூக்கிவிட எத்தனைப் பேர் வருகின்றனர்?

              அடிப்பட்டு, அனாதையாய்
              வீழ்ந்து விட்ட
              பிணத்தைப்  பார்த்துக் கொண்டு
             செல்கின்றன
              "நாளைய பிணங்கள்"

              ன்னு எப்போதோ எங்கோப் படித்த  கவிதையேதான் ஞாபகத்துக்கு  வருது.

               பள்ளிக்கு சாப்பாடுக்  கட்டிக் கொடுக்கும்போதே அரிசிவிலை  கிலோ முப்பது ருபாய் அதனால தானம் பண்ணாம  நீ மட்டும் சாப்பிடு.  பென்சிலை நீ ஏன் அவனுக்கு கொடுத்தே அது உங்க மாமா சிங்கப்பூரிலிருந்து வாங்கிவந்தது னு சொல்லிக் கொடுக்கிறோம். அப்படி கேட்டு வளர்ற பிள்ளைங்களுக்கு அவங்க  பெரியவங்க ஆனதும் பகிர்தல் என்பதே மறந்துவிடுமோ னு எனக்கு பயமா இருக்கு.

                  நம்முடைய பிள்ளைகளுக்கு நாம், நம் உறவு முறைகளையே சுருக்க கற்றுக் கொடுத்துவிட்டோம். அத்தை,மாமி,பெரியம்மா, சித்தி இந்த அத்தனை உறவுகளும் aunty  என்றாகிவிட்டது. அதேப்போல் சித்தப்பா,பெரியப்பா,மாமாலாம்  uncle என்றும்,  தாத்தா, பாட்டி, பாட்டன், பூட்டன், முப்பாட்டன் எல்லாம் சுருங்கி grand-parents என்றாகி ரொம்ப  காலமாச்சு.

                 நம்        தவறான பழக்க வழக்கங்களால் கலப்பட உணவு, மாசடைந்த காற்று, சுகாதார சீர்கேடான உலகத்தைதான் நம் எதிர்கால் சந்ததிக்கு பரிசளிக்கப் போகிறோம். அதனால,  . அந்த தொல்லைகளைத்  தாங்க நம் பிள்ளைகளுக்கு தோள் கொடுக்க அண்டை அயலாரை (உண்மையான) நட்புடன் விட்டுச் செல்ல வேண்டாமா?

 டிஸ்கி: என்னமோ சொல்லனும்ன்னு தோணுச்சு. அதனால, ஒரு கட்டுரை போல எழுதிட்டேன். படிக்குரக் காலத்துலேயே நாங்க கட்டுரை எழுதினா நாலு இல்ல அஞ்சு மார்க்தான் வரும்). இது எந்த லட்சணத்துல இருக்குன்னு சொல்லுங்க