Wednesday, February 20, 2013

எங்கே செல்லும் இந்த பாதை!!??


           இன்ன்னிக்கு  எங்க வீட்ட்டுக்கு பக்கத்துல  குடியிருக்கும் பெண்மணி வந்து, கூடிய சீக்கிரம்  நாங்க குடியிருக்கும்  வீட்டை காலி செய்துட்டு , வேறு வீட்டுக்கு போகபோகிறோம்ன்னு சொன்னாங்க. அப்புறம் பேச்சு எங்கெங்கோ போய் கடைசியில்  தோட்டத்தில் உள்ள பூச்செடிகள் பக்கம் போச்சு...,

                 இங்கிருக்குற  ”டிசம்பர் பூச்செடி” என் பொண்ணு ஆசையாசையாய் வச்சுது. இப்போதான் தளதளனு வந்திருக்கு. இந்த சீசனில் கண்டிப்பா பூக்கும். ம்ஹும், போகும்போது வெட்டிப் போட்டுவிட்டுதான் போகணும் என்றாரேப்  பார்க்கலாம்.  சில நொடிகளுக்கு  எனக்குப் பேச்சே வரலை. ஒருவாறாக அவர்களை வழியனுப்பிவைத்துவிட்டு, யோசித்தேன்.

                      ஒருப் பூச்செடியே  அடுத்தவங்களுக்கு விட்டுக் கொடுக்காத அளவிற்கு மனித மனங்கள் (என்னையும் சேர்த்துதாம்ல)  இன்று சுருங்கி விட்டதை எண்ணி வேதனைப் பட்டேன்.

                    இந்த அறிவியல்  யுகத்தில் கிடைக்கும் வசதிகளால் உலகமே சுருங்கிப் போய்விட்டது என்று பெருமையுடன் மார் தட்டும்போது.,, மனங்கள் சுருங்கிப் போய்விட்டதை எண்ணி கண்டிப்பாக வெட்கித் தலைக் குனிய வேண்டியதுதான்.
                 என்னோட நினைப்பு நான் சின்ன புள்ளையா இருந்த கால்த்துக்கு டைம் மெஷின் இல்லாமலயே போய்ட்டுது..(கொசுவர்த்தி சுருள் ஏத்திட்டீங்களான்னு கேக்கப்படாது? )
                                    
                  அன்னிக்கு, பெரும்பாலும் எல்லா வீட்டிலும் திண்ணை வைத்துதான் வீடுக் கட்டுவார்கள்.  அது எதுக்குன்னு எல்லாருக்குமே தெரியும்.  வெளியூரிலிருந்து வர்றவங்க கொஞ்ச நேரம் தங்கி ரெஸ்ட் எடுத்துட்டு போக கட்டுனது.  . அந்த திண்ணை இப்போ எங்கே?

                  ஒவ்வொரு வீட்டு திண்ணையும் எத்தனை, எத்தனை சுகம், துக்கம், பிறப்பு, இறப்பு, மகிழ்ச்சி, சோகம், காதல் வலியை சுமந்திருந்தன? என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

                    சாயந்தர நேரத்துல  (அப்போலாம்  T.V.என்ற முட்டாள் பெட்டி இல்லை). அந்த திண்ணை  பல வேசமெடுக்கும் . சின்ன பிள்ளைங்க  தங்களோட வயசு பசங்களஓட செட்டு சேர்ந்து  விளையாடுவாங்க. அம்மாக்கள் ஒருபுறமும், அப்பாக்கள் ஒருபுறமும், அண்ணன்கள்,அக்காக்கள் மறுபுறமும் தத்தம்  வயதுகேற்ப பிரிந்து உக்கார்ந்து பேசிக்க்கிட்டு இருப்பாங்க.  சில சமயம் குடும்ப பிரச்சனைகள் கூட அங்கே பேசப்பட்டு அங்கேயே அதுக்கு தீர்வு கிடைச்சுடும்

                       குழந்தையின் உடல்நிலையிலிருந்து. வீடு கட்டுவது, பணமுடை, ஊர்பயணம், மகனின் திருமணம், அப்பாவின் தெவசம்  வரை அங்கேயே செலவில்லாமல் பிரச்சனை சுமூகமாய் முடிந்த கதை உண்டு.

                        அப்புறம்,  தண்ணி எடுக்க போவது. பெரும்பாலும் குடிநீர் கிணறு ஊருக்கு வெளியே ஆற்றங்கரை அல்லது குலத்தங்கரையில்தான்    இருக்கும், அதற்கு வயதுவந்த பெண்களும், சின்ன பிள்ளைகளும், பெரியவங்களும் தனியாகப் போகாம ஒரு கேங்காதான் போவாங்க.. அந்தகேங்குல  நம் வீட்டு அண்ணனோ இல்லை கோடி வீட்டு சித்தப்பாவோ சைக்கிளை உருட்டிக் கொண்டு கண்டிப்பா போவார். ஏன்? தண்ணி எடுக்கவும்,  தண்ணி எடுக்க போறவங்களை காபந்து பண்ணி கூட்டிவர  மட்டுமின்றி  சந்து வீட்டு  யசோதாக்கவை கடலை போடவும் .அதுக்கு துணை நம்மை போன்ற சின்ன பிள்ளைகள்தான்.   (25 வருடத்திற்கு முன் நான் சின்ன பிள்ளையாக்கும்) அண்ணனிடமிருந்து வளையலோ, சாந்தோ அங்கிட்டு போகும், அங்கிருந்து  பலகாரங்களோ கடிதமோ இங்கிட்டு வரும் அதில் கண்டிப்பாக நமக்கு பங்குண்டு. .(அவிங்க மாட்டுனா முதல் அடி  நமக்குதான்). காதலோடு கூட மத்தவங்களை  பாதுக்காக்க வேண்டி வரும் மனிதநேயம் இன்று எங்கே?

                       ஆனா, இன்னிக்கு  வீட்டுக்கு வீடு குழாய், மோட்டார் இருந்தும் பக்கத்து வீட்டுக்காரங்க கூட தண்ணி தகராறு.  பெரும்பாலும் பக்கத்து வீட்டுக்காரங்க கூட வர்ற முத மோதல்   தண்ணிதான்.

                      அன்னிக்கு அக்கம் பக்கத்து வீட்டுல விட்டுட்டு  பெத்தவங்க  விட்டுவிட்டு   ஊருக்குலாம் போவாங்க.  அவங்க  வர்றவரை, குழந்தை   அவர்கள் வீட்டிலியே  சாப்பிட்டுட்டு அங்கேயேத்  தூங்கும். ஆனா, இன்னிக்கு யாரை நம்பி நாம நம்ம  குழந்தைகளை நாம வுட்டுட்டு போறோம். குழந்தைகளை வீட்டுக்குள்ள வெச்சு  பூட்டிட்டு  கடைக்கு போய்வரும் பெத்தவங்க எத்தனை பேரு இருக்காங்க?!

                ரோட்டில் அடிபட்டு விழுபவனை தூக்கிவிட எத்தனைப் பேர் வருகின்றனர்?

              அடிப்பட்டு, அனாதையாய்
              வீழ்ந்து விட்ட
              பிணத்தைப்  பார்த்துக் கொண்டு
             செல்கின்றன
              "நாளைய பிணங்கள்"

              ன்னு எப்போதோ எங்கோப் படித்த  கவிதையேதான் ஞாபகத்துக்கு  வருது.

               பள்ளிக்கு சாப்பாடுக்  கட்டிக் கொடுக்கும்போதே அரிசிவிலை  கிலோ முப்பது ருபாய் அதனால தானம் பண்ணாம  நீ மட்டும் சாப்பிடு.  பென்சிலை நீ ஏன் அவனுக்கு கொடுத்தே அது உங்க மாமா சிங்கப்பூரிலிருந்து வாங்கிவந்தது னு சொல்லிக் கொடுக்கிறோம். அப்படி கேட்டு வளர்ற பிள்ளைங்களுக்கு அவங்க  பெரியவங்க ஆனதும் பகிர்தல் என்பதே மறந்துவிடுமோ னு எனக்கு பயமா இருக்கு.

                  நம்முடைய பிள்ளைகளுக்கு நாம், நம் உறவு முறைகளையே சுருக்க கற்றுக் கொடுத்துவிட்டோம். அத்தை,மாமி,பெரியம்மா, சித்தி இந்த அத்தனை உறவுகளும் aunty  என்றாகிவிட்டது. அதேப்போல் சித்தப்பா,பெரியப்பா,மாமாலாம்  uncle என்றும்,  தாத்தா, பாட்டி, பாட்டன், பூட்டன், முப்பாட்டன் எல்லாம் சுருங்கி grand-parents என்றாகி ரொம்ப  காலமாச்சு.

                 நம்        தவறான பழக்க வழக்கங்களால் கலப்பட உணவு, மாசடைந்த காற்று, சுகாதார சீர்கேடான உலகத்தைதான் நம் எதிர்கால் சந்ததிக்கு பரிசளிக்கப் போகிறோம். அதனால,  . அந்த தொல்லைகளைத்  தாங்க நம் பிள்ளைகளுக்கு தோள் கொடுக்க அண்டை அயலாரை (உண்மையான) நட்புடன் விட்டுச் செல்ல வேண்டாமா?

 டிஸ்கி: என்னமோ சொல்லனும்ன்னு தோணுச்சு. அதனால, ஒரு கட்டுரை போல எழுதிட்டேன். படிக்குரக் காலத்துலேயே நாங்க கட்டுரை எழுதினா நாலு இல்ல அஞ்சு மார்க்தான் வரும்). இது எந்த லட்சணத்துல இருக்குன்னு சொல்லுங்க

24 comments:

 1. அட...நல்ல பதிவு...

  ReplyDelete
  Replies
  1. ஏன் இந்த ஆச்சர்யம்?! எப்ப்ப்ப்ப்ப்ப்பாவது சில சமயம் இப்படி நல்ல பதிவும் போடுறதுண்டு..,

   Delete
 2. ஒரு மூணு மார்க் போதுமா...இந்த கட்டுரைக்கு

  ReplyDelete
 3. எல்லாரும் ஃபேஸ்புக் இண்டெர்னெட் அப்படின்னு அந்த உலகத்துல வாழ்ந்திட்டு இருக்காங்க..எப்படி திண்ணை வச்சி கட்டுவாங்க...அந்தகாலத்துல திருட்டு பயமே இல்ல..இப்போ அதுதான் அதிகமா இருக்கு..
  எல்லாம் கம்யூட்டர் மயம்..என்னத்த சொல்றது,,
  இப்படி கட்டுரை எழுதி 30 வருசம் கழிச்சு படிச்சாத்தான் உண்டு...

  ReplyDelete
 4. (25 வருடத்திற்கு முன் நான் சின்ன பிள்ளையாக்கும்) //
  அதென்ன சைக்கிள் கேப்புல வண்டி ஓட்டுறது.,..

  ReplyDelete
  Replies
  1. எத்தனை 25 வருசம்ன்னு சொன்னேனா சகோ?!

   Delete
 5. என்ன திடீரென்று இப்படியொரு புலம்பல்... சுறுசுறுப்பே இல்லையே... Something Wrong...?

  ReplyDelete
  Replies
  1. ஒரு wrong இல்லன்னா. பிள்ளைகளுக்கு சொத்து, நகை, பணம் மட்டும் சேர்த்து வெச்சுட்டா போதுமா? நல்ல மனம் கொண்ட மனிதர்களை?! துயரம் வரும்போது நம் பிள்ளைகள் என்ன செய்யும்ன்னு கவலையா இருக்குண்ணா!

   Delete
 6. இந்த அறிவியல் யுகத்தில் கிடைக்கும் வசதிகளால் உலகமே சுருங்கிப் போய்விட்டது என்று பெருமையுடன் மார் தட்டும்போது.,, மனங்கள் சுருங்கிப் போய்விட்டதை எண்ணி கண்டிப்பாக வெட்கித் தலைக் குனிய வேண்டியதுதான்.

  எங்கே செல்லும் இந்த பாதை!!?? விடை தெரியாத கேள்விகள்...

  ReplyDelete
 7. திண்ணை இன்று கட்டினால் கள்ளன் நன்கு படுத்து வசதியாகத் திருடுவானல்லவா!
  காலம் மாறக் கணக்குகளும் மாறுகிறது.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 8. முடிவில்லா பாதைதான்....

  நாமாவது நல்லவர்களாக வாழ முற்படுவோம்!

  பதிவு அருமை.
  (நுர்ற்றுக்கு அறுபது தரலாம்.)

  ReplyDelete
 9. நான் பழைய ஆள். டீச்சர் வேற! அதனால் பத்துக்குப் பத்து!

  பயம் இல்லாத சமூகத்துலே வளந்த நமக்கு இப்போ புள்ளைகள் பற்றிய பயமே பெருசாப்போயிருச்சு பாருங்க:(

  யாரைத்தான் நம்புவதோ........

  வெளித்திண்ணை இல்லாட்டாலும் பர்வாயில்லை ஒரு உள்திண்ணையாவது வேணுமுன்னு அடம்புடிச்சுக்கிட்டு இருக்கேன்..... ஹூம்.

  ReplyDelete
 10. ஒவ்வொரு வீட்டு திண்ணையும் எத்தனை, எத்தனை சுகம், துக்கம், பிறப்பு, இறப்பு, மகிழ்ச்சி, சோகம், காதல் வலியை சுமந்திருந்தன? என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.
  இதை உணரும் போது உள்ளம் குமுறுகின்றதே :( மறக்கவா முடியும் ?...!:(

  ReplyDelete
 11. நான் படித்த உங்கள் சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று

  ReplyDelete
 12. அறிவு வளர்ச்சியோடு சுயநலமும் சேர்ந்தே வளந்திருக்கிறது.
  சுட்டிக்காட்டிய கவிதை அற்புதம்

  ReplyDelete
 13. அருமையான கட்டுரை ராஜி... திண்ணை வைக்கிறோமோ இல்லையோ பக்கத்து வீட்டில் யார் இருக்காங்கனு தெரிஞ்சாவது வச்சுக்கணும்.... அந்த அளவில்தான் இருக்கிறது இன்றைய ந(ரக)கர வாழ்க்கை.....

  ReplyDelete
 14. நிச்சயம் யோசிக்க வேண்டிய விஷயம் தான்.. பாஸ் பண்ணீட்டீங்க..!

  ReplyDelete
 15. மிகவும் சிறப்பான கருத்து.

  ReplyDelete
 16. அருமையான பதிவு

  //படிக்குரக் காலத்துலேயே நாங்க கட்டுரை எழுதினா நாலு இல்ல அஞ்சு மார்க்தான் வரும்.//

  ஒருவேளை படிக்கிற காலத்தில் இதுமாதிரி எழுத தெரியலையோ என்னமோ நல்ல பகிர்வு .

  ReplyDelete
 17. எல்லாம் சுயநலமாகி போய் இயந்திர தன்மை வந்துவிட்டது! நல்ல பதிவு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 18. அடிப்பட்டு, அனாதையாய்
  வீழ்ந்து விட்ட
  பிணத்தைப் பார்த்துக் கொண்டு
  செல்கின்றன
  "நாளைய பிணங்கள்"

  ReplyDelete
 19. அருமையான பதிவு நியாபக வரதே நியாபகம் வரதே என்ற பாடலை போல்
  அதுவும் சாயந்திர நேரம் பல வேஷம் எடுக்கும் திண்ணை அப்பபோ இந்த முட்டாள் பெட்டி இல்லை என்றது எவ்வளவு உண்மை நாம் தொலைத்த காலம் இனி கனவில் தான்

  ReplyDelete

 20. பிள்ளைகள் எல்லோரும் வெளிநாட்டில் இருக்க, பெரியவர் இறந்துபோனார். அழுதுகொண்டு அந்த அம்மா போன் பண்ணினாங்க. தனியாக இருப்பாங்களேன்னு பத்து பேரை துணைக்கு அழைத்துக்கொண்டு போனபோது அபார்ட்மெண்டில் இருக்கும் பக்கத்து வீட்டு நபருக்கு அந்த பெரியவர் இறந்து போனதே தெரியவில்லை. நிறைய பேர் வர்றாங்களேன்னு எட்டிப்பார்த்தேன் என்கிறார்.
  திண்ணை வைக்கிறோமோ இல்லையோ பக்கத்து வீட்டில் யார் இருக்காங்கனு தெரிஞ்சாவது வச்சுக்கணும்.... அந்த அளவில்தான் இருக்கிறது இன்றைய ந(ரக)கர வாழ்க்கை.....எழில் சார் சொன்னது ரொம்ப கரெக்ட்.

  ReplyDelete