Showing posts with label கேபிள்கலாட்டா. Show all posts
Showing posts with label கேபிள்கலாட்டா. Show all posts

Saturday, October 14, 2017

சிவனை கண்டாலே பத்திக்கிட்டு வருது - கேபிள் கலாட்டா


ஊர்வம்பு பேசுறதுன்னா பொண்ணுங்களுக்கு அல்வா சாப்பிடுற மாதிரி. என்ன அப்படி பேசுற பேச்சுல அக்கம் பக்கத்து வீட்டு கதை, புடவை, நகை, காதல்ன்னுதான் இருக்கும். அரசியலும், நாட்டு நடப்பும் துளிகூட இருக்காது.  ஆனா ராஜ்டிவில வரும் ரெண்டு பொண்ணுங்க நாட்டு நடப்பு, அரசியல், சினிமான்னு எல்லாத்தை பத்தியும் பேசுதுக.  இது தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகுது,
திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8.30க்கு மெகா டிவில மருந்தில்லா மருத்துவம்ன்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. எல்லா நோய்க்கும் அதுக்கான காரணத்தை சொல்லி, உணவுப்பழக்கத்து மூலமா அதுக்கும் தீர்வும் சொல்றார்(அவர் பேர் ஹீலர் பாஸ்கர்ன்னு நினைக்கிறேன்). பழங்காலத்து பாட்டிகளை நினைவூட்டி செல்லுது அவரோட பேச்சும் நடத்தையும்...  இந்நிகழ்ச்சியின் மறுஒளிப்பரப்பு மறுநாள் காலை 8.30 மணிக்கு போடுறாங்க. 
விஜய் டிவில தமிழ் கடவுள் முருகன்னு பக்தி தொடர் ஒளிப்பரப்பாகுது. சிவனை பார்த்தா ஜி.வி.பிரகாஷ்  ஜாடையில் மீசையும் தாடியுமா இருக்கார்.  இருக்கார்.  சாமிகளை க்ளீன் ஷேவ்ல பார்த்துட்டு மீசையுமா பார்க்க சகிக்கல. ஆல்ரெடி ஜி.வி.பிரகாஷை பார்த்தாலே காண்டாவேன். இதுல அவன் ஜாடையில் வரும் சிவனை மட்டும் பிடிச்சுடுமாக்கும்.
பண்டிகைன்னா அப்ப வந்த புது படங்கள் பேர்க்கொண்ட புடவைகள் விளம்பரத்துல வரும். அதுக்கப்புறம் பொண்ணுங்க உடையான சுடிதார், லெகங்கா, காக்ரா சோளின்னு வர ஆரம்பிச்சுது. அடுத்து பேண்ட் சர்ட்ன்னு வெரைட்டி காட்டுனாங்க. இந்த தீபாவளிக்கு வேட்டி ட்ரெண்டி போல! வேட்டி கரைல இருக்கும் கலருக்கு ஏத்த மாதிரி சட்டை, ஒட்டுற வேட்டி, பாக்கெட் வச்ச வேட்டின்னு  செமயா கலக்குறங்க. எல்லா வருசமும் தீபாவளி பட்ஜெட்ல  துண்டை பார்த்த ஆம்பிளைங்க இப்ப வேட்டிய கண்ணால பார்க்குறாங்க.

ஒரு ப்ரோகிராம் ஹிட்டாச்சுன்னா அதுல பங்கேத்தவங்களை வச்சு நூறு  நாள் ஓட்டுவான் விஜய்டிவிக்காரன். இதுல நூறு நாள் ஹிட்டடிச்ச பிக்பாசை விடுவானா?! பிக்பாஸ் கொண்டாட்டம்ன்னு விஜய்டிவில இந்த ஞாயித்துக்கிழமை (!5.10.2017) கல்லா கட்டப்போறான். இந்த ஷோவில் ஜூலியோட அப்பா அம்மாவை கூட்டி வந்து அழ வைக்க போறான்போல. ப்ரோமோவுல அப்படிதான் காட்டுறான்.

அடுத்து வேறொரு கேபிள் கலாட்டாவில் சந்திப்போம்...

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1474698

நன்றியுடன்.
ராஜி.

Saturday, August 12, 2017

குழந்தைகளை குழந்தைகளா காட்டாத சீரியல்கள் - கேபிள் கலாட்டா


ஒரு படத்துக்கு ஹீரோவும் முக்கியம், வில்லனும் முக்கியம். ரெண்டு பேருக்கும் கிளைமேக்சுலதான் முடிவு வரும். வரனும். அதைவிட்டு இண்டர்வெல்லுக்கு முந்தியே ரெண்டு பேத்துக்கும் முடிவு கட்டிட்டா எப்படி இருக்கும்ங்குறதை விஜய் டிவி பிக்பாஸ் பார்த்து தெரிஞ்சுக்கலாம். ரசிக்க ஓவியாவும், வெறுக்க ஜூலியும் இல்லாம பிக்பாஸ் தள்ளாடுது. மீண்டும் ஓவியா வராம, வேற யாரை கொண்டு வந்தாலும் பிக்பாஸ் ஹிட்டடிக்காது. இதை புரிஞ்சுக்கிட்டு ஓவியா கால்ல, கைல விழுந்து கூட்டி வந்தா பிக் பாஸ் தபிச்சுப்பாரு., இல்லாட்டி கோவிந்தா கோவிந்தாதான்..
சன் நியூஸ் சேனல்ல திண்ணைன்னு ஒரு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. இதுல தாங்கள் சார்ந்த துறைல ஜெயிச்சவங்களோட பேட்டி கண்டு ஒளிப்புறாங்க. இந்த நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 7 மணிக்கு ஒளிப்பரப்பாகுது. இன்னிக்கு செயற்கை கருவூட்டல் புகழ் கமலா செல்வராஜ் அவர்களோட பேட்டி ஒளிப்பரப்பாகப்போகுது. 
தெய்வ மகள் சீரியல்ல அச்சு அசல் காயத்திரி மாதிரியே  ஒரு போலீஸ்காரம்மா வந்திருக்காங்க. அவங்க பேரும் காயத்ரிதான். காயத்ரி வயசுதான், அதே உயரம்தான், அதே கலர்தான், அதே குரல், நெத்தி காயம், வயித்து காயம்ன்னு எல்லாமே அதே ஜெராக்ஸ்தான். ஒரு ஆள் போல ஏழு பேர் இருப்பாங்கன்றதை ஒத்துக்குறோம். குரல்,  வயசு உயரத்தைக்கூட ஒப்புக்குறோம். அட, பேரைக்கூட அட்ஜஸ்ட் பண்ணிக்குறோம். அதெப்படி காயம்கூட அதேமாதிரியா படும்??! சீரியல்ல லாஜிக் பார்க்ககூடாது ஓகே. அதுக்காக இப்படியா?! யானை போறளவுக்கு லாஜிக் ஓட்டை இருந்தா பரவாயில்லை. டைனசர் போறளவுக்கு ஓட்டை பெருசா இருக்குறதுலாம் ஓவர். 
கேப்டன் டிவில திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 11.30 மணிக்கு வீட்டு சமையல்ன்னு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. சென்னையை சுத்தி இருக்கும் வீட்டுங்களுக்கு போய் அவங்க செய்யுற சமையலை படம் பிடிச்சு போடுறாங்க. சமைக்க கத்துக்குறேனோ இல்லியோ! சமையலறை மாடல் எப்படி இருக்குன்னு பார்க்க இந்நிகழ்ச்சில உக்காந்துக்குவேன். 

நாம இருந்த காலக்கட்டத்தைவிட, இப்பத்திய பிள்ளைகள்  எல்லா விசயத்திலயும் மெச்சூர்ட். இது நம்ம எல்லாருக்குமே தெரியும். இப்பத்திய பிள்ளைகளுக்கு பயம் கிடையாது. எந்த ஆசையையும் அடக்கி ஆள தெரில, பிடிவாதம் ஜாஸ்தி. இதே சீரியல் குழந்தைகள் பத்தி சொல்லவே வேணாம். எல்லா சீரியல்லயும் குழ்ந்தைகளை தன்னோட வயசுக்கு மீறின முதிர்ச்சியாகவும், தன் வயசுக்கு மீறீய செயல்களை செய்யுறதா காட்டுறாங்க. நாமலாம் சின்ன பிள்ளைல சின்ன சின்ன குறும்புத்தனம் செய்வோம்.  பக்கத்து வீட்டு அண்ணா உக்காரும் இடத்தில எருக்கம்பூ வைக்குறது, எதிர்வீட்டு அக்கா வரும்போது மிதியடிக்கு கீழ கேழ்வரகு கொட்டுறது, மாமா குளிக்க போகும்போது டவலை ஒளிச்சு வச்சுக்குறதுன்னு செய்வோம். இப்பத்திய சீரியல் குழந்தைங்க பாம் வைக்குறது, மந்திரம் பண்ணுறதுன்னு செய்யுதுக. இது ரியாலிட்டி ஷோவுலயும் நடக்குது.  ராஜ் டிவில அடுக்குமாடி குடியிருப்புல ஒன்னா குடியிருக்கும் பிள்ளைகளை வச்சு ஒரு சீரியல் ஆரம்பிச்சிருக்காங்க. இதுலயாவது குழந்தைகளை குழந்தைகளா காட்டுவாங்களான்னு பார்ப்போம். இந்த நிகழ்ச்சி தினமும் இரவு 9.30க்கு ஒளிப்பரப்பாகுது.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை..
நன்றியுடன்,
ராஜி.

Saturday, July 01, 2017

இது ரியாலிட்டி ஷோ இல்ல ஃபேக்காலிட்ட்டி ஷோ - கேபிள் கலாட்டா

ஒருத்தருக்கு ஒருத்தர் சம்பந்தமே இல்லாத பிரபலங்கள் 16 பேரை ஒரே வீட்டில் 100 நாள் தங்க வச்சு அவங்க நடவடிக்கைகளை படம்பிடிச்சு காட்டுற ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்ன்ற பேர்ல   விஜய் டிவில ஒளிப்பரப்பாகுது. இந்நிகழ்ச்சியோட அம்பாசிடர் கமலஹாசன். கமல் அறிவுஜீவின்னு இத்தனை நாளாய் நினைச்சிட்டிருந்த அவரோட பிம்பம் இந்த நிகழ்ச்சி மூலமா உடைஞ்சுப்போச்சு. ஒரு மூணு நாள் இந்த நிகழ்ச்சியை பார்த்தேன். இதுக்கு சீரியல் பெட்டர்ன்னு சேனலை மாத்திட்டேன்.   வீடு முழுக்க 30 கேமராக்கள் வச்சிருக்காங்கன்னு முன்னமே சொன்னாலும், பிக்ஸ்ட் கேமராவுல முகம், கை, பொருள்ன்னு க்ளோஸ் அப்ல வருமா!? காலண்டர், கடிகாரங்கள், செல்போன், டிவின்னு வெளியுக தொடர்புகள் கிடையாதுன்னு அறிவிச்சாங்க. ஆனா, நிகழ்ச்சில கலந்துக்கிட்ட ஒருத்தங்களுக்கு பொறந்த டேன்னு சரியா நடி 12 மணிக்கு கேக் வெட்டுறாங்க. அது எப்படி?!  கேமராவுல பதிவாகும்ன்னு தெரிஞ்சும் பிரபலங்கள் சண்டை போடுவாங்களா?! இல்ல அடுத்தவங்களை கீழ்த்தரமா பேசுவாங்களா! கமலின்  படங்கள் கமர்ஷியலா வெற்றியடையலைன்னாலும் எதாவது ஒரு விஷயத்துல கலக்கி இருப்பார். இந்த நிகழ்ச்சி ஊரு உலகமே பேசினாலும் கமலுக்கு கெட்ட பேர்தான்... ? இது ரியாலிட்டி ஷோ இல்ல... ஃபேக்காலிட்டி ஷோ...

அடிமட்டத்திலிருந்து வெற்றி பெற்று பெரிய பேரு, பதவி, பணம், புகழ், விருதுன்னு வாங்கி ஊர் மெச்ச இருப்பவங்களைதான் டிவில பேட்டி காணுவாங்க. ஆனா, அதைவிட தினம் தினம் சவால்களை எதிர்கொண்டு வாழும் பூ விற்பவர், பழம் விற்பவர், சலவை செய்பவர், இஸ்திரி போடுபவர், ஆட்டோ ஓட்டுபவர், செருப்பு தைப்பவர்ன்னு சமுதாயத்தில் அடிமட்டத்தில் இருப்பவங்களை  சாமானியரின் குரல்ன்னு புதிய தலைமுறையில் பேட்டி கண்டு ஒளிப்பரப்புறாங்க. இந்த நிகழ்ச்சி ஞாயிறு மாலை 4.30 மணிக்கு ஒளிப்பரப்பாகுது. நாளைக்கு கானா பாடல்களை பாடும் இளைஞனின் பேட்டி ஒளிப்பரப்பாக போகுது.


வசந்த் டிவில தினமும் காலை 7.00 மணிக்கு ஆலய தரிசனம்ன்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. இதுல சின்ன சின்ன கிராமங்களில் இருக்கும் வெளிச்சத்திற்கு வராத புராதான கோவில்களை பத்தி ஒளிப்பரப்பாகுது. கோவில் அமைவிடம் வழித்தடம், வரலாறு பூஜை, விழாக்கள்ன்னு விளக்கமா சொல்றாங்க.



நல்லது கெட்டதுன்னு ஆராயும்  ஆறறிவு கொண்ட மனுஷங்களே நாலு பேரு சேர்ந்திருந்தா தினமும் நாலு சண்டை வருது. யோசிக்கும் திறன் இல்லாத மிருகங்கள் எப்படி இருக்கும்?! அதுங்களுக்குள் நடக்கும் சண்டைகளை நேஷனல் ஜியாகரஃபிக் வைல்ட் சேனல்ல தினமும் மாலை 7 மணிக்கு ஒளிப்பரப்பாகுது. பாருங்க...

தமிழ்மணம் ஓட்டு பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1465085

நன்றியுடன்,
ராஜி.