சீமந்தம், கோவில், கல்யாணம், நவராத்திரிகளுக்கு கிஃப்டா வந்த வளையல் சில சமயத்தில் நம்ம கைக்கு சேராது. அதை தூக்கிபோடவும் மனசு வராம மூட்டைக்கட்டி வச்சிருப்போம். அதேப்போல, நம்மக்கிட்ட இருக்கும் பழசாகிப்போன வளையல்கள், செட் வளையலில் சிலது உடைய மிச்சம் மீதி என மூட்டைல வெயிட் ஏறிக்கிட்டே போகுமே தவிர, தூக்கி போட மனசு வராது. அப்படி தூக்கி போட்டாலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புன்னு இப்பலாம் குரல் கேக்குது. அந்த வளையல்களை என்ன செய்யலாம்?!
மாலை செய்யலாம். ஃப்ளவர் வாஸ், பென் ஸ்டேண்ட், ஸ்பூன் கத்தி ஸ்டேண்ட்ன்னு செஞ்சு அசத்தலாம். எங்க வீட்டில் மிச்சம் மீதி வளையலை வச்சு வாசப்படிக்கு தோரணம் செஞ்சு போட்டிருக்கேன். நல்லா இருக்கான்னு பார்த்து சொல்லுங்க.
தேவையான பொருட்கள்...
மெட்டல் வளையல்
உல்லன் நூல் இல்லன்னா சில்க் த்ரெட் நூல்
விருப்பத்துக்கேற்ப மணிகள்..
க்ளூ.
மெட்டல் வளையலில் க்ளூ தடவி உல்லன் நூலை சுத்திக்கிட்டு வரனும்.
இப்படியே எல்லா வளையல்களிலும் நூல் சுத்திக்கனும்..
ரெண்டு வளையல்களை நூல் கொண்டு கட்டிக்கனும்...
இப்படியே, நிலை வாசப்படி அளவுக்கு வருமாறு எல்லா வளையல்களையும் கட்டிக்கனும்...
நுனியில் சலங்கை கட்டி வீட்டிலிருக்கும் மணிகளை இஷ்டம்போல கோர்த்துக்கிட்டேன்...’
இரண்டு வளையல்களை சேர்த்து கட்டிய நூலில் மணிகளை சேர்த்து கட்டிடனும்...
இப்படியே எல்லா வளையல்களுக்கிடையேயும் மணிகளை கோர்த்துக்கனும்...
கடைசி வளையல்களில் உல்லன் நூலில் மணிகளை கோர்த்து கட்டி ஆணியில் மாட்ட வசதியாய் கொஞ்சம் நூல் விட்டுக்கனும்.
நிலைவாசப்படில மாட்டியாச்சு. அழகா இருக்கா இல்லியான்னு நீங்கதான் சொல்லனும். பதில் சொல்லுவீங்கதானே?!
நன்றியுடன்,
ராஜி