Saturday, August 12, 2017

குழந்தைகளை குழந்தைகளா காட்டாத சீரியல்கள் - கேபிள் கலாட்டா


ஒரு படத்துக்கு ஹீரோவும் முக்கியம், வில்லனும் முக்கியம். ரெண்டு பேருக்கும் கிளைமேக்சுலதான் முடிவு வரும். வரனும். அதைவிட்டு இண்டர்வெல்லுக்கு முந்தியே ரெண்டு பேத்துக்கும் முடிவு கட்டிட்டா எப்படி இருக்கும்ங்குறதை விஜய் டிவி பிக்பாஸ் பார்த்து தெரிஞ்சுக்கலாம். ரசிக்க ஓவியாவும், வெறுக்க ஜூலியும் இல்லாம பிக்பாஸ் தள்ளாடுது. மீண்டும் ஓவியா வராம, வேற யாரை கொண்டு வந்தாலும் பிக்பாஸ் ஹிட்டடிக்காது. இதை புரிஞ்சுக்கிட்டு ஓவியா கால்ல, கைல விழுந்து கூட்டி வந்தா பிக் பாஸ் தபிச்சுப்பாரு., இல்லாட்டி கோவிந்தா கோவிந்தாதான்..
சன் நியூஸ் சேனல்ல திண்ணைன்னு ஒரு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. இதுல தாங்கள் சார்ந்த துறைல ஜெயிச்சவங்களோட பேட்டி கண்டு ஒளிப்புறாங்க. இந்த நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 7 மணிக்கு ஒளிப்பரப்பாகுது. இன்னிக்கு செயற்கை கருவூட்டல் புகழ் கமலா செல்வராஜ் அவர்களோட பேட்டி ஒளிப்பரப்பாகப்போகுது. 
தெய்வ மகள் சீரியல்ல அச்சு அசல் காயத்திரி மாதிரியே  ஒரு போலீஸ்காரம்மா வந்திருக்காங்க. அவங்க பேரும் காயத்ரிதான். காயத்ரி வயசுதான், அதே உயரம்தான், அதே கலர்தான், அதே குரல், நெத்தி காயம், வயித்து காயம்ன்னு எல்லாமே அதே ஜெராக்ஸ்தான். ஒரு ஆள் போல ஏழு பேர் இருப்பாங்கன்றதை ஒத்துக்குறோம். குரல்,  வயசு உயரத்தைக்கூட ஒப்புக்குறோம். அட, பேரைக்கூட அட்ஜஸ்ட் பண்ணிக்குறோம். அதெப்படி காயம்கூட அதேமாதிரியா படும்??! சீரியல்ல லாஜிக் பார்க்ககூடாது ஓகே. அதுக்காக இப்படியா?! யானை போறளவுக்கு லாஜிக் ஓட்டை இருந்தா பரவாயில்லை. டைனசர் போறளவுக்கு ஓட்டை பெருசா இருக்குறதுலாம் ஓவர். 
கேப்டன் டிவில திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 11.30 மணிக்கு வீட்டு சமையல்ன்னு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. சென்னையை சுத்தி இருக்கும் வீட்டுங்களுக்கு போய் அவங்க செய்யுற சமையலை படம் பிடிச்சு போடுறாங்க. சமைக்க கத்துக்குறேனோ இல்லியோ! சமையலறை மாடல் எப்படி இருக்குன்னு பார்க்க இந்நிகழ்ச்சில உக்காந்துக்குவேன். 

நாம இருந்த காலக்கட்டத்தைவிட, இப்பத்திய பிள்ளைகள்  எல்லா விசயத்திலயும் மெச்சூர்ட். இது நம்ம எல்லாருக்குமே தெரியும். இப்பத்திய பிள்ளைகளுக்கு பயம் கிடையாது. எந்த ஆசையையும் அடக்கி ஆள தெரில, பிடிவாதம் ஜாஸ்தி. இதே சீரியல் குழந்தைகள் பத்தி சொல்லவே வேணாம். எல்லா சீரியல்லயும் குழ்ந்தைகளை தன்னோட வயசுக்கு மீறின முதிர்ச்சியாகவும், தன் வயசுக்கு மீறீய செயல்களை செய்யுறதா காட்டுறாங்க. நாமலாம் சின்ன பிள்ளைல சின்ன சின்ன குறும்புத்தனம் செய்வோம்.  பக்கத்து வீட்டு அண்ணா உக்காரும் இடத்தில எருக்கம்பூ வைக்குறது, எதிர்வீட்டு அக்கா வரும்போது மிதியடிக்கு கீழ கேழ்வரகு கொட்டுறது, மாமா குளிக்க போகும்போது டவலை ஒளிச்சு வச்சுக்குறதுன்னு செய்வோம். இப்பத்திய சீரியல் குழந்தைங்க பாம் வைக்குறது, மந்திரம் பண்ணுறதுன்னு செய்யுதுக. இது ரியாலிட்டி ஷோவுலயும் நடக்குது.  ராஜ் டிவில அடுக்குமாடி குடியிருப்புல ஒன்னா குடியிருக்கும் பிள்ளைகளை வச்சு ஒரு சீரியல் ஆரம்பிச்சிருக்காங்க. இதுலயாவது குழந்தைகளை குழந்தைகளா காட்டுவாங்களான்னு பார்ப்போம். இந்த நிகழ்ச்சி தினமும் இரவு 9.30க்கு ஒளிப்பரப்பாகுது.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை..
நன்றியுடன்,
ராஜி.

13 comments:

 1. சீரியல்/பிக்பாஸ்.............முன்னோட்டம் அருமை. நன்றி......... நாங்களும் இந்த விசய் டீ.வி தான் பாக்குறது........பெசலா,மெளனராகம் குழந்தைங்க....ஹும்.....வயதுக்கு மீறிய ......அட போங்க,தங்கச்சி.....

  ReplyDelete
  Replies
  1. சலிச்சுக்காதீகண்ணே

   Delete
 2. ராஜ் டிவி-ன்னு ஒன்னு இருக்கில்லே...!

  ReplyDelete
  Replies
  1. இருக்கு... இருக்கு... ஈரோடு பக்கமோ இல்ல தூத்துக்குடி பக்கமோ இருக்கு

   Delete
 3. இந்த முறை சேனல் குறைந்து விட்டது போலிருக்கிறதே...

  ReplyDelete
  Replies
  1. எனக்குதான் டிவி பார்க்க பிடிக்காதேண்ணே

   Delete
 4. எனக்கும் பிடிக்கவில்லை இம்மாதிரி நிகழ்ச்சிகள் காண :)

  ReplyDelete
 5. இங்கே தமிழ் சானல்கள் எதையும் பார்ப்பதில்லை என்பதால் பல விஷயங்கள் புரியவில்லை. எனினும் உள்ளிருக்கும் சமூக அக்கறை சிந்திக்கவைக்கிறது. பாராட்டுகள் ராஜி.

  ReplyDelete
 6. கேப்டன் சமையல் தீம் சுவாரஸ்யமா இருக்கும் போல...

  தம ஆம் 7 வாக்கு.

  ReplyDelete
 7. தமிழ் சானல் நோ ஐடியா! வரும் ஆனா வீட்டுல யாரும் பாக்க மாட்டாங்க. சூரியா மலையாள சானல்ல வெள்ளிக் கிழமை தமிழ்ப்படம் போடுவாங்க அத மட்டும் பசங்க பாப்பாங்க...நான் பார்க்க முடிஞ்சா கண்டிப்பா பார்த்துருவேன்...மத்தபடி தமிழ் சேனல் நோ...

  கீதா: கேப்டன் டி வி சமையல்!! ஆஹா ! பார்க்கண்மே! கம்ப்யூட்டர்ல வரும் தானே?!!

  ReplyDelete
 8. இத்தனை சேனல்கள் பார்க்க நேரம் உங்களுக்கு இருக்கிறதே.... நான் டி.வி. பார்ப்பதே இல்லை.

  த.ம. +1

  ReplyDelete