ஊர்வம்பு பேசுறதுன்னா பொண்ணுங்களுக்கு அல்வா சாப்பிடுற மாதிரி. என்ன அப்படி பேசுற பேச்சுல அக்கம் பக்கத்து வீட்டு கதை, புடவை, நகை, காதல்ன்னுதான் இருக்கும். அரசியலும், நாட்டு நடப்பும் துளிகூட இருக்காது. ஆனா ராஜ்டிவில வரும் ரெண்டு பொண்ணுங்க நாட்டு நடப்பு, அரசியல், சினிமான்னு எல்லாத்தை பத்தியும் பேசுதுக. இது தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகுது,
திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8.30க்கு மெகா டிவில மருந்தில்லா மருத்துவம்ன்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. எல்லா நோய்க்கும் அதுக்கான காரணத்தை சொல்லி, உணவுப்பழக்கத்து மூலமா அதுக்கும் தீர்வும் சொல்றார்(அவர் பேர் ஹீலர் பாஸ்கர்ன்னு நினைக்கிறேன்). பழங்காலத்து பாட்டிகளை நினைவூட்டி செல்லுது அவரோட பேச்சும் நடத்தையும்... இந்நிகழ்ச்சியின் மறுஒளிப்பரப்பு மறுநாள் காலை 8.30 மணிக்கு போடுறாங்க.
விஜய் டிவில தமிழ் கடவுள் முருகன்னு பக்தி தொடர் ஒளிப்பரப்பாகுது. சிவனை பார்த்தா ஜி.வி.பிரகாஷ் ஜாடையில் மீசையும் தாடியுமா இருக்கார். இருக்கார். சாமிகளை க்ளீன் ஷேவ்ல பார்த்துட்டு மீசையுமா பார்க்க சகிக்கல. ஆல்ரெடி ஜி.வி.பிரகாஷை பார்த்தாலே காண்டாவேன். இதுல அவன் ஜாடையில் வரும் சிவனை மட்டும் பிடிச்சுடுமாக்கும்.
பண்டிகைன்னா அப்ப வந்த புது படங்கள் பேர்க்கொண்ட புடவைகள் விளம்பரத்துல வரும். அதுக்கப்புறம் பொண்ணுங்க உடையான சுடிதார், லெகங்கா, காக்ரா சோளின்னு வர ஆரம்பிச்சுது. அடுத்து பேண்ட் சர்ட்ன்னு வெரைட்டி காட்டுனாங்க. இந்த தீபாவளிக்கு வேட்டி ட்ரெண்டி போல! வேட்டி கரைல இருக்கும் கலருக்கு ஏத்த மாதிரி சட்டை, ஒட்டுற வேட்டி, பாக்கெட் வச்ச வேட்டின்னு செமயா கலக்குறங்க. எல்லா வருசமும் தீபாவளி பட்ஜெட்ல துண்டை பார்த்த ஆம்பிளைங்க இப்ப வேட்டிய கண்ணால பார்க்குறாங்க.
ஒரு ப்ரோகிராம் ஹிட்டாச்சுன்னா அதுல பங்கேத்தவங்களை வச்சு நூறு நாள் ஓட்டுவான் விஜய்டிவிக்காரன். இதுல நூறு நாள் ஹிட்டடிச்ச பிக்பாசை விடுவானா?! பிக்பாஸ் கொண்டாட்டம்ன்னு விஜய்டிவில இந்த ஞாயித்துக்கிழமை (!5.10.2017) கல்லா கட்டப்போறான். இந்த ஷோவில் ஜூலியோட அப்பா அம்மாவை கூட்டி வந்து அழ வைக்க போறான்போல. ப்ரோமோவுல அப்படிதான் காட்டுறான்.
அடுத்து வேறொரு கேபிள் கலாட்டாவில் சந்திப்போம்...
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1474698
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1474698
நன்றியுடன்.
ராஜி.
சிவன் வேடத்தில் நான் வாய்ப்பு வந்தாலும் உங்களுக்காகவே நான் நடிக்க மாட்டேன்.
ReplyDeleteமீசை பிடிக்கும்ண்ணே. ஆனா ஜிவி பிரகாஷைதான் பிடிக்காது.
Deleteகருகரு மீசை வெச்சா பிடிக்கும். ஆனா என் மாமனுக்கு சின்ன மீசைதான் பிடிக்கும், என் பையனைதான் கருகரு மீசை வைக்க சொல்லனும், என் கெரகம் எங்க வீட்டில் அடர்த்தியான மீசை யாருக்குமே இல்ல.
அண்ணன், தம்பிலாம் மீசை வச்சாலும் அழகு. வக்கலைன்னாலும் அழகு. ஆனா, சீர் செய்யலைன்னாதான் அசிங்கம். சோ, தீபாவளி சீர் வந்தாகனும்ண்ணே எனக்கு
Deleteவேட்டி தான் இப்போதைய டிரெண்ட் ஆகுது ராஜி. இங்கேயும் இப்ப கல்யாணம் விசேசம் எனில் எல்லா இளைஞரும் வேட்டி தான் கட்டுகின்றார்கள். அதிலும் சுவிஸில் பிறந்து வளர்ந்த பசங்க சுவிஸ் கார பசங்க தான் ஆர்வமா வெட்டி சட்டைஅணிகின்றார்கள்.
ReplyDeleteஇங்க நண்டு சிண்டு நட்டுவாக்களிலாம் வேட்டி கட்டுது. என் புள்ளையும் மாமனும்தான் வேட்டி கட்டுறதில்ல நிஷாக்கா
Deleteபிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மறந்து விடாமலிருக்கச் செய்யும் சூழ்ச்சி!!
ReplyDeleteவிஜய் டீவி கல்லா கட்டும் சூழ்ச்சி!
Deleteஆமாம் சகோ/ எப்பப்பாரு யாரையாவது கூட்டி வந்து அழ வச்சிக்கிட்டு.
Deleteஓயாமல் எழுதுகின்றாய் மகளே நன்றே
ReplyDeleteஉளம்மகிழ வாழ்த்துகிறேன் நானும் இன்றே
கண்ணு வைக்காதீங்கப்பா..
Deleteசீக்கிரமே எழுதுறது குறைஞ்சிடும்,. கைவசம் பதிவுகள் குறைஞ்சிடுச்சு.... நான் எழுதலைன்னாலும் என்னை மறந்திட மாட்டீகதானே!
ஒவ்வொரு நிகழ்ச்சி குறித்து உங்கள் பார்வையும் அதனூடே நகைச்சுவையும் அருமை அக்கா...
ReplyDeleteபிக்பாசை மக்கள் மறக்காமல் இருக்கவும்.... கல்லாக் கட்டவும் விஜய் டிவிக்காரன் இனி அடிக்கடி அதன் தொடர்ச்சியான நிகழ்ச்சிகளைச் செய்து கொண்டுதான் இருப்பான்.
ம்ம்ம் அதான் சகோ. சூப்ப்பர் விஜய்ல மீண்டும் பிக்பாசை ஒளிப்பரப்ப போறங்க போல!
Deleteஹீலர் பாஸ்கர் videoவை you TUBE ல பார்க்கறது உண்டு ..ராஜிக்கா...
ReplyDeleteசிலது ரொம்ப நல்லா இருக்கும்...சிலது ரொம்ப கடியா இருக்கும்...ரொம்ப ஓவரா பேசுவாரு....
விஜய் டிவில தமிழ் கடவுள் முருகன்ல வர சிவனை..எங்க வீட்டு பசங்க ஹிப் ஹாப் தமிழா மாதரி இருக்காருன்னு சொல்லறாங்க (மீசை முறுக்கு படத்தோட effect) ..
வேட்டி...பசங்களுக்கு இவ்வளவு நாள் பெரிய துண்டு கொடுத்து பழக்கியாச்சு...ஆன இந்த தடவை பெரியவனுக்கு துண்டு பத்தல சோ ..தாத்தா ட வேட்டி வாங்க சொல்லிட்டு வந்து இருக்கார்..
ம்ம்ம்ம் பத்து வயதிலிருந்து பதினெட்டு வரை இருக்கும் பிள்ளைகளுக்கு வேட்டி கிடைக்குறதில்லப்பா. அப்புக்கும் இப்படிதான்... இந்த வருசம் கிடைக்கும். ஆனா, அவன் வேட்டி கட்டுவானான்னு தெரில
Deleteவேட்டி கட்டி வருபவர்களை கண்டால் பொறாமைப்படும் ஒரே ஆள் நாந்தான் என்னா எனக்கு வேட்டி கட்ட தெரியாது . ஹும்ம்ம்
ReplyDeleteஇப்பதான் ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டி வந்திருக்கேண்ணே. வாங்கி பார்சல் பண்ணிவிடவா?
Deleteதொலைக் காட்சி நிகழ்ச்சிகளுக்கும், நமக்கும் தூரம் அதிகமாகிவிட்டது
ReplyDeleteநன்றி சகோதரியாரே
நமக்கு அவரை விட்டா துணை இல்ல. எந்த வேலைக்கும் அவர் துணை வேணும்
Deleteவாசிப்பில் கவனம் செலுத்துவதால் தொலைக்காட்சி பக்கம் வருவதில்லை. இவ்வாறான தொடர்கள் இருப்பதை தற்போது அறியும் வாய்ப்பு கிடைத்தது.
ReplyDeleteசாண்டில்யன், கோபிநாத், இறையன்பு, எஸ்.ரா தவிர்த்து யாரையுமே எழுத்தாளரா மனசு ஏத்துக்க மாட்டேங்குதேப்பா
Deleteநான் அதிகம் டீவி பார்ப்பதில்லை ராஜ் டீவி பற்றி தெரியாது, ஹீலர் பாஸ்கர் பற்றி முழுமையாக தெரியும் யூடியூப் வழியாக பின்பற்றியும் வருகிறோம் வீட்டில் சிவன் வேடத்திற்கு சொன்ன விஷயத்திற்கு hi-fi
ReplyDeleteஓ. வகிடெடுத்து தலைவாரினா கர்ப்பை பை சுத்தமாகும்ன்னு சொல்றாரு. அதுவே எங்கம்மா நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்க வச்சிட்டு. இப்பத்திய பசங்க யாருப்பா வகிடெடுக்குது??! பைபாஸ் எடுத்து வாரிக்குதுங்க.
Deleteஹீலர் பாஸ்கர் வாட்ஸ்-அப்பில் பிரபலம் - மீசை வைத்த சிவன் பற்றிய தகவல் மற்றும் பிற தகவல்களுக்கு நன்றி !
ReplyDeleteஅப்படியா?!
Deleteஹீலர் பாஸ்கர் ஒரு சில நல்லாருக்கும்...ஒரு சில ஸோ ஸோதான்...ரொம்ப ஓவரா இருக்கும்....ரொம்ப ஓவர் கான்ஃபிடென்ஸ் தெரியும்.....
ReplyDeleteஅட போங்கப்பா இந்த பிக் பாஸ் பத்தினது ரொம்ப ஓவராத்தான் இருக்கு...ராஜி
கீதா
ReplyDelete//திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8.30க்கு மெகா டிவில மருந்தில்லா மருத்துவம்ன்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. //
LOGO வில் வேந்தர் டிவி னு இருக்கு, சரியாக திருத்தி விடுங்கள் ராஜி
எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் விடுவடில்லை போல் இருக்கிறதே
ReplyDelete