Showing posts with label சனீஸ்வரன். Show all posts
Showing posts with label சனீஸ்வரன். Show all posts

Friday, December 22, 2017

சனீஸ்வரன் யந்திராலயம் - ஏரிக்குப்பம். ஆரணி - புண்ணியம் தேடி


பொதுவா ஒருத்தங்களுக்கு கண்டகச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி  இவை மூன்றும் கோச்சாரத்தில் இருக்கும்போது நவக்கிரக ஹோமம், சனிபகவானுக்கு சாந்தியும் செய்வது மிக  அவசியம். அஷ்டமத்தில் சனி இருக்கும்போது அல்லல்பட்டவர்கள் பலர். நளன், சிவப்பெருமான், அசுரகுருவான சுக்ராச்சாரியார், பாண்டவர்கள்,  ராவணன், சீதைன்னு தொடங்கி, நீங்க, நான்ன்னு இந்த பட்டியல் தொடரும். அதனால, இந்த மூன்று சனியால் பீடிக்கப்பட்டவங்க பரிகாரம் செஞ்சுக்க வேண்டியது அவசியம். சனீஸ்வர பகவான், அவருக்குண்டான பரிகாரம்ன்னாலே திருநள்ளாறுதான் நினைவுக்கு வரும். ஆனா, ஆரணில இருந்து சுமார் 12 கிமீ தூரத்தில் ஏரிக்குப்பம்ன்ற திருத்தலத்தில் யந்திர ரூபமாய் அருளும் சனீஸ்வர பகவான் ஆலயத்திலும்  பரிகார பூஜைகளை செய்யலாம். 


 எந்திரம்ன்னாலே அது செப்பு தகட்டில் செஞ்சதா இருக்கும். ஆனா, இந்த கோவிலில் சித்தர்களால்  கல்லில் எந்திரம் செஞ்சு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கு.    இக்கோவிலில் சனிபகவான் யந்திர வடிவில் 5 அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட அறுகோண வடிவத்தில்  அருள்புரிகிறார். அதர்ன் போக்க  ஆறு முனைகளில் திரிசூலமும், அடிப்பாகத்தில் மகாலட்சுமி, அனுமார் வடிவங்களும் இருக்கு.  யந்திர சிலையின் மேல்பக்கம் தென்புறமாக சூரியனும், நடுவில் ஸ்ரீசனீஸ்வரபகவானின் வாகனமான காகத்தின் உருவமும், வலப்புறமாக சந்திரனும் இருக்காங்க. அவற்றின் கீழே ஷட்கோண யந்திரமும் நீர், நெருப்பு சம்பந்தப்பட்ட யந்திரமும் பொறிக்கப்பட்டிருக்கு.  மேலும் சிவன், ஆஞ்சநேயர், சனீஸ்வரன் ஆகியோருக்கான பீஜாட்சர மந்திரங்களும் இந்த யந்திரத்தில் பொறிக்கப்பட்டிருக்கு. ஒரு கண்ணாடியை இந்த யந்திரத்தின் முன் வைத்து பார்த்தால், எழுத்துக்கள் நேராகத் தெரியும்படி அமைந்திருப்பது ஒரு சிறப்பு. . இதுபோன்றதொரு அமைப்புடைய சிலை வடிவத்தை, அதிலும் சனீஸ்வர அம்ச சிலாரூபத்தை ஏரிக்குப்பம் தவிர வேறு எங்கும் பார்க்கவே முடியாது.




சனி பகவான் பணம், பதவின்னு எதையும் பாராமல் தராசு முள் மாதிரி நடுநிலையா நின்னு அவரவரக்கு நீதி வழங்குவார். மன்னாதி மன்னர்களும், தேவாதி தேவர்களும் இவர் பிடியில் துன்பப்பட்டபோது, அற்ப மானிடப்பிறவி நாம எம்மாத்திரம்?! தாளமுடியாத துன்பங்களை தந்தாலும், சனிபகவான் இளகிய மனம் கொண்டவர். அன்பாக வேண்டிக் கேட்டால், கேட்டதைத் தந்துவிடுவார். சனீஸ்வர அஷ்டோத்திர மந்திரத்தை ஜெபித்து சனி பகவானை சாந்தப்படுத்திய பிறகுதான் பாண்டவர்களுக்கு இழந்த ராஜ்ஜியம் கிடைத்தது. சனீஸ்வர ஸ்தவராஜ ஸ்தோத்திரம் சொல்லித்தான் தனது நாட்டை திரும்பப் பெற்றான் நளன்.


பொண்டாட்டிங்கன்னாலே இம்சைங்கதான் போல! அதுக்கு சனிபகவானும் விதிவிலக்கல்ல. உலகத்தையே ஆட்டி படைக்கும் சனிபகவான் சிறந்த சிவ பக்தர். இருந்தாலும் விஷ்ணுவையும் வணங்குபவர், சனிபகவானுக்கு குழந்தை இல்லை. அதனால அவர் மனைவி தேஜஸ்வி மிகுந்த மனவேதனையில் இருந்தாள். ஒருமுறை சனிபகவான், பெருமாளை நோக்கி தவமிருந்த வேளையில், குழந்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில், சனிபகவானை நெருங்கி அவர் எதிரில் காத்திருந்தாள். தவத்திலிருந்த சனிபகவான் அவள் காத்திருப்பை உணராததால், கோவங்கொண்டு, உன் பார்வை நேரடியாக யார்மீது பட்டாலும் அவர்கள் உருப்படாமல் போவார்கள் என சபித்து சென்றாள். அதனால், அன்றிலிருந்து, கீழ்ப்பார்வை குனிந்த தலை நிமிராமல் இருப்பார். அவருக்கு உதவும் பொருட்டு அவர் அருகிலேயே  அவரின் அன்னை சாயாதேவி எந்திர வடிவில் தரையில் புதைக்கப்பட்டு  மகனுக்கு அருள்பாலிக்கிறார்.  அம்மா பக்கத்திலிருந்தா எல்லாரும் கப்சிப்ன்னு இருக்குற மாதிரி இங்க சனிபகவானும் அமைதியா சாந்தமா இருக்கார். 


சனிபகவான், யந்திர வடிவில் அதும் கல்லால் ஆன யந்திரத்தில் அருள்பாலிக்க காரணம், கல் எதுக்கும் அசைந்துக்கொடுக்காது. அதுமாதிரி உறுதியாக சனிபகவான் தன் கடமையில் கண்ணும் கருத்துமாய் இருப்பார்ன்னும்,    ” நேத்திரத்தைக் காகம் போல் நிச்சயமாய்க் காக்க, ஆத்துமத்தில் ஆனந்தமாய் “  ன்ற ஔவையாரின் வாக்கிற்கேற்ப,   இரு பக்கங்களிலும் சூரிய சந்திரர்களை வைத்து நடுவில் காகத்தை வச்சிருக்காங்க. சூரியனாகிய வலதுவிழி நாட்டத்தையும், சந்திரனாகிய இடதுவிழி நாட்டத்தையும் புருவ மத்தியாகிய முத்தித் தலத்தில் வைக்க (காகம் பார்ப்பதைப் போல் ஒரு மனநிலையில்) ஆறுமுகப்பட்டையான ஸ்ரீமுருகப் பெருமான் ஜோதி  தரிசனம் கிடைத்திடும். இந்த ஆறாவது அவதாரத்தைத் தாண்டி ஏழாவது ஆதாரத்திற்கு சென்றால், சிவனைத் தரிசனம் செய்யலாம். அங்கிருந்து வழியும் யோக -சோம பானத்தை இந்திரன்போல அனுபவித்து மகிழலாம். இதன்மூலம் ஸ்ரீஆஞ்சனேயர்போல் நம் உடலை கல்போல காயகற்பம் செய்து காயசித்திக்கான வழியைப் பெற பரிபாஷையாக இந்த யந்திரத்தை ஸ்தாபித்து சித்தர்கள் வழிபட்டிருக்காங்க.


இனி கோவில் அமைந்த வரலாற்றை பார்க்கலாம்..

நீர் வளமும் ,நில வளமும் நிறைந்து செழிப்புடன் விளங்கிய ஏரிக்குப்பத்தை 1535-ம் ஆண்டு இப்பகுதியை ஆட்சி செய்துவந்த ராஜநாராயண சம்புவராய மன்னரின் படைத்தளபதிகளில் ஒருவராக விளங்கிய வையாபுரி என்பவர் இவ்வழியாக குதிரையில் சென்றுகொண்டிருந்தபோது, குதிரை நிலை தடுமாறி கீழே விழுந்ததால், வையாபுரிக்கு இடதுகாலில் முறிவு ஏற்பட்டு, குதிரைக்கும் பலத்த அடி ஏற்பட்டது. அச்சமயம் ஒரு பெண் சாமியாடி, இங்கு, தான் இருப்பதாகவும் தனக்கு ஒரு ஆலயம் எழுப்புமாறும் சனிபகவான் கூற்றை வெளிப்படுத்த,  உடனே வையாபுரி பிரார்த்தனையில் ஈடுபட்டார். அவருடைய எலும்புமுறிவு குணமடைந்தது. பிறகு அந்த கிராமத்தில் ஸ்ரீசனீஸ்வரபகவானுக்கு கோவில் எழுப்பிட முனைந்தார். அப்போதைய இறையருள் வல்லுனர்கள் சனிபகவானுக்கு யந்திர , பீஜாட்சர வடிவில் சிலை செய்ய ஆலோசனை கூறினர். அதன்படி, 6 சாஸ்திரங்கள், 4 வேதங்கள் மற்றும் 64 கலைகளும் கற்று இறைமார்க்கமாக  வாழ்வை செலுத்தும் வேத விற்பன்ன சிவாச்சாரியர்களின் மந்திர யந்திர வடிவங்களால், ஸ்ரீசனீஸ்வரருக்கு பிரத்தியேக சிலா ரூபம் உருவாக்கப்பட்டு , ஸ்தாபனம் செய்யப்பட்டு , 4 கால பூஜைகளும் நித்திய ஹோம அனுஷ்டானங்களும், செய்யப்பட்டு , அந்த யந்திர ரூபத்திற்கு பலமூட்டி , அதன் தேஜஸினால், அனைத்து மக்களின் வினைகளும் நீங்கி செழிப்புற செய்தனர்.


முப்பதாண்டுகள் வாழ்ந்தவருமில்லை. முப்பதாண்டுகள் வீழ்ந்தவரில்லைன்னு சனிப்பெயர்ச்சியினை மனதில் வைத்து ஒரு சொலவடை இருக்கு. அது மனித வாழ்க்கைக்கு மட்டுமின்றி, இந்த கோவிலுக்கும்தான் போல!! சிறப்பாய் நடைப்பெற்று வந்த சனீஸ்வர யந்திர வழிபாடு  நாளடைவில் மன்னர்களின் போர், , ஆட்சி மாற்றம் மற்றும் பல்வேறு காரணங்களால் கவனிப்பாரற்றுப் போயிடுச்சு. வழிபாடு இல்லாததால் மக்களும் இக்கோவிலுக்கு வருவதில்லை. அதனால், கோவில் இடிந்து யந்திரச்சிலையும் மண்ணுள் புதையுண்டது.



சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன் ஆடு மேய்க்கும் சிறுவர்களால் இந்த யந்திரம் வெளிப்பட்டது. உடனே, கிராம அலுவலருக்கு விவரம் சொல்ல, அவர்  தொல்பொருள் நிபுணர்கள் வரவைத்து ஆராய்ந்ததில் 15-ம் நூற்றாண்டில் இருந்த யந்திர சனிபகவான் என அறியப்பட்டது.  அகழ்வாய்வாளர்களும் இதை ஆய்வு செய்து அதன் தொன்மையை உறுதி செய்தாங்க.  அந்த யந்திர சிலையை அவ்வூரிலேயே பழைய இடத்தில் சிறிய கோவில் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு  நித்திய அனுஷ்டான பூஜைகளும், சனிக் கிழமைகளில் சிறப்பு ஹோமம் மற்றும்  அபிஷேக ஆராதனைக்ளும் நடைபெற்று வருது.

திருமணப் பிராப்தி, குழந்தைப்பேறு, நோய் நிவர்த்தி, லக்ஷ்மி கடாட்சம், சனீஸ்வர ப்ரீத்தி மற்றும் சகல தோஷ நிவர்த்தி வேண்டி பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்து , அபிஷேக அர்ச்சனைகள் புரிகின்றனர். எள் முடிச்சிட்ட தீபம் , நல்லெண்ணெய் தீபம் ஆகியவற்றை ஏற்றி வேண்டுதல் புரிகின்றனர். 9 வாரங்கள் தொடர்ந்து இங்கு வந்து வழிபாடு செய்து, வேண்டும் வரங்களை பெற்றுச் செல்கின்றனர்.  பக்தகோடிகள் கோவிலுக்கு பின்புறத்தில் அமைந்துள்ள ‘ பாஸ்கர தீர்த்தம் ‘ என்ற தீர்த்தக் குளத்தில் நீராடி தலத்தில் வழிபட்டு செல்கின்றனர். இந்த பாஸ்கர தீர்த்தம் நளன் தீர்த்தத்துக்கு ஒப்பானது.
சனி பகவானை சந்தோஷப்படுத்த,  சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளித்தல், எண்ணெய் தானம் செய்தல்,  எள் தானம், நீல நிற வஸ்திர தானம், சனி பகவானுக்கு எள்சாதம் நைவேத்தியம் செய்தல், தர்மசாஸ்த்தா ஐயப்பனை  வழிபடுதல் , ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம  பாராயணம் செய்தல், ராமாயண பாராயணம், சுந்தரகாண்ட பாராயணம், அரச மரத்தை வலம் வருதல்,  ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல் ன்னு லிஸ்ட் நீளுது.  இதுபோன்ற நல்ல காரியங்களைச் செய்பவர்களைத் தொந்தரவு செய்யமாட்டேன்  என சனி பகவான் சத்தியம் செய்துள்ளதாக சாஸ்திரங்கள் சொல்லுது.

இப்படிப்பட்ட சனிபகவான் ஒவ்வொரு ராசியும் உயிர்வாழ்வதற்குக் காரணமான ஜீவநாடியாகும். எனவே சனிபகவானை ஆயுள்காரகன்ன்னும் உயிர்காரகன்ன்னும் சொல்றாங்க. ஒரு குழந்தை பிறந்தால், அதற்குண்டான அற்பாயுள்- மந்திம ஆயுள்- பூர்ணாயுள் என்பன போன்ற ஆயுள் பலத்திற்கு  ஆயுள்காரகனாகிய சனிபகவானே  ஒருவரது  ஆயுளுக்கு  அதிபதியாக அமைகிறார்.  இப்படிப்பட்ட சனி அந்தக் குழந்தையின் ஜாதகத்தில் நல்லவிதமாகவல்லவா அமைந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால், ஆயுள்  பலத்திற்கு எப்படி உத்தரவாதம் அளிக்கமுடியும்? ஆகவே இப்படிப்பட்ட சனிபகவனை வணங்காமல் எப்படி இருப்பதாம்?!



இங்கு துலாபாரம் செலுத்தும் வழக்கமும் உண்டு. குழந்தை வரம் வேண்டி, நிறைவேறியவர்கள்  நெல், சர்க்கரை, பணம்ன்னு அவரவர் வசதிப்படி வேண்டிக்கிட்டு இங்கு துலாப்பாரம் இடுறாங்க. பொதுவா சனிபகவான் கோவிலில் நேருக்கு நேர் நின்னு கும்பிட மாட்டாங்க. அதேமாதிரி கோவில் பிரசாதமான விபூதி, குங்குமம் உள்ளிட்ட அர்ச்சனை பொருட்களை வீட்டுக்கு கொண்டு போகமாட்டாங்க., ஆனா, இங்க அப்படி எதும் கண்டிசன் இல்ல. காரணம் இறைவன் இங்கு யந்திர வடிவில் இருப்பதால்தான். 
திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் வட்டத்தில் இந்த ஆலயம் இருக்கு. திருவண்ணாமலை வழியா வர்றவங்க திருவண்ணாமலை டூ வேலூர் அல்லது போளூர் போகும் பஸ்சில் ஏறி, சந்தைவாசலில் இறங்கி அங்கிருந்து ஆட்டோக்களில் வரலாம். அதேப்போல வேலூரிலிருந்து வர்றவங்க, வேலூர் டூ திருவண்ணாமலை, படைவேடு செல்லும் பஸ்சில் ஏறி சந்தைவாசலில் இறங்கி வரலாம். சென்னைல இருந்து வர்றவங்க, நேரா ஆரணி பஸ் பிடிங்க. எங்க வீட்டுக்கு வாங்க விருந்து சாப்பிடுங்க. அங்கிருந்து 12கிமீ தூரம்தான் இந்த கோவில். வண்டி, ஆட்டோ, பஸ்சுன்னு போயிடலாம். மெயின்ரோட்டிலிருந்து ஒரு கிமீ தூரம் வயல்வெளிகள் சூழ்ந்த பாதையில் நடந்து கோவிலை அடையலாம்.  ஆரணி மற்றும் போளூரிலிருந்துதான் நேரடி பேருந்து இருக்கு.


ஏரிக்குப்பம் ஸ்ரீ சனிபகவான் துணை:

ங்கடம் தீர்க்கும் சனி பகவானே

மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவு இன்றி சனீஸ்வரத் தேவே
இச் சகம் வாழ இன்னருள் தருவீரே!
ஏரிக்குப்பம் சனீஸ்வரா போற்றி
ஏரிக்குப்பம் சனீஸ்வரனே போற்றி
ஏரிக்குப்பம் பொங்கும் சனிபகவானே போற்றி
ஏரிக்குப்பம் அஷ்டம சனி சாந்தம் போற்றி
ஏரிக்குப்பம் ஏழரைநாட்டு சனிபகவானே போற்றி
ஏரிக்குப்பம் நளதீர்த்தம் உடைய சனி பகவானே போற்றி
ஏரிக்குப்பம் வன்னிபுத்ர அர்ச்சனைபிரிய சனிபகவானே போற்றி
ஏரிக்குப்பம் எல்லோருக்கும் நல்லருள் தரும் சனிபகவானே போற்றிபோற்றி!
இதை அனைவரும் பாராயணம் செய்ய அனைத்து நன்மைகளும் உண்டாகும். சனிபகவான் நல்லருள் எப்போதும் கிடைக்கும்!!!


முகவரி :
ஸ்ரீசனீஸ்வரர் பகவான் கோவில்,
திருஏரிக்குப்பம் கிராமம்,
களம்பூர் அஞ்சல்,
திருவண்ணாமலை மாவட்டம்,
தொலைப்பேசி எண்: 04181 248224/248424

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...

நன்றியுடன்,
ராஜி.

Monday, May 21, 2012

சனீஸ்வரன் கருப்பாக மாறியது எப்படி? ஐஞ்சுவை அவியல்

                              
ஸ்ஸ்ஸ்ஸ் அபா..., ஏனுங்க மாமோய் அந்த ஐச் பொட்டில இருந்து கொஞ்சம் ஜில்ல்லுன்னு தண்ணி கொண்டு வாங்களேன்.

கோவிலுக்குதானே போய் வரே, அதுக்கு ஏன்  இப்படி அலுத்துக்குற புள்ள?!

ஏன் கேட்க மாட்டீங்க?  சனிபெயர்ச்சி நடந்துதனால  உங்களுக்கு இப்போ டைம் சரியில்லையாம். அதனால, நம்ம ஜோசியர் இன்னிக்கு சனீஸ்வரனை 108 சுற்று சுற்றி, கருப்பு துணி அவருக்கு சார்த்தி, எள்லாம் படைச்சுட்டு வரேன்.

ம்ம்ம் சரி, எல்லா சாமியும் சூப்பரா சிகப்பு கலர்ல இருக்கும்போது சனீஸ்வரன் மட்டுமே ஏன் கருப்பா இருக்கார்ன்னு உனக்கு தெரியுமா?

ம்ஹூம் தெரியாதுங்க மாமா.

ம்க்கும், ஜோசியம் சொன்னா மட்டும் கேட்டுக்கோ. ஆனா, இந்த மாதிரி புராண கதைலாம் கேட்காத.

சரி கிண்டலடிச்சது போதும். கதை சொல்லுங்க மாமா...,

தேவர்களில் ஒருத்தரான சனீஸரன், கால் ஊனமுற்றிருந்தாலும், அழகா, திடகாத்திரமாதான் இருந்தார். 

மனுசங்க ஊணமா பொறக்குறது சாமி செயல்ன்னு நாம சொல்றோம். அந்த கடவுளே ஊணமா பொறாந்தாரா? ஏன்? 

அது ஒரு பெரிய கதை அதை அப்புறமா சொல்றேன். இப்போ அவர் கருப்பாக மாறிய  கதைய மட்டும் சொல்றேன்.

ஏன் புள்ள, நளன் தமயந்தி கதை உனக்கு தெரியுமா?!

ம்ம் தெரியும்ங்க மாமா..,

சரி, தன் கூட  காட்டுக்கு வந்த, தன் பொண்டாட்டி தமயந்தி,  கஷ்டப் படுவதைப் பார்த்து, நளன் மனசுக்குள்ள வேதனை பட்டான்.  அவளை எப்படியாவது அவளொட அம்மா வீட்டுக்கு அனுப்பி வைக்க ஆசை  பட்டார்.  இப்ப இருக்குற பொண்ணுங்கலாம் சின்ன சின்ன மேட்டருக்கெல்லாம் சண்டை போட்டுக்கிட்டு அம்மா வீட்டுக்கு போய்டுறாங்க. ஆனா, தமயந்தியோ, புருசனை விட்டு போகமாட்டேன், கஷ்ட நஷ்டத்துலயும் உங்க கூடத்தான் இருப்பேன்னு  என பதிபக்தியுடன் இருந்தா. 

ஒருநாள் ரத்திரி, அவளை ஒரு மண்டபத்தில் தனியே விட்டுட்டு நளன் போய்ட்டான். கண் முழிச்ச தமயந்தி அழுதபடியே பக்கத்து நாட்டுக்குச் போய் சேர்ந்தா. அவ அங்கிருப்பதை தெரிஞ்சுக்கிட்ட  அவ அப்பா,  தன் நாட்டுக்கு கூட்டிக்கிட்டு போய்ட்டார்.

 நளனின் திட்டம் பலிச்சு போச்சுது. ஆனா, நளன் அதுக்கப்புறமும் படத பாடுபட்டான்.  காட்டு வழியா போகும்போது, ஒரு இடத்துல  நெருப்பு பிடிச்சு எரிஞ்சுக்கிட்டு இருந்துச்சு. . அதுக்குள்ள  சிக்கிக்கிட்டு இருந்த ஒரு  பாம்பு ஐயோ! காப்பாத்துங்க! காப்பாத்துங்கன்னு  கதறிக்கிட்டிருந்துச்சு. இரக்கப்பட்ட நளன் பாம்பைப் பிடிச்சு  வெளியே விட்டான்,  அப்போ அந்த பாம்பு அவனைக் கடிச்சிடுச்சி. நளனோட உடம்புலாம்  கருப்பாகிட்டது. உன்னைக் காப்பாத்துன  என்னை கடிச்சுட்டயே!ன்னு  நளன் வருந்தினான். 

எல்லாம் நன்மைக்கேன்னு சொல்லிய பாம்பு, இனி நடக்க போகும் நிகழ்ச்சிகளை எடுத்துச்சொல்லி மறைஞ்சுட்டது. விஷம் நளனோட  உடம்புக்குள்ள  புகும்போது, அவனைப் பிடிச்சுக்கிட்டிருந்த சனீஸ்வரனும் அவஸ்தை பட்டார். ஒரு நல்லவனைப் பிடித்ததால் சனீஸ்வரனுக்கே சோதனை வந்து விட்டது. அவரும் கருப்பாகிட்டார்ன்னு ஒரு கதை. அதனால்தான், சனீஸ்வரனுக்கு கருப்பு வஸ்திரம், கருப்பு எள், நீலக்கல்ன்னு எல்லாமே கருப்பா  படைக்கிறோம்.

அப்பிடிங்களா மாமா? உங்களுக்கெப்படி தெரியும் மாமா?

தினமலர் ஆன்மீக மலர்ல படிச்சேன் புள்ள.
                                     

ஓ ஓ , அப்புறம் நான் கோவிலுக்கு போகும்போது, நம்ம தெரு முனை ரோட்டுல ஒரு நாய் அடிப்பட்டு செத்து போய் இருந்துச்சு.   நான் அருவருப்போட முகத்தை திருப்பிக்கிட்டு போயிட்டேன். செத்து போன  நாய் மேல ரோட்டுல போற வர வண்டி ஏறி பார்க்கவே குமட்டிக்கிட்டு இருந்துச்சு. 
திரும்பி வரும்போது. வண்டில இருந்து ஒருத்தர் இறங்கி அந்த நாய்கிட்ட போய் பார்த்துட்டு என்கிட்ட மண்வெட்டி கேட்டார். நானும் நம்ம பார்வதி அக்காக்கிட்ட வாங்கி குடுத்தேன்.

அவர், ரோட்டோரத்துல குழி தோண்டி, செத்த்டு போன நாயை கொஞ்சம் கூட அருவறுப்பு இல்லாம எடுத்து போய் புதைச்சிட்டாரு. சார் நீங்க ப்ளூ கிராஸோ என்னமோ சொல்றாங்களே அதுல மெம்பரா இருக்கீங்களான்னு கேட்டேன்.

இல்லம்மா, ஆனாலும் இதுப்போல நாய், காக்கா, குரங்குலாம் அடிபட்டு செத்து போய்ட்டா. அதை நாம அப்படியே கண்டுக்காம விட்டுடுறோ. இது எவ்வளவு சுகாதார கேடு  தெரியுங்களா?  துர்நாற்றம் வீசும். அந்த பிராணிகளோட உடம்புல இருக்குற கிருமிகள் காத்துல கலந்து நம்ம உடம்பு பாதிக்கும். அதனால, என் கண் முன் இதுப்போல பிராணிகள் எதாவது செத்திருந்தால்  நான் இப்படி செய்யுறேன்ன்னு சொன்னார். இத்தனைக்கும் அவர் நம்ம ஸ்டேட் கூட கிடையாது, கேரளாங்க மாமோய். 

அப்பிடியா புள்ள, எங்கிருந்தோ வந்தவருக்கு இருக்கும் அக்கறை நமக்கு நம்ம தெருவை பத்தி இல்லாம போச்சே. இனி நாமும் இதுப்போல செய்ய முயற்சிக்கனும்.
                                                       

சரி சரி சீரியசா பேசிட்டோம். ஒரு ஜோக் சொல்றேன். நேத்து டிவி பொட்டில கேட்டேன்.
முதலாளி: நாளைல இருந்து வேலைக்கு வந்துடு. சம்பளாத்தை எப்படி வாங்கிக்குறே? நாள்கணக்குலயா? இல்ல வாரக்கணக்குலயா? இல்ல மாசக்கணக்குலயா?
தொழிலாளி:  மாசக்கணக்கு சம்பளத்தை மாசக்கடைசிலயும். வாரக்கணக்கு சம்பளத்தை வாரக்கடைசிலயும், நாள் கணக்கு சம்பளத்தை டெய்லி வீட்டுக்கு போகும்போதும் வாங்கிக்குறேனுங்க.
முதலாளி: ????!!!!!!
                           

ஹா ஹா நல்லா இருக்குங்க மாமா. அப்புறம் நம்ம ராஜியோட அப்பா, தன் பேரன்கிட்ட அவன் எல்.கே.ஜி படிக்கும்போது , பெரியவங்க பேச்சை கேளு,  பெரியவங்க நில்லுன்னா நிக்கனும், உக்காருன்னா உக்காரனும், கிணத்துல குதிடான்னு சொன்னா குதிக்கனும்ன்னு அடிக்கடி  சொல்லி வளர்த்திருக்கார். 

ஒரு நாளைக்கு ஒன்பது தரம், பெரியவங்க நிக்க சொன்னா நிக்கனும், உக்கார சொன்ன உக்காரனும், கிணத்துல குதிடான்னு சொன்னா....,ன்னு கேட்டு கேப் விட்டா, கிணத்துல குதிக்கனும் தாத்தான்னு அழகா அப்பு பதில் சொல்வான்.  ஒரு நாள் அப்பு என்ன டென்சன்ல இருந்தானோ தெரியலை! ராஜி அப்பா எதோ  சொல்ல, அப்பு முரண்டு பிடிக்க, அப்பு, பெரியவங்க நில்லுன்னா நிக்கனும், உக்காருன்னா உக்காரனும், கிணத்துல குதினான்னு சொன்னா...., ந்னு கோவமா கேட்டு கேப் விட, 
                                 
அப்பு கோவமா, ம்ம்ம்ம் பக்கத்துல நின்னு சொல்றவங்களை பிடிச்சு கிணத்துல தள்ளி விட்டுடனும்ன்னு சொன்னதை கேட்டு ராஜி அப்பா கோவம் மறைஞ்சு சிரிச்சுட்டாராம். இதை அடிக்கடி என்கிட்ட ராஜி சொல்லி சிரிப்பா.

ம்ம்ம் என்ன மாமா, சிரிக்காம டல்லா இருக்கீங்க? எதாவது பிரச்சனையா?

அதெல்லாம் ஒண்ணுமில்ல புள்ள. நீ உன் ஃப்ரெண்ட் குழந்தை பண்ற சுட்டித்தனத்தை சொல்லி சிரிக்குறே. ஆனா, என் ஃப்ரெண்டுக்கு இன்னும் குழந்தையே பொறக்கலை அதுக்கு என்ன பண்றதுன்னு  தெரியாம தவிக்குறான். 
                             

குழைந்தை எதிர்பார்த்து இருக்கும் ஆம்பிளைங்க பாவக்காய், எலுமிச்சை சாப்பிட  கூடாது... இவை சாப்பிடால் விந்து சத்து இருக்காது... அதனால கரு நிக்காது. ஆண்கள் மாதுளைஜீஸ், பழம் அதிகம் சேர்த்துக் கொண்டால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.பெண்களுக்கும் கருப்பை வலிமையாக இருக்கும். வைட்-டமின்-ஏ, இதற்கு ரொம்ப முக்கியம். இது உடலிலுள்ள எப்பிதீலியல் திசுக்களின் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தருகிறது. லிவர், முட்டை, சீஸ், பட்டர், கேரட்...லாம் டாக்டர் அட்வைஸ் கேட்டு சேர்த்துக்கலாம். தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் முட்டைகோஸ் தவிர்க்கனும்ன்னு அறுசுவைன்னு ஒரு பிளாக் இருக்கு அதுல படிச்சேனுங்க மாமா.

சாமியை மனசுல வேண்டிக்கிட்டு நல்ல டாக்டரா போய் பார்க்க சொல்லுங்க மாமா. பத்தாவது மாசமே அழகும், அறிவும் நிறைஞ்ச குழந்த பொறக்கும்.

அறிவை பத்தி நீ பேசுறியா?! சரி என் விடுகதைக்கு விடை சொல்லு பார்க்கலாம்..,

கேளுங்க மாமா,

அண்ணனின் தயவால்
ஆட்சி செய்து கொண்டிருக்கும் அழகான தம்பி அவன் யார்?

 ஹா ஹா அவனா? இரு இருஉன்னைவிட புத்திசாலிலாம் பிளாகுல இருக்காங்க. அவங்க சொல்லட்டும். சொல்லலைன்னா நீ சொல்லு.

ம்ம் சரிங்க மாமா.

சரி புள்ள, நான் கிளம்புறேன். இன்னிக்கு கிராம சபா மீட்டிங் இருக்கு, அதுல கல்ந்துக்கனும் வரேன் புள்ள.