Showing posts with label குட்டீஸ். Show all posts
Showing posts with label குட்டீஸ். Show all posts

Monday, February 17, 2014

பெண்கள் படி தாண்டினால வரும் விளைவு - ஐஞ்சுவை அவியல்


என்னங்க மாமா! எங்க போய்ட்டு வர்றீங்க!?
நம்ம ஊருல இருக்கும் டாஸ்மாக்கை எடுக்க சொல்லிப் போராட்டம் நடத்தலாம்ன்னு இருக்கோம். அதுக்குதான் மீட்டிங் போட்டு வரோம்.
ஏன்!? என்னாச்சு!? அது இல்லாம நம்ம ஊரு ஆம்பிள்ளைகளுக்கு பொழுது விடிஞ்சு பொழுது போகாதே!
ஸ்கூல் காம்பவுண்ட் பக்கத்துலயே டாஸ்மாக் கடை இருக்கு. காலி பாட்டில்களில் இருக்கும் மிச்சம் மீதி சரக்கை ஸ்கூல் பிள்ளைங்க சொட்டு சொட்டா சொட்டி குடிக்குறாங்க. அதுமில்லாம, கோவிலும் பக்கத்துலயே இருக்குறதால குடிமகன்களால பென்கள் கோவிலுக்கு போகவே அச்சப்படுறாங்க. 
அதுமட்டுமில்ல மாமா! போதை தலைக்கேறி சரக்கு பாட்டிலை உடைச்சு போட்டுட்டு போய்டுறதால ஸ்கூல் பிள்ளைங்க காலில் கண்ணாடி ஏறி காயம் படுதுங்க குழந்தைங்க.
ம்ம் அதனாலதான் இங்கிருந்து டாஸ்மாக்கை வேற இடத்துக்கு மாத்தச் சொல்லி போராட்டம் பண்ணப் போறோம். 
போராட்டம் நடத்துறதுல தப்பில்ல! பொதுமக்களுக்கு பாதகம் வராம போராட்டம் பண்ணுங்க. அதான் முக்கியம்.
நினைவு வச்சுக்குறேன் புள்ள. இன்னிக்கு கடைத்தெருவுக்கு போறதுக்காக வண்டில போய்க்கிட்டு இருக்கும்போது பத்து, பன்னெண்டு வயசுல ரெண்டு ஆண் குழந்தைங்க மூட்டை முடிச்சுகளோடு இருந்துச்சு. என்னன்னு கேட்டேன். அம்மா அப்பாவோட தப்பான நடவடிக்கைப் பிடிக்காம எங்கயோ போய்ட்டுதாம். இப்ப அவங்க எங்க எப்படி இருக்காங்கன்னு கூடத் தெரியாதாம். கேட்க ஆளில்லாததால அப்பனோட ஆட்டம் அதிகமாகி உடம்பு சரியில்லாம போய் செத்து போய்ட்டாராம். அதனால, பெரியவங்க யாருமில்ல வாடகை வராதுன்னு வீட்டைக் காலிப் பண்ண சொல்லிட்டாங்களாம். எங்க போறதுன்னு தெரியாம உக்காந்து இருந்த பசங்களைப் பார்க்கும்போது பாவமா இருந்துச்சு. அப்புறம், ஊர் தலைவர் கிட்ட கெஞ்சி கேட்டு இப்பத்திக்கு சமுதாயக் கூடத்துல தங்க வச்சி, கைச்செலவுக்கு கொஞ்சம் பணம் தந்துட்டு வந்திருக்கேன். இனிதான் எதாவது கருணை இல்லத்தை கேட்டு பார்க்கனும்.
அதனாலதான், பொம்பளைங்க எந்த சூழ்நிலையிலயும் உணர்ச்சி வசப்படக்கூடாதுன்னு சொல்லுறது. போனவ ரெண்டு குழந்தைகளைக் கூட்டி போயிருந்தால் நல்லா இருந்துருக்கும். இப்ப பாருங்க, குழந்தைங்க திக்கு திசை தெரியாம நிக்குதுங்க. 
ம்ம்ம் அந்த பசங்க கெட்டவங்க கையில சிக்காம நல்லப்படியா இருந்தா நல்லது. அதான் என் வேண்டுதல் புள்ள.
ம்க்கும் ஊரெல்லாம் நல்லா இருக்கனும்ன்னு நினைக்குறீங்களே! பொண்டாட்டி மனசு புரிஞ்சு நடந்துக்கனும்ன்னு தெரியுதா உங்களுக்கு!?
உன் மனசு கஷ்டப்படுற மாதிரி என்ன செஞ்சுட்டேன் புள்ளா!?
ஒண்ணுமே செய்யலைன்னுதான் சொல்றேன். என் ஃப்ரெண்ட் ராஜி வீட்டுக்காரர் வாலண்டைன்ஸ் டேவுக்காக ராஜிக்கு அல்வாவும், பூவும் வாங்கி வந்து கொடுத்திருக்கார். 
அது மட்டும்தான் உன் ஃப்ரெண்ட் சொன்னாளா!? அதுக்கப்புறம் நடந்ததை சொல்லலியா!?
என்ன நடந்துச்சு!? அல்வாவையும், பூவையும் பார்த்த சின்ன பொண்ணு இனியா, டேய் அப்பு! அப்பா, 20 வருசம் கழிச்சு அம்மாக்கு அல்வா கொடுத்து காதுல பூ சுத்துறாங்கடான்னு சொன்னான். அதுக்கு அப்பு, ஆனா, அம்மா தினமும் அப்பா காதுல பூ சுத்தி அல்வா தர்றங்கன்னு சொன்னான்.
சரி, சரி, ஊரான் வீட்டு கதை நமக்கெதுக்கு!? ஒரு ஜோக் சொல்லவா!?
நீ ஆரம்பிச்சா நல்லது. நான் ஆரம்பிச்சா புரணி பேசுறதா!? சரி ஜோக் சொல்லு, சிரிச்சு தொலைக்குறேன்.
இப்படிலாம் வேண்டா வெறுப்பா கேட்டால் சொல்ல மாட்டேன்.
ஹி! ஹி!, ஹா! ஹா! இப்ப சொல்லுடி
ராமு: வெயிட்டான படிப்பு படிச்சும் என் பையனுக்கு வேலை கிடைக்கல
சோமு: அப்படியா… என்ன படிப்பு படிச்சிருக்காரு….?

ராமு:  L(kg) U(kg)pre(kg).

நல்ல வெயிட்டான படிப்புதான். நான் விடுகதை சொல்றேன் பதில் சொல்லு பார்க்கலாம்!

வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை  சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?

விடையை யோசிச்சிக்கிட்டே இரு. நான் கடைத்தெருவுக்கு போய் வந்திடுறேன்.

Saturday, July 06, 2013

நட்பிற்கு ஏது எல்லைக்கோடு??!! - பாட்டி சொன்ன கதை


பாத்த்த்த்த்தீ!

வாடி தங்கம். ஹோம் வொர்க்லாம் முடிச்சுட்டியா?

ம்ம்ம் முதித்தேன் பாத்தி. 

சீனு எங்கே?!

அம்மா! கிச்சன்ல வச்சிருந்த ஹனியை சாப்பித்து, தலையில் ததவிக்கித்தானாம். அவன் முதிலாம் வெள்ளையாக போகுதுன்னு அழுறான் பாத்தி.

அச்சச்சோ! அப்படிலாம் ஒண்ணும் கிடையாது. அது யாரோ சும்மா லுல்லாயிக்கு சொன்னது. அதை உண்மைன்னு நம்பிட்டானா?! சீனு! சீனு! இங்க வா! அழாத. நீ நினைக்குற மாதிரிலாம் எதும் நடக்காது. ஹனி  உடம்புக்கு நல்லதுடா.

அப்படியா! எனக்கு முடி நரைக்காதே!?

ம்ஹ்ஹூம், ஹனிக்கு தமிழ்ல ”தேன்”ன்னு பேரு. அது, எவ்வளாவு சாப்பிட்டாலும், எப்போ சாப்பிட்டாலும் ஈசியா டைஜஸ்ட் ஆகிடும். அதனாலதான் அந்த காலத்துல மருந்தை தேன்ல கலந்து குடுத்தாங்க.

"Honey Bee"க்கு தமிழ்ல ”தேனீ”ன்னு பேரு. இந்த தேனீதான், பறந்து போய் ப்வுல இருந்து தேனை எடுத்து வரும். எந்த செடியோட பூவில இருந்து தேன் எடுக்குதோ?! அந்த செடியில இருக்குற சத்துலாம் அந்த தேன் ல இருக்கும்ன்னு சொல்றங்க.

கொம்பு தேன்,  மலைத்தேன்,  மரப்பொந்து தேன்,. மலைத்தேன், . புற்றுத்தேன்,  புதிய தேன்,  பழைய தேன்”ன்னு பல வகைல கிடைக்குது. தேன் எவ்வளவு வருசமானாலும் கெடாது. அதனாலதான் அதை, பூஜைக்கும், மருந்தைக் கரைக்கவும் யூஸ் பண்றாங்க.நீங்க பொறந்ததும், பேரு வைக்குர ஃபங்க்‌ஷன் போது உங்க நாக்குல தேன் தடவுனாங்க. அதனால, நாக்குல இருக்குற ஒரு நரம்பு தூண்டி சீக்கிரமே உங்களுக்கு பேச்சு வந்துடுச்சு.

ஓ! இவ்வளவு நல்ல விஷயம் இருக்கா பாட்டி. இது தெரியாம அழுதிட்டேனே! சரி நீ கதை சொல்லு பாட்டி...  

                               

ம்ம்ம்ம்ம்..., ஒரு ஊருல ஒரு ராஜாவாம். அந்த ராஜாவோட பேலஸ்ல ஒரு பட்டத்து யானை இருந்துச்சாம். 

”பட்டத்து யானை”ன்னா என்ன பாட்டி?!

அதாவது,  ராஜாவும், ராணியும் ஏறி சுத்தி பார்க்க போறதுக்குன்னு தனியா ஒரு யானையை பேலஸ்ல வளார்ப்பாங்க. ராஜாவுக்கு தர்ற அதே மரியாதையை அந்த யானைக்கும் குடுப்பாங்க. அரண்மனைல இருந்ததால நல்ல கவனிச்சுப்பாங்க அந்த யானையை, சத்தான சாப்பாடு, உடம்புக்கு முடியலைன்னா டாக்டர்ன்னு இருக்கு. அப்படி இருந்ததால, அந்த பட்டத்து யானை நல்லா பெரிய தந்தத்தோட, நல்லா கொழுத்து அழகா, கம்பீரமா இருந்துச்சு. அதுமேல போறதை பெருமையா நினைச்சுப்பான் அந்த ராஜா. 

அந்த யானையை கட்டிப்போடுற லாயத்துல ஒரு நாய் ஒண்ணு வந்திட்டுது. சரியா சாப்பாடு கிடைக்காம அது எலும்பும் தோலுமா இருந்துச்சு. யானை சாப்பிடும்போது, சிந்துனது சிதறுனதுலாம் சாப்பிட்டு பசியாறுச்சு.அதை பார்த்து இரக்கப்பட்ட யானை, நிறைய சாப்பாட்டை கீழ சிந்த ஆரம்பிச்சுது. அந்த நாயும் அதைலாம் சாப்பிட்டு நல்லா கொழுகொழுன்னு வர ஆரம்பிச்சுட்டுது.  

ரெண்டும் திக் ஃப்ரெண்ட்ஸ் ஆனாங்க. அரண்மனை சாப்பாடு சாப்பிட்டதால நல்லா கொழுக் மொழுக்ன்னு அழகா மாறிடுச்சு அந்த நாய். அரண்மனைக்கு ஏதோ வேலையா வந்த பெரிய பணக்காரன் ஒருத்தன் இந்த நாயை பார்த்து ஆசைப்பட்டு பாகன்கிட்ட, என் பசங்க வளர்க்க நாய் வேணும்ன்னு ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருக்காங்க. இந்த  நாய் நல்லா இருக்கு. அதனால, அதை எனக்கு குடு. உனக்கு பணம் தரேன். ப்ளீஸ்ன்னு கேட்டான். பணத்துக்கு ஆசைப்பட்ட பாகன் அந்த நாயை குடுத்துட்டான். 

தன் ஃப்ரெண்டை மிஸ் பண்ணிட்ட யானை, அன்னில இருந்து சாப்பிடல, சரியா தூங்கலை. எப்பவும் அழுதுக்கிட்டே இருந்துச்சு. இப்படியே நாட்கள் போச்சு. மெல்ல மெல்ல யானை இளைச்சு, படுத்த படுக்கையா போச்சு.

ஐயோ பாவம் அந்த யானை பாத்தி.

ஆமாண்டி செல்லம். இதை கேள்விப்பட்ட ராஜா அரண்மனைல இருக்குற டாக்டர்களை வரச்சொல்லி யானைக்கு ட்ரீட்மெண்ட் பார்த்தார். ராஜா! யானைக்கு எந்த நோயும் இல்ல. ஏன் இப்படி இருக்குன்னு தெரியலை. எப்பவும், கூடவே இருக்குற பாகன்கிட்ட கேளுங்க. அவனுக்குதான் என்னன்னு தெரியும்ன்னு சொல்லிட்டாங்க..

ராஜா யானைப்பாகனை வரவச்சு, என்ன நடந்ததுன்னு உண்மையை சொல்லுன்னு மிரட்டுனாரு. வேற வழியில்லாம அவன், ராஜா1 இங்க ஒரு நாய் சுத்திக்கிட்டு இருந்துச்சு. அதோடதான் நம்ம பட்டத்து யானை வெளையாடும், சாப்பிடும் . தூங்கௌம். அந்த நாயை பணத்துக்கு ஆசைப்பட்டு வித்துட்டேன். என்னை மன்னிச்சிடுங்கன்னு சொல்லி அழுதான்/

அந்த நாயை வாங்கி வரச் சொல்லி ஆட்களை அனுப்பினான் ராஜா.  நாயை கொண்டு வந்ததும் யானைக்கிட்ட கொண்டு போனான் ராஜா. யானைக்கிட்ட மெல்ல அசைவு வந்திச்சு.

ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய், யானை நல்லாகிடுமா பாட்டி?!

தன் தும்பிக்கையால நாயை தடவுச்சு யானை. ரெண்டுத்து கண்ணுலயும் தண்ணி கொட்டுச்சு. வாயில்லா ஜீவன்களாச்சே! தன்னோட ஃபீலிங்க்ஸை எப்படி சொல்லும்?! 

இதை பார்த்த எல்லாரும் வாயடைச்சு போய் நின்னுட்டாங்க. விலங்குகளுக்குள் இப்படி ஒரு நட்பா?! இனி நாயை, எக்காரணம் கொண்டும் யானைக்கிட்ட பிரிக்க கூடாதுன்னு சொல்லிட்டு , இனி பட்டத்து யானை பழைய மாதிரி அழகா, கம்பீரமா மாறிடும்ன்னு நம்பிக்கையோட அரண்மனைக்குள் போனார்.

இதிலிருந்து நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது. தூய நட்புக்கு இனம், மொழி, உருவம், அந்தஸ்துன்னு எதும் தேவை இல்லை. நட்புக்கு எந்த எல்லைக்கோடும் இல்லை. மனசுல அன்பிருந்தா ஒரு கிளிக்கிட்டயோ இல்ல ஒரு ஆட்டுக்குட்டி கூட நீங்க ஃப்ரெண்டா இருக்கலாம். 

புரிஞ்சுது பாட்டி, நாங்க போ டிவி பார்க்க போறோம். பை பாட்டி!

ரொம்ப நேரம் டிவி பார்க்காம சமர்த்தா சாப்பிட்டு, கொஞ்சம் வாக் போய்ட்டு படுங்க. 

ஓக்கே பாத்தி. பை! பை!

Tuesday, July 02, 2013

சென்னை அண்ணா நகர் பூங்கா காதலர்களுக்கு மட்டும் தானா ?!


தூயா சென்னை, அண்ணா நகர்ல தங்கி படிக்கும்போது, அவளும் அவ ஃப்ரெண்ட்ஸும் வாரக்கடைசில படையெடுக்கும் இடம் ஒண்ணு அமைந்தகரையில இருக்கும் ஸ்கை வால்க் இல்லாட்டி ”அண்ணா நகர் டவர்”.அந்த பார்க்குக்கு போய் எடுத்துட்டு வந்த புகைப்படங்களை பர்த்ததும்.., சின்னது ரெண்டுத்துக்கும் அங்க போய் வரனும். 

அவ என்ன ஒசத்தி அவ மட்டும்தான் போவாளா?!ன்னு படுத்தி எடுத்துட்டுதுங்க.  அப்புறம் வேற என்ன சட்டி பொட்டி எல்லாம் தூக்கிட்டு அண்ணா நகர் டவர் பூங்காவிற்கு மட்டும் ஒரு விசிட்..., பின்ன, ஸ்கை வால்க் கூட்டி போய் ஒரு மாச சம்பளத்தை ஒரு நாளில் தீர்த்துட்டு வூட்டுக்காரர்க்கிட்ட யார் திட்டு வாங்குறது.., அதனால ஒன்லி பார்க்குக்கு மட்டும் போய் வந்துட்டோம்..., இதோட முழு பேரு விஸ்வேஸ்வரய்யா கோபுர பூங்கா” வாம். 

நாமதான் பிரபல பதிவராச்சே!!?? சரி சை, இதுக்கெல்லாமா முறைக்குறது.., பாருங்க மானிட்டர் பொசுங்குதுல்ல உங்க அனல் பார்வை பட்ட!!  ஒரு பதிவு தேத்தலாம்ன்னு அங்க இருக்குறவங்ககிட்டயும்.., கூகுள்லயும் கேட்டு தெரிஞ்சுக்கிட்டு ஒரு பதிவு தேத்தியாச்சு.., 1964ம் ஆண்டுதான் அண்ணா நகர் அப்போதுதான் உருவானதாம்.  இப்போ,  ”சென்னை, அண்ணா நகர்” ன்னு சொல்ற  இந்தப் பகுதியின் பழைய பேரு  ”முள்ளம் கிராமம்”.  அதாவது  ”கோயம்பேடு”ன்ற பெரிய கிராமத்துக்கு உட்பட்ட ”பொன்பாடி”ன்ற  கிராமத்துக்குள் அடங்கிய ”முள்ளம் கிராமம்”தான் இப்போதைய ”அண்ணா நகர்”. 


1967 வது வருசம் , அண்ணா தலைமையில ”இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு” இங்கு நடத்தப்பட்டதாம். “உலகப் பொருட்காட்சி” நடத்திய பகுதியைச் சுற்றி .., ஒரு புறம் உலகப் பொருட்காட்சி நுழைவாயில் அமைக்கப்பட்டதாம் .  மறுபக்கம் இரு யானைகளின் சிலைகளை வைத்து  கேரளா பெவிலியன் அமைந்திருந்த இடத்தில் ”அண்ணா நகர் கிளப்” தொடங்கினார்களாம் .  விஸ்வேஸ்வரையா கோபுரம் என்று பெயர் சூட்டி ஒரு டவரைக் கட்டினார்களாம்.  அந்த டவர்தான் இன்னிக்கு “அண்ணா நகர்” டவர் ன்னு அழைக்கப்படுதிறதாம்.



இந்த இடத்தில்  நிகழ்ச்சிகள் நடத்த ஒரு மேடையும் சுத்தி உட்காருவதற்கு காலரியும் அமைக்கபட்டுள்ளது  


அந்த கேலரி சுவத்துல  பலவைகையான ஓவியங்களை வரைஞ்சு இருக்காங்க. அதன் பின்,  அழகான வட்டவடிவ பகுதி காணப்படுகிறது. அங்கிருந்து பார்த்தால் ஒரு நீர் நிறைந்த குளமும்,  அதனுள் மீன்களும் இருக்கின்றன.  பார்பதற்கு ரொம்ப அழகா இருந்துச்சு.

,

சின்ன பிள்ளைங்க  ”ஸ்கேட்டிங்” விளையாடி பழக ஒரு அரங்கம் இருக்கு.  நிறைய சிறுவர்கள் ஸ்கேட்டிங் விளையாடிட்டு இருந்தாங்க.  பார்க்குறதுக்கு  அழகாவும் இருந்துச்சு. நாம் அதை பார்த்து ரசிப்பதற்கு காலரியும் கட்டி இருக்காங்க. நீங்கள்லாம் என்னடா ஸ்கேட்டிங் பண்ணுறிங்க. உங்க அம்மா, பாட்டிலாம் இந்த மாதிரி எந்த பயிற்சியும் இல்லாம ஹாலுக்கும், கிச்சனுக்கும், சாமி ரூமுக்கும், துணி துவக்கும் கல்லுக்குமா என்னமா பறக்குறாங்க?!ன்னு நினைச்சுக்கிட்டே ரசிச்சேன்.


அதிசயமா இந்த காலத்துலயும் குளம் நிறைய தண்ணி இருந்துச்சு. அதிசயத்தோட அதிசயமா அதுக்குள்ளே  நிறைய மீன்களும் இருந்துச்சு..,

பூங்காக்குள்ளே நிறைய கலர் கலரான பூக்களும், செடிகளும் நிறைய மரங்களும் அந்த இடமே குளுகுளுன்னு இருந்துச்சு.., இந்த பூவோட பேரு ஞாபகத்துல இல்லை. சின்ன பிள்ளைல எங்க ஸ்கூல்ல இந்த மரம் நிறைய இருக்கும். இதுல ஒரு மாதிரி கோன் ஷேப்புல அரும்பு விடும். அதை பிரிச்சா ஒரு மாதிரி கொக்கொ போல மகரந்தம்லாம் இருக்கும். அதை வச்சு அடுத்தவங்க மகரந்தத்தை உடைக்குற விளையாட்டு விளையாடுவோம்.  நல்லா இருக்கும். இப்போலாம் பசங்க அந்த மாதிரி விளையாடுதுங்களான்னு தெரியலை.



இந்த பூவோட பேரும் தெரியலை. ஆனா, பார்க்க அழகா இருக்கும் எனக்கு ரொம்ப பிடிச்ச பூ.  இந்த பூங்காவுல குழந்தைங்க விளையாட” புதிய விளையாட்டு திடல்”, பொதுமக்கள் தியானம் செய்ய ”தியான மேடையுடன் கூடிய மையம்”, மாலை வேளைகள்ல பொதுமக்கள் குழந்தைகளுடன் அமர்ந்து பொழுது போக்குவதற்க “திறந்தவெளி கலையரங்கம்”, குழந்தைகள் விளையாட “ஸ்கேட்டிங்க் மையம்” ஆகியவை புதுசா கட்டுறாங்க. அங்குள்ள ஏரிக்கரையை ரசிக்க “சிமெண்ட் திட்டுகள், லேக் ஐலேண்ட், நடைப்பாதைகள்” கூட அமைக்கப்படுகின்றது.


நாட்டிய அரங்கம் சுற்றிலும் பச்சை பச்சையாக புல் வளர்த்து அருமையாக காட்சியளிக்கிறது 





சென்னையில் உள்ள மிகப்பெரிய மற்றும் உயர்ந்த டவரைக் கொண்ட பூங்கா இதுதான். இது அண்ணா நகர் ரவுண்டானாவுக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது. 




இந்த டவரின் உச்சியில் இருந்து பார்த்தா, சென்னையின் பரந்து விரிந்த அழகை பார்க்கலாம். மாலை 5 மணி முதல் இந்த டவர் மேல ஏறலாம். மத்த நேரத்துல அனுமதி இல்லை.  பூங்கா மிக அழகா பராமரிக்குறாங்க. ஏராள்மான பொழுது போக்கு அம்சம் இருக்கு.   

இத்தனை நல்ல விசயங்கள் இருந்தாலும், காதலர்கள் பண்ற சேட்டைகள் முகம் சுளிக்குது. மெரினாவுல 144 போட்ட பிறகு, அங்கெல்லாம் நிஜமான காதலர்கள் போய் டீசண்டா இருந்துட்டு வந்துடுறங்க. இதுப்போல பூங்காக்களில் மத்த காதல்ர்கள் வந்து சேட்டைகளை தொடர்ந்திருக்காங்க. இது தெரிஞ்ச காவல் துறை இப்போ அண்ணா நகர் பூங்காவை கண்காணிக்க ஆரம்பிச்சு இருக்காங்க.

நண்டு, சிண்டுன்னு குடும்பத்தோட வர்றவங்களுக்கு மட்டும் அனுமதி,  ஜோடியா வர்றவங்கள்ல நிஜமான தம்பதி, காதல்ர்கள்ன்னு கேள்விகளுக்கு பிறகு அனுமதிக்குறாங்க. சந்தேகப்படும்படி யாராவது ஜோடியோடு வந்தால் ”நோ அனுமதி”. அதுக்காக ஒரு வாட்ச்மேனை காவலுக்கு போட்டிருக்காங்க. இப்போ பரவாயில்லைன்னு பக்கத்துல இருந்த குடும்பம் சொல்லுச்சு.

 பார்க் வாசல்ல சுண்டல், ஐஸ்கிரீம்ன்னு நிறைய நொருக்ஸ் கிடைக்குது. கொஞ்சம் தள்ளி சரவண பவன் ஹோட்டல் இருக்கு. அதுமில்லாம நிறைய ஹோட்டல்ஸ் இருக்கு. பக்கத்தில ஒரு ஐயப்பன் கோவில் இருக்கு அது பேமஸ் அண்ணா நகர் ஐயப்பன் கோவில் . 

பதிவு கொஞ்சம் நீளமாகிட்டுதுன்னு நினைக்குறேன். மன்னிச்சூ சகோ’ஸ்                        


Saturday, June 29, 2013

நன்றி மறப்பது நன்றன்று - பாட்டி சொன்ன கதை

  


 

 சீனு ஸ்கூல் விட்டு வந்துட்டியா? எங்கே உன் தங்கச்சி பாப்பா?! அவளை கூட்டி வர அப்பா போய் இருக்காங்க.., 


ம்ம்ம் நீ எப்படி வந்தே?! எனக்கு 30 மினிட்ஸ்  முன்னாடியே விட்டுட்டாங்க.., அதனால,  என்னை கொண்டு வந்து வீட்டுல விட்டுட்டு அப்புறம் பாப்பாவை கூட்டி வரப்போனாங்க..,

அரை மணிநேரம்தானே கண்ணா! அங்கயே வெயிட் பண்ணிட்டு பாப்பவை கூட்டி வந்திருக்கலாமே! இப்போ பெட்ரோல் விக்குற விலையில் ரெண்டு முறை போகனுமா?!

 அப்பா இப்போதான் என்னை கூட்டி வரும்போதுதான் டேங்க் ஃபில் பண்ணிட்டு வந்தார்.., அது இந்த வாரம் முழுக்க வரும்..,

 உங்கப்பனுக்கு அறிவே இல்ல.. படிக்குற காலத்துல ஒழுங்கா படிச்சிருந்தா எல்லாம் தெரிஞ்சிருக்கும்..

 ஏன் பாட்டி அப்பாவை திட்டுறே?!

இல்ல கண்ணா! பெட்ரோலை எப்பவும் மார்னிங்க் இல்ல ஈவினிங் டைம்ல தான் போடுறது நமக்கு பெனிஃபிட்..,  னீ பெட்ரோல் பங்க போயிருக்கியா? அங்க பெட்ரோலை எங்க வெசிருக்காங்கன்னு உனக்கு தெரியுமா?

 தெரியும் பாட்டி.., கீழ கிணறு தோணி அதுல ஃபில் பண்ணி வச்சு டேப்ல நம்ம வண்டிக்கு ஊத்துவாங்க..

 ம்ம்ம் கரெக்ட். ஏன், நம்ம வீட்டுல இருக்குற தண்ணி டேங்க் மாதிரி மேல கட்டாம பூமிக்கு கீழ வச்சிருக்காங்க..,

 அது தெரில பாட்டி., ஒரு வேளை பெட்ரோல் விலை அதிகமா இருக்குறதால திருடிப்பாங்களோன்னு நினச்சு அப்படி பண்ணிட்டாங்களோ!?

ஹா ஹா! அப்படி இல்ல செல்லம் அப்படி திருட்டு பயம் இருந்தா ஒரு நல்ல செக்யூரிட்டி போட்டு வைக்கலாமே?! ஏடிஎம் வாசல் போல?! 

அட ஆமா பாட்டி! அப்போ ஏன் அப்படி வெச்சிருக்காங்க?!

ம்ம் அப்படி கேளு .., பூமியோட  வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே பெட்ரோல்  அடர்த்தியா  இருக்கும். வெப்பநிலை படிப்படியா அதிகரிக்கும்போது, பெட்ரோலும் விரிவடையும். அதனால  ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினா, அது சரியா ஒரு லிட்டர் இருக்காது. கம்மியாதான் இருக்கும். உன் பாஷைல சொல்லனும்ன்னா பெட்ரோல் எவாப்ரேஷன் ஆட்கிடும். அதே மாதிரி எப்பவும் டேங்க் ஃபுல் ஃபில் பண்ணக்கூடாது,,  ஏன்னா, நாம் பெட்ரோல் நிரப்பிட்டா அந்த டேங்ல காத்து கம்மியா இருக்கும். பெட்ரோல் ரொம்ப சீக்கிரம் எவாஃப்ரேஷன் ஆகிடும்..,

  பெட்ரோல் பங்க்ல   பெட்ரோல் சேர்த்து வைக்குற தொட்டில ”மிதக்கும் கூரைகள்” இருக்கும்.அதனால, உள்ளே இருக்குற பெட்ரோலுக்குதகுந்த மாதிரி அது மாறிக்கும். அதனால  காற்றுமண்டலத்துக்கும், பெட்ரோலுக்கும் இடையே இடைவெளி இருக்காது. அதனால ஆவியாதல் குறையும். ஆனா, நம்ம வண்டிகள்ல அந்த வசதி கிடையாது .அதனால  பாதி ஃபுல் ஃபில் பண்ணால் பெட்ரோல் ஆவியாவதை கொஞ்சம்  குறைக்க முடியும்.

அதே மாதிரி நீங்க பெட்ரோல் போடப்போகும் அந்த நேரத்துல லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கிட்டு இருந்தா பெட்ரோல் போடக்கூடாது. ஏன்னா,  குழாய் வழியா பெட்ரோலை தொட்டிக்குள்ள ஊத்தும்போது தொட்டிக்கடியில் இருந்த கசடுலாம் அதன்மூலமா மேல வரும்.அப்போ நாம் பெட்ரோல் போட்டா அந்த கலங்குன பெட்ரோலைதான் வாங்கனும்.., இது எஞ்சினை பாதிக்கும்... அதனால அடுத்த முறை பெட்ரோல் போடப்போகும் போது நீயாவது இதெல்லாம் கவனிச்சுக்கோ!

சரி பாட்டி! அதோ பாப்பாவும் வந்துட்டா. நீங்க கதை சொல்லுங்க..,

ம்ம்ம் முல்லை மலர்ன்ற காட்டுல  விறகு வெட்டுறதுக்காக போய்க்கிட்டு இருந்தான் மணி. அப்போ காட்டுல  எங்கயோ ஒரு  சிங்கம் கத்திக்கிட்டு இருந்துச்சு..

பாத்தி.., சிங்கம் கத்தாது., கர்ஜிக்கும்ன்னு எங்க மிஸ் சொல்லொ குதுத்து இருக்காங்க..

என் செல்லம்.., மிஸ் சொல்லுறதை நல்லாதான் கவனிச்சு கேட்டிருக்கே. சிங்கம் கர்ஜிட்டு இருந்துச்சு.. மணி குரல் வந்த திசை பார்த்து போனான். அங்க ஒரு சிங்கம், கூண்டுல சிக்கிக்கிட்டு இருந்ததை பார்த்தான்.  உடனே, அந்த சிங்கம்.., ஹலோ!  பயப்படாதே! இங்கே வா! நான் உன்னை ஒண்ணும் பண்ணமாட்டேன்'' ன்னு சொல்லுச்சு..,

பொய் சொல்லாத பாட்டி. சிங்கம் எங்காவது பேசுமா?!

டேய் சீனு இப்படிலாம் குதர்க்கமா கேள்விக்கேட்டா நான் கதை சொல்ல மாட்டேன்.. உன் அமெரிக்கா மாமாக்கூட சேர்ந்து ரொம்ப கெட்டு போய்ட்டே. அவனைபோலவே தொணதொணன்னு கேள்வி கேட்டு என்னை படுத்துறே!கதைன்னா லாஜிக் இருக்காது சிங்கம் பேசும், மனுசன் பறப்பான்,  இப்படிலாம் கேள்வி கேட்டா நான் கதை சொல்ல மாட்டேன். போ...,

பாத்தி! அவன் அப்பதிதான்.  நீ சொல்லு பாத்தி..,

ம்ம்ம்  வேட்டைக்காக வந்தவங்க சிங்கத்தை உயிரோட பிடிக்க   கூண்டு செய்ஞ்சு.அதுக்குள்ளஒரு ஆட்டை விட்டு வச்சிருந்தாங்க. . ஆட்டை சாப்பிட நினைச்ச  சிங்கம் கூண்டுக்குள்ள  மாட்டிக்கிச்சு..,  அப்போதான் அந்த பக்கமா வந்த மணியை சிங்கம் பார்த்துட்டுது..,  ஏய் மனிதா! என்னை இந்த கூண்டுல இருந்து வெளிய வர ஹெல்ப் பண்ணா, நானும்  உனக்கு நிறைய ஹெல்ப் செய்வேன் ந்னு கத்துச்சு..

அதுக்கு மணி, “நீயோ மனுசங்களை அட்ச்சு கொண்ணு சாப்புடுற ஆள்.  உன்னை நான் எப்படி ரிலீஸ் பண்ண முடியும்ன்னு கேட்டான். மனுசங்களை கொண்ணு சாப்புடுறது நிஜம்தான். ஆனா, அதுக்காக உயிரை காப்பத்தி குடுக்குற உன்னை கூடவா சாப்பிடுவேன்னு சொல்லிச்சு.. அது சொன்னது, மணி மனசுக்கு சரின்னு படவே கூண்டை திறந்து விட்டான்.அப்படி கூண்டை திறந்து விட்டதும்.., மணி மேலயே  பாய்ஞ்சு அடிச்சு திண்ண பார்த்துச்சு..,

அச்சச்சோ! பாவம் மணி செத்து போய்ட்டானா?!

ம்ஹூம்,  “சிங்கமே, நீ செய்றது உனக்கே நல்லா இருக்கா? உன் பேச்சை நம்பி உன்னைக் கூண்டிலிருந்து ரிலீஸ் பண்ணேனே.... அதுக்கு நீ காட்டும் நன்றி'' இதானா?!ன்னு கேட்டான்.

“என் உயிரைக் காப்பாத்திக்குறதுக்காக  நான் ஆயிரம் பொய் சொல்லுவேன். அதை நீ எப்படி நம்பலாம்? மனிதர்கள் ன்னாபகுத்தறிவுள்ளவர்கள் னுதானே மினிங்க்,  அந்த அறிவைக் கொண்டு இது நல்லது, இது கெட்டது ன்னு பகுதித்தறிய வேண்டாமா? முட்டாள்தனமான உன் செய்கைக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்?'' ன்னு எகத்தாளமா கேட்டுச்சு சிங்கம்.

“கடவுள் உன்னை தண்டிப்பார். உன் உயிரை காப்பாத்திய என்னையே சாப்பிடுறது நியாயமில்லை. ன்னு அதுங்கிட்ட வாதாடி பார்த்தான் மணி.. அ ப்போ அந்த பக்கமா ஒரு நரி வந்துச்சு. வா! அதுங்கிட்டயே ஒரு நியாயம் கேப்போம்ன்னு சிங்கத்தை கூட்டிக்கிட்டு அந்த நரிக்கிட்ட போய்.., நடந்ததைலாம் சொன்னான்..      

.“எங்கள் தொழில் அனைவரையும் அடிச்சுக் கொண்ணு  சாப்பிடுறதுதான். இது இவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் கூட என்னைக் கூண்டிலிருந்து ரிலீஸ் பண்ணான். முட்டாள்தனமான இந்தச் செய்கைக்கு உரிய பலனை இவன் அனுபவித்தே தீரனும். நீ என்ன சொல்ற நரியாரே....'' ன்னு சிங்கம் கேட்டுச்சு

ஒரு உயிர் அனாவசியமா போகப்போகுதேன்னு.., பாவப்பட்டு சிங்கத்தை காப்பாற்றியதற்கு இதான் தண்டனையான்னு மணி கேட்டான்...,

இதெல்லாம்  கேட்ட நரி, எனக்கு ஒண்ணுமே புரியலை.., அதனால, மறுபடியும் நீங்க சொல்லுங்க ராஜான்னு சிங்கத்துக்கிட்ட சொல்லிச்சு.. உடனே, சிங்கம் நடந்த கதையை சொல்ல ஆரம்பிச்சுது..,


நான் அந்த கூண்டுக்குள்ள அடைஞ்சுக் கிடந்தேன்..,

“எந்தக் கூண்டுக்குள்ள?'ன்னு கேட்டுச்சு நரி.

“அதோ இருக்குதே அந்தக் கூண்டுக்குள்ளதான்ன்னு சொல்லிச்சு சிங்கம்.

“எப்படி அடைஞ்சு இருந்தீங்கன்னு கேட்டுச்சு நரி.

சிங்கம் விடுவிடுவென்னு கூண்டுக்குள்ள  போச்சு . இதுதான் சரியான சமயம் ன்னு நினைச்ச நரி சட்டுன்னு கூண்டோட கதவை பூட்டிடுச்சு

“நரியாரே! இது என்ன அயோக்கியத்தனம்! நியாயம் சொல்றதா சொல்லி என்னை மறுபடியும் கூண்டுல  அடைச்சுட்டீங்களேன்னு   கத்திச்சு சிங்கம்.

“நீங்க பேசாமல் கூண்டிக்குள்ளயே  இருங்கராஜா. நான் ஒண்ணும் இந்த மனிதனைப் போல்முட்டாள் இல்ல. உங்களுக்குச் சாதகமா நியாயம் சொன்னா முதல்ல இந்த மனுசனை  அடிச்சு சாப்பிடுவீங்க. அப்புறம் என்னயே அடிச்சு கொன்னுடுவீங்க. அதனாலதான் உங்களை மீண்டும் கூண்டுக்குள்ளயே வச்சு பூட்டிட்டேன்ன்னு சொல்லிச்சு நரி.  

நன்றி மறந்த சிங்கம் தன் நிலையை நினைச்சு  நொந்து நூடுல்சா போனது.

அந்த நரியும், மணியும் பத்திரம் அவங்கவங்க இடத்துக்கு போய் சேர்ந்தாங்க.. இந்த கதை மூலம் என்ன குட்டி தெரிஞ்சுக்கிட்டீங்க..,

நல்லது செய்றதுக்கும் இடம், பொருள், ஏவல், மனுசன் தராதரம் தெரிஞ்சிருக்கனும்.., அதுமில்லாம ஒருத்தர் ஒரு ஹெல்ப் பண்ணா, நாம அதை எந்நாளும் மறக்க கூடாதுன்னு தெரிஞ்சுக்கிட்டோம் பாட்டி.

குட். நல்லா புரிஞ்சுக்கிட்டீங்க.. போய் கொஞ்ச நேரம் விளையாடிட்டு, குளிச்சு, சாமி கும்பிட்டு படிங்க.., அம்மா சமைச்சு வைப்பா.., சாப்பிட்டு தூங்குங்க..

ம்ம்ம் பை பாத்தி!




Monday, June 24, 2013

பூ பூக்கும் ஓசை - ஐஞ்சுவை அவியல்

  




என்ன மாமா செய்யுறீங்க?!

ஒண்ணுமில்ல புள்ள! நம்ம சின்ன மண்டையன் படிக்குற இஸ்கோலுல பெற்றோர் ஆசிரியர் கூட்டம் கூடப்போகுது அதுக்கு தலைமை தாங்க என்னை கூப்பிட்டு இருக்காங்க. அதான், என்ன பேசலாம்ன்னு யோசனை பண்ணிட்டு இருக்கேன்..,

ம் ம்ம்  நீங்கதான் அடுத்தவங்க பேசுறது, நடக்குறதை  வச்சே உங்களுக்கு தேவையான பாய்ண்ட்ஸ் பிடிச்சுப்பீங்களே! ஆமா, அந்த மாதிரி திறமை எப்படி வந்துச்சு மாமா!

எல்லாத்தையும் உன்னிப்பா கவனிக்கனும் கண்ணு.., அப்போ நமக்கு தேவையானதுலாம் தானா நமக்கு புரியும்.., 

அதான் எப்படி மாமா?! உங்களால முடியுது.., என்னால முடியலை..,

அது பழக்கத்துனால வற்றது புள்ள! ஒருத்தன் தான் நல்லா படிச்சி பெரிய மேதையா வரனும்ன்னு, காட்டுல இருக்குற துறவிக்கிட்ட  குருகுலம் போய் சேர்ந்தான். அந்த  துறவி, சீடனைத் தினமும் காட்டிக்கு போய், அங்க நடக்குறதைலாம் பார்த்து வான்னு அனுப்பினார்.  அவனும் நாம பாடம் படிக்க வந்தா இவரு நம்மளை வேடிக்கை பார்க்க அனுப்புராரேன்னு நினைச்சுக்கிட்டே  தினமும் காட்டுக்கு போய்  வந்தான். 

ஃபர்ஸ்ட் நாள் போகும்போது  பயமா  இருந்துச்சு. ஒரு வாரத்துல காட்டு;ல இருக்குறது எல்லாம் என்ன? ஏது?ன்னு தெரிஞ்சு போனதால காட்டை பற்றிய பயம் போய்டுச்சு.., அப்புறம், வேண்டா வெறுப்பா காட்டுக்கு போனவன் ஆசையா போக ஆரம்பிச்சான்.., அங்க இருக்குற, செடி கொடி,  விலங்குகளை பார்த்துட்டு வந்து எல்லாத்தை பத்தியும் தன் குருக்கிட்ட சொல்வான்.

 இன்னும் காட்டை பற்றி நீ தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்கு.., போய் வான்னு குரு சீடனை காட்டுக்கு அனுப்பினார்.  ஒருநாள் சீடன் ஒரு மரத்தோட நிழலில் உக்காந்திருந்தான். காட்டு நீரோடை சலசலத்து ஓடிக்க்கிட்டு இருந்துச்சு.., பறவைகள் பாடிக்கிட்டு இருந்துச்சு.தன்னை சுத்தி என்ன நடக்குதுன்னு ஷார்ப்பா பார்க்க ஆரம்பிச்சான்..


விலங்குகளின் சப்தம், பறவைகளின் ஒலி காதுல  விழுந்ச்சு. இன்னும் கொஞ்சம் கவனிச்சான். வண்டுகளின் ரீங்காரம் கேட்டது. தான் பார்த்ததை குருவிடம் போய் சொன்னான்.  குரு.., ரொம்ப மகிழ்ச்சிப்பா! இன்னும் நல்லா பார்த்து வான்னி தட்டி கொடுத்து அனுப்பினார்..,

அப்படி பார்க்கும்போது..,   காட்டுல,   நடக்குற ஒரு விசயம் அதிசயமா அவன் காதுக்கு கேட்டுச்சு..,    தன்னுடைய காது தானா?ன்னு அவனுக்கு  சந்தேகம் வந்துச்சு..,  பூக்கள் பூக்கும் மெல்லிய ஓசையைக் கேட்டு தன்னை மறந்தான்.  குருவைத் தேடி ஓடி போய்..,  குருவே! என்ன சீடனே! இதுவரை நடக்காத அதிசயத்தை கண்டவாறு  இப்படி ஓடி வந்துள்ளாயே! அப்படியென்ன அதிசயம் காட்டிலே கண்டாய்?!ன்னு கேட்க ஆரம்பிச்சார்..,அவனும் ந டந்ததைச் சொன்னான்.  அதுக்கு, குரு சீடனே உனக்கு ஆழ்ந்த கவனம் கைவந்தது. நாளைல இருந்து நாம பாடம் ஆரம்பிக்கலாம்ன்னு சொன்னார். அதுப்போலதான்   ஆழ்ந்த கவனம் என்பது ”மனிதனுக்கு ஒருநாளில் வருவதல்ல. ஆர்வமும், முயற்சியும் இருந்தால் மட்டுமே சாத்தியம்”ன்னு புரிஞ்சுக்கிட்டியா?!

ம்ம்ம்ம் நல்லாவே புரிஞ்சுக்கிட்டேன்..., நீங்க மேதாவிதான் ஒத்துக்குறே. எங்கே? என்னோட இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்??!!
                                            
கேளு புள்ள!

உங்க கிட்ட பத்து தென்னங்கன்னுங்க கொடுக்குறேன்.  அஞ்சு  வரிசையில் வைக்கனும். ஆனா,  ஒவ்வொரு வரிசையிலும் நாலு தென்னங்கன்னுங்கதான்  இருக்கனும். அப்படின்னா, எப்படி வைப்பிங்க!?

ப்ச்ச்ச்ச்ச் சூ இதானா?! விடை சொல்லவா?!

இருங்க.., இருங்க.., ”அவங்க ”லாம் பதில் சொல்றாங்களான்னு பார்க்கலாம்.., அதுக்குள்ள ஒரு ஜோக் சொல்லுங்க மாமா!

                                       

ம்ம்ம்ம்ம்  ஒரு குடிகாரன் கிளினிக் போறான்.., அங்க..,

டாக்டர்: நீங்க ரொம்ப குடிப்பீங்களோ! அதான் உங்க  கைலாம் நடுங்குதோ?!
குடிகாரன்: டாக்டர்!  நீங்க வேற! இந்த கை நடுக்குத்துல டம்பள்ர்ல இருக்குற பாதி சரக்கு கொட்டிடுது.., மீதி இருக்குற கொஞ்சத்தைதான் குடிக்க வேண்டியிருக்கு!!
டாக்டர்: ????!!!!!

ஹா! ஹா! ஹா! ஜோக் நல்லா இருக்கு.., இந்த ஜோக் கேளுங்க மாமா! என் ஃப்ரெண்ட் ராஜி இருக்காளே, அவளோட ரெண்டாவது பொண்ணு இனியா இருக்கே! அதுக்கு அப்போ 5 வயசிருக்கும்.., ஃபர்ஸ்டோ! இல்ல செக்கண்டோ படிக்குது.., ராஜி அவளை  டியூசன் சேர்த்து விட்டா..,

அதுவரை அவளை ராஜி தனியா வெளில் எங்கும் போக விட்டதில்லை. அன்னிக்கு தனியா அனுப்ப வேண்டிய சூழ்நிலை.., அதனால, இனியா! டியூசன் போகும்போது பார்த்து கவனமா போம்மான்னு சொல்லியிருக்கா..

ம்ம் உன் ஃப்ரெண்ட் எப்பவாவதுதான்  இதுப்போல சரியா பேசுவான்னு எனக்கு தெரியுமே!!

போதுமே அவளை வாருனது.., அதுக்கு அந்த சின்ன பொண்ணு.., சரிம்மா! ஆனா, வரும்போது பார்த்து, கவனமா வர வேணாமான்னு கேட்டு ராஜியை வாயடைக்க வச்சிருக்கா!

இப்படியாவது உன் ஃப்ரெண்ட் கொஞ்ச நேரத்துக்கு வாய் மூடி இருந்தா நல்லதுதான்.., 
 


 ம்க்கும் எப்ப பாரு அவளை கிண்டல் பண்ணுறதே பொழப்பா போச்சு..., 

சரி சரி, உன் ஃப்ரெண்ட் பத்தி சொன்னா உனக்கு கோவம் பொத்திக்குக்கிட்டு வருமே! ஆமா, பொங்கல் ல ஏண்டி இப்படி சீரகத்தை கொட்டி வச்சிருக்கே! சீரகம் உங்கப்பனா வாங்கி தரான்?

ம்க்கும் இத்தனை வருசம் கழிச்சும் எங்கப்பா வாங்கித்தரனுமா உங்களுக்கு?! நம்ம உடம்புல இருக்குற எல்லா பார்ட்டையும் சீராக்கி ஹெல்த்தியா வச்சுக்குறதுனாலதான் அதுக்கு சீரகம்ன்னு பேரு..., சமையலுக்கு மணத்தையும்.., உடலுக்கு ஆரோக்கியத்தையும் சீரகம் தருது...,  

* நெஞ்சு எரிச்சலுக்கு வெல்லத்துடன் கலந்து சாப்பிட்டா சரியாகும்..,

* அகத்தி கீரயுடன் சீரகம், சின்ன வெங்காயமும் சேர்த்து கஷாயமாக்கி  சாப்பிட்டா மன நோய் குணமாகும்..,  

* சீரகத்தை எலுமிச்சை சாறுல ஊற வச்சு,  காய வச்சு பொடியாக்கி மோரில் கலந்து சாப்பிட்டு வந்தா மார்பு வலி போகும்..,

* சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி சம அளவு எடுத்து தூளக்கி தேனில் கலந்து சாப்பிட்டா உடல் உறுப்புகள் சீராகி உடல் ஆரோக்கியமா இருக்கும்..,

* சீரகத்துடன், கீழானெல்லி அரைத்து எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வந்தா கல்லீரல் நோய் குணமாகும்..,

* நல்லா காய்ச்சிய நல்ல எண்ணெய், அரிசி, தும்பைப்பூ, சீரக, மிளகு, பூண்டு. இஞ்சி, சாம்பிராணி க்லந்து தலைக்கும், உடலுக்கும் தேய்த்து வந்தால் உடம்பு மிணுமிணுப்பதோடு சுறுசுறுப்பா இருக்கும்..,இதை வாரம் ஒரு முறை இல்லாட்டி மாசம் ஒரு தரம் செஞ்சு வந்தால் நோய் அண்டாது..,

ம்க்கும் இதெல்லாம் எங்கம்மா பாட்டி செஞ்சாங்க.., நீதான் டிவி பொட்டி முன்னாடியும், ஊர்க்கதையும் பேசி பொழுதை வீணடிக்குறே. இதெல்லாம் செஞ்சு புருசனை நல்லா வச்சுக்கனும்ன்னு உனக்கெங்க தெரியப்போகுது?!

ஓ அப்படியா! சரி வர்ற சனிக்கிழமை கொதிக்குற எண்ணேயை அப்படியே தலையில் கொட்டி எண்ணெய் தேச்சு விடுறேன்.., சரியா மாமா!

என்னை கொல்ல பாக்குறாளேளேளேளேளேளே!!!

Wednesday, November 14, 2012

குழந்தைகளால் நிறைந்தது என் உலகம்...,


கடல், யானை, குரங்கு, ரயில், மயில், குழந்தைகள் இது அத்தனையும் பார்க்க பார்க்க சலிக்காது... அதனால சில தொல்லைகள் நாம் அனுபவிச்சு இருந்தாலும் கூட ன்னு என் அம்மா அடிக்கடி சொல்வாங்க.  அது நிஜம்தான் போல. என்னதான் பசங்க பண்றா லூட்டில “ச்ச்சே”ன்னு சலிச்சுக்கிட்டாலும் அவங்க இல்லாம என் வாழ்க்கை முற்று பெற்றிருக்குமான்னு இப்போ யோசிச்சா இல்லைன்னு பதில் கிடைக்கும்.

அதனால, இந்த குழந்தைகள் தினத்தில் நான் ரசித்த சில குட்டீஸ் படத்தை னீங்களும் ரசிக்க பதிவிடுறேன்...,







டிஸ்கி: எல்லா குட்டீசுக்கும் என் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

Thursday, September 13, 2012

அத்திரி பாச்சா கொழுக்கட்டை- பாட்டி சொன்ன கதை


ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தான்.அவனுக்கு பக்கத்து ஊரில் பெண்ணெடுத்து திருமணம் செய்து வைத்தனர். வியாபார விஷயமாக அவன் வெளியூர் சென்று விட்டதால் திருமணம் முடிந்து பலநாள் ஆகியும் அவனால் தன்னுடைய மாமியார் வீட்டுக்கு விருந்துக்குப் போக இயலவில்லை.

பின்னர் ஒருமுறை அவன் வியாபாரம் செய்ய சென்ற ஊரிலிருந்து மிக பக்கமாக அவனுடைய மாமியார் வீடு இருந்ததால் மனைவி இல்லாமல் தான் மட்டும் தனியாக அங்கு போயிருந்தான்.வெகுநாள் கழித்து விருந்துக்கு வந்த மருமகனை மாமியாரும் நன்கு உபசரித்தாள்.வேளைக்கு ஒரு பலகாரம் செய்து அசத்தினாள்.

அதில் மருமகனுக்கு மாமியார் செய்து கொடுத்த கொழுக்கட்டையே மிகவும் பிடித்தமானதாக இருந்தது.மேலும் மேலும் வேண்டுமென்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டவன் இதுவரை தன் மனைவி அதைச் செய்து தந்ததில்லை என்று அதன் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டான்.

விருந்துக்குப் பிறகு கிளம்பியவன் மறந்து விடக்கூடாது என அந்த பலகாரத்தின் பெயரையே மனனம் செய்து உச்சரித்தபடியே நடந்தான்.

வழியில் குறுக்காக ஒரு வாய்க்கால் இருந்தது.அதைத் தாண்டிச் செல்லும் நோக்கில் குதித்தவன் சட்டென்று 'அத்திரி பாச்சா' என்றான்.

மிகப் பிரயத்தனப் பட்டு கடினமான ஒரு வேலையைச் செய்பவர்கள் இப்படி ஏதாவது வார்த்தையைப் பயன்படுத்துவார்கள்.அது போல இவன் வாய்க்காலைத் தாண்டும் போது 'அத்திரி பாச்சா'எனக் கூற பிறகு கொழுக்கட்டைப் பேரை மறந்து அத்திரி பாச்சா எனக் கூறிக் கொண்டே வீட்டுக்குச் சென்றான்.

மனைவியிடம் மாமியார் செய்து தந்த பலகாரத்தின் சுவையை சிலாகித்துக் கூறியவன் எனக்கு அதே போல அத்திரி பாச்சா செய்து கொடு என்றான்.மனைவி குழம்பிப் போனாள்.இதென்ன புதுப் பேராக உள்ளது.இப்படியொரு பலகாரம் எனக்குத் தெரியாதே என்றாள்.

கணவன் திரும்பத் திரும்ப அந்தப் பேரைச் சொல்ல மனைவி தெரியாது என்றே கூற கோபமான அவன் அவள் கன்னத்தில் ஓங்கி அறைய கன்னம் வீங்கிப் போனது.

இதைப் பார்த்த அவன் அம்மா அடப்பாவி இப்படி அடித்து கன்னம் கொழுக்கட்டை போல் வீங்கி விட்டதே எனஅவன் சந்தோஷத்தில் குதித்தபடி அதேதான்....அந்தப் பேர்தான் கொழுக்கட்டை ...கொழுக்கட்டை என்று குதித்தான்.

இவ்வளவு நேரமும் கணவன் கொழுக்கட்டை என்பதைத்தான் பேரை மறந்து அத்திரி பாச்சா என்றான் என்பதை புரிந்து கொண்டவள் அவனுக்கு நிறையச் செய்து கொடுத்தாள்...

குட்டீஸ் உங்களுக்கும் [அத்திரி பாச்சா] கொழுக்கட்டை பிடிக்கும் தானே?


Monday, July 30, 2012

எங்கே தேசப்பற்று?! - ஐஞ்சுவை அவியல்

                               
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா, இந்த ஆடி மாசம் வந்தாலே, சந்து பொந்துல இருக்குற  அம்மன் கோவில்லாம் களை கட்டுது. எல்லா கோவில்லயும் கூழ் ஊத்தி, பாட்டுக்கச்சேரின்னு அவனவன் போட்டி போட்டுக்கிட்டு செய்யுறான். இந்தாங்க மாமா  அம்மன் கூழ், பொங்கல், பிரசாதம்.

ஏம் புள்ள! ரொம்ப வேலையா?! செத்த நாழி சாஞ்சு, ரெஸ்ட் எடுத்துக்கோ. ஆமா, எல்லா மாசத்தையும் விட்டுட்டு இந்த ஆடி மாசத்துல ஏன் கூழ் ஊத்துறாங்கன்னு உனக்கு தெரியுமா புள்ள?

 தெரியாதுங்க மாமா, என் பாட்டி சொன்னாங்கன்னு அம்மா ஊத்துனாங்க, அம்மா சொன்னாங்கன்னு நான் ஊத்துறேனுங்க.

அப்படிலாம் பொத்தம் பொதுவா செய்யக்கூடாது. ஒரு செயலை செய்யும்போது அது ஏன் செய்யுறோம்? எதுக்காக செய்யுறோம்ன்னு தெரிஞ்சுக்கிட்டு செய்யனும். அப்போதோன் அதோட பலன் நமக்கு கிடைக்கும்.

சரிங்க மாமா சொல்லுங்க. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க, நானும் தெரிஞ்சுக்குறேன்.

ம்ம் இப்படி பக்கத்துல வந்து உக்காரு..., உன் வேலை செஞ்சு களைச்சு போன உன் கை, காலை குடு இதமா பிடிச்சு விட்டுக்கிட்டே சொல்றேன். கேட்டுக்கோ.

ஐயையோ, பொம்பளை  காலை நீங்க பிடிக்குறதா? போங்க மாமா, அதெல்லாம் தப்பு..,

 ஒரு தப்புமில்ல புள்ள, நான் உம்மேல வெச்சுருக்குற பாசத்தை உனக்கு காட்ட ஒரு சந்தர்ப்பம்ன்னு நினைச்சுக்கோ, ம்ம் குடு..., பிடிச்சு விடுறது வலிச்சா மட்டும் சொல்லு, இப்போ நான் சொல்றதை கேளு.

ம்ம்ம் சரிங்க மோமோய்...,

ஆடி மாசம்ன்னாலே அம்மன் கோயில்களில் திருவிழாவும், கூழ் ஊத்துறதும் வழக்கம், இது ஏன்ன்னா ..  ஆடி மாசம் வீசுற  காத்துல வேகம் அதிகமா இருக்கும். அதனால  எங்க பார்த்தாலும்  தூசியாக இருக்கும். இதனால, இருமல், டஸ்ட் அலர்ஜி, சைனஸ் போல பல நோய்கள் வரலாம். இதை வராம தடுக்கவே மாரியம்மன் கோயில்ல ஆடி மாசம் முழுவதும் கூழ் ஊத்துவாங்க. 

 இதை,  ஆடிக்கஞ்சின்னு அந்த காலத்துல சொல்வாங்க. . அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகம், குன்னிவேர், உழிஞ்சி வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர் இதையெல்லாம்  லேசாகத் தட்டி எடுத்து, ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வெச்சுக்கனும்.அரிசியைக் கஞ்சியாக வேகவெச்சு, அதுல,   துணியில இருக்குற  மருந்துகளைப் பிழியணும்;  இல்லைனா கஞ்சிக்குள்ள அந்தத் துணிப் பொட்டலத்தைச் சிறிது நேரம் போட்டு ஊறவைத்து, எடுத்துடனும். அதைத்தான் ஆடிக் கஞ்சியைப் பரிமாறனும்.  இதையே எல்லாரும் ஃபாலோ பண்ணா நல்லது. ஆனா, இப்பலாம் இந்த மருந்தையெல்லாம் சேகரிச்சு இடிச்சு கஞ்சி பண்ண சோம்பேறித்தனம் பட்டுக்கிட்டு கம்மங்கூழ் காய்ச்சு ஊத்திடறாங்க.

அப்படியா மாமா! இனிமே நான் அதேப்போல செய்யுறேன். ஆமா, உங்களுக்கு எப்படி தெரியும். 

அதுவா, போன வருசம் நம்ம கோவில்ல பிரசங்கம் பண்ண பெரியவர் சொன்னார்.

ஓ, ஏனுங்க மாமா இன்னிக்கு டிவில நியூஸ் வாசிக்குறதை பார்த்தீங்களா மாமா?

இல்ல புள்ள, வெளில வேலை இருக்கவே பார்க்கலை என்ன புள்ள?

                                        
 நம்ம ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துல,  சம்பா மாவட்டத்துல, 20 அடி ஆழமுள்ள சுரங்கப்பாதை ஒண்ணு  கண்டுபிடிச்சிருக்காங்களாம். அந்த ஊர் கிராமவாசி ஒருத்தங்க கொடுத்த தகவல்னால, ராணுவத்தினர், அந்த சுரங்கத்தை ஆய்வு செய்ஞ்ச போது, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில இருந்து இந்திய எல்லைக்குள் 100 மீட்டர் வரை  சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது தெரியவந்திருக்கு. அதுல, ஒயர்களும் புதைச்சிருக்காங்களாம். அந்த சுரங்கம் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள்ள  ஊடுருவதற்கு யூஸ் பண்ணாங்களான்னு   போலீஸார் விசாரணை நடத்தி வர்றாங்களாம்.  

இப்படி யாரோ ஒரு சிலர் கவனக்குறைவினாலயும், பணத்துக்கு ஆசைப்பட்டு ஹெல்ப் பண்ணதாலயும் பல்லாயிரக்கணக்கான வீரர்களின் தேசப்பற்றும், உழைப்பும் கேலிக்கு ஆளானதாலயும், தேசத்தின் பாதுகாப்பும் கேள்விக்குரியதா மாறுதே.

சில ஆயிரங்கள் சம்பளமா வாங்கியும், குடும்பத்தாரை விட்டு, கடும் குளிர், வேக வைக்கும் வெயில்லயும் வெந்து நாட்டுப்பற்றோடு நாட்டுக்காக  உயிரையும் துச்சமா நினைச்சு போராடும் மனிதர்கள் இருக்குற இதே நாட்டில்.....,  கோடி கோடியா    பணத்தையும், அதுக்கு மேல புகழையும் சம்பாதிச்சு, இப்போ பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை கட்டிக்கிட்ட இந்த இந்திய பொண்ணுக்கு நம்ம நாட்டு பற்று துளிக்கூட இல்லைன்னு இந்த படத்தை பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்.

ஒலிம்பிக்ல எல்லா நாட்டு வீரர்களின் அணிவகுப்பு நடக்கும்போது, நம்ம நாட்டு வீரர்கள் தங்கள் கைகளில் நம்ம நாட்டு தேசியக்கொடியை பிடிச்சுக்கிட்டு போனாங்க மாமா. ஆனா, இந்த பொண்ணு...., ம்ம்ம் யாரை குத்தம் சொல்றதுன்னே தெரியலை மாமா.                        

ம் ம் ம் நீ சொல்றதுல உண்மைதான் புள்ள. சீரியசா பேசிட்டதால, ஒரு ஜோக் சொல்றேன் ஒருத்தன் ஒரு கார் டிரைவர் தன் முதலாளிக்கிட்ட: சாரி சார் பெட்ரோல் போட மறந்திட்டேன். கார் ஒரு அடி கூட முன்னால போகாதுன்னு சொல்றான். அதுக்கு அந்த காரோட  ஓனர்  உன்னை மாதிரியே  தத்தி  போல, சரி.. சரி..விடு ரிவர்ஸ்லயே காரை வீட்டுக்கு விடுன்னு சொன்னாராம்.

ம்க்கும் நானா மாமா தத்தி? ஒரு கணக்கு கேள்வி கேக்குறேன் பதில் சொல்லுங்க பார்க்கலாம்?

கேளு புள்ள...,

ஒரு வியாபாரி, ஒரு கூடையில மாம்பழங்களை எடுத்துக்கிட்டு  விற்க போனார். முதல்ல Aன்றவர் கூடையில இருந்து ஒண்ணை தவிர மத்த பழங்களில் பாதியை வாங்கிக்கிட்டார். அடுத்து, Bன்றவர் மீதி இருக்குற பழங்களில் பாதியை வாங்கிக்கிட்டார். கடைசியா, Cன்றவர் மிச்சம் இருக்குற பழங்களில் பாதியை வாங்கிகிட்டார். அப்படின்னா, வியாபாரி கூடையில் மொத்தம்  எத்தனை பழம் எடுத்துக்கிட்டு போனார்?

ம்ம்ம்ம் அது வந்து..., அது வந்து விடை...,

இரு இரு நிதானமா யோசிச்சு சொல்லு. நேத்து உன் ஃபிரண்ட் ராஜி வீட்டுக்கு போய் பேசிக்கிட்டு இருந்தேன். அங்க, நம்ம ராஜியோட சின்ன பொண்ணு  இனியா பத்தி பேச்சு வந்துச்சு. அவளுக்கு 4 இல்ல 5 வயசிருக்கும்போது அவ காலைல அவ அப்பா ஆபீஸ் கிளம்பும்போது, அவ தன் அப்பாக்கிட்ட டெடி பியர் பொம்மை கேட்டிருக்கா. அவ, அப்பா ஆபீஸ் டென்சன்ல மறந்துட்டார். வீட்டுக்கும் வரவும் நைட் 11 மணி ஆகிடுச்சாம். இனியா தூங்காம முழிச்சுக்கிட்டு இருந்திருக்கா.

ம்ம்ம்ம் அப்புறம்...,

அவ அப்பா வந்ததும், தன் அப்பாக்கிட்ட ஏன் பொம்மை வாங்கி வரலைன்னு  கேட்டு அடம்பிடிச்சு இருக்கா. அவ அப்பா, டென்ஷன்ல  ஏய், நான் ஆபீசுல இருந்து கிளம்ப 10 மணி ஆகிட்டுது. பத்து மணிக்கு ஈ, காக்கா கூட கடைத்தெருவுல இருக்காது. அப்படி இருக்க எப்படி வாங்கி வ்ர்றது?ன்னு கோவமா கேட்டிருக்கார்.

அதுக்கு அவ, சடார்ன்னு நான் உங்களை ஈ, காக்காவா கேட்டேன், பொம்மைதானேன்னு கேட்டேன்னு ,மழலை மாறாம கேட்டதுல டென்ஷம் மறந்து எல்லாரும் சிரிச்சதுமில்லாம, மறுநாளே பொம்மையை மறக்காம வாங்கியும் குடுத்துட்டாராம்.

ஹா ஹா, பசங்க குறும்புத்தனங்களை எம்புட்டு வருசமானாலும் மறக்க முடியாதுங்க மாமோய்,  குடும்பத்துல பிள்ளைங்க பண்ற குறும்புலாம் சுகம்ன்னா, சமைக்குறது ரொம்ப கொடுமைங்க மாமா.

ஏன் புள்ள அப்படி சொல்றே. சின்ன சின்ன விசயத்துல கவனம் செலுத்தி வேலை செஞ்சா அதுவும் ஒரு அழகான கலையே. அப்புறம் நீயே சமைக்க அலுத்துக்காம சுகமா எடுத்துக்குவே.

எப்படி சொல்றீங்க மாமா?
                                       

கூடையில  வைக்குற  உருளைக்கிழங்கு முளை விடாம இருக்க, கூடவே, கூடையில ஒரு ஆப்பிள் பழத்தையும் போட்டு வெச்சா சீக்கிரம் முளை விடாது. சப்பாத்தி மாவு பிசையும்போது கால் பங்கு சோயா மாவு சேர்த்துக்கிட்டா சுவையும் கூடும் குழந்தைகளுக்கு புரோட்டினும் கிடைக்கும். வாழைக்காய் வெட்டும்போது கையில இருக்குற பிசுபிசுப்பு போக தயிர் ஊத்தி கழுவலாம். உரல், அம்மி, கிரைண்டர்ன்னு புதுசா வாங்குனா அதுல எடுத்த உடனே இட்லி, தோசைக்கு மாவு அரைக்காம தவிடு போட்டு அரைச்ச பின்னாடி அரைக்கனும். அப்படி செய்யலைன்னா ஆட்டுக்குக்கல்லில் இருக்குற கண்ணுக்கு தெரியாத சின்ன கல்துகள்கள்லாம் மாவுல வந்து மாவே வேஸ்டாகிடும். இப்பலாம் தவிடு எல்லா இடத்துலயும் கிடைக்குறதுல்லை. தவிடு கிடைக்காதவங்க பெரிய வெங்காயம் போட்டு ஆட்டி எடுத்தா கல்லுலாம் வந்துடும்.

சரிங்க மாமா! இனி சின்ன சின்ன விசயத்துலலாம் அக்கறை எடுத்து  பார்த்துக்குறேன். உடம்பு வலிலாம் போன இடமே தெரியலை மாமா. நீங்க கால் பிடிச்சு விட்டதுல மனசும் தெம்பாகிடுச்சு. நான் போய் வீட்டு வேலை பார்க்குறேன்.

சரி புள்ள! எனக்கும் கொஞ்சம் கடைத்தெருக்கு போற வேலை இருக்கு. அப்புறம் பேசலாம்.