Showing posts with label டயட். Show all posts
Showing posts with label டயட். Show all posts

Tuesday, December 10, 2013

கொள்ளு துவையல் - கிச்சன் கார்னர்

இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு க்கொள்ளுன்னு ஒரு பழமொழி தமிழ்ல உண்டு. அதாவது, மெல்லிசா இருக்குறவங்க எள்ளை தினசரி சாப்பாட்டுல சேர்த்துக்கிட்டா சதைப்பிடிக்கும்ன்னு சொல்லுவாங்க. அதேப்போல, குண்டா இருக்குறவங்க கொள்ளை சாப்பிட்டா உடல் இளைக்கும்ன்னு சொல்லுவாங்க.

நான் கொஞ்சம் பூசுனாப்புல இருக்குறது என் குடும்பத்துக்கே பிடிக்கலைப் போல!! உடம்பு வெயிட்டைக் குறைன்னு வீட்டுல ஒரே டார்ச்சர். அதனால, டெய்லியும் சாப்பாட்டுல கொள்ளை சேர்த்துக்க சொல்லி வாங்கி வந்து கொடுத்தாங்க. தினமும் கொள்ளு கஞ்சி, கொள்ளு சாம்பார், ரசம்ன்னு வச்சு சாப்பிட்டா, டப்பாவுல இருந்த கொள்ளுதான் குறைஞ்சதே தவிர, உடம்பு வெயிட் குறைஞ்ச பாடில்லை. இருந்தாலும் அம்மா, அப்பா பேச்சை மீறாம தினமும் எப்படியாவது கொள்ளை சாப்பாட்டுல சேர்த்துப்பேன்.

கஞ்சி, ரசம்னு வச்சு சாப்பிடுறதை விட துவையல் வச்சு சாப்புடுறது எனக்கும், வீட்டாளுங்களுக்கும் பிடிக்கும். காய் எதூமில்லாட்டி இந்த துவையல்தான் எங்க வீட்டுல சைட் டிஷ்.

தேவையான பொருட்கள்:
கொள்ளு- கைப்பிடி
மிளகாய் - 4
வெங்காயம் - 1
தக்காளி - 1
புளி - சுண்டைக்காய் அளாவு,
பூண்டு - 4 பல்
தேங்காய் - 1 பத்தை,
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 ஸ்பூன்
கொள்ளு வாங்கும்போது இப்படி முழுசா இருக்கும். அதை அப்படியே யூஸ் பண்ணக்கூடாது. அதனால, வெறும் வாணலில வறுத்து, கொள்ளு சிவந்ததும் எடுத்து ஆற வச்சு அதோட தோல்லாம் எடுத்துட்டு பாட்டில்ல வச்சுக்கிட்டா வருசம் ஆனாலும் பூச்சி பிடிக்காது.
வறுத்து தோல் நீக்கி சுத்தம் பண்ண கொள்ளு. 

கடாயில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கொள்ளு, மிளகாய் போட்டு வறுத்துக்கோங்க. (படம் எடுக்கும் ஜோருல நான் மிளகாயை போட மறந்துட்டு  அப்புறமா, பாதி அரைச்சதும் நினைவு வந்து மிளகாயை வறுத்து அரைச்சேன்.)
நறுக்குன வெங்காயம் சேர்த்து லேசா வதக்கிங்கோங்க. பொன்னிறமாகனும்ன்னு அவசியமில்ல

அடுத்து பூண்டு சேர்த்துக்கோங்க.

அடுத்து தக்காளி சேர்த்து தக்காளி வேகும் வரை வதக்கிங்கோங்க.
தக்காளி வெந்ததும் தேங்காய் சேருங்க.

அடுத்து புளி சேருங்க.
மறக்காம தேவையான அளவு உப்பு சேர்த்து, அடுப்பிலிருந்து இறக்கி சூடு ஆறினதும், வறுத்தவைகளோடு தண்ணி சேர்த்து, மிக்சில போட்டு அரைச்சுக்கோங்க.
சுவையான கொள்ளுத் துவையல் ரெடி. சூடானச் சாதத்துல நெய்யோடு இந்த துவையை சேர்த்து சாப்பிட்டால் செமயா இருக்கும். 

அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான ரெசிபியோட வரேன். இப்ப, டாட்டா, பை பை, சீ யூ.