செவ்வாய், டிசம்பர் 10, 2013

கொள்ளு துவையல் - கிச்சன் கார்னர்

இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு க்கொள்ளுன்னு ஒரு பழமொழி தமிழ்ல உண்டு. அதாவது, மெல்லிசா இருக்குறவங்க எள்ளை தினசரி சாப்பாட்டுல சேர்த்துக்கிட்டா சதைப்பிடிக்கும்ன்னு சொல்லுவாங்க. அதேப்போல, குண்டா இருக்குறவங்க கொள்ளை சாப்பிட்டா உடல் இளைக்கும்ன்னு சொல்லுவாங்க.

நான் கொஞ்சம் பூசுனாப்புல இருக்குறது என் குடும்பத்துக்கே பிடிக்கலைப் போல!! உடம்பு வெயிட்டைக் குறைன்னு வீட்டுல ஒரே டார்ச்சர். அதனால, டெய்லியும் சாப்பாட்டுல கொள்ளை சேர்த்துக்க சொல்லி வாங்கி வந்து கொடுத்தாங்க. தினமும் கொள்ளு கஞ்சி, கொள்ளு சாம்பார், ரசம்ன்னு வச்சு சாப்பிட்டா, டப்பாவுல இருந்த கொள்ளுதான் குறைஞ்சதே தவிர, உடம்பு வெயிட் குறைஞ்ச பாடில்லை. இருந்தாலும் அம்மா, அப்பா பேச்சை மீறாம தினமும் எப்படியாவது கொள்ளை சாப்பாட்டுல சேர்த்துப்பேன்.

கஞ்சி, ரசம்னு வச்சு சாப்பிடுறதை விட துவையல் வச்சு சாப்புடுறது எனக்கும், வீட்டாளுங்களுக்கும் பிடிக்கும். காய் எதூமில்லாட்டி இந்த துவையல்தான் எங்க வீட்டுல சைட் டிஷ்.

தேவையான பொருட்கள்:
கொள்ளு- கைப்பிடி
மிளகாய் - 4
வெங்காயம் - 1
தக்காளி - 1
புளி - சுண்டைக்காய் அளாவு,
பூண்டு - 4 பல்
தேங்காய் - 1 பத்தை,
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 ஸ்பூன்
கொள்ளு வாங்கும்போது இப்படி முழுசா இருக்கும். அதை அப்படியே யூஸ் பண்ணக்கூடாது. அதனால, வெறும் வாணலில வறுத்து, கொள்ளு சிவந்ததும் எடுத்து ஆற வச்சு அதோட தோல்லாம் எடுத்துட்டு பாட்டில்ல வச்சுக்கிட்டா வருசம் ஆனாலும் பூச்சி பிடிக்காது.
வறுத்து தோல் நீக்கி சுத்தம் பண்ண கொள்ளு. 

கடாயில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கொள்ளு, மிளகாய் போட்டு வறுத்துக்கோங்க. (படம் எடுக்கும் ஜோருல நான் மிளகாயை போட மறந்துட்டு  அப்புறமா, பாதி அரைச்சதும் நினைவு வந்து மிளகாயை வறுத்து அரைச்சேன்.)
நறுக்குன வெங்காயம் சேர்த்து லேசா வதக்கிங்கோங்க. பொன்னிறமாகனும்ன்னு அவசியமில்ல

அடுத்து பூண்டு சேர்த்துக்கோங்க.

அடுத்து தக்காளி சேர்த்து தக்காளி வேகும் வரை வதக்கிங்கோங்க.
தக்காளி வெந்ததும் தேங்காய் சேருங்க.

அடுத்து புளி சேருங்க.
மறக்காம தேவையான அளவு உப்பு சேர்த்து, அடுப்பிலிருந்து இறக்கி சூடு ஆறினதும், வறுத்தவைகளோடு தண்ணி சேர்த்து, மிக்சில போட்டு அரைச்சுக்கோங்க.
சுவையான கொள்ளுத் துவையல் ரெடி. சூடானச் சாதத்துல நெய்யோடு இந்த துவையை சேர்த்து சாப்பிட்டால் செமயா இருக்கும். 

அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான ரெசிபியோட வரேன். இப்ப, டாட்டா, பை பை, சீ யூ.

32 கருத்துகள்:

 1. எங்கள் வீட்டம்மா கொள்ளை சுண்டல் மாதிரி செய்வாங்க. வேக வச்ச நீரை ரசத்துக்கு உபயோகிப்பார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாங்களும் சுண்டல் செய்வோம். ஆனா, துவையல்தான் அதிகமா செய்யுறது.

   நீக்கு
 2. ராஜி..கொள்ளில் அல்வா செய்ய்முறையை சொல்லுங்கப்பா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். நீங்க சொல்லுங்க, நான் செஞ்சு பார்த்துட்டு அப்புறம் பதிவா போடுறேன்.

   நீக்கு
 3. டப்பாவுல இருந்த கொள்ளுதான் குறைஞ்சதே தவிர, உடம்பு வெயிட் குறைஞ்ச பாடில்லை. ///
  ரசித்து சிரித்தேன். ஏதாவது மனம் தளராம முயற்சி பண்ணிடே இருப்போம்.
  ராஜி , என்னோட சமையல் சூத்திரங்கள் - பொடி வகைகள் பகுதில கொள்ளு பொடி
  பகிர்ந்து இருக்கேன். வேலைக்கு ஆகுமான்னு பாருங்க ??!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பா பார்க்குறேன் தோழி!

   நீக்கு
 4. அக்கா சரியான சமயத்துல சரியான receipe. உடம்பு குறைக்க try பண்ணிட்டு இருக்கேன், செய்து பார்த்து சாப்பிட்டு உடம்பு குறைந்ததும் கண்டிப்பாக நன்றி சொல்லி comments சொல்லுறேன்,
  அக்காவுக்கு ஏத்த தங்கை( உடம்பாலா!!!)குண்டு உடம்பு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம் எதாவது செஞ்சி சீக்கிரம் உடம்பை குறைச்சுடனும்!!

   நீக்கு
 5. நல்ல கார சாரமான துவையல் செய்து விட வேண்டயது தான்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சீக்கிரம் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. வெறும் ரசம் சாதத்துக்கு இந்த துவையல் நல்ல காம்பினேஷன்!!

   நீக்கு
 6. கொள்ளு வாங்கிக் கிடக்கு ரசம் வைக்க... ஆனா இதுவரை செய்யவில்லை... இந்த வாரம் கொள்ளு துவையல்தான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

   நீக்கு
 7. அக்காவுக்கும் தங்கைக்கும் என்ன பண்ணினா உடம்பைக் குறைக்கலாம் என்று தெரியவில்லை அதனால உடம்பை குறைக்க இதை சாப்பிட்டா சரியா ஆகிவிடும் அதை சாப்பிட்டா சரியா ஆகிவிடும் என்று நினைத்து எதையாவது சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் என்ன பண்ணினால் உடம்பைக் குறைக்கலாம் என்று நான் சொல்லுகிறேன் அதை கடை பிடித்துவிட்டுச் பாருங்கள் எவ்வளவு எடை குறைகிறீர்கள் என்று...

  அது ரொம்ப சிம்பிள்தானுங்க தினமும் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு வாருங்கள் அப்புறம் பாருங்கள் நீங்கள் அடுத்த ஐஸ்வ்ர்யா ராய்... tha.ma 4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐஸ்வர்யா ராய்லாம் ஆக வேணாம். வீட்டு வாசப்படியை இடிச்சு கட்டாம இருந்தாப் போதும்!!

   நீக்கு
 8. //அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான ரெசிபியோட வரேன். // இதுவே ஈசியா தானே இருக்கு..?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதைவிடவும் ஈசியா வேற எதாவது இருக்கான்னு பார்க்குறென் ஆவி

   நீக்கு
 9. கொள்ளுத் துவையல் அடிக்கடி ருசிக்கும் துவையல்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படிங்களாண்ணா! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா!

   நீக்கு
 10. படங்களுடன் செய்முறை விளக்கத்திற்கு நன்றி சகோதரி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணா!

   நீக்கு
 11. நேர்மையா சொல்லிட்டீங்க..... சத்தியமா வெயிட் குறையாதுன்னு!
  தேங்க்ஸ்... :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பா வெயிட் குறையும். டயட்டோடு உடற்பயிற்சியும் இருந்தால்!! நான் உடற்பயிற்சி செய்வதே இல்லையே! அப்புறம் எப்படி நல்ல ரிசல்ட் கிடைக்கும்!?

   நீக்கு
 12. கொள்ளு சாப்பிட்டா குதிரை போல் ஓடலாம்ன்னு சொல்வாங்க ..டிரை பண்ணுங்க ,,உடம்பு கட்டாயம் குறையும் !
  த.ம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்து அதான் ட்ரை பண்ணனும்

   நீக்கு
 13. நானும் செய்து பார்க்கிறேன் தோழி.

  ஆனால் இப்படிப்பட்ட சுவையான சட்னி செய்தால் கூட ரெண்டு இட்லி உள்ளே போகும். அதற்கு என்ன செய்வதாம்?

  பதிலளிநீக்கு
 14. நல்லதொரு குறிப்பு... செய்து தான் சாப்பிடணும்...:)

  பதிலளிநீக்கு
 15. என் வீட்டு அம்மணிக்கு, இந்த பதிவை காமித்தேன். உங்களுக்கு பெரிய புகழ் மாலையே சூட்டி விட்டார்கள். ஏன்னா அவுங்களுக்கு யாரும் இந்த அளவிற்கு சொல்லிக் கொடுத்தது இல்லையாம். அவர்கள் சார்பாக நன்றியை தெரிவிக்க சொன்னார்கள். தெரிவித்து விட்டேன் (என் கடமை முடிந்தது!!!!).

  பதிலளிநீக்கு
 16. இப்போது தான் சமையல் பன்ன கத்துக்கிட்டு இருக்கேன் கொள்ளு துவயல் நன்றாக வந்து இருந்தது.நன்றி

  பதிலளிநீக்கு
 17. உடம்மை குறைக்க சின்னதா ஒரு எக்சசைஸ் !!!
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  தலையை வலதுபக்கமும் இடது பக்கமும் ஆட்டனும்,..... எப்பல்லாம் செய்யணும்னா...!
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  யாரவது எதாவது சாப்பிட கொடுக்கும் போது மட்டும்.

  - சிவகுமார், தஞ்சாவூர்.

  பதிலளிநீக்கு
 18. உடம்பு குறைந்ததா? இல்லையா ராஜூ?

  பதிலளிநீக்கு