சன்லைஃப் சேனல்ல தினமும் மதியம் 3 மணில இருந்து 5 மணி வரை வானவில், உங்கள் சாய்ஸ், நெஞ்சை தொட்ட பாடல், கிளாசிக் பாடல்கள்ன்னு திகட்ட திகட்ட70, 80, 90களில் வந்த பாடல்களை ஒளி(லி) பரப்புறாங்க. வூட்டுக்காரர், பசங்க, நியூஸ், ஸ்போர்ட்ஸ் சேனல்ன்னு எந்த இம்சையும் இல்லாம ரசிச்சு கேக்கலாம்.
----------------------------------------------
வேந்தர் டிவில தினமும் இரவு “மூண்றாவது கண்”ன்னு ஒரு நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை 9.30க்கு ஒளிப்பரப்பாகுது. அதிகம் அறியப்படாத ஊர்களில் சித்தர்கள் நடமாடிய இடங்கள் , வித்தியசமாய் குறி சொல்லும் இடங்கள், அமானுஷ்யமான விசயங்கள் பத்திலாம் ஒளிபரப்புறாங்க. வித்தியாசமாவும், ரசிக்கும்படியாவும் இருக்கு. போன வாரம் முழுக்க கோவை பக்கத்துல இருக்கும் வெள்ளியங்கிரி பத்தியும், சதுரகிரி சித்தர்கள் காடு பத்தியும் போட்டாங்க. ஒருவேளை நைட்ல பார்க்க முடியாதவங்களுக்காக பகல் வேளைல 12.30வரை மறுஒளிபரப்பு பண்ணுறாங்க.
----------------------------------------------------------
மக்கள் தொலைக்காட்சியில் ”4+2” ன்னு ஞாயிறு மதியம் 11.30க்கு ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்புறாங்க. இதுல இரு சக்கர, நாலு சக்கர வண்டி பத்தி எல்லாத்தையும் அலசி காய வைக்குறாங்க. மைலேஜ், இஞ்சின், சீட், எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க், டெக்னிக்கல் விஷயங்கள்ன்னு எல்லா விசயங்கள் பத்தியும் அழகு தமிழ்ல சொல்றாங்க. வண்டி வாங்க நினைப்பவங்க அவசியம் பாருங்க
--------------------------------------------------------------
கேப்டன் டிவில திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.55க்கு “புத்துணர்ச்சி தரும் யோகா”ன்னு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. இதை செல்வி.லட்சுமி ஆண்டியப்பன் நடத்துறங்க. உடலை ஆரோக்கியமா வச்சுக்க தேவையான பயிற்சிகளை செஞ்சு காட்டுறாங்க, சின்னவங்க, பெரியவங்க, கர்ப்பிணிகளுக்கான யோகா பயிற்சிகளை காரண காரியங்களோடு விளக்கி பயிற்சிகளை செஞ்சும் காட்டுறாங்க.
-----------------------------------------------------------------------
பொதிகை சேனல்ல “கல்லூரி காலங்கள்”ன்ற நிகழ்ச்சியை இறையன்பு. I.A.S அவர்கள் தொகுத்து வழங்குறார். ஒவ்வொரு மனுசனோட வாழ்க்கையில் 15 முதல் 25வரையிலான காலகட்டம் மிக முக்கியமானது. தான் பிற்காலத்துல என்னவாகனும், மேற்படிப்பு, வேலை வாய்ப்பு, இண்டர்வியூன்னு இது நீளும். இந்த காலகட்டத்தை எப்படி மேம்படுத்திக்கனும்ன்னு மாணவர்களுக்கு தனக்கே உண்டான பாணியில் எளிய நடையில் எடுத்து சொல்றார். நினைவாற்றல், தேசபக்தி, வரலாறு, பக்தி, ஆன்மீகம், கம்யூனிசம் எதை பத்தியும் பொறுமையா எடுத்து சொன்னால் இன்றைய இளைஞர்கள் புரிஞ்சுப்பாங்க. கண்டிப்பா நல்லதை ஏத்துக்குவாங்கன்னு நம்பிக்கையாய் சொல்றார். இந்த நிகழ்ச்சி வார நாட்கள்ல இரவு 10.30 முதல் 11 மணி வரை ஒளிப்பரப்பாகுது.
--------------------------------------------------------
விஜய் டிவில தினமும் காலைல 7 மணிக்கு ”பாட்டி வைத்தியம்”ன்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. பேருதான் பாட்டி வைத்தியமே தவிர ”ரேவதி சந்திரன்”ன்ற ஆன்டிதான் நிகழ்ச்சியை நடத்துறாங்க. இன்றைய காலகட்டத்துல சின்ன சின்ன உடல் உபாதைக்குலாம் டாக்டரை தேடிப்போய் ஆயிரக்கணக்குல செலவு பண்ணுறொம். கூட்டு குடும்பமாய் இருந்த காலத்துல வீட்டுல இருந்த பொருட்களைக் கொண்டே சின்ன சின்ன உடல் உபாதைகளை தீர்த்துக்கிட்டாங்க. ம்ம்ம்ம் எல்லாத்துக்கும் விலை கொடுக்க வேண்டி இருக்குல்ல. இனி, இந்த நிகழ்ச்சிய பார்த்து குறிப்பெடுத்து வச்சுக்கிட்டா நமக்கும் யூஸ் ஆகுமில்ல.!!
-----------------------------------------------------------------
அடுத்த வாரம் கேபிள் கலாட்டா வரும். அதுக்கு முன்ன ஒரு விசயத்தை சொல்லிக்க விரும்புறேனுங்க சகோ’ஸ். எனக்கு டிவி பார்க்க பிடிக்காது. வர்ட்ட்ட்டா!!




