ஜீ தமிழ் தொலைக்காட்சில திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2 மணிக்கு ஹோம் மினிஸ்டர்ன்னு ஒரு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. பெண்களின் ஆளுமைத் திறனையும், அறிவாற்றலையும், நகைச்சுவை உணர்வையும் வெளிப்படுத்தும் விதமா பல விளையாட்டுக்கள் இந்நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பாகுது. தங்களின், வயசு, கவலைலாம் மறந்து சிறு குழந்தையாய் மாறி, தன் குடும்பத்தினர் முன் திறமை வெளிப்படுவத்த பெண்கள் விளையாடுவது ரசிக்க வைக்குது.
மக்கள் தொலைக்காட்சியில் ஞாயித்துக்கிழமைல 11.30 மணிக்கு “அச்சம் தவிர்”ன்னு ஒரு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. எதையாவது சாதிக்கத் துடிப்பவர்களின் வித்தியாசமான திறமைகளை வெளிக்கொணரும் நிகழ்ச்சியாய் இது இருக்கு. பல்லால் காரை இழுப்பது, கண்களைக் கட்டிக்கொண்டு வண்டி ஓட்டுவது, மொசைக் கற்களை வெறும் கையால் உடைப்பது என நிகழ்ச்சி சுவாரசியாமாய் செல்லுது. சுவாரசியமாய் இருந்தாலும் பல சமயம் நம் இதயத்துடிப்பை எகிற வைக்குது. சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாம இதுப்போல முயற்சி செய்ய வேணம்ன்னு அவங்களே எச்சரிக்கையும் கொடுத்துடுறாங்க. பெரும்பாலும் இந்நிகழ்ச்சில கிராமத்து இளைஞர்கள்தான் தங்கள் திறமைகளை காட்டுறாங்க.
கேப்டன் தொலைக்காட்சியில் பயணம்ன்னு ஒரு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. அதுல நம்ம கடல் பயணங்கள் சுரேஷ்குமாருக்கு போட்டியா ”கருணா”ன்ற ஒருத்தர் இந்தியாவில் இருக்கும் சுற்றுலா தளங்களுக்குலாம் போய் அங்க இருக்கும் மக்களின், கலை, கலாச்சாரம், அந்த இடத்தின் சிறப்பு, சாப்பாடு, ஹோட்டல்ன்னு விளக்கமா சொல்லி நம்மை அந்த இடத்துக்கு போகும் ஆசையை தூண்டுறார்.
திங்கள் முதல் வெள்ளி வரை சன் தொலைக்காட்சியில் காலை 6.55க்கு ஆன்மீக கதைகள்ன்ற ஒரு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. அதுல ஜோதிட சிகாமணி சிவக்குமார் என்பவர் எளிய நடையில் ஜென் கதைகள் முதல் கீதாச்சாரம் வரை அழகா சொல்றார். பரபரப்பான காலை வேளையிலும் அந்த அஞ்சு நிமிசம் ஒதுக்கி நிகழ்ச்சியை விடாமல் பார்க்க வைக்குது அவரின் பேச்சு. நீங்களும் ஒரு முறை பாருங்க..., தொடர்ந்து பார்க்கவும், யோசிக்கவும் செய்வீங்க.
முன்னலாம் நீயா நானா, காஃபி வித் அனு, தமிழ் பேசுங்க ஒரு லட்சம் வெல்லுங்க, நம்ம வீட்டு கல்யாணம் மாதிரியான நல்ல பொழுது போக்கு நிகழ்ச்சிகளும், அறிவுப்பூர்வமான நிகழ்ச்சிகளும் விஜய் டிவில வந்துச்சு. கொஞ்சம் கொஞ்சமா இந்த நிகழ்ச்சிகளும் இப்பலாம் எரிச்சலைத் தருது. சேனல் மாத்திக்கிட்டு வரும்போது என்ன நிகழ்ச்சின்னு தெரியல ரோபோ சங்கர்லாம் இருந்ததால கொஞ்ச நேரம் பார்க்கலாமேன்னு பார்த்தேன்.
நீங்க ஃபர்ஸ்ட் நைட்டுக்குப் பால் கொண்டுப் போனீங்களா!?ன்னு அறிவார்த்தமா நடுவரா வந்தவர் கேட்க, பால்லாம் கொண்டு போகலை நானே போய்ட்டேன்னு நிகழ்ச்சில பங்கு பெற்றவர் திறமையா பதில் சொல்ல, சுத்தி இருந்தவங்கலாம் ஆஹா! ஓஹோ!ன்னு கைத்தட்ட, ஒருதரம் எப்படி ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்குள்ளப் போனீங்கன்னு நடிச்சுக்காட்டுங்கன்னு நடுவர் சொல்ல...., அதுக்கு மேல எதாவது சொல்லிடுவாங்களோ!! பசங்களாம் டிவி பார்க்குதுங்களேன்னு நான் சேனலை மாத்திட்டு வந்துட்டேன். இந்த விஜய் டிவிக்கு என்ன ஆச்சு!?

.jpg)