Showing posts with label பக்தி. Show all posts
Showing posts with label பக்தி. Show all posts

Thursday, March 29, 2018

அகிம்சையை போதித்த பகவான் மகாவீர்

மகாவீர் ஜெயந்தின்னா என்னன்னு கேட்டா.. லீவ் விடுவாங்க, அன்னிக்கு அசைவக்கடை, சரக்கு கடை இருக்காது. இதுதான் பதிலா இருக்கும். கொஞ்சம் படிச்ச ஆட்கள்கிட்ட கேட்டா, புத்தர் மாதிரி இருப்பார், சைவம், வைணவம்போல இந்துக்களின் ஒரு பிரிவினர். வாய்ல துணி கட்டி இருப்பாங்க. ஒருசிலர் கோவணம் மட்டுமே! ஒருசிலர் அதுகூட இல்லாம இருப்பாங்க. மயிலிறகால் ரோட்டை பெருக்கிக்கிட்டே போவாங்க. மாலை 6 மணிக்கு மேல சாப்பிடமாட்டாங்கன்னு  ஆறாப்பு படிச்சதையும் கேள்விப்பட்டதையும் வச்சு பதில் சொல்வாங்க. ரொம்ப சொற்பமானவர்களுக்கே  பகவான் மகாவீரை பற்றி தெரியும். எனக்கும் அவ்வளவ்தான் தெரியும்!! இன்னிக்காவது அதிகமா தெரிஞ்சுக்கலாம்ன்ற தேடலின் முடிவுதான் இந்த பதிவு.. அதுக்காக, முழுசா தெரிஞ்சுக்கிட்டியான்னு கேட்டா... இல்லன்னுதான் பதில் வரும். 

மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசையால் போர்த்தொடுத்து, புண்ணியபூமியாம் பாரதபூமியில் ரத்த  ஆறு ஓடிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் அவதரித்து அஹிம்சையின் அவசியத்தை உலகுக்கு உணர்த்தியவர்.  சுயவிருப்பு வெறுப்புகள்தான் சமூகத்தில் நடக்கும் மாற்றத்துக்கான காரணம்ன்னு எடுத்துச் சொல்லி, அஹிம்சையை முன்னிறுத்தி சமூக மாற்றத்துக்காக மனிதன் மேற்கொள்ளவேண்டியதென எட்டு கட்டளைகளை வகுத்தார். தானும் அதுப்படியே துறவறம் மேற்கொண்டு வாழ்ந்து காட்டினார். சமணத்தின் உட்பிரிவுகளான ஆசீவகம் மற்றும் சாவகம் ஆகிய நெறிகள், பண்டைய தமிழகத்தில் இருந்ததாக அறியப்படுகிறது. சமணத்தில் உள்ள ஜைன நெறி மட்டுமே காப்பியங்கள் மூலம் தன்னை மக்களிடம் ஓரளவிற்கு நிலைநிறுத்திக் கொண்டதனால், சமணத்தில் உள்ள ஜைன நெறியைத் தவிற மற்ற நெறிகள், தங்கள் செல்வாக்கை மக்களிடம் நாளடைவில் இழந்துவிட்டன. இதனாலும், பிற்காலத்தில் ஆசீவகம் ஜைனத்தின் உட்பிரிவு எனும் தவறான ஒரு கண்ணோட்டம் உருவானதாலும் தற்காலத்தில் சமணம் எனும் சொல்லிற்கு ஜைனம் என்ற தவறான பொருள் உருவாகிவிட்டது.என்றே ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

தற்போதைய பீகாரில் ஜமுயி மாவட்டத்தில் லச்சுவார் என்ற முன்னாள் அரசாட்சியின் சத்திரியகுண்டா என்ற இடத்தில் சித்தார்த்தன் என்ற அரசருக்கும்,. அவரது மனைவி த்ரிஷாலா தேவிக்கும் கி.மூ 599ல் சித்திரை மாதம்  வளர்பிறை 13ம்நாளில்  அழகான ஆண்குழந்தை பிறந்தது.  அதுக்கு வர்த்தமானன்ன்னு பேர் வச்சு வளர்த்து வந்தாங்க.  வர்த்தமானன்ன்னு சொன்னா, வளம் சேர்ப்பவன்னு  பொருள். அவர் அன்னையின் கருவில் இருக்கும்போதே நாட்டில்  வளங்களைப் பெருக்கியதாக நம்பப்படுகிறது;  அவர் பிறக்கும் தறுவாயில் அபரிமிதமான பூக்களின் மலர்ச்சி காணப்பட்டது.  எனவே அவருக்கு வளர்ப்பவர் என்ற பொருளுடைய  ‘வர்த்தமானன்’ என்ற பெயர் சூட்டப்பட்டது. அரசி திரிசாலாவுக்கு மாமனிதர் ஒருவர் பிறப்பதை அறிவிக்கும் வகையில், அவர் கருவுற்றிருக்கையில் 14  சுப கனவுகளைக் கண்டதாகவும் சமண புராணங்கள் கூறுகின்றன.  உலகெங்கும் உள்ள சமணர்கள் (ஜெயின் – ஜைனர்கள்)அவரது பிறந்தநாளை மகாவீர் ஜெயந்தியாகக் கொண்டாடுகின்றனர் . 

சிறந்ததொரு அரசனா வருவான்னு எல்லாரும் எதிர்பார்த்திருக்க, வர்த்தமானனுக்கு சிறுவயதில் இருந்தே தீர்த்தங்கரர்கள் வகுத்து வைத்திருந்த மதக் கொள்கைகளிலேயே அதிகமான நாட்டம் இருந்தது. தியானத்திலும்,தன்னை அறிவதிலுமே அதிக ஈடுபாடு கொண்டவராகவும் விளங்கினார். அவருடைய போக்கை மாற்ற எண்ணிய பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்து வைத்தனர். அவர்களுக்கு பிரியதர்ஷனா என்ற பெண்குழந்தையும் பிறந்தது.  ம்பம் சமண மதத்தைப் பின்பற்றிய குடும்பம்.  வர்த்தமானர்,  மெதுவாக, உலகச் சிற்றின்பங்களிலிருந்து விலகி சமண சமயக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டார். தமது முப்பதாவது வயதில் அரசாட்சியையும் குடும்பத்தையும் துறந்து, துறவறம் மேற்கொண்டார் வர்த்தமானர்.  பிறகு துறவியாக 12 ஆண்டுகள் தியானம் செய்து ஆன்மிகத் தேடலில் ஈடுபட்டார்.  மனிதர்கள்,  தாவரங்கள்,  விலங்குகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும்  அவர்  மதிப்பளித்தார்; அவற்றுக்கு ஊறு விளைவிக்காமல் வாழ்ந்து வந்தார்.
  
இந்தக் காலகட்டத்தில் தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார். புலன்களை வென்ற அவரது பொறுமையும் வீரமுமே அவரை மகாவீர் என அழைக்க காரணமா விளங்குச்சு.  தேடலின் விளைவாக  ‘கைவல்ய ஞானம்’ கிடைக்கப் பெற்றார். அதன்பிறகு மகாவீரர்  நாடு முழுவதும் யாத்திரை செய்து, மக்களிடையே தாமறிந்த ஆன்மிக விடுதலையின் உண்மையை பரப்பத் துவங்கினார் . காலணியில்லா வெறும் கால்களில், துணிகள் ஏதும் அணியாமல், கடுமையான காலநிலைகளில் பயணம் செய்த அவரது பேச்சைக் கேட்க அனைத்துத் தரப்பு மக்களும் திரண்டனர். அவரது முயற்சியால் சமண சமயம் இந்தியாவெங்கும் பரவியது.

தீர்த்தங்கரர்களின் சமணக் கொள்கைகளின் மீதிருந்த அதீத பற்றால் தனது முப்பதாவது வயதில் அரசவாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கையைத் துறந்து துறவறம் பூண்டார். தமது இடைவிடாத ஆன்மிகத் தேடலில் 12 ஆண்டுகள் கழித்தார், தீர்த்தங்கர்கள் தொகுத்து வைத்திருந்த மதக் கொள்கைகளை சீர் செய்து சமண மதத்தை தோற்றுவித்தார். ரிஜுபாலிகா நதிக்கரையில் தியானம் செய்து ஞானம் அடைந்தார். மனதை அடக்கி எல்லாவற்றையும் வென்றவர் என்று பொருள்படும் வகையில் மகாவீரர் என்று அழைக்கப்பட்டார். பிறகு நாடு முழுவதும் சென்று சமண மதக் கருத்துக்களை பரப்பினார்.

 தமது 72-வது வயதில், பவபுரி என்னுமிடத்தில், தீபாவளியன்று பரிநிர்வாணம் (நம்ம ஊரில் சித்தி அடைதல், முக்தி அடைதல் போல சமணத்தில் பரிநிர்வாணம்ன்னு சொல்றாங்க) அடைந்தார் மகாவீரர். அவர் இறைப்பேறு பெற்ற இந்நாளை சமணர்கள் இல்லங்களில் தீபமேற்றிக் கொண்டாடுகிறார்கள். மகாவீரரின் பிரசங்கங்கள் அவரது அணுக்கச் சீடர்களால்  ‘அஹம் சூத்திரங்கள்’ என வாய்மொழியாகவே மனனம் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டது. காலப்போக்கில் பல அஹம் சூத்திரங்கள் இழக்கப்பட்டும்,  மாற்றப்பட்டும் சிலவே மிஞ்சின. சுமார் ஆயிரம் ஆண்டுகள் கழித்து இவை பனையோலைகளில் பதியப்பட்டன. 

சமணர்களின் ஒரு பிரிவினரான  ‘சுவேதம்பரர்கள்’ இவற்றை அப்படியே வரிக்கு வரி உண்மையான போதனைகளாக ஏற்றுக் கொள்கின்றனர்; சமணர்களின் மற்றொரு  பிரிவினராகிய  ‘திகம்பரர்கள்’ இவற்றை உபதேச ஆதாரமாக மட்டுமே ஏற்கின்றனர். காலப்போக்கில் சமணர்கள் வேத சமயப் பழக்கங்களையும் சடங்குகளையும் கைக்கொண்டனர். மகாவீரரை உருவச்சிலையாக வடித்து வழிபடும் போக்கு பிற்காலத்தில் உருவானது. எனினும், பாரதத்தின் சைவ உணவுப் பழக்கம், கொல்லாமை, துறவுநெறி ஆகியவற்றை வளர்த்தெடுத்ததில் சமணம் பெரும் பங்கு வகித்துள்ளது.
மகாவீரரின் எட்டு கொள்கைகள்...
மகாவீரரின் மெய்யியலில் முதன்மையானதாக எட்டு கொள்கைகள் உள்ளன.  இவற்றில் மூன்று கொள்கைகள் கருத்துமயமானவை;  ஐந்து கொள்கைகள் நெறிவழிப்பட்டவை. இவற்றின் குறிக்கோள் வாழ்வின் தரத்தை உயர்த்துவது.  வாழ்வின்மூலம் ஆன்மிக வளமை பெறும் வழியையும் காட்டுவனவாக உள்ளன. அவரது கருத்தியலில் மூன்று கொள்கைகள் இருக்கு. அவை, அநேகாந்தவடா, சியாத்வடா, கர்மா. ஐந்து நெறிவழிகள்: இருக்கு. அவை, அகிம்சை, சத்தியம், அஸ்தேயம்,  பிரமச்சரியம்,  அபாரிகிருகம்.
மகாவீரரின் மும்மணிகள்.....
மகாவீரர்  ‘ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஓர் ஆத்மா உண்டு;  அது தனது செயல்களின் விளைவாக கர்மா (விதிப்பலன்) எனப்படும் வினைப்பயன்களை சேர்த்துக் கொள்கிறது’ என்று கூறுகிறார். கர்மவினையின் மாயையால் ஒருவர் தற்காலிகமான,  மெய்யின்பங்களிலும் பொருள் சேர்க்கையிலும் கவரப்படுகிறார். இவற்றின் தேடலில் அவருக்கு சுயநலத்தால் வன்முறை எண்ணங்களும் செயல்களும், கோபம், வெறுப்பு, பொறாமை உள்ளிட்ட குணங்களும்,  பிற பாவச்செயல்களில் ஈடுபாடும் ஏற்படுகின்றன. இவற்றால் அவனது கர்மவினைப் பளு கூடுகிறது.
இவற்றிலிருந்து விடுபட,  நன்னம்பிக்கை (சம்யக்-தர்சனம்),  நல்லறிவு  (சம்யக்-ஞானம்),  நன்னடத்தை (சம்யக்-சரித்திரம்) ஆகிய மூன்று மணிகள் தேவை  என்று மகாவீரர்  வலியுறுத்தினார்.

ஐந்து உறுதிமொழிகள்....
நன்னடத்தைக்கு துணைநிற்க சமண மதத்தில் ஐந்து உறுதிமொழிகளை எடுக்க வேண்டும்

1. வன்முறை தவிர்த்தல் (அஹிம்சைஎந்தவொரு உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்காதிருத்தல். 2. வாய்மை (சத்தியம்தீங்கில்லாத உண்மையை மட்டுமே பேசுதல் 3.  திருடாமை (அஸ்தேயம்தனக்கு உரிமையற்ற எதையும் அபகரிக்காது இருத்தல். 4. பாலுறவு துறவு (பிரமச்சரியம்) – உடலின்பம் துய்க்காதிருத்தல்.  5.உரிமை மறுத்தல்/ பற்றற்றிருத்தல் (அபாரிகிருஹம்) – மக்கள்,  இடங்கள்,  பொருள்கள் மீது பற்றற்று இருத்தல் என இந்த ஐந்து உறுதிமொழிகளையும் எடுத்துக்கனும்.
சமய சீர்த்திருத்தம்....:
ஆண்களும் பெண்களும் ஆன்மிக நோக்கில் சரிசமமானவர்கள் என்றும், இருவருமே துறவறம் மூலம் வீடுபேறு (மோட்சம்) அடைய முடியும். அவரை அனைத்துத் தரப்பு மக்களும்,  சமூகத்தின் கடைநிலையில் இருந்தவர்களும், விளிம்புநிலை மக்களும் பின்பற்றினர். அன்றைய காலகட்டத்தில் பாரதத்தில் நிலவிய வர்ணாசிரம முறையை விலக்கி,  சமயத்தில் நான்கு நிலைகளை உருவாக்கினார்; அவை,  ஆண்துறவி (சாது), பெண்துறவி (சாத்வி), பொதுமகன் (ஷ்ராவிக்), பொதுமகள் (ஷ்ராவிக்).  இதனை ‘ சதுர்வித ஜைன சங்கம்’ன்னு பேரு. சமண சமயம் மகாவீரரின் காலத்திற்கு முன்னரும் கடைபிடிக்கப்பட்டது.  மகாவீரரின் போதனைகள் அவரது முன்னோரின் போதனைகளை அடியொற்றியவையே.  மகாவீரர் பண்டைய மதத்தின் சீர்திருத்தவாதியே; அவர் புதிய சமயத்தை உருவாக்கியவர் அல்ல.

தனது குருவான பரசுவந்த் தீர்த்தங்கரரின் வழிகளைப் பின்பற்றியவர் மகாவீரர். எனினும் தமது காலத்திற்கேற்ப சமண மதக் கொள்கைகளை சீர்திருத்தம் செய்தார். அதன் விளைவாக, பாரத ஞான தரிசனங்களில் ஒன்றான சமணம் தனி மதமாக வளர்ந்து, பாரத வரலாற்றில் பேரிடம் பெற்றது. உண்மையில் மகாவீரர், பாரதத்தின் தொன்மையான சனாதன   மதத்தின்  சீர்திருத்தவாதியே ஆவார். மகாத்மா காந்தி சமணர்களின் அடிப்படைக் கொள்கையான அஹிம்சையை அரசியல் போராட்ட ஆயுதமாக மாற்றியபோதுதான் அதன் மாபெரும் சக்தி உலகிற்கு தெரிந்தது. 


போகும் பாதை எதுவாகினும் சேரும் இடம் ஒன்றே! அது இறைவனின் திருவடி. இன்றைய காலக்கட்டத்திற்கு மகாவீர் போதித்த கொள்கையை  உலக நலன் பொருட்டு அனைத்து மதத்தினரும் கடைப்பிடிக்கலாம். தப்பில்ல!
நன்றியுடன்,
ராஜி. 

Saturday, September 16, 2017

எது உண்மையான பக்தி??!!

       
    ஒன் டே  ”யார் உண்மையான பக்தன்” ன்னு   டூ ஏஞ்சல்சஸ்க்கு  டவுட் வந்துடுச்சு. நேரா “காட்”கிட்ட போய். ஓ காட்! கோவிலுக்கு  வந்து உன்னை,  நிறைய பேர் கும்பிட்டு, தங்களுக்கு தேவயானதை செய்ய சொல்லி  வேண்டிக்குறாங்க. அதுல சில பீப்பிள்ஸ் ""இறைவா... நான் தினமும் உன்னை கும்பிடுறேன்'' என்னைவிட உன்னை யார் நம்புறங்கன்னுலாம் சொல்லி சாமி கும்பிடுறாங்க... சோ, ”உன்மேல உண்மையான பக்தி வெச்சிருக்குறது” யாரு?ன்னு சொல்லுங்கன்னு  நேரா  ”காட்”கிட்டயே போய்  தங்கள் டவுட்டை கேட்டாங்க்.



அப்போ, காட், ""ஏஞ்சல்ஸ்!நீங்க ரெண்டு பேரும் ஊருக்குள்ள போய், அங்கிருக்குறவங்களை மீட் பண்ணி,  யார் என்னோட  உண்மையான பக்தன்?ன்னு என்கொயரி பண்ணிட்டு வாங்கன்னு சொன்னார்.

உடனே ”டூ ஏஞ்சல்ஸும்” பூமிக்கு வந்து, கோவிலுக்கு வர்றவங்களை  என்கொயரி பண்ண ஆரம்பிச்சாங்க.

ஒருத்தன், ""நான் கோவிலுக்குப் போகாத நாளே இல்லை... தினமும் மூணு வேளை ”காட்”ஐ பிரே பண்றேன் ,'' ன்னான்.


அடுத்த ஆளு,  ""நான் ஃபிரைடே, சாட்டர் டே, டியூஸ் டே மட்டுமே   கோவிலுக்கு போவேன்”ன்னு சொன்னான்.


இன்னொரு ஆளு கோவிலுக்கு வந்தான், அவனை, என்கொயர் பண்ணும்போது, "நான் வாரத்துல ஒரே  ஒரு நாள் கன்ஃபார்ம்டா கோவிலுக்கு வருவேன்,'' ன்னு சொன்னான்.

இன்னொரு ஆளு, ""எனக்கு கஷ்டம் வரும் சமயத்துல மட்டும்  கோவிலுக்கு வருவே,'' னான்.

இப்படி, வந்தவங்கல பல பேர் ,  ஏதோ ஒரு சமயத்தில் ”காட்”ஐ நினைப்பவராகவே இருக்க, "இதுல  யார் உண்மையான பக்தன்'? ன்னு கண்டு பிடிப்பது எப்படி?ன்னு டூ ஏஞ்சல்ஸுக்கும்  கன்ஃபியூஸ்ஆயிடுச்சு.

சரி, நாம “காட்”கிட்டயே போய் கேட்டுக்கலாம்ன்னு திரும்பும்போது...,  கோவில் வழியே அவசரமாக போக்கிட்டிருந்தான்.  அவனை,  நிறுத்தி, "ஹலோ! உனக்குக் கடவுள் பக்தி இருக்கா? நீ எப்போ ”காட்”ஐ பிரே பண்ணுவே?'' இப்போ கூட கோவில் பக்க்கமாத்தான் போறே. ஆனா, பிரே பண்ணாஆம போறியே?!ன்னு ஏஞ்சல்ஸுங்க கேட்டுச்சு.

அதுக்கு அவன், ""எனக்குக் கடவுளை நினைக்கவே டைமில்லை... அவசரமா ஒருத்தருக்கு பிளட் தேவைப்படுது. அவர் பிளட் குரூப்பும், என் பிளட் குரூப்தான். அதான் அவருக்கு ஹெல்ப் பண்ண போய்கிட்டு இருக்கேன்.  இதுல சாமியை எங்கிருந்து கும்பிடுறது? நான் கிளம்புறேன். குட் பை...'' ன்னு ஆன்சர் பண்ணிட்டுபோய்ட்டான்.

  ஏஞ்சல்ஸ் ”காட்”கிட்டயே  திரும்பி வந்து என்ன நடந்துடுச்சுன்னு சொல்லிச்சுங்க....

எல்லாத்தையும் கேட்ட”காட்” அமைதியா இருந்தார்.....,

""ஓ காட்... உண்மையான பக்தன் யார்?ன்னு  எங்களால கண்டுபிடிக்க முடியலை. நீங்களாவது  கண்டுபிடிச்சுட்டீங்களா?!?'' ன்னு கேட்டுச்ச்சு.

""கண்டு பிடிச்சுட்டேன்!'' ன்னு சின்ன புள்ளை போல குதூகலமா   சொன்னார் ”காட்”....,

""யார்?  டெய்லி மூணு வேளை கோவிலுக்கு வர்றவர்தானே?'' ன்னு கேட்டனஏஞ்சல்ஸ்....,

”காட்” ஸ்மைல் பண்ணியபடியே...,  ""நோ... நோ... லாஸ்ட்டா  என்னை நினைக்கக்கூட டைமில்லாம..,  இன்னொருத்தருக்கு ஹெல்ப் பண்ண  ஓடினானே... அவன் தான் என் ” உண்மைப் பக்தன்,'' ன்னு சொன்னார்.

உதவி தேவைப்படுறவங்களுக்கு நம்மாலான உதவியை செய்தா,  கோவிலுக்கு போய் கடவுளை கும்பிட்டதோட பலன் கிடைக்கும்ன்ற  உண்மை அந்த ”ஏஞ்சல்ஸ்க்கும் ”புரிந்தது .




தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1471849












நன்றியுடன்
ராஜி. 

Monday, September 11, 2017

ஒரு புறாவுக்கு அக்கப்போரா?! - ஐஞ்சுவை அவியல்.

மாமோய்! இந்த வாரம் குருபெயர்ச்சி நடந்துச்சுல்ல. அதன்படி உங்களுக்குதான் நேரம் சரியில்ல. அதனால, வியாழக்கிழமை அன்னிக்கு கோவிலுக்கு போய் குருபகவானுக்கு விளக்கேத்தி வரச்சொல்லி இருக்காங்க.  
லூசே! கடவுள் கொடுக்க நினைக்குறதை யாராலும் தடுக்க முடியாது. கடவுள் தடுக்க நினைக்குறதை யாராலும் தடுக்க முடியாதுன்னு ஒரு பழமொழி உண்டு. அதன்படி பார்த்தா, நடந்த வினை எதையும் இல்லாம போகாது. அதுக்குண்டான எதிர்வினை கண்டிப்பா நடந்தே தீரும். அப்புறம் ஏன் சாமி கும்பிடனும்ன்னு கேட்டா... இறைவன் பக்கம் நம்ம மனசு போச்சுன்னா மீண்டும் தப்பு பண்ண வாய்ப்பும் கிடைக்காது, நேரமும் இருக்காதுங்குறதாலதான் சாமி, பூதம், கிரகம்லாம் உண்டாக்கி வச்சிருக்காங்க. 

அப்ப, கோவில் போகக்கூடாது, சாமி கும்பிடக்கூடாதுன்னு சொல்லுறியளா!?

ம்ஹூம். சாமியால மட்டும் எல்லாம் மாறிடும்ன்னு நம்பாதன்னுதான் சொல்றேன்.  இதுக்குமேல எதாவது சொன்னா என்னை கரிச்சு கொட்டுவே.  நம்மால கோவிலுக்கு போக முடியாதபோது நம்மை சேர்ந்தவங்க நம்ம ட்ரெஸ்சை கொண்டு போய் கைல வச்சிக்கிட்டு சாமி சுத்திவர்றதை பார்த்திருப்போம். அது குரு விசயத்துல செல்லாது. அவங்கவங்களுக்கு பலன் கிடைக்கனும்ன்னா அவங்கவங்களேதான் குருவை வழிப்படனும்.  அதேப்போல, குருவுக்கு முன்பாக நேருக்கு நேராக நின்னுதான் கும்பிடனும். ஏன்னா, அப்பதான் குருவோட பார்வை முழுசா நம்மீது படும்.   குரு சன்னிதியிலிருந்து தானியம் தானம் செஞ்சா குருவின் அருள் கிடைக்கும், புஷ்பராகமும், தங்கமும், மஞ்சள் நிற ஆடையும், முல்லைப்பூவும், கொண்டைக்கடலையும் குருவுக்கு உகந்தது.  

சரிங்க மாமா! நினைவில் வச்சுக்குறேன். 

உன்னை மாதிரியே ஒரு  கடமை உணர்ச்சில ஒரு ஆள் இருக்காரு. தெரியுமோ!

கிண்டல் பண்ணுறீகன்னு தெரியுது. என்ன கதைன்னு மட்டும் சொல்லுக. 

சேலம் மாவட்டம் அரூரிலிருந்து எல்லவாடிங்குற ஊருக்கு போற பஸ்சுல ஒருத்தர் தன்னோடு ஒரு புறாவை கொண்டு போயிருக்கார் ஒரு ’குடி’மகன். அதோடு பேசிக்கிட்டும், கொஞ்சிக்கிட்டும் வந்திருக்கார். அப்ப பார்த்து செக்கிங்க் வந்திருக்கார். புறாக்கு டிக்கெட் எடுக்கலைன்றதை தெரிஞ்சுக்கிட்ட செக்கர் கண்டக்டருக்கு மெமோ கொடுத்திருக்கார்.  விலங்குகள், பறவைகளுக்கு டிக்கட் விலைல நாலுல ஒரு பங்கு விலைல டிக்கெட் எடுக்கனுங்குறது ரூல்ஸ்ன்னு செக்கர் சொல்ல... அது 30 பறவை வரைக்கு டிக்கட் இல்லாம கொண்டு போகலாம்ன்னு வாதாட... இந்த விசயம் நீதிமன்றம் வரைக்கும் போயிருக்காம். 

அட ஆண்டவா! இப்படிலாம் கூட நடக்குமா மாமா...


  இதுக்கே இப்படின்னா,  கோவைல பெரிய காட்டையே அழிச்சு ஆதிசிவன்னு ஒரு சிலையை நிறுவுன ஈஷா யோகா மையத்து ஆளுங்க நதிகளை இணைக்க போறதா கொஞ்ச நாளாய் சொல்லிக்கிட்டிருக்காங்க. நதிகளை இணைக்க மிஸ்டுகால் கொடுக்க சொல்லி அதுக்கு சென்னைல விழா எடுத்தாங்க.  அதுல கலந்துக்கிட்டவங்களாம் யாருன்னு பார்த்தா தமிழக ஆத்து மணலை வடநாட்டு ஆளுகளுக்கு வித்து பணம் பண்ணுற சேகர் ரெட்டியின் நண்பரான ஓபிஎஸ், இதை தடுக்காத முதல்வர் ஈபிஎஸ், ஜெ மரணமான அப்பல்லோ மருத்துவனை பிரதாப் ரெட்டி.... இப்படி இவங்க அடிக்குற கூத்துக்கு என்ன சொல்ல?!

 
கல்யாணத்துல என்னென்னமோ புதுமைலாம் நடக்குது. மொய் எழுதுறதை கம்ப்யூட்டரைஸ் பண்ணி இருக்காங்க பாருங்க...


டிஜிட்டல் இந்தியாவின் நவீன கரண்ட் கம்பம்....

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1471365

நன்றியுடன்,
ராஜி

Sunday, January 29, 2017

கண்டவர் விண்டிலர்..விண்டவர் கண்டிலர் - பக்தி

கடவுளைப் பார்த்த எவரும் அவரை வருணிக்க முடியாது. அவ்வளவு பெருமை வாய்ந்தவர் வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டவர். கண்டவர் விண்டிலர்.யாராவது ஒருவன் கடவுளின் ரூப லாவண்யங்களை வருணித்து கடவுள் இப்படித்தான் இருப்பான் என்று சொன்னால் அவன் கடவுளைப் பார்த்ததே இல்லை என்று பொருள். அதவது விண்டவர் கண்டிலர். இதற்கு இராமகிருஷ்ண பரமஹம்சர் என்ன சொல்கிறார் என பார்க்கலாம். .இதில் ஒற்றுமை என்னவென்றால் ,வடநாட்டில் பிறந்த இராமகிருஷ்ணர் என்ன கருத்துக்களை சொல்கிறாரோ அதையேதான் சித்தர்களும் தமிழ் அடியார்களும் சொல்லுகின்றனர். சங்கத் தமிழ் இலக்கியத்திலும் இதற்கான சான்றுகள் இருக்கின்றன.
ஒரு உப்பு பொம்மை கடலின் ஆழத்தைக் காண வேண்டும் என்று ஆசைப்பட்டது. அது மட்டும் அல்ல. அதை எல்லோருக்கும் சொல்லவேண்டும் என்றும் திட்டம் தீட்டியது. உடனே கடல் நீரில் குதித்தது. அதற்கு மிகவும் சந்தோஷம். வாழ்நாள் முழுதும் எதை எண்ணியதோ அது நடந்துவிட்டது! ஆனால் சில அடி ஆழம் போவதற்குள் உப்பு எல்லாம் கரைந்து கடலுடன் ஐக்கியமாகிவிட்டது. அதே போலத்தான் பிரம்மம் பற்றிய அறிவும். கடவுளுக்கு நெருக்கமானவர்கள் சமாதியில் செல்லும் போது பிரம்மம் பற்றி ஞானம் வருகிறது. அதில் மூழ்கியவர்கள் வெளியே வருவதில்லை. பிரம்மத்துடன் ஐக்கியமாகிவிடுகிறார்கள்.
புதிதாக கல்யாணம் ஆன ஒரு பையன் மாமனார் வீட்டுக்கு நண்பர்களுடன் போனான். ஹாலில் (கூடத்தில்) உட்கார்ந்தான். அவனுடைய மனைவியின் தோழிகள் புது மாப்பிள்ளையைப் பார்க்கக் கூடிவிட்டனர். கட்டுக்கடங்காத ஆர்வம்! எல்லோரும் ஜன்னல் வழியாகப் பார்த்து, ஒவ்வொரு பையனையாக காட்டி இவன்தான் உன் புருஷனா?’ என்று கேட்கின்றனர். ஒவ்வொரு பையனைக் காட்டி தோழிகள் கேள்வி கேட்கும் போதெல்லாம், புன்னகை செய்தவாறே அவன் இல்லை’, ‘அவன் இல்லைஎன்று சொல்லிக்கொண்டே இருந்தாள். அவளுடைய உண்மையான கணவனைக் காட்டி இவன் தானா உன் புருஷன்? என்ற போது அவள் முகம் மலர்ந்தது. ஆனால் இல்லைஎன்ற பதிலோ ஆமாம்என்ற பதிலோ வரவேயில்லை. தோழிகளுக்குப் புரிந்துவிட்டது. பிரம்மத்தை கண்டவர் நிலையும் இதேபோல் தான் அவர்கள் பேரானந்தத்தில் மூழ்கி மவுனம் ஆகிவிடுவர்.
 ஒரு மனிதனுக்கு இரண்டு பையன்கள் இருந்தனர். இரண்டு மகன்களையும் குருகுலத்தில் சேர்த்தார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரும் வீடு திரும்பினர். மூத்தவனைப் பார்த்து பிரம்மத்தின் இயல்புகள் என்ன? என்று கேள்வி கேட்டார். உடனே அவன் பல செய்யுள்களை ஒப்புவித்து, தனது மேதா விலாசத்தைக் காட்டினான். நீ பிரம்மத்தை அறியவே இல்லை என்று தந்தை சொல்லிவிட்டார். இரண்டாவது மகனை அதே கேள்வி கேட்டார். எங்கும் நிறைந்தவன் அவனே ,எதிலிருந்து ஆரம்பிப்பது .எதில் முடிப்பது .ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெரும் ஜோதியாயிற்றே, இரண்டாவது மகன் கீழ் நோக்கிய பார்வையுடன் மவுன நிலைக்குப் போய்விட்டான். தந்தைக்குப் புரிந்துவிட்டது; அவனுக்கு பிரம்ம ஞானம் எற்பட்டு விட்டது என்று.
இந்த எடுத்துக் காட்டுகள் மூலம் ராமகிருஷ்ண பரமஹம்சர் பிரம்மஞானிகளின் இயல்பை விளக்குகிறார். ஆனால் ஒரு சில ஞானியர் மட்டும், மனித குல நன்மைக்காக மிகவும் ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு நம்மிடையே திரும்பி ஓடிவருகிறார்கள்.கண்டேன், கண்டேன் கண்டேன்!! கண்ணுக்கினியன கண்டேன், தொண்டீர் எல்லோரும் வாரீர்”-- என்று ஆனந்தக் கூத்தாடி நம்மை எல்லாம் உய்விக்க முயற்சி செய்கிறார்கள். சேரவாரும் ஜெகத்தீரே”-- என்று நம்மிடம் கெஞ்சுகின்றனர். அப்படியும் நாம் போகாவிட்டால் கடைவிரித்தேன் கொள்வரில்லையே”--- என்று வருத்தப் படுகிறார்கள்.

திருமூலரின் திருமந்திரம் காட்டும் உண்மை:

உரையற்றது ஒன்றை உரை செய்யும் ஊமர்காள்
கரையற்றது ஒன்றைக் கரைகாணல் ஆகுமோ
திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
புரையற்றிருந்தான் புரிசடையோனே (2915)

பொருள்; கடவுளை வருணிக்க முடியாது. கரை காண முடியாத கடல் போல அவன் எங்கும் நிறந்தவன். அவனைச் சொல்லுக்குள் அடக்க முயன்றவர்கள் எல்லாம் திணறிப் போய் ஊமையர் போல நிற்கின்றனர். கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர். ஆனால் தெளிந்த மனது உடையோருக்கு அவன் எளிதில் புரிபடுவான்..பகவத் கீதையில் பெருங் கடலை, சமுத்திரத்தை ‘’ஆபூர்யமாணம், அசலப் ப்ரதிஷ்டம்’’= எங்கும் நிறைந்தது, நிலைகுலையாதது என்று கிருஷ்ணன் கூறுவான் (2-70). ஆர்பரித்துத் துள்ளி ஓடும் பெரிய, பெரிய நதிகள் எல்லாம் கடலுக்குள் இறங்கியவுடன் சப்தம் ஒடுங்கி தன் நாமம் இழந்துவிடும். இது போல ஆசைகள் எல்லாம் ஒருவனுக்குள் ஒடுங்கவேண்டும். பின்னர் இறைவனைக் காண முடியும். என்று கூறுகிறார்
இதையே ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமிலார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேனம் கொட்டாமோஎன்று மாணிக்கவாசகர் பாடினார்.இதுபோன்ற சின்ன உவமை, பெரிய உண்மைகளைப் புகட்டுகின்றன. மீண்டும் ஒரு பக்தி பதிவினூடே சந்திக்கலாம் .நன்றி ..


Wednesday, November 23, 2016

சாமிசிலைக்கு அபிஷேகம் செய்யும் வழிமுறைகள் - பக்தி

எந்த சாமி சிலைக்கு அபிஷேகம் செய்வதாக இருந்தாலும் மலர் வைத்தே அபிஷேகம் செய்ய வேண்டும். சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யும்போது மேல் உள்ள ஈசான முகத்துக்குத்தான் முதலில் அபிஷேகம் செய்வார்கள். லிங்க பாணத்துக்கு கீழ் உள்ள பகுதியை ஆவுடையார் எனப்படும் அம்பாள் பாகம் என்பதால் ஆவுடையார் மீது ஆடை சார்த்திதான் அபிஷேகம் செய்வார்கள் .சிவலிங்கம் பிரபஞ்ச ஆற்றலை கொண்டிருக்கும் . அந்த லிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய, செய்ய நம்மிடம் உள்ள தீய எண்ணங்கள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும் . எனவே அபிஷேகம் நடத்தப்படும்போது பிரகாரம் வலம் வரக்கூடாது. சிவனுக்கு கார்த்திகை மாதங்களில் நடக்கும் சங்காபிஷேகத்தை பார்ப்பது பெரும் புண்ணியத்தை தரும்.
வலம்புரி சங்கு அபிஷேகம் 10 மடங்கு பலன்களை தரும் . சிவப்பெருமான் அபிஷேகப்பிரியர். ஆண்டு முழுவதும் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யப்பட வேண்டும் . வீட்டில் தினமும் காலை சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் கயிலாயப் பதவியையே பெற்றுவிடலாம் என்பது ஐதீகம். அக்னி நட்சத்திர காலத்தில் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்வது சிறந்த புண்ணியங்களைத் தரும்.சிவப்பெருமான் குளிர்ச்சியை விரும்புபவர். அதனால்தான் அவர் தலையில் கங்கையை சூடி , பனிமலையான கயிலையில் வீற்றிருக்கிறார். அக்னி நட்சத்திர நாட்களில் அவரை குளிர்ச்சிப்படுத்தும் விதத்தில் அபிஷேகம் செய்து மகிழ்வித்தால், கோடை வெம்மையால் ஏற்படும் தாக்குதல்களில் இருந்து அவர் நம்மை பாதுகாப்பார். அது மட்டுமின்றி நல்ல வரங்களையும் தருவார் .
சிவனின் அம்சமான நடராஜருக்கு ஆண்டுக்கு 6 தடவை அபிஷேகம் நடக்கும் . அவை மாசி சதுர்த்தசி , சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி , புரட்டாசி சதுர்த்தசி , மார்கழி திருவாதிரை ஆகிய 6 நாட்களில் நடைபெறும் . இதில் ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரை ஆகிய 2 நாட்களிலும் நடராஜர் அபிஷேகம் மிகப்பெரிய திருவிழா போல நடத்தப்படும். இந்த இரு நாட்களிலும் சூரிய உதயத்துக்கு முன்பே நடராஜருக்கான அபிஷேகத்தை செய்து முடித்து விடுவார்கள். சிவாலயங்களில் உள்ள நந்தி , தெட்சிணாமூர்த்தி , பைரவர் ஆகியோருக்கும் அவர்களது சிறப்புக்குரிய நாட்களில் பல்வேறு பொருட்களால் விதம்விதமான அபிஷேகங்கள் செய்வார்கள். சிவராத்திரி தினத்தன்று சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களுக்கான பொருட்களை வாங்கி கொடுத்து பூஜையில் கலந்து கொள்ளலாம் .
 
சிவராத்தரியன்று  சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகம் கீழ்வருமாறு: -

முதல் சாமம் : பஞ்சகவ்ய அபிஷேகம்.
இரண்டாம் சாமம் : சர்க்கரை, பால் , தயிர் , நெய் கலந்த பஞ்சாமிர்தம் அபிஷேகம் .
மூன்றாம் சாமம் : தேன் அபிஷேகம் .

நான்காம் சாமம் : கரும்புச்சாறு அபிஷேகம்.
 வாசனைத் திரவியங்கள்தான் அதிக அளவில் இடம்பெற்றிருக்கும் . இந்த அபிஷேகத்துக்கு ரூ . 1 லட்சம் வரை செலவாகும். இந்த அபிஷேகம் செய்ய பணம் கட்டினால் பல மாதங்கள் கழித்தே அபிஷேகத்தை காணும் வாய்ப்பு கிடைக்கும். வைணவத்தலங்களில் ஆஞ்சநேயருக்கு நடத்தப்படும் பால் அபிஷேகம் ஏராளமான பலன்களை வாரி வழங்கக் கூடியதாகும் .
சக்தி தலங்களில் செய்யப்படும் அபிஷேகங்கள் நம் மனதில் நிறைவை உண்டாகும் . அது அம்பாள், தாயாரின் மனதை குளர்ச்சி அடைய செய்யும் அதுப்போல முருகப்பெருமானுக்கு ஒவ்வொரு தலத்துக்கு ஏற்ப அபிஷேகங்கள் விதம், விதமாக நடத்தப்படுகின்றன. பழனியில் உள்ள முருகர் சிலை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைகளால் 81 சித்தர்கள் மேற்பார்வையில் தயாரிக்கப்பட்டதாகும்.
தினமும் பழனி முருகனுக்கு 6 தடவை அபிஷேகம் செய்யப்படுகிறது . நல்லெண்ணை, பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி ஆகிய 4 பொருட்கள் மட்டுமே அபிஷேகத்துக்கு பயன்படுத்தப்படுகிறது . முருகன் கையில் வைத்திருக்கும் வேலுக்கு அபிஷேகம் செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
இரண்டு நாகங்கள் இணைந்ததுபோல் இருக்கும் நாகராஜா சிலைக்கு வெள்ளிக்கிழமை காலை ராகு காலத்தில் ( 10. 30- 12. 00 ) மஞ்சள் , குங்குமம் வைத்து செல்வரளி பூ சாற்றி அபிஷேகம் செய்தால் கணவன் - மனைவி இடையே அன்பு பெருகும். ஒற்றுமையுடன் அன்னியோன்யமாக வாழ்வார்கள்
வித்தியாசமான  சில அபிசேகங்கள் :

கொடுங்கல்லூர் பகவதி அம்மன் தவிடு அபிஷேகம் மேற்கொள்கிறாள். திருப்புறம்பியம் பிரளயங்காத்த விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தியன்று மட்டும் ஒரு குடம் தேன் அபிஷேகம் செய்கிறார்கள் . தில்லைக்காளிக்கு நல்லெண்ணையால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது . திருச்சூர் வடக்கு நாத சுவாமிக்கு தினசரி நெய்யால் மட்டுமே அபிஷேகம்.
எப்போதும் அருவியின் ஓசை கேட்டுக் கொண்டே இருப்பதால் குற்றாலநாதருக்கு தலைவலி வராமல் இருக்க இவருக்கு தைல அபிஷேகம் திருவாரூர் மாவட்டம் பொன்னிலை அகஸ்தீஸ்வருக்கு பங்குனி உத்திரத்தன்று நெல்லிப்பொடியால் அபிஷேகம் செய்கிறார்கள். சென்னை குரோம்பேட்டை செங்கச்சேரி அம்மனுக்கு பவுர்ணமியன்று மருதாணி இலையால் அபிஷேகம்.
திருப்பழனம் பழனத்தப்பர் , ஐப்பசி பவுர்ணமி நாளன்று காய்கறி அபிஷேகம் ஏற்கிறார். தஞ்சை பெரிய கோவில் நந்திக்கு மிளகாய் அபிஷேகம் நடத்தப்படுகிறது . தருமபுரி ஹரிஹரநாதகோவில் அருகே உள்ள அனுமனுக்கு தினமும் காலையில் தேன் அபிஷேகம் செய்கிறார்கள் .உறையூர் வெக்காளி அம்மனுக்கு வைகாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமைகளில் மாம்பழங்களால் அபிஷேகம் விமரிசையாக நடத்தப்படுகிறது
சென்னிமலை முருகனுக்கு தயிரால் அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. அந்த தயிர் புளிப்பதில்லை என்பது அதிசயம். திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடிந்ததும் ஜெயந்திநாதர் உருவம் தெரியும் கண்ணாடிக்கு அபிஷேகம் செய்வார்கள். தனக்கு நடக்கும் அபிஷேகத்தை ஜெயந்திரநாதரே பார்ப்பதாக ஐதீகம். ஆரணி, தேவிகாபுரம் சுயம்புலிங்கமாய் பூமியிலிருந்து பக்தரின் ஒருவரால் வெளிவரும்போது ஏற்பட்ட காயம் சீழ்பிடிக்காமலிருக்க வெந்நீர் அபிசேகம் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு தெய்வத்துக்கும் அபிஷேகம் செய்வதற்கு உகந்த தினத்தை நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர் அதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில் விநாயகர் மற்றும் நவக்கிரகங்களுக்கு அபிஷேகம் செய்யலாம். திங்கட்கிழமை சிவனுக்கும் , செவ்வாய்க்கிழமை முருகனுக்கும் , புதன்கிழமை பெருமாளுக்கும், வியாழக்கிழமை தெட்சிணாமூர்த்திக்கும், வெள்ளிக்கிழமை அம்பாளுக்கும் , சனிக்கிழமை கண்ணனுக்கும் அபிஷேகம் செய்யலாம்.
அபிஷேக தீர்த்தத்தை கண்ணில் ஒற்றிக் கொண்டாலும் , சிறிது பருகினாலும் பிரபஞ்ச சக்திகளை நாம் பெற முடியும். அது நம் உள்ளத்தை மட்டுமின்றி உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் . இத்தகைய சிறப்பான அபிஷேகம் முடிந்ததும்  சுவாமிக்கு அலங்காரம்  பட்டு பீதாம்பரத்தாலும் , பொன்னாலும், மலர் மாலைகளாலும் நகைகளாலும் சிலையை அலங்கரிப்பார்கள்..அந்த காட்சியும் ,தரிசனமும் காண கண் கோடி வேண்டும் .மீண்டும் ஒரு பக்தி பதிவுகளினூடே அடுத்தவாரம் சந்திக்கலாம்  நன்றி 




Monday, October 31, 2016

சஷ்டி விரதம் உருவான கதை - பக்தி

திருமணம் இல்லாமல் ஒருவருக்கு வாழ்க்கை முழுமையடையாது என்பது போல, குழந்தை இல்லாமல் திருமண வாழ்க்கை நிறைவு பெறாது. வாழ்க்கையில் நாம் எதற்கு ஓடிக்கொண்டு இருக்கிறோம் / எதற்கு சம்பாதிக்கிறோம் என்பதற்கு அர்த்தம் கொடுப்பது குழந்தை தான். முன்ஜென்ம வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, "கந்தசஷ்டி விரதம்". குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள்.
முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது. வேண்டுவன யாவும் தரும் இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது? கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள். அதிகாலையில் எழுந்து நீராடி பூஜை அறையில் திருவிளக்கேற்றி கந்தசஷ்டி கவசம், ஸ்கந்தகுராகவசம், கந்தர் அலங்காரம் படிக்கலாம்.தெரியாதவர்கள் முருகன் பெயர் சொல்லி கும்பிடலாம். 
சஷ்டி என்பது வளர்பிறை அல்லது தேய்பிறையின் ஆறாம் நாள். சஷடி தேவி என்பவள் பச்சிளங்குழந்தைகளைப் பாதுகாத்து வளர்க்கும் கருணை நாயகி இவள். இந்தத் தேவியைக் குறித்த வரலாறு தேவி பாகவதம் ஒன்பதாம் ஸ்காந்தத்தில் வருகிறது. இவளுக்கு ஸம்பத் ஸ்வரூபிணி என்றும் பெயர். சுவாயம்ப மனு என்பவனின் மகன் பிரியவிரதன். இவனுக்கு இல்லற வாழ்க்கையில் விருப்பம் இல்லாமலே இருந்தது. எனினும், பிரம்மாவின் வற்புறுத்தலின்படி மாலினி என்பவளை மணந்துகொண்டான்.

திருமணமாகி பல ஆண்டு ஆகியும் பிள்ளைப்பேறு இல்லாத காரணத்தால், காச்யபரைக் கொண்டு புத்திர காமேஷ்டி யாகத்தைச் செய்தான் பிரியவிரதன், இதனால் மாலினி, பன்னிரண்டாம் ஆண்டு பிள்ளையைப் பெற்றாள். ஆனால் குறைப் பிரசவமாக இருந்ததால், குழந்தை உருத்தெரியாமலும் உயிரற்றும் இருந்தது. மனம் உடைந்த பிரியவிரதன் குழந்தையை அடக்கம் செய்துவிட்டு, தானும் இறக்கத் துணிந்தான். அப்போது தெய்வாதீனமாக ஒரு பெண் தோன்றினாள். உயிரற்ற - உருவமற்ற அந்தக் குழந்தையை அவள் தொடவும், குழந்தை அழகிய உருவத்துடன் உயிர்பெற்று அழத் தொடங்கியது.

பிரிய விரதன் மிகவும் நெகிழ்ந்து தேவி! தாங்கள் யார் என்று கேட்டான். நான் சஷ்டி தேவிதேவசேனையின் அம்சம். பிரம்மாவின் மானசீக புத்திரி. நான் பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாப்பவள், பிள்ளைப்பேறு இல்லாதவருக்கு அவ்விரத்தை அருள்பவள். மாங்கல்ய பலம் இழக்கும் நிலையில் உள்ளவருக்கு அதனை நிலைப்படுத்துபவள். அவ்வாறே வினைப்பயன் எப்படியிருப்பினும், அவரவர் வேண்டுகோளுக்கு இணங்கி கணவன்மார்களுக்கு இல்லற சுகத்தையும் செல்வப்பேற்றையும் அருள்பவள் என்று கூறி, அந்தக் குழந்தைக்கு சுவிரதன் என்று பெயரிட்டாள். குழந்தைகளுக்கு நலமும் வாழ்வும் அருளும் சஷ்டிதேவி, எப்போதும் குழந்தைகளின் அருகிலேயே இருந்துகொண்டு விளையாட்டு காட்டுவதிலும் திருப்தி கொள்வாள். இவள், அஷ்ட மாத்ரு தேவதைகளில் சிறந்தவள், யோகசித்தி மிக்கவள்
ஸ்கந்த சஷ்டி ஆரம்பம் முதல் இறுதி வரை விடியற்காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் 4.30 மணியில் இருந்து 6.00 மணிக்குள் நீராட வேண்டும். பகலில் பழம் பால் மட்டுமே உண்ணவேண்டும். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் எளிய உணவாக காலையில் சிற்றுண்டி அருந்தலாம். முருகருக்குரிய மந்திரங்களை பாடல்களை நாள் முழுவதும் பாராயணம் செய்து வருதல் நலம். ஓம் சரவணபவாய நம என்று ஜபித்து வரலாம். திருப்புகழ்,ஸ்கந்த சஷ்டி கவசம், போன்ற கவசங்களை பாராயணம் செய்யலாம். அருகில் உள்ள முருகர் ஆலயங்களுக்கு சென்று விளக்கேற்றி அர்ச்சனை வழிபாடு செய்து வருதல் வேண்டும். மாலையில் மீண்டும் குளித்து விட்டு வீட்டில் பூஜையறையில் முருகரை வழிபட வேண்டும். முடிந்தால் கோயிலில் வழிபாடு செய்யலாம்.
இதன் பின்னர் 8 மணிக்கு மேல் பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும். இவ்வாறு ஆறுநாட்கள்செய்து ஆறாவது நாளில் சூரசம்ஹாரம் எனும் நிகழ்ச்சி முருகர் கோயிலில் தரிசனம் செய்து விரதம் முடிக்க வேண்டும். இந்த விரதத்தை தொடர்ந்து அனுஷ்டித்து வர புத்திர தோஷம் விலகி புத்திர பாக்கியம் கிடைக்கும் குழந்தை முருகர் அருளால் பிறக்கும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சஷ்டி ஒருநாள் மட்டும் அனுஷ்டிப்பது சஷ்டி விரதம். இதையும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அனுஷ்டிக்க குழந்தை பிறக்கும்.

Wednesday, November 25, 2015

கார்த்திகை தீபம் - நினைவுமீட்டல்

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளைக்கு முன்னாடி நம்ம பதிவில் தீப தரிசனம் பற்றி விரிவாக நமது புண்ணியம் தேடி போற பயணத்தில் பார்த்தோம். அப்ப, கார்த்திகை தீபம் பார்க்க, மலைக்கு செல்லுமுன் அண்ணாமலையாரை தரிசித்து விட்டு மலைமேல் தீப தரிசனம் செஞ்சோம். அப்ப மேக மூட்டமாக இருந்துச்சு. இந்தமுறை பகல் பொழுதிலேயே நாம் தீபம் ஏற்றும்முன் மலை மேல் போய் பார்க்கனும்ன்னு முதல்லியே முடிவு பண்ணி கிளம்பிட்டோம். 
ஆனா, வீட்டில் இருந்து புறப்படும் போதே சூரியன் மறைஞ்சு சந்திரனும் உதயமாகி விட்டான். நாம எப்ப நேரத்திற்கு புறப்பட்டு இருக்கோம்?ன்னு வீட்டில் ஒரே திட்டு. நான் என்னங்க பண்ணட்டும்?! கார்த்திகைக்கு சாமிக்கு படையல் போட்டு கிளம்ப வேணாமா?!! ஒரு வழியா எல்லா வேலையையும் முடிச்சுட்டு கிளம்பினா,  திருவண்ணாமலைக்கு 15கி. மீ முன்னயே ட்ராப்ப்ப்ப்ப்பிக்.  தீபம் பார்த்துட்டு அண்ணாமலையாரை தரிசிக்க சென்ற போது நள்ளிரவு நேரம் ஆகிட்டு. சரி, அருணாசலேஸ்வரா! நீயே துணைன்னு அவரை  கும்பிட்டு பயணத்தை தொடர்ந்தோம்....,
சாமி தரிசனம் முடிச்சுட்டு மலையேற ஆரம்ப்ச்சோம். மூணாவது வருசம் போன போது பாதை தெளிவா இருந்துச்சு. இந்தமுறை சரியான வழிகாட்டி இல்லாததால எங்களுக்கு முன்னாடி போனவங்களை பார்த்து பின்தொடர்ந்து போனோம். பாதை சிறிது கரடு முரடாகவே இருந்தது .
ஒருவழியா பாதி மலை ஏறிட்டோம். மலைமேல் இருந்து பார்க்கும் போது கோவில் சின்னதா தெரிஞ்சுது. மேல போக போக கோயில்லாம்  மேக மூட்டத்துக்கிடையில் தெளிவின்றி இருந்துச்சு.
வேண்டுதலுக்காகவும், தீபம் ஏற்றும் கைங்கரியத்தில் நம்ம பங்கும் இருக்கட்டும்ன்னு நாம நெய் எடுத்துக்கிட்டு மலை மேல கொண்டு போய் கொடுக்கலாம்.  பாரம் சுமக்க முடியாதவங்களுக்காகவே மலைமேல் சிலர் சின்ன சின்ன பாட்டில்களில் நெய் விக்குறாங்க. அதேசமயம், அங்க குளிருக்கு இதமாக சுக்கு காபியும் கிடைக்கும். நாங்கள் போன போது அங்க இருந்தவங்க கூட தூங்கிட்டாங்க.
அதோ தூரத்தில் தெரியறதுதான் ”மகாதீபம்” . அங்கேயும் நெய்லாம் விக்குறாய்ங்க. மேலும் அங்க கவனமாக நிக்கனும்.செல்ஃபி எடுக்குறேன்னு பாறைகளில் அசால்ட்டா நிக்கப்படாது. ஏன்னா,  பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யும், தீபத்துக்காக நெ நெய்யும் சிந்தி எல்லா இடமும் வழுக்கும். நாங்க போனபோது கூட சிலர் வழுக்கி விழுந்துட்டாங்க.ஒரு பெரியவர் கீழ விழுந்து கால்களில் அடிபட்டு தூக்கிட்டு போனாங்க. மேலும் காத்தும் அளவுக்கு அதிகமாக வீசும்.  அதனால, கவனமா நிக்கனும்.  

கார்த்திகை மாசம் ஓடும் மேகங்களைப் பார்த்து..., மழை மேகம்லாம் கார்த்திகை தீபம் பார்க்கப் போகுதுன்னு எங்க ஊர் பக்கம் சொல்லுவாங்க. கார்த்திகை தீபம் அன்னிக்கு கண்டிப்பா மழை பெய்யும். அட்லீஸ்ட் சிறுதூறலாவது இருக்கும். அதனால கவனமா மலை மேல் ஏறனும், நிக்கனும், தீபத்தை தரிசிக்கனும்.
தூரத்தில் தீபத்தை கண்டதும் மனதிலும், உடலிலும் இனம்புரியாத ஒரு சிலிர்ப்பு. அண்ணாமலையானுக்கு அரோகரா! ன்னு  சொல்லி.., கைக்கூப்பி, இறைவனை தொழுது.., எல்லோருக்கும் நன்மைவர பிரார்த்தித்து கொண்டு கொண்டுபோன நெய்யினை தீபத்தில் ஊத்தினோம். அப்படியே தீபத்தின் முன்னே ஒரு செல்பியும் எடுத்துக்கிடோம்.
மலைஉச்சியில் நல்ல குளிராக இருந்ததால, அங்க உதவிக்கு நின்ற பக்தர்கள் சிலர் தீபத்துக்கு அருகில் நெருப்பு பற்ற வைத்து குளிர் காய்ஞ்சுக்கிட்டு இருந்தாங்க. அதே மாதிரி, அங்க சேவைக்காக இருப்பவர்கள் பக்தர்கள் கொடுக்கும் உணவுப்பொருள் மற்றும் தண்ணீரையும் மனமகிழ்வுடன் வாங்கிக்கிறாங்க.
மலைமேல  பக்தர்கள் கூட்டம் சுமாரா இருக்கு. எல்லோரும் தீபத்தை காணும் ஆவலில் கஷ்டப்பட்டு மலை ஏறி வந்திருந்தாங்க. திருமணமானவர்கள், நண்பர்கள், காதலர்கள், வயதானவர்கள், குடும்பத்துடன்  என  தினுசு தினுசா மலைமீது ஏறி கார்த்திகை தீபத்தை தரிசிக்க வந்திருக்காங்க .
நானும் பரவசத்துடன் தீபத்தை கண்குளிர பார்த்து, வணங்கி, வேண்டி அண்ணாமலையாருக்கு அரோகரா! ன்னு தீபத்தை தரிசிச்சுட்டு இருந்தோம். அப்போ, ஒரு குரல்.  தீபதரிசனம் செஞ்சவங்கலாம், கவனமா பாறையில் இறங்கி போங்க.  காத்து பலமா வீசுது. பாதை ஓரமா போவாதீங்க. பாறைலாம்  நெய் கொட்டி வழுக்குது, கவனமாபோங்க. எதிர்க்க வர்றவங்களுக்கு, பின்னாடி வர்றவங்களுக்கும் அடுத்தவர்களுக்கு வழி விடுங்கன்னு. ஒருத்தரை ஒருத்தர் போட்டி போட்டுக்கிட்டு முந்தாதீங்க. அண்ணாமலையாருக்கு காணிக்கை செலுத்துங்கன்னு அந்த குளிரிலும் சிவனடியாரது குரல் கணீர்ன்னு கேட்டுச்சு.


நாங்களும் பயபக்தியோடு அங்க இருந்த தற்காலிக உண்டியலில் காசு போட்டுட்டு, விளக்கில் இருந்து வழிந்த நெய்யை அவர்கள் ஒரு சிறிய பாட்டிலில் பிடித்து தர, அந்த புனிதமான நெய்யை வீட்டுக்காக கொண்டு வாங்கிக்கிட்டோம். வீட்டில்  இருந்து லைவ் டெலிகாஸ்ட்ல பார்த்துக்கிட்டு இருந்த என்னை. மலைமீது வரை வர உடல் வலுவும், மனதைரியத்தையும் தந்த இறைவனுக்கு  நன்றி சொல்லி தீபத்தை வணங்கினோம் .  
குளிரிலயும், பனித்துளிகளுக்கிடையிலும் எந்த பாதிப்பும் இல்லாம ஆரவாரத்தோடும் கம்பீரமா, அடிமுடி காண முடியாத ஜோதிமயமானவனே தீபம் ரூபம் கொண்டு “மகாதீப”மாய்  பிரகாசித்து, அங்கு வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருந்தார்.
நாங்களும் மனமுருக தீபத்தை கும்பிட்டு, கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்திக்கிட்டு அடுத்து வரும் பக்தர்கள் கூட்டத்திற்கு இடம் விட்டு கீழ இறங்க ஆரம்பித்தோம்.
நாங்க இறங்க ஆரம்பிக்கும்போதே லேசா விடிய ஆரம்பிச்சிடுச்சு. இளங்காலை வெளிச்சத்துல மின் விளக்கு அலங்காரத்தில் கோவில் ஜொலிச்சுது. மலை இறங்க ஆரம்பிச்சோம்.
விடிந்தும் விடியாத அந்த் அதிகாலை பொழுதிலும் பக்தர்கள் உற்சாகமா மலை ஏறியும், இறங்கிட்டயும் இருந்தாந்தாங்க.  மலைப்பாதையில் இருக்கும் சின்ன சின்ன கல்லுலாம் காலை பதம் பார்த்துச்சு. மலை மேல ஏறும்போது இந்த அவஸ்தை தெரில. 
நாங்க முழுசா மலை இறங்கும் முன்னமயே அண்ணாமலையார் கோவிலில் இருந்த மின்விளக்குகள்லாம் அணைச்சுட்டாங்க. நீங்க விளக்கையெல்லாம் அணைச்சு இருட்டாக்கிட்டாலும் நான் இருக்கேன் இறைவன் இருக்கும் இடம் காட்ட வெளிச்சம் நான் தருகிறேன் என ஆதவன் நல்லா ஒளிவீச ஆரம்பிச்சுட்டான். ஜோதிரூபமான இறைவனும், அவன் அம்சமான மலையும் ஆதவனின் வெம்மையை தாங்க முடியும். நம்மால முடியுமா?! எப்படா மலையை விட்டு இறங்குவோம்ன்னு ஆயிடுச்சு. அடிக்கடி மரநிழல் தேடி ஒதுங்க வேண்டியதாகிடுச்சு.
நின்ற இடத்துல இருந்து திரும்பி பார்த்தோம். ஐயோ! இவ்வளவு பெரிய மலையிலா நாம் ஏறி இறங்கினோம்”ன்னு நினைக்கும்போது, அதற்கு சக்தியும், அவனை தரிசிக்கும் புண்ணியத்தையும் கொடுத்த இறைவனுக்கு நன்றி கூறி அங்க இருந்தே திருக்கோவிலின் முழு கோபுர தரிசனத்தையும் கண்டுகளித்தோம். 
இங்க இருந்து பார்க்க நகரத்தின் அழகும், முழுகோவிலும், எல்லா கோபுரங்களும், ஒரே நேர்கோட்டில் தரிசனம் செய்ய முடிந்தது .
வெயில் நல்ல சுட்டெரிக்க ஆரம்பிச்சுடுச்சு. ஆனாலும், ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாய் அண்ணாமலையாரை தரிசிக்க தீப வடிவில் தரிசிக்க எதையும் பொருட்படுத்தாது மலை ஏறிக்கிட்டிருந்தாங்க.
ஒருவழியா, மலையடிவாரத்துக்கு வந்துட்டோம். அங்க, மலையடிவாரத்தில் முலைப்பால் தீர்த்தத்தில் முகம் கைகால் நனைத்து, நாங்க போன வழியில் இருக்கும்  பீம தீர்த்தம், அருட்பால் தீர்த்தம், பாத தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களும். அல்லிச்சுனை, அரளிச்சுனை, வழுக்குப்பாறைச் சுனை, அரசன் சுனை, மயிலாடும்பாறைச் சுனை, ஊத்துக்குட்டைச் சுனை, பவழக்குன்றுச் சுனை,  கழுதைக்குறத்திச் சுனை, சாரங்கன் சுனை, கரடிச் சுனை, தனக்கமரத்துச் சுனை, புங்கமரத்துச் சுனை, நெல்லிமரத்துச் சுனை, ஆலமரத்துச் சுனை, குமார சுனை, கல்சுத்தி மரத்துச் சுனை. இதுமட்டுமில்லாம ஆள் இறங்கிக் குளித்திடும் அளவுக்கான தொல்லாங்கன் சுனை, இடுக்குச்சுனை, வலக்கையால் பாறையைப் பிடித்து இடக்கையால் மட்டுமே நீர் அருந்தும் ஒறட்டுக்கை சுனைலாம் இரவில் தரிசிக்க முடியாமல் போனது.
மலையடிவாரத்துல ”குகை நமசிவாயம்  கோவிலி”ன் அருகே உள்ள ஆஸ்ரமங்களில் காலையில் அன்னதானம் சிறப்பாக செய்து இருந்தனர். சாம்பார் சாதம், தயிர் சாதம், பிரிஞ்சு சாதம் என ஃபுல் கட்டு கட்டிட்டு அங்கிருந்து கிளம்பினோம். அடுத்து எங்களுக்கு தரிசனம் தர சீக்கிரம் கூப்பிடுப்பான்னு வீட்டுக்கு வர வண்டி பிடிச்சோம்.

போன கார்த்திகை தீபத்தின்போது எடுத்த படங்கள் இப்போதான் பதிவிட முடிஞ்சது.