Monday, September 11, 2017

ஒரு புறாவுக்கு அக்கப்போரா?! - ஐஞ்சுவை அவியல்.

மாமோய்! இந்த வாரம் குருபெயர்ச்சி நடந்துச்சுல்ல. அதன்படி உங்களுக்குதான் நேரம் சரியில்ல. அதனால, வியாழக்கிழமை அன்னிக்கு கோவிலுக்கு போய் குருபகவானுக்கு விளக்கேத்தி வரச்சொல்லி இருக்காங்க.  
லூசே! கடவுள் கொடுக்க நினைக்குறதை யாராலும் தடுக்க முடியாது. கடவுள் தடுக்க நினைக்குறதை யாராலும் தடுக்க முடியாதுன்னு ஒரு பழமொழி உண்டு. அதன்படி பார்த்தா, நடந்த வினை எதையும் இல்லாம போகாது. அதுக்குண்டான எதிர்வினை கண்டிப்பா நடந்தே தீரும். அப்புறம் ஏன் சாமி கும்பிடனும்ன்னு கேட்டா... இறைவன் பக்கம் நம்ம மனசு போச்சுன்னா மீண்டும் தப்பு பண்ண வாய்ப்பும் கிடைக்காது, நேரமும் இருக்காதுங்குறதாலதான் சாமி, பூதம், கிரகம்லாம் உண்டாக்கி வச்சிருக்காங்க. 

அப்ப, கோவில் போகக்கூடாது, சாமி கும்பிடக்கூடாதுன்னு சொல்லுறியளா!?

ம்ஹூம். சாமியால மட்டும் எல்லாம் மாறிடும்ன்னு நம்பாதன்னுதான் சொல்றேன்.  இதுக்குமேல எதாவது சொன்னா என்னை கரிச்சு கொட்டுவே.  நம்மால கோவிலுக்கு போக முடியாதபோது நம்மை சேர்ந்தவங்க நம்ம ட்ரெஸ்சை கொண்டு போய் கைல வச்சிக்கிட்டு சாமி சுத்திவர்றதை பார்த்திருப்போம். அது குரு விசயத்துல செல்லாது. அவங்கவங்களுக்கு பலன் கிடைக்கனும்ன்னா அவங்கவங்களேதான் குருவை வழிப்படனும்.  அதேப்போல, குருவுக்கு முன்பாக நேருக்கு நேராக நின்னுதான் கும்பிடனும். ஏன்னா, அப்பதான் குருவோட பார்வை முழுசா நம்மீது படும்.   குரு சன்னிதியிலிருந்து தானியம் தானம் செஞ்சா குருவின் அருள் கிடைக்கும், புஷ்பராகமும், தங்கமும், மஞ்சள் நிற ஆடையும், முல்லைப்பூவும், கொண்டைக்கடலையும் குருவுக்கு உகந்தது.  

சரிங்க மாமா! நினைவில் வச்சுக்குறேன். 

உன்னை மாதிரியே ஒரு  கடமை உணர்ச்சில ஒரு ஆள் இருக்காரு. தெரியுமோ!

கிண்டல் பண்ணுறீகன்னு தெரியுது. என்ன கதைன்னு மட்டும் சொல்லுக. 

சேலம் மாவட்டம் அரூரிலிருந்து எல்லவாடிங்குற ஊருக்கு போற பஸ்சுல ஒருத்தர் தன்னோடு ஒரு புறாவை கொண்டு போயிருக்கார் ஒரு ’குடி’மகன். அதோடு பேசிக்கிட்டும், கொஞ்சிக்கிட்டும் வந்திருக்கார். அப்ப பார்த்து செக்கிங்க் வந்திருக்கார். புறாக்கு டிக்கெட் எடுக்கலைன்றதை தெரிஞ்சுக்கிட்ட செக்கர் கண்டக்டருக்கு மெமோ கொடுத்திருக்கார்.  விலங்குகள், பறவைகளுக்கு டிக்கட் விலைல நாலுல ஒரு பங்கு விலைல டிக்கெட் எடுக்கனுங்குறது ரூல்ஸ்ன்னு செக்கர் சொல்ல... அது 30 பறவை வரைக்கு டிக்கட் இல்லாம கொண்டு போகலாம்ன்னு வாதாட... இந்த விசயம் நீதிமன்றம் வரைக்கும் போயிருக்காம். 

அட ஆண்டவா! இப்படிலாம் கூட நடக்குமா மாமா...


  இதுக்கே இப்படின்னா,  கோவைல பெரிய காட்டையே அழிச்சு ஆதிசிவன்னு ஒரு சிலையை நிறுவுன ஈஷா யோகா மையத்து ஆளுங்க நதிகளை இணைக்க போறதா கொஞ்ச நாளாய் சொல்லிக்கிட்டிருக்காங்க. நதிகளை இணைக்க மிஸ்டுகால் கொடுக்க சொல்லி அதுக்கு சென்னைல விழா எடுத்தாங்க.  அதுல கலந்துக்கிட்டவங்களாம் யாருன்னு பார்த்தா தமிழக ஆத்து மணலை வடநாட்டு ஆளுகளுக்கு வித்து பணம் பண்ணுற சேகர் ரெட்டியின் நண்பரான ஓபிஎஸ், இதை தடுக்காத முதல்வர் ஈபிஎஸ், ஜெ மரணமான அப்பல்லோ மருத்துவனை பிரதாப் ரெட்டி.... இப்படி இவங்க அடிக்குற கூத்துக்கு என்ன சொல்ல?!

 
கல்யாணத்துல என்னென்னமோ புதுமைலாம் நடக்குது. மொய் எழுதுறதை கம்ப்யூட்டரைஸ் பண்ணி இருக்காங்க பாருங்க...


டிஜிட்டல் இந்தியாவின் நவீன கரண்ட் கம்பம்....

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1471365

நன்றியுடன்,
ராஜி

23 comments:

 1. அவியல்.........அஞ்சுவை அவியல் பிரம்மாதம்.......சாப்புட்டு புழகாங்கிதமடைந்தேன். நன்றி........//மொய் கண்டிப்பா கம்பியூட்டர்ல ஏத்தி வைக்கணும்,இல்லேன்னா ஆராருக்கு எப்பெப்ப மொய் வச்சோம்கிறது மறந்து போயிடும்.......

  ReplyDelete
  Replies
  1. வைரஸ் வந்தா எல்லாமே பூடும். நோட்டு புத்தகம்ன்னா எந்த காலத்த்துக்கும் பத்திரமா இருக்கும்

   Delete
 2. போற போக்குல அரசியல் தாக்குதல் ஸூப்பர் சகோ.

  ReplyDelete
  Replies
  1. அரசியல் வேண்டாம்ன்னுதான் ஒதுங்கி இருப்பேன். ஆனா இவனுங்க அடிக்குற கூத்து பேச வைக்குது

   Delete


 3. டிஜிட்டல் இந்தியாவை கேலி செய்தால் உங்கள் கணணி உங்களிடம் இருந்து பறிக்கப்படும் அதுமட்டுமல்லாமல் உங்கள் போனும் பறிக்கப்படும்

  ReplyDelete
  Replies
  1. ஜாரி. இனி கேலி பேசல

   Delete
 4. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றியது போல தாக்கீட்டீங்க

  ReplyDelete
  Replies
  1. அத்தனை எரிச்சல் இவங்களால்

   Delete
 5. வணக்கம்
  வளமான இந்தியா இதுவோ???? சரியாக சொன்னீர்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. இதான் இங்கன தலையெழுத்து இப்ப...

   Delete
 6. சுவையான அவியல். பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

   Delete
 7. கண்மாய்களை தூர் வாறவே வக்கில்லை ,நதிகளை இணைக்கப் போறாங்களா :)

  ReplyDelete
  Replies
  1. நம்புனாதான் நீங்க இந்தியன்... இல்லன்னா....

   Delete
 8. பயங்கர ஹாட் அவியல்!!! ரெண்டு விஷயம்.....கரண்ட் கம்பி, அப்புறம் ஜக்கி விஷயம்...

  கீதா: ராஜி இந்த மரம் வளர்ப்போம் எல்லாம் சும்மா டுபாக்கூர். நீங்க இங்க சொல்லியிருக்கற ஜக்கி பாயிண்ட நேத்து மதுரை தமிழனின் சூடான பதிவுக்குப் போட நினைத்து ஏனோ ஜகா வாங்கிட்டேன்....ஸ்ரீராம் சூப்பரா கமென்ட் போட்டிருந்தார் அங்கு. எல்லாம் ஸ்டண்ட் தான்...ராஜி நல்லது செய்யணும்னு நினைக்கறவங்க இப்படி எல்லாம் கூவ மாட்டாங்க. சத்தமே இல்லாம செஞ்சுக்கிட்டுப் போயிட்டே இருப்பாங்க. எந்த்வித ஆதாயமும், எதிர்பார்ப்பும் இல்லாம...இப்படி மேடை போட்டு வெளிச்சம் போட மாட்டாங்க....அதுலருந்தே தெரியலையா இதெல்லாம் வெத்து வேட்டுனு...நிறைய வேடிக்கைகள் நிகழ்கின்றன. சிப்பு சிப்பா வருது...

  ReplyDelete
  Replies
  1. எனக்கு இந்த சாமியார்களையே பிடிக்காது... முற்றும் துறந்த முனிவர்களால் செல்போன், ஆடம்பரம்,ஏசி, அறுசுவை உணவு, பகட்டு, புகழ் மட்டும் துறக்க முடியலியே! எல்லாம் போங்குங்க.

   Delete
  2. பிரதாப் ரெட்டிக்கு இவங்களுக்கும் என்ன சம்பந்தம்ன்னு புரில

   Delete
 9. அவியல்!சுவை நன்று ஓட்டு போட்டாச்சி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

   Delete
 10. ஐஞ்சுவை அவியலுக்கு ஐந்தாம் வாக்கு! புறாவுக்கு டிக்கெட்டா? அட! நவீன கரண்ட் கம்பம் சூப்பர். டிஜிட்டல் மொய்யும் சூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம் புறாவுக்கு டிக்கெட் எடுக்க வைக்கலைன்னு கண்டக்டருக்கு மெமோ கொடுத்திருக்காங்க. என்னத்த சொல்ல!!! கரண்ட் கம்பம் எப்படி?!

   Delete
 11. //லூசே! கடவுள் கொடுக்க நினைக்குறதை யாராலும் தடுக்க முடியாது. கடவுள் தடுக்க நினைக்குறதை யாராலும் தடுக்க முடியாதுன்னு ஒரு பழமொழி உண்டு//
  என்னா திது. பதிவு எழுதுறோம் ங்கற அக்கற கொஞ்சங் கூட இல்லாம.

  ReplyDelete
  Replies
  1. ச்ச்ச்ச்ச்ச்சும்ம்ம்ம்மா... ஒரு சுவாரசியத்துக்குண்ணே

   Delete