பாகற்காய்ன்னாலே கசக்கும்ன்னு நம்ம பிள்ளைகள் ஒதுக்கி வச்சிடுவாங்க. பெரியவங்களிலும் பாதிப்பேர் அப்படிதான். என் சின்ன பொண்ணை பாகற்காய் சாப்பிட வைக்க ஸ்கேல்லாம் எடுக்கனும். அப்பயும் ஒரு பீஸ் சாப்பிட்டு எனக்கு தெரியாம வெளில போய் துப்பிடும். சிப்ஸ் போட்டால் கொஞ்சம் கசப்பு குறையும், ஆனாலும் அது சாப்பிடாது. அதனால, பாகற்காயை வேறு விதமா செஞ்சு கொடுக்க சொல்லி என் அம்மா டிப்ஸ் கொடுத்தாங்க.
தேவையான பொருட்கள்...
பாகற்காய்
வெங்காயம்
தக்காளி
பூண்டு
மிளகாய் தூள்
புளி தண்ணி
உப்பு
வெல்லம்
எண்ணெய்
கடுகு
பாகற்காயை வெட்டி அரிசி கழுவின தண்ணியில ஏழு முறை அலசிக்கனும், இப்படி செஞ்சால் பாகற்காய் கசப்பு குறையும்ன்னு சொல்வாங்க... புளியை ஊற வச்சுக்கனும்.
வாணலில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கடுகு போட்டு வெடிக்க விட்டு பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கனும்.
அடுத்து தக்காளிய போட்டு வதக்கனும்.
உப்பு சேர்த்துக்கிட்டா சீக்கிரம் வதங்கிடும்...
வெட்டி வச்ச பாகற்காயை சேர்த்து நல்லா வதக்கிக்கனும்.
மிளகாய் தூள் போட்டு நல்லா வதக்கிக்கனும்...
மிளகாய் தூள் வதங்கியதும் தண்ணி சேர்த்து கொதிக்க விடனும், மிளகாய் தூள் வாசனை போனதும் புளித்தண்ணி சேர்த்து கொதிக்க விடனும்.
தண்ணி வத்தி புளிவாசனை போனதும் வெல்லம் சேர்த்து கிரேவி பதத்துக்கு வந்ததும் கறிவேப்பிலை கொமல்லி தூவி அடுப்பைவிட்டு இறக்கிடனும். .
பசங்களும் விரும்பி சாப்பிடும் இனிப்பான பாகற்காய் குழம்பு ரெடி. கூழுக்கு தொட்டுக்கிட்டா செமயா இருக்கும். வெல்லம் சேர்க்குறதால பாகற்காயின் கசப்பு மங்கி குழம்பு இனிக்கும். பசங்க முகம் சுளிக்காம சாப்பிடுவாங்க. வெல்லம் சேர்க்குறதால இரும்புசத்து கிடைக்கும். வெல்லம் உடலுக்கு கெடுதிய உண்டாக்காது.
நன்றியுடன்,
ராஜி.







