Tuesday, July 03, 2018

என்னது, பாகற்காய் குழம்பு இனிக்குமா?! - கிச்சன் கார்னர்

பாகற்காய்ன்னாலே கசக்கும்ன்னு நம்ம பிள்ளைகள் ஒதுக்கி வச்சிடுவாங்க. பெரியவங்களிலும் பாதிப்பேர் அப்படிதான்.  என் சின்ன பொண்ணை பாகற்காய் சாப்பிட வைக்க ஸ்கேல்லாம் எடுக்கனும். அப்பயும் ஒரு பீஸ் சாப்பிட்டு எனக்கு தெரியாம வெளில போய் துப்பிடும். சிப்ஸ் போட்டால் கொஞ்சம் கசப்பு குறையும், ஆனாலும் அது சாப்பிடாது. அதனால, பாகற்காயை வேறு விதமா செஞ்சு கொடுக்க சொல்லி என் அம்மா டிப்ஸ் கொடுத்தாங்க. 

தேவையான பொருட்கள்...
பாகற்காய்
வெங்காயம்
தக்காளி
பூண்டு
மிளகாய் தூள்
புளி தண்ணி
உப்பு
வெல்லம்
எண்ணெய் 
கடுகு

பாகற்காயை வெட்டி அரிசி கழுவின தண்ணியில ஏழு முறை அலசிக்கனும், இப்படி செஞ்சால் பாகற்காய் கசப்பு குறையும்ன்னு சொல்வாங்க... புளியை ஊற வச்சுக்கனும்.

வாணலில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கடுகு போட்டு வெடிக்க விட்டு பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கனும்.

அடுத்து தக்காளிய போட்டு வதக்கனும். 
உப்பு சேர்த்துக்கிட்டா சீக்கிரம் வதங்கிடும்...
வெட்டி வச்ச பாகற்காயை சேர்த்து நல்லா வதக்கிக்கனும்.
மிளகாய் தூள் போட்டு நல்லா வதக்கிக்கனும்...

மிளகாய் தூள் வதங்கியதும் தண்ணி சேர்த்து கொதிக்க விடனும், மிளகாய் தூள் வாசனை போனதும் புளித்தண்ணி சேர்த்து கொதிக்க விடனும்.
தண்ணி வத்தி புளிவாசனை போனதும்  வெல்லம் சேர்த்து கிரேவி பதத்துக்கு வந்ததும் கறிவேப்பிலை கொமல்லி தூவி அடுப்பைவிட்டு இறக்கிடனும். .


பசங்களும் விரும்பி சாப்பிடும் இனிப்பான பாகற்காய் குழம்பு ரெடி. கூழுக்கு  தொட்டுக்கிட்டா செமயா இருக்கும்.  வெல்லம் சேர்க்குறதால பாகற்காயின் கசப்பு மங்கி குழம்பு இனிக்கும். பசங்க முகம் சுளிக்காம சாப்பிடுவாங்க. வெல்லம் சேர்க்குறதால இரும்புசத்து கிடைக்கும். வெல்லம் உடலுக்கு கெடுதிய உண்டாக்காது. 

நன்றியுடன்,
ராஜி.

12 comments:

 1. நல்லா இருக்கு கா...

  எங்க அம்மா வெறும் பாவக்காய்.. மி.தூள் போட்டு மொறு மொறு ன்னு வறுப்பாங்க... அதான் எங்க favorite..

  ReplyDelete
  Replies
  1. அப்படியும் செய்வேன்,. ஆனா என் சின்ன பொண்ணு சாப்பிடாது,

   Delete
 2. வாவ்......அருமை.....ஆமா,கசக்கலேன்னா அது எப்புடி பாவ/க க்காய் கொழம்பாகும்?சக்கர வியாதி/கொழுப்பு/இன்னும் வேற என்னன்னமோ வியாதி எல்லாத்துக்கும் பாக/வ க்காய் தான் கை மருந்தும்பாங்க.........///சரி இப்புடியும் சாப்புடலாம்.....

  ReplyDelete
  Replies
  1. சில மாத்திரைகள் இனிப்பு சுவையோடு வருதே அதுக்குன்னு மருந்தின் வீரியம் இல்லாம போகிடுமா?>! அதுமாதிரிதான் இதுவும்.

   Delete
 3. அப்படிக் கஷ்டப்பட்டு எதற்கு கசப்பை எடுக்கணும்? பாகற்காயின் ஸ்பெஷல் கசப்புதானே? அதையும் ரசிக்க, ருசிக்கப் பழக வேண்டாமோ? எனக்குப் பிடிக்கும்.

  பார்க்க அழகாக வந்துள்ளது.


  இது போல நானும் ஒருமுறை செய்துள்ளேன். ஆனால் பாகற்காயை அப்படி எல்லாம் கழுவுவதில்லை. விதையை எடுத்துடுவாங்க சிலபேர். பித்தம் செய்யும்பாங்க. ஆனால் ஒன்று. எங்கள் வீட்டில் நான் மட்டும்தான் சாப்பிடுவேன். சிலசமயம் என் சின்னவன் சாப்பிடுவான்!

  ReplyDelete
  Replies
  1. விதை கொஞ்சம் முத்தி இருந்தால் நாங்களும் எடுத்துடுவோம். பிள்ளைகளை சாப்பிட வைக்க இதுலாம் செய்யலாம்தானே?!

   Delete
 4. என் மனைவி பாகற்காய் போட்டு பிட்லா செய்வார் கசப்பு தெரியாது வேறு எப்படிச் செய்தாலும் வேண்டுமானால் கசப்பைக் குறைக்கலாம் கசக்கும்

  ReplyDelete
  Replies
  1. ஆமாப்பா. இப்படி வெல்லம் போட்டு செஞ்சு கொடுத்தாலும் பாகற்காயின் ஜூசை மட்டும் பிழிஞ்சிக்கிட்டு பாகற்காய தூக்கி வீசிடும்

   Delete
 5. எங்கள் வீட்டில் பாகற்காய் என் மகன் எல்லோருமே விரும்பிச் சாப்பிடுவோம். விதம் விதமாகச் சமைப்பதுண்டு. இந்த முறையும் செய்துள்ளேன். சப்பாத்திக்குக் கூட பாகற்காயை காம்பு நீக்கிக்கொண்டு பெரிதாக இருந்தால் நடுவில் குறுக்காக வெட்டிக் கொண்டு இல்லை என்றால் அப்படியே உள்ளே குடைந்து அதற்குள் நாம் ஸ்டஃப் செய்ய வேண்டியவற்றை (கத்தரிக்காய்க்கு ஸ்டஃப்ட் செய்யும் பொடி அல்லது, உருளைக் கிழங்கு மசாலா, அல்லது தக்காளி பூண்டு வெங்காய பேஸ்ட் என்று வைத்து தாளித்துவிட்டு பாகலைப் போட்டு வைத்து பிரட்டி பிரட்டி வதக்கினால் நன்றாக இருக்கும் சப்பாத்திகும் தொட்டுக் கொள்ளலாம்....இன்னும் நிறைய சொல்லலாம்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. துவரம்பருப்பு, தேங்காய் சேர்த்து கூட்டு வைப்போம். அதிலும் அதிகம் கசப்பு தெரியாது கீதாக்கா

   Delete