மகளுக்கு சீமந்தம் முடிஞ்சு வீட்டுக்கு கூட்டி வந்தாயிற்று. அவள் இனிப்பா எதும் சாப்பிட மாட்டா. சத்தானதுன்னு ராகி புட்டு, ராகி வடை, முருங்கைக்கீரை தோசை, கேரட் ஜூஸ், உருளை கட்லட்ன்னு செஞ்சு கொடுத்தாலும் அவளோட விருப்பமெல்லாம் குக்கரில் செய்யாத வெண்பொங்கலும் சாம்பாரும்... மாலை நேரத்திற்கு காரமா சீராளம், அரிசி வடைதான். முன்னலாம் சிப்ஸ், பப்ஸ்ன்னு சாப்பிடுவா. இப்ப அதுலாம் கொடுக்கக்கூடாதே...
Showing posts with label பாரம்பரிய சமையல். Show all posts
Showing posts with label பாரம்பரிய சமையல். Show all posts
Tuesday, September 01, 2020
Tuesday, March 17, 2020
இதுக்கு ஏன் கலகலான்னு பேர் வந்துச்சு?!- கிச்சன் கார்னர்
அன்றாடம் சாப்பிடும் சாப்பாட்டையே ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கம் புதுசா பரவிக்கிட்டிருக்கும் காலக்கட்டத்தில் பாரம்பரிய பலகாரங்களை செய்ய யாருக்கு பொறுமையும், நேரமும் இருக்கு?!ன்னு பலரும் நினைக்குற மாதிரி இதுலாம் செய்யுறது பெரிய விசயமில்லை. பசங்களுக்கு நல்லது கொடுக்குற திருப்தியும், நம்மாலும் இதுலாம் செய்யமுடியும்ன்ற ஆர்வமும் இருக்கும்வரை இதுலாம் ஜுஜுபி மேட்டர்.
சின்ன வயசில் எல்லார் வீட்டிலும் அப்பப்ப முறுக்கு, தட்டை, கோதுமை கலகலா, சிம்னின்னு எதாவது பண்டம் செய்வாங்க. அதுதான் காலை, மாலை, சாப்பாட்டுக்கு தொட்டுக்கன்னு பத்து பதினஞ்சு நாளுக்கு அந்த பண்டம் இருக்கும். இப்ப மாதிரி கடையில் வாங்கும் பழக்கமில்லை. எங்க ஊரில் இதை கலகலான்னு சொல்வாங்க. மத்த ஊரில் என்ன பேருன்னு தெரில!
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
வெண்ணெய் அல்லது நெய் - 2 டீஸ்பூன்
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை
எண்ணெய்
கோதுமை மாவை சலிச்சு எடுத்துக்கனும். கோதுமை மாவில் அரை பங்கு சர்க்கரையை எடுத்துக்கனும்.
சர்க்கரையை பொடிச்சு கோதுமை மாவில் சேர்த்துக்கனும்.
ஒரு சிட்டிகை ஆப்ப சோடா சேர்த்துக்கனும்..
வெண்ணெய் இல்ல. அதனால் நெய்யினை சேர்த்து, மாவினை நல்லா கலந்துக்கிட்டு, சிறுக சிறுக தண்ணி சேர்த்து பிசையனும்,. சர்க்கரை சேர்த்திருக்குறதால் அதிகம் தண்ணி செலவாகாது. சப்பாத்தி மாவு பதத்திற்கு மாவை பிசைஞ்சுக்கனும்.
சப்பாத்தி மாதிரி திரட்டி, கத்தியால் சின்னசின்னதா வெட்டிக்கனும்.. ரொம்ப மெல்லிசா திரட்டிக்க வேணாம். கொஞ்சம் கனமா இருக்கனும்.
சர்க்கரை சேர்த்திருக்குறதால் சீக்கிரம் சிவந்திடும். அதனால், அடுப்பு சிம்மில் இருப்பது அவசியம்.
நல்லா சிவக்கவிட்டு எடுத்தால் கலகலா ரெடி. இதை கிண்ணத்தில் போட்டு உருட்டுனா கலகலன்னு இருக்கும் அதனால்தான் இந்த பேரா இருக்குமோ?! கோதுமை, மைதா மாவினை சம பங்கா எடுத்தும் செய்யலாம்.
நன்றியுடன்,
ராஜி
Tuesday, March 03, 2020
மாலை நேர காஃபிக்கு ஜோடி இந்த தட்டடை - கிச்சன் கார்னர்..
சமையலில் புலி இல்லதான். ஆனா, ஒருமுறைக்கு நாலுமுறை செய்தா எந்த பலகாரமும் செய்ய பழகிடும். ஆனா, இந்த எள்ளடை, தட்டடைன்னு சொல்லப்படும் தட்டை செய்ய மட்டும் எனக்கு இன்னும் கைவரல. மாவை ஆவில வச்சு பார்த்தாச்சு, வறுத்து பார்த்தாச்சு.. ஆனாலும் கைகூடாம இழுத்துக்கிட்டே இருந்துச்சு. கடைசியா ஒரு நாலைஞ்சு முறைதான் நல்லா வர ஆரம்பிச்சிருக்கு. பார்ப்போம் இந்நிலை தொடருதான்னு...
பச்சரிசியை ஊறவச்சு அரைச்சு மாவாக்கி சிலர் வறுத்தும், சிலர் ஆவியில் வேக வச்சு, மிளகாய் பூண்டை அரைச்சு அதில் சேர்த்து, பெருங்காயம், வேர்க்கடலை, கறிவேப்பிலை சேர்த்து தட்டை செய்வாங்க. ஆனா, நான் இப்பவும் கல் உரலில் மாவு ஆட்டிதான் செய்வேன்.
தேவையான பொருட்கள்..
புழுங்கலரிசி - கால் படி
காய்ந்த மிளகாய்- காரத்திற்கேற்ப
பூண்டு - பத்து பல்
ஊறவைத்த கடலை பருப்பு - ஒரு கப்
எள் - 1 டீஸ்பூன்,
பெருங்காயம்- தேவைக்கேற்ப
பொடித்த வேர்க்கடலை - சிறிது
கருவேப்பிலை கொஞ்சம்
உப்பு
எண்ணெய்
அரைச்ச மாவோடு ஊற வச்ச கடலை பருப்பு, எள், கறிவேப்பிலை, வேர்க்கடலை பொடி சேர்த்துக்கனும்..
கூடவே பொடித்த பொட்டுக்கடலை மாவு சேர்த்துக்கனும்..நல்லா பிசைஞ்சுக்கனும்..
ஒரு சுத்தமான பருத்தி துணில தேவையான அளவில் தட்டை தட்டிக்கனும்.. அதிகப்படியான தண்ணியை துணி இழுத்துக்கும். அரிசி காய வைக்க, தானியங்கள் முளைக்கட்ட இப்படி பயன்படுத்த ஒரு காட்டன் லுங்கியை தனியா வச்சுக்குறது நல்லது. இல்லன்னா காடா துணியையும் இதுக்கு பயன்படுத்தலாம்.
எண்ணெயில் போட்டு இருபக்கமும் திருப்பி விட்டு சிவக்க விட்டு எடுத்தால் தட்டை ரெடி..
வாங்களேன்! தட்டையோடு கொஞ்சம் காஃபி, நிறைய கதைன்னு இந்த மாலைப்பொழுதை கழிக்கலாம்!!
நன்றியுடன்,
ராஜி
Tuesday, February 04, 2020
காயம் ஆற்றும் அவரைக்காய்+துவரம்பருப்பு பொரியல் -கிச்சன் கார்னர்
அவரைக்காய் வீட்டில் காய்த்து தொங்குது. பிஞ்சு அவரைக்காய்க்கு புண்களை ஆற்றும் சக்தி இருக்குன்னு அம்மாக்கிட்ட யாரோ சொன்னாலும் சொன்னாங்க. இட்லி சாம்பார்ல அவரைக்காய், பொரியலாய், அவியலாய், கூட்டாய்,சூப்பாய்..... அவரைக்காய் பல ரூபமெடுக்குது. அட! நைட் குருமாவிலும் அவரைக்காய்ன்னா அம்மாவோட அக்கறையை!! என்ன சொல்ல?!. நல்லவேளையா காபில அவரைக்காயை கலந்து கொடுக்காம விட்டுச்சேன்னு சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான்.
புண்களை ஆற்றும் திறன்கொண்ட அவரைக்காய் பொரியல் செய்யுறது எப்படின்னு பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்..
பிஞ்சு அவரைக்காய்-1/4 கிலோ
பெரிய வெங்காயம்- 1
பூண்டு பற்கள்
காய்ந்த மிளகாய்- காரத்திற்கேற்ப
துவரம்பருப்பு-1/2 ஆழாக்கு
தேங்காய் துருவல் - கொஞ்சம்
கடுகு
கடலைப்பருப்பு’
உளுத்தம்பருப்பு
எண்ணெய்
உப்பு
அவரைக்காயை கழுவி பொடியா நறுக்கிக்கனும்,, துவரம்பருப்பை அதிகம் குழையாம வேக வச்சு எடுத்துக்கனும்..
அடுப்பில் வாணலியை வச்சு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க விடனும். அடுத்து கடலைப்பருப்பு+உளுத்தம்பருப்பு போட்டு சிவக்க விடனும்.
காரத்திற்கேற்ப காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு சிவக்க விடனும்..பூண்டு பற்களை போட்டு வதக்கனும். பூண்டை நசுக்கி போட்டால் நல்லது.
வெங்காயம் போட்டு வதக்கனும்..
கறிவேப்பிலை கொத்தமல்லி போடனும்..
பொடியா நறுக்கின அவரைக்காயை கொட்டி வதக்கனும்..
தேவையான அளவு உப்பு சேர்த்து, தேவையான அளவுக்கு தண்ணி சேர்த்து வேக விடனும்..
காய் வெந்த, தண்ணி சுண்டினதும் வெந்த துவரம்பருப்பை சேர்த்துக்கனும்தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கிடனும்,...
சுவையான அவரைக்காய் பொரியல் ரெடி..
செஞ்சு சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க..
நன்றியுடன்,
ராஜி
Tuesday, October 01, 2019
பண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்
பண்ணைக்கீரை ... இந்த கீரை எத்தனை பேருக்கு தெரியும்ன்னு தெரியல!! வேர்க்கடலை விளைஞ்சிருக்கும்போது அதனோடு இதுவும் வளர்ந்து வரும். களைப்பறிக்கப்போகும் பெண்கள், இதை பறிச்சு முந்தானையில் கட்டி வருவாங்க. களை பறிச்ச களைப்பில் மாலை வீடு திரும்பி விதம்விதமா சமைக்க இயலாது. அதனால, செத்த நேரம் திண்ணையில் உக்காந்து கதை பேசிக்கிட்டே இந்த கீரையை ஆய்ஞ்சு சுத்தப்பண்ணி அடுக்களைக்கு போனால், பண்ணைக்கீரையை ஒரு பக்கம் வேக விட்டுட்டு, எலுமிச்சை அளவு புளியை ஊற வச்சு அது ஊறும் நேரத்தில், மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு ரெண்டு பல் வச்சு அம்மியில் விழுதா அரைச்சு, அந்த விழுதோடு புளியை கரைச்சு விட்டு உப்பு சேர்த்து கொதிச்சு வரும்போது இறக்கி, தேங்காய் சில்லு ரெண்டு, ரெண்டு பச்சை மிளகாய், உப்பு, உடைச்ச கடலை சேர்த்து அரைச்சு துவையல் அரைச்சு சோறு பொங்கி வச்சா தேவாமிர்தமா இருக்கும். இப்பயும் மழைக்காலத்தில் எங்க வீட்டில் இந்த காம்பினேஷன்ல இரவு உணவு உண்டு.
தேவையான பொருட்கள்..
பண்ணைக்கீரை,
வெங்காயம்
தக்காளி
வெங்காயம்
தக்காளி
பச்சை மிளகாய்
காய்ந்த மிளகாய்
பூண்டு
புளி,
உப்பு
எண்ணெய்
குழம்பு வடகம்.
அடுப்பில் பாத்திரத்தை ஏத்தி ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும், காரத்துக்கேற்ப காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து லேசா வதக்கனும்
உரிச்ச பூண்டு பற்கள் சேர்த்து லேசா வதக்கனும்..
வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கனும்..
பண்ணைக்கீரையை சேர்த்து வதக்கனும்....
கீரை வெந்ததும் உப்பு சேர்க்கனும்...
புளி சேர்த்து அடுப்பை அணைச்சுடனும்... கல் சட்டியில் கீரையை கொட்டி நல்லா மைய கடையனும்...
தாளிக்குற கரண்டியில் குழம்பு வடகத்தினை சேர்த்து தாளிச்சு...
வாசனைக்கு காய்ந்த மிளகாய் சேர்த்து சிவந்ததும்...
கடையும் கீரையில் கொட்டி லேசா கடைஞ்சால் கமகம வாசனையோடு பண்ணைக்கீரை மசியல் ரெடி.

பெரும்பாலும் கீரையை இரவு சாப்பாட்டில் சேர்த்துக்க கூடாதுன்னு சொல்வாங்க. ஆனா, மழை நேரத்தில் இந்த கீரையை சாப்பிட்டு பார்த்தால் அந்த ரூல்ஸ்லாம் தூக்கி போட தோணும்...
தக்காளி அல்லது புளியை கொஞ்சம் அதிகமா இந்த கீரைக்கு சேர்த்துக்கனும், தூக்கலான புளிப்பு சுவையில் இந்த கீரை டாப் கிளாசா இருக்கும்..
நன்றியுடன்,
ராஜி
Tuesday, July 23, 2019
ரவா இட்லி செய்வது இம்புட்டு ஈசியா?! - கிச்சன் கார்னர்
எனக்கு ரவா இட்லின்னா பிடிக்கும். ஆனா, இதுவரை ஹோட்டலில் சாப்பிட்டதில்லை. எங்காவது கல்யாணம், காட்சின்னு போனால் சாப்பிடுவதோடு சரி. யூட்யூப், பேஸ்புக்ல உலா வரும்போது அடிக்கடி ரவா இட்லி செய்முறை கண்ணில் படும். அதில் தயிர் சேர்ப்பதால் புளிப்பு சுவையா இருக்குமோன்னு புதுசா ட்ரை பண்ண பயமா இருந்துச்சு.
நேற்று வீட்டில் யாருமில்லை. சரி ட்ரை பண்ணி பார்க்கலாமேன்னு இறங்கிட்டேன். சின்னவதான் பரிசோதனை எலியா மாட்டிக்கிட்டா. நல்லாதான் இருக்கும்மான்னு சொன்னா. அது எந்தளவுக்கு உண்மைன்னுதான் தெரில:-( . ஆனா, இட்லி சாஃப்டா வந்தது. இனி அடிக்கடி செய்யனும். மருமகப்பிள்ளைக்கு ஆக்கிப்போட ஒரு புது டிபன் தயார்..
தேவையான பொருட்கள்
ரவை - ஒரு கப்
தயிர் - 1/2 கப்
வெங்காயம்
கேரட்
இஞ்சி
ப.மிளகாய்
கறிவேப்பிலை கொத்தமல்லி
எண்ணெய்
கடுகு
கடலைப்பருப்பு
உளுத்தம்பருப்பு
ஆப்பசோடா
உப்பு
ரவையை சுத்தம் செய்து வச்சுக்கனும். கேரட்டை கழுவி தோல் சீவி துருவி வச்சுக்கனும். வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியா நறுக்கி வச்சுக்கனும். இஞ்சியை கழுவி தோல் நீக்கி நசுக்கி வச்சுக்கனும்
வாணலியை சூடாக்கி எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு சிவக்க விடனும்..
ப.மிளகாயை போடனும்...
வெங்காயத்தை போட்டு லேசா வதக்கவும்..
நசுக்கி வச்சிருக்கும் இஞ்சியை சேர்க்கவும்..
துருவி வச்சிருக்கும் கேரட்டை சேர்த்து நல்லா வதக்கனும்...
கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து லேசா வதக்கனும்...
சுத்தம் செய்து வைத்திருக்கும் ரவையை கொட்டி வறுக்கனும்.... ஒரு ரெண்டு நிமிசம் வறுத்ததும் அடுப்பை அணைச்சி ஆற விடனும்..
ரவை+கேரட் கலவை ஆறினதும் ஒரு பங்கு ரவைக்கு முக்கால் பங்கு தயிர் சேர்த்து நல்லா கிளறி விடனும். கொஞ்சமா தண்ணி சேர்த்து கலக்கனும். தேவையான அளவுக்கு உப்பு, ஆப்பசோடா சேர்த்து கலந்து 15 நிமிசம் மூடி வச்சுடுங்க.
மாவு தண்ணியா இருக்கக்கூடாது. மாவு தண்ணியா இருந்தால் இட்லி சப்பையா இருக்கும். கொஞ்சம் கெட்டியா அள்ளி எடுத்து வைக்கும் பக்குவத்தில் மாவு இருந்தால்தான் இட்லி பூரித்து வரும். இட்லிப்பானையில் வச்சு அவித்தெடுத்தால் ரவா இட்லி ரெடி.
ரவை+கேரட் கலவையோடு தயிர் கலந்தபின் பத்து நிமிசம் கண்டிப்பா ஊறவிடனும். இல்லன்னா இட்லி கல்லுப்போல் இருக்கும். அதிகமா தண்ணி சேர்க்கக்கூடாது. தயிர் சேர்க்க விருப்பப்படாதவங்க ஈனோ சால்ட் சேர்க்கலாம். முந்திரிப்பருப்பு சேர்க்கலாம். வீட்டில் இல்லாததால் நான் சேர்க்கலை. பச்சை பட்டாணி கொஞ்சமா சேர்க்கலாம்..
தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, வேர்க்கடலை சட்னிலாம் இதுக்கு சைட் டிஷ்சா பக்காவாய் பொருந்தும்..
நன்றியுடன்,
ராஜி
Tuesday, May 14, 2019
கர்ப்பிணிகள் விரும்பும் மாங்காய் சாதம் - கிச்சன் கார்னர்
எங்க ஊர் பக்கம்லாம் தலைப்பிள்ளையை சுமக்கும் கர்ப்பிணிகளுக்கு அம்மா, நாத்தனார், தாய்மாமன், அக்கா, அத்தை வீடுகளிலிருந்து விதம்விதமான சாதம், பலகாரம்லாம் செஞ்சு எடுத்துப் போய் கொடுக்குறது வழக்கம். அப்படி எடுத்துப் போற சாத வகைகளில் மாங்காய் சாதம், புளிசாதம், புதினா சாதம், புதினா துவையல் அவசியம் இருக்கும். இப்போதான் எல்லா சீசன்களிலும் மாங்காய் கிடைக்குது. அதுக்கு முன்னலாம் சீசன் இல்லன்னாலும் எப்படியாவது மாங்காய்களை வாங்கி சாதம் கிளறிக் கொண்டுப்போய் கர்ப்பிணிகளுக்குக் கொடுப்பாங்க.
இது மாங்காய் சீசன்... இனி கொஞ்ச நாளுக்கு மாங்காய் சாம்பார், பச்சடி, பொரியல்,ஊறுகாய்ன்னு சமையலில் இருக்கும். இன்னிக்கு மாங்காய் சாதம் செய்வது எப்படின்னு பார்க்கலாம்...
மாங்காய் சாதம் செய்ய தேவையானப் பொருடகள்:
உப்பு போட்டு உதிரியாய் வடித்த சாதம் - ஒரு கப்
முற்றிய மாங்காய் - 1
ப.மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 2
இஞ்சி - சிறுதுண்டு,
பெருங்காயம் -சிறிது
மஞ்சப்பொடி - சிறிது
கடுகு - சிறிது
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தப் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
உப்பு தேவையான அளவு
சமையல் எண்ணெய் - 3 டீஸ்பூன்
அரிசியை 1 மணி நேரம் ஊற வச்சு உப்பு போட்டு உதிரி உதிரியாய் வடிச்சி, அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆற வச்சுக்கோங்க. மாங்காயை கழுவி தோல் சீவி துருவிக்கோங்க. பச்சமிளகாயை நீளவாக்குல அரிஞ்சு வச்சுக்கோங்க, இஞ்சியை சுத்தம் பண்ணி தோல் நீக்கி நசுக்கி வச்சுக்கோங்க.
அடுப்பில கடாய் வச்சு எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும், கடுகு போட்டு பொரிஞ்சதும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு சிவக்க வறுத்துக்கோங்க.
அடுத்து பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் போட்டு சிவக்க விடுங்க.
அடுத்து கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு வதக்குங்க.
இஞ்சி போட்டு வதக்குங்க.
அடுத்து மாங்காய் போட்டு வதக்குங்க.
பெருங்காயப்பொடி சேருங்க.
உப்ப்பு சேருங்க.
மஞ்சப்பொடி சேர்த்து சிறு தீயில் வதக்குங்க. மாங்காய்லாம் வெந்து எண்ணெய் பிரிஞ்சு வரும் நேரத்தில் அடுப்பை அணைச்சுட்டு இறக்கிடுங்க.
மாங்காய் விழுது ஆறினதும் ஆற வச்சிருக்கும் சாதத்தில் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து கிளறுங்க.
சுவையான மாங்காய் சாதம் ரெடி. பருப்புகளோடு முந்திரியும் சேர்த்துக்கலாம். இது மாங்காய் சீசன். பிள்ளைகளுக்கு மதியம் லஞ்ச் பாக்சுக்கு கொடுத்தனுப்பலாம். மிக்சர், வத்தல், அப்பளத்தோடு சாப்பிட நல்லா இருக்கும்.
நன்றியுடன்,
ராஜி
Subscribe to:
Posts (Atom)