Showing posts with label பாட்டு. Show all posts
Showing posts with label பாட்டு. Show all posts

Sunday, August 13, 2017

காதலின் வாசனை கழுதைதான் அறியுமா?!

நடிகர் திலகத்தையும், நடிகையர் திலகத்தையும், காதல் மன்னன், நடிகவேள்ன்னு எத்தனையோ ஜாம்பவான்களை கண்ட தமிழ் திரை உலகம் கமல், மனோரமா, நாகேஷ். டி.ஆர், பாக்கியராஜ் மாதிரியான பல அஷ்டாவதானிகளை கண்டிருந்தாலும், குரல்லியே வித்தை செய்யும் மாயம் எனக்கு தெரிஞ்சு எஸ்.பி.பிக்கு மட்டும்தான் இருக்குன்னு நினைக்குறேன். எஸ்.பி,பி, இளையராஜா, கார்த்திக்ன்னு தனித்தனியா இருந்தாலே அந்த பாட்டு ஹிட்டடிக்கும், இன்னும் இந்த மூணு பேரும் சேர்ந்தா?! அஜால் குஜாலுக்கு சொல்லவா வேணும்?!
மூச்சு விடாம பாடி, வார்த்தையே இல்லாமன்னு பலவிதமா தன் குரலாலயே குரளி வித்தை காட்டுற பாடல்களிலேயே  இந்தப் பாடல் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியது. குரல் ஏற்ற இறக்கங்களுக்கு எடுத்துக்காட்டாக அவர் 'எப்படி எப்படி' என்ற ரெண்டே ரெண்டு வார்த்தையை எத்தனை விதமா சொல்லுறார்ன்னு பார்த்தால் அமேசிங்க்.  ஒவ்வொரு எப்படி எப்படியும் ஒவ்வொரு விதம். அத்தனையும் தனி விதம்.  இசை இசைஞானி. ஆயிரம் நிலவே வா படத்தில் இன்னொரு சூப்பர் (பேய்/ஆவி) பாட்டு இருக்கிறது. அதை இன்னொரு பதிவில் பார்க்கலாம். இப்போது பாலு அந்தரங்கக் குரலில் சுகமாகப் பாடும் அந்தரங்கம் யாவுமே! ஆரம்ப கால கார்த்திக் அழகுலயும், நடிப்புலயும் ஜஸ்ட் லைக் தட்தான். ஆனா பாட்டு சூப்பர்.  படம் புட்டுக்கிச்சுன்னு நினைக்குறேன். இந்த பாட்டை ரேடியோவில்கூட கேட்டதா நினைவில்லை.  ஆனா இப்ப கேட்டதும்  பிடிச்சு போச்சுது. நேத்து நைட் முழுக்க இதே பாட்டுதான் ரிபிட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு.. எத்தனை தரம்ன்னு யாரு கண்டது?! 


ம்ஹம். . ம்ஹம்.. எப்படி எப்படி
ம்ஹம். . ம்ஹம்.. எப்படி எப்படி
ம்ஹம். . ம்ஹம்... ம்ஹம். . ம்ஹம்
அந்தரங்கம் யாவுமே எப்படி எப்படி
சொல்வதென்றால் பாவமே எப்படி எப்படி

அந்தரங்கம் யாவுமே... சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் பாஷையை ம்ஹ்ம்.. . ம்ஹ்ம் அறியுமா..

அந்தரங்கம் யாவுமே... சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் வாசனை ம்ஹ்ம்.. . ம்ஹ்ம் அறியுமா..
அந்தரங்கம் யாவுமே.. ஏ.. ஏ.. ஏ.. ஏ...

காமனே நாணம் கொள்வான் சொல்லுவது தீராது
எப்படி எப்படி
கம்பனே வந்தால்கூட கட்டுப்படியாகாது
எப்படி எப்படி

கண்டதில் இங்கு நான் சொல்வது பாதியே
காவிய நாயகி கண்ணகி ஜாதியே
அன்று ஒருநாள் அந்த மயிலாள் ஆடை நனைந்தாள் ம்ஹ்ம்
காயும் வரையில் தோகை உடலில் என்னை அணிந்தாள்
நாணமே சேலையானதும் போதையானது என்னென்று சொல்வேன்
அந்தரங்கம் யாவுமே... சொல்வதென்றால் ஹ பாவமே
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் வாசனை ம்ஹ்ம்.. . ம்ஹ்ம் அறியுமா.
அந்தரங்கம் யாவுமே
ஹம் எப்படி எப்படி..எப்படி எப்படி..எப்படி எப்படி

காதலை தானம் கேட்டேன் என்னதொரு தாராளம்
எப்படி எப்படி
நான் அவள் தோளில் சாய்ந்து அள்ளியது ஏராளம் 
எப்படி எப்படி


தாவணி பூவினை சோதனை செய்கிறேன்
எத்தனை மச்சங்கள் கேள் அதை சொல்கிறேன்.
பாவை உடலில் கோடி மலரில் ஆடை அதில் ஏன் 
ம்ம்ம்ம்ம்ஹ்ஹா
ஆடை அறியும் சேதி முழுதும் நானும் அறிவேன்
மீதியை நான் உரைப்பதும்.. நீ அதை ரசிப்பதும் பண்பாடு இல்லை.

அந்தரங்கம் யாவுமே... எப்படி எப்படி 
சொல்வதென்றால் பாவமே
ஹம் எப்படி எப்படி..எப்படி எப்படி..எப்படி எப்படி
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் வாசனை ம்ஹ்ம்.. . ம்ஹ்ம் அறியுமா.?..

ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் வாசனை ம்ஹ்ம்.. . ம்ஹ்ம் அறியுமா?.. 

பாட்டோட லிங்க்
https://www.youtube.com/watch?v=dkTo1aGFNx0

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை..
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1469281

நன்றியுடன்,
ராஜி.

Saturday, September 28, 2013

சினிமாவை பிடிக்காம போக காரணங்கள்

1.புருஷனுக்கே இன்னிக்கு மரியாதை கொடுக்காத இந்த காலத்து படத்துலயும், ஒரு பொண்ணுக்கு தாலிதாம்மா முக்கியம்ன்னு, ஒரு அம்மா  அட்வைஸ் பண்ணும்.

2. கருப்பா, அசிங்கமா இருக்கும் பொண்ணுங்களுக்கு ”அருக்காணி”ன்னு பேரு வைக்குறது.

3. ராத்திரி 12 மணிக்கு பப்பரப்பான்னு போய் வரும் மாடர்ன் பொண்ணு கரப்பான் பூச்சியை பார்த்து பயந்து போய் ஹீரோவை மட்டுமே கட்டிப்பிடிக்கும்.

4. யூரின் டெஸ்ட், ஸ்கேன்ன்னு ஆயிரமாயிரமா கொட்டி பார்த்தாலும் ரிசல்ட் தப்பா சொல்லும்போது கையை பிடிச்சு பார்த்தே கர்ப்பமா இருக்கும்ன்னு சொல்லுற வைத்தியர்.

5. பாப் கட்டிங்க் வெட்டி, டைட் ஜீன்ஸ் மிடி போட்டு சுத்துற ஹீரோயின், லவ் வந்ததும்,  அல்ட்ரா மாடர்ன் பொண்ணா ரூமுக்குள்ள போய் அடக்கம் ஒடுக்கமா புடவை கட்டி வெளி வருவாங்க. மேட்சிங் ப்ளவுசாவது ரெடிமேட்ல வாங்கிக்கலாம்.  ஐந்தடி கூந்தல்?!

6.தறிக்கெட்டு ஓடுற குதிரை, மாடு, ஜீப், காரையெல்லாம் ஒரு கயிறுல கட்டி, ஒத்த கையால இல்லன்னா ஒத்த காலால நிறுத்துற ஹீரோவின் வலிமை!!

7.சூப்பர் ஃபிகரோட கல்யாணம் நின்னுட்டா மட்டும்,  உடனே தியாகியா மாறி தாலி கட்ட ஒத்துக்கும் ஹீரோ, அட்டு ஃபிகர் கல்யாணம் நின்னுட்டா 16 பக்கம் வசனம் பேசி மாப்பிள்ளையை ஒத்துக்க வைக்குற சாமர்த்தியம்.

8. குக்கிராமத்துல கூட பார்மசி வந்துட்ட இந்த காலத்துல கூட, வில்லேஜ் சப்ஜெக்ட் படத்துல அம்மாக்களோ இல்ல அக்காக்களோ இல்ல ஹீரோயின்களோ தற்கொலைக்கு அரளி விதை அரைக்குறது.

9. வயசுக்கு மீறின முதிர்ச்சியோடு இருக்கும் குழந்தை நட்சத்திரத்தை பார்க்கும்போது.

10. கிராமத்து ஹீரோயின், டூயட் பாட லண்டன், ஆஸ்திரேலியா, சுவிஸ்ன்னு ஃபோட்டோவுல கூட பார்த்தே இராத இடங்களுக்கு கனவுல போறது...,


11. காலண்டர், செல்போன், டயரின்னு ஆயிரத்தெட்டு ரிமைண்ட் பண்ணும் விசயங்கள் இருந்தாலும் வாந்தி எடுக்கும்போதுதான் நாள் தள்ளி போனதை உணரும் அப்பாவி பெண்கள்.

12. அண்ணன்,தங்கச்சி கதைன்னா சொத்து,பத்து,ஆசை, மானம், உயிர்லாம் விட்டுக்கொடுக்கும் பாசக்கார அண்ணன்கள். 

13. அண்ணி, நாத்தனார் கதைன்னா கருவை கலைக்குறது, பில்லி சூனியம் வைக்குறதுன்னு இருக்கும் கொடுமைக்காரியா காட்டுறது.

14. மரு, தாடி, தலைப்பாக்கட்டு இந்த மூனையும் வச்சே மாறுவேசத்துல அலையும் ஹீரோ.

15. பொறுப்பான மருமகள்ன்னா, புகுந்த வீட்டில் கஷ்டமான நேரத்துல, சிரிச்ச முகத்தோட தன் நகைகள் கழட்டி மாமனார் இல்ல புருசன் கிட்ட கொடுக்கனும்.


(தொடரும்...,)