1.புருஷனுக்கே இன்னிக்கு மரியாதை கொடுக்காத இந்த காலத்து படத்துலயும், ஒரு பொண்ணுக்கு தாலிதாம்மா முக்கியம்ன்னு, ஒரு அம்மா அட்வைஸ் பண்ணும்.
2. கருப்பா, அசிங்கமா இருக்கும் பொண்ணுங்களுக்கு ”அருக்காணி”ன்னு பேரு வைக்குறது.
3. ராத்திரி 12 மணிக்கு பப்பரப்பான்னு போய் வரும் மாடர்ன் பொண்ணு கரப்பான் பூச்சியை பார்த்து பயந்து போய் ஹீரோவை மட்டுமே கட்டிப்பிடிக்கும்.
4. யூரின் டெஸ்ட், ஸ்கேன்ன்னு ஆயிரமாயிரமா கொட்டி பார்த்தாலும் ரிசல்ட் தப்பா சொல்லும்போது கையை பிடிச்சு பார்த்தே கர்ப்பமா இருக்கும்ன்னு சொல்லுற வைத்தியர்.
5. பாப் கட்டிங்க் வெட்டி, டைட் ஜீன்ஸ் மிடி போட்டு சுத்துற ஹீரோயின், லவ் வந்ததும், அல்ட்ரா மாடர்ன் பொண்ணா ரூமுக்குள்ள போய் அடக்கம் ஒடுக்கமா புடவை கட்டி வெளி வருவாங்க. மேட்சிங் ப்ளவுசாவது ரெடிமேட்ல வாங்கிக்கலாம். ஐந்தடி கூந்தல்?!
6.தறிக்கெட்டு ஓடுற குதிரை, மாடு, ஜீப், காரையெல்லாம் ஒரு கயிறுல கட்டி, ஒத்த கையால இல்லன்னா ஒத்த காலால நிறுத்துற ஹீரோவின் வலிமை!!
7.சூப்பர் ஃபிகரோட கல்யாணம் நின்னுட்டா மட்டும், உடனே தியாகியா மாறி தாலி கட்ட ஒத்துக்கும் ஹீரோ, அட்டு ஃபிகர் கல்யாணம் நின்னுட்டா 16 பக்கம் வசனம் பேசி மாப்பிள்ளையை ஒத்துக்க வைக்குற சாமர்த்தியம்.
8. குக்கிராமத்துல கூட பார்மசி வந்துட்ட இந்த காலத்துல கூட, வில்லேஜ் சப்ஜெக்ட் படத்துல அம்மாக்களோ இல்ல அக்காக்களோ இல்ல ஹீரோயின்களோ தற்கொலைக்கு அரளி விதை அரைக்குறது.
9. வயசுக்கு மீறின முதிர்ச்சியோடு இருக்கும் குழந்தை நட்சத்திரத்தை பார்க்கும்போது.
10. கிராமத்து ஹீரோயின், டூயட் பாட லண்டன், ஆஸ்திரேலியா, சுவிஸ்ன்னு ஃபோட்டோவுல கூட பார்த்தே இராத இடங்களுக்கு கனவுல போறது...,
(தொடரும்...,)

11. காலண்டர், செல்போன், டயரின்னு ஆயிரத்தெட்டு ரிமைண்ட் பண்ணும்
விசயங்கள் இருந்தாலும் வாந்தி எடுக்கும்போதுதான் நாள் தள்ளி போனதை உணரும் அப்பாவி
பெண்கள்.
12. அண்ணன்,தங்கச்சி கதைன்னா
சொத்து,பத்து,ஆசை, மானம், உயிர்லாம்
விட்டுக்கொடுக்கும் பாசக்கார அண்ணன்கள்.
13. அண்ணி, நாத்தனார்
கதைன்னா கருவை கலைக்குறது, பில்லி சூனியம்
வைக்குறதுன்னு இருக்கும் கொடுமைக்காரியா காட்டுறது.
14. மரு, தாடி, தலைப்பாக்கட்டு இந்த மூனையும் வச்சே
மாறுவேசத்துல அலையும் ஹீரோ.
15. பொறுப்பான மருமகள்ன்னா, புகுந்த வீட்டில் கஷ்டமான நேரத்துல, சிரிச்ச முகத்தோட தன் நகைகள் கழட்டி மாமனார் இல்ல புருசன்
கிட்ட கொடுக்கனும்.
(தொடரும்...,)