Saturday, September 28, 2013

சினிமாவை பிடிக்காம போக காரணங்கள்

1.புருஷனுக்கே இன்னிக்கு மரியாதை கொடுக்காத இந்த காலத்து படத்துலயும், ஒரு பொண்ணுக்கு தாலிதாம்மா முக்கியம்ன்னு, ஒரு அம்மா  அட்வைஸ் பண்ணும்.

2. கருப்பா, அசிங்கமா இருக்கும் பொண்ணுங்களுக்கு ”அருக்காணி”ன்னு பேரு வைக்குறது.

3. ராத்திரி 12 மணிக்கு பப்பரப்பான்னு போய் வரும் மாடர்ன் பொண்ணு கரப்பான் பூச்சியை பார்த்து பயந்து போய் ஹீரோவை மட்டுமே கட்டிப்பிடிக்கும்.

4. யூரின் டெஸ்ட், ஸ்கேன்ன்னு ஆயிரமாயிரமா கொட்டி பார்த்தாலும் ரிசல்ட் தப்பா சொல்லும்போது கையை பிடிச்சு பார்த்தே கர்ப்பமா இருக்கும்ன்னு சொல்லுற வைத்தியர்.

5. பாப் கட்டிங்க் வெட்டி, டைட் ஜீன்ஸ் மிடி போட்டு சுத்துற ஹீரோயின், லவ் வந்ததும்,  அல்ட்ரா மாடர்ன் பொண்ணா ரூமுக்குள்ள போய் அடக்கம் ஒடுக்கமா புடவை கட்டி வெளி வருவாங்க. மேட்சிங் ப்ளவுசாவது ரெடிமேட்ல வாங்கிக்கலாம்.  ஐந்தடி கூந்தல்?!

6.தறிக்கெட்டு ஓடுற குதிரை, மாடு, ஜீப், காரையெல்லாம் ஒரு கயிறுல கட்டி, ஒத்த கையால இல்லன்னா ஒத்த காலால நிறுத்துற ஹீரோவின் வலிமை!!

7.சூப்பர் ஃபிகரோட கல்யாணம் நின்னுட்டா மட்டும்,  உடனே தியாகியா மாறி தாலி கட்ட ஒத்துக்கும் ஹீரோ, அட்டு ஃபிகர் கல்யாணம் நின்னுட்டா 16 பக்கம் வசனம் பேசி மாப்பிள்ளையை ஒத்துக்க வைக்குற சாமர்த்தியம்.

8. குக்கிராமத்துல கூட பார்மசி வந்துட்ட இந்த காலத்துல கூட, வில்லேஜ் சப்ஜெக்ட் படத்துல அம்மாக்களோ இல்ல அக்காக்களோ இல்ல ஹீரோயின்களோ தற்கொலைக்கு அரளி விதை அரைக்குறது.

9. வயசுக்கு மீறின முதிர்ச்சியோடு இருக்கும் குழந்தை நட்சத்திரத்தை பார்க்கும்போது.

10. கிராமத்து ஹீரோயின், டூயட் பாட லண்டன், ஆஸ்திரேலியா, சுவிஸ்ன்னு ஃபோட்டோவுல கூட பார்த்தே இராத இடங்களுக்கு கனவுல போறது...,


11. காலண்டர், செல்போன், டயரின்னு ஆயிரத்தெட்டு ரிமைண்ட் பண்ணும் விசயங்கள் இருந்தாலும் வாந்தி எடுக்கும்போதுதான் நாள் தள்ளி போனதை உணரும் அப்பாவி பெண்கள்.

12. அண்ணன்,தங்கச்சி கதைன்னா சொத்து,பத்து,ஆசை, மானம், உயிர்லாம் விட்டுக்கொடுக்கும் பாசக்கார அண்ணன்கள். 

13. அண்ணி, நாத்தனார் கதைன்னா கருவை கலைக்குறது, பில்லி சூனியம் வைக்குறதுன்னு இருக்கும் கொடுமைக்காரியா காட்டுறது.

14. மரு, தாடி, தலைப்பாக்கட்டு இந்த மூனையும் வச்சே மாறுவேசத்துல அலையும் ஹீரோ.

15. பொறுப்பான மருமகள்ன்னா, புகுந்த வீட்டில் கஷ்டமான நேரத்துல, சிரிச்ச முகத்தோட தன் நகைகள் கழட்டி மாமனார் இல்ல புருசன் கிட்ட கொடுக்கனும்.


(தொடரும்...,)

16 comments:

 1. இதெல்லாத் தமிழ் சினிமாவின் பார்முலாங்க...

  இதைப்போய் பிடிக்கலின்னா எப்படி...


  இதையெல்லாம் நீக்கிவிட்டு படம் என்றால் டைட்டில் போட்டு பின் வணக்க்ம் போட வேண்டியதுதான்...

  தொடரட்டும்...

  ReplyDelete
  Replies
  1. எதார்த்தமான கதைகள், நல்ல மனிதர்களை அடையாளம் காட்டலாமே!!

   Delete
  2. படத்த பாக்கறதுக்கு ஆள் வரணுமே :)

   Delete
 2. என்னவொரு கவனிப்பு...!

  தொடரும்...???

  ReplyDelete
 3. யதாத்தைத்தான் தினம் பார்க்கறோம்! அதையே சினிமாவில் காட்டினா என்ன பிரயோசனம்கிறது தான் சினிமா ரசிகர்களோட எண்ணம்?

  ReplyDelete
 4. என்ன கவனிப்பு.... :)

  நமக்கு படம் பார்க்க வாய்ப்பு கம்மி தான்....

  ReplyDelete
 5. ஆமா, என்னவொரு கவனிப்பு!

  ReplyDelete
 6. நம்ம கண்ணுக்கு கோளாறா படுவதை ,பிலிமில் காட்டி கோடி கோடியாய் அள்ளிக்கிட்டு இருக்காங்களே !
  பார்த்து பார்த்து போர் அடித்ததை நீங்கள் அடுக்கி இருப்பதும் அழகுதான் !

  ReplyDelete
 7. பிடிக்காத சினிமா பத்தி ...நிறைய தெரிந்து வைத்திருக்கிர்கள்

  ReplyDelete
 8. அக்கா, நீங்க சொல்றதெல்லாம் கொஞ்சம் வருடங்களுக்கு முந்தி வரை தான்.. இப்போ வர்ற பெரும்பாலான படங்கள் இதுமாதிரியான கிளிஷேக்களை தவிர்த்து தான் வருது..

  ReplyDelete
 9. ஆம் இதெல்லாம் 10 வருடங்களுக்கு முந்தைய படங்களில்தான்... ஹூம்... நீங்கதான் இப்பல்லாம் படமே பாக்கறதில்லயே?!

  ReplyDelete
 10. நல்ல ஆராய்ச்சிதான். நீங்க சொல்லும் பல விஷயங்களை நானும் யோசித்திருக்கேன் ராஜி. அதுவும் அந்த மாறுவேஷம்.... கொடுமை. ம். தொடருங்க.

  ReplyDelete
 11. நீங்க சொல்ற எந்த விசயம் எதுவும் இல்லாம இப்ப வெளிவர தமிழ் படங்கள் இருக்கு . காலம் மாறிப் போச்சு அக்கா

  ReplyDelete
 12. 1.புருஷனுக்கே இன்னிக்கு மரியாதை கொடுக்காத இந்த காலத்து படத்துலயும், ஒரு பொண்ணுக்கு தாலிதாம்மா முக்கியம்ன்னு, ஒரு அம்மா அட்வைஸ் பண்ணும்.

  அட்லீஸ்ட் சினிமாவிலாவது இப்படி ஒரு காட்சியை பார்த்து சந்தோஷப்பட முடிகிறேதே என்று நான் நினைப்பதால்தான் நான் சினிமாவை பார்க்கிறேன் அதுவும் எனக்கு பிடிக்கிறது அதுமட்டுமல்ல சினிமாவிலும் டிவி சீரியலில் மட்டும்தான் கணவன் மனைவியை திட்ட முடிகிறது ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

  ReplyDelete
 13. தொலைக்காட்சி சீரியல்களும் இவற்றிற்கு விலக்கல்ல. அவற்றில் இன்னும் பல பிடிக்காதவை உண்டே!

  ReplyDelete
 14. ம்ம்ம்ம் மிகச்சரிதான் , சில விஷியங்கள் எரிச்சலாக வரும்...

  ReplyDelete