Showing posts with label பிளாக். Show all posts
Showing posts with label பிளாக். Show all posts

Wednesday, May 11, 2022

மீண்டும் உங்களோடு சேர்த்துக்கிடுங்க சாமியோவ்!!

 


ஐயா கருப்ப (blog) சாமி!!

பெரிய மகள் திருமணம், கால் எலும்பு முறிவு, பேரன் பிறப்பு, மகள் மருமகன் பேரனுக்கு கொரோனா, மீண்டும் பெரிய மகள் கருத்தரிப்பு, இளைய மகளுக்கு திருமணம், பெரிய மகளின் இரண்டாவது குழந்தை குறை பிரசவம், குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றும் கொண்டு வரும் பெரிய பொறுப்பு, மாமனார் இறப்பு, தாய்மாமன் இறப்புன்னு வரிசையா நிக்காம ஓடுனதுல உன்னைய கண்டுக்காம விட்டது தப்புதான்...

பிள்ளைகள் அதது எதிர்காலத்துக்காக ஓடும் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாம பின் தங்கி தனியா இருக்கும்போதுதான் உங்க அருமை தெரியுதுங்க...

நூத்துக்கணக்குல கமெண்ட் வேணாம், அஞ்சோ பத்தோ போதும்... அதிகமா ஷேரும், வீவர்சும்கூட வேணாம்.. நீங்களே எதாச்சும் பார்த்து என்னைய போரடிக்காம பார்த்துக்கிட்டா போதுமுங்க சாமி!!

என்னைய மீண்டும் உங்களோடு சேர்த்துக்கிட்டா மட்டும் போதும்!! காலத்துக்கும் உங்களுக்கு விசுவாசமா இருப்பேனுங்க.. மன்னிச்சு ஏத்துக்கிடுங்க....

நன்றியுடன்,
ராஜி.

Friday, October 05, 2012

காதலியர்தம் கடைக்கண் காட்டிவிட்டால்....,


காதலியர்தம் கடைக்கண் காட்டிவிட்டால்...., 

நன்பேண்டா.....,


நம்மளைப் போல ஏதோ பிளாக் பைத்தியம் போல.....,



மூக்குக்கு மேல கோவங்கறது இதானா?! 



என்ன கொடுமை சரவணா இது................

                                                                             
அம்மான்னா சும்மா இல்ல....,

 

”ராஜி” பிளாக் படிக்காம தப்பிச்சு போறான்..., அவனை பிடிங்க...


வியாபாரம் நல்லா போகுதுங்களா சார்?!


Wednesday, August 22, 2012

பிள்ளையாரும் பிளாக் ஆரம்பிச்சுட்டாரோ?!

 பதிவர்களுக்கு ரெட்டை பிள்ளை பிறந்தா இப்படித்தான் டிரெஸ் பண்ணிவிடுவாங்களோ?! 
 

ம்ம்ம்ம் இதுவே நம்ம நாட்டு போலீஸா இருந்தா?! மனுசங்க விழுந்தாலும் கண்டுக்க மாட்டாங்க...

அப்படியே சாப்பிட்டுடுவேன்...

கலியுக ஏகலைவன்....
 

நம்ம வீட்டு போட்டோவுலயும் நிஜமாவே இப்படி  நடந்துட்டா....,நம்ம கதி அதோ கதிதான்.....

மணல்ல கயிறுதான் திரிக்க முடியாது..., ஆனா, வீடு கட்டலாமுங்கோ.....

பிள்ளையாரும் பிளாக் ஆரம்பிச்சுட்டாரோ?!
இப்படியும் ஜடை பிண்ணி போட்டுக்கலாம்ன்னு இத்தனை நாள் தெரியாம போச்சே...,

எங்கிட்ட மோதுனே,  பல்லை பேத்துடுவேன்....,


டிஸ்கி: படங்கள் முகப்புத்தகத்திலிருந்து சுட்டது