Showing posts with label பிள்ளையார். Show all posts

Monday, September 02, 2019

ஆனைமுகத்தானை, ஐந்து கரத்தானை தொழுவோம்!

’வி’ ன்னா சிறப்பு. “நாயகன்’ ன்னா தலைவர். சிறப்புமிக்க தலைவர்ன்னு குறிப்பதே வினாயகன்.  கடவுளுக்கெல்லாம் மேலான தலைமைக் கடவுளாக விநாயகப்பெருமான்னும்.  விக்னம்ன்னா பிழை, இடர்ன்னு பொருள். நமக்கு ஏற்படும் பிழைகளை, இடர்களை தீர்ப்பதால் விக்னேஸ்வரன்னும் பூதகணங்களுக்கு அதிபதியா இருக்குறதால கணேசன்னும்,  மனித உடலும், யானை தலையையும் கொண்டதால இந்த ’பிள்ளை’ யார்ன்னு கேட்க போய் பிள்ளையார்ன்னும்  பாசம், அங்குசம், அபயம், வரதம், மோதகம் ஆகியவற்றை தாங்கிய நான்கு கரங்களோடு தும்பிக்கையும் சேர்ந்து ஐந்து கரங்களை கொண்டதால் ஐங்கரன்னும் பேர் உண்டானது. 

ஐந்தாவது கரமான தும்பிக்கையின் மூலமா, படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைதல் என்னும் ஐந்தொழில்களை ஆற்றுவதால் மும்மூர்த்திகளும் இவருள் அடக்கம் என்கிறது விநாயக புராணம். அதன் அடிப்படையிலேயே இவரை முழுமுதற் கடவுளாக வழிபடுகின்றனர்.  இந்துக்கள் எந்தவொரு காரியத்தைத் தொடங்குவதற்கு முன்பும் விநாயகப்பெருமானை வணங்கியப்பின்னரே தங்கள் செயலை செய்ய தொடங்குவாங்க. பிள்ளையார் நம்ம அப்பாக்கள் போல எளிமையானவர். நாம எப்படி இழுத்தாலும் வந்துடுவார்.  சாணம், மஞ்சள், சந்தனம், அரச இலைன்னு எதிலும் வந்திடுவார்.

இன்று நாம கொண்டாடும் இந்த விரதத்தை அன்று பார்வதிதேவிதான் தொடங்கி வைத்தாள்.  தன் கணவரான சிவனை அவமதித்து யாகம் நடத்திய தந்தை தட்சனிடம் நியாயம் கேட்க போனாள் பார்வதி என்ற தாட்சாயணி. ஆனால், தட்சனோ மிகவும் கர்வம் பிடித்தவன். மருமகனை அவமானப்படுத்தியது போதாதென்று, மகளையும் கேலி பேசினான்.  இந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாத தாட்சாயணி, தட்சன் வளர்த்து வைத்திருந்த யாகக்குண்டத்தில் அப்படியே பாய்ந்துவிட்டாள்.
அதன்பிறகு, பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து பார்வதின்ற  பெயரில் வளர்ந்து வந்தாள்.  சிறு வயதிலிருந்தே கயிலைநாதன்தான் தன் கணவன் என்று தீர்மானமாக இருந்தாள். அவளுடைய அந்த எண்ணம் பலிக்க வேண்டும்ன்னா அவள் விநாயகரை நினைத்து சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டுமென்று அவளுடைய தந்தையான பர்வதராஜன் யோசனை சொன்னார்.  அவர் சொன்னபடியே, மண்ணால் ஒரு விநாயகர் உருவத்தை செய்து,  கூடவே தங்கத்தாலும் ஓர் உருவம் செய்து இரண்டையும் பொற்கும்பம் ஒன்றின் பக்கத்தில் வைத்தாள்.

 அந்த விக்ரகங்களுக்கு ஆகம விதிப்படி பூஜைகளை செய்தாள். ஆவணி மாத அமாவாசைக்கு அடுத்த சதுர்த்தியில் இப்படி பூஜையை ஆரம்பித்து, பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரையில் தினமும் பூஜை செய்தாள். அதற்குப் பிறகு மண் பிள்ளையாரை, மேள தாளத்தோடு ஊர்வலமாக எடுத்துப் போய் நதியிலே இறக்கி விட்டாள். அந்த பதினைந்து நாட்களும் நியம நிஷ்டைகளை மீறாமல் இருந்த விரதத்தின் பலனாக, தான் ஆசைப்பட்டாற்போல கயிலைநாதனை கைப்பிடித்தாள்.

விநாயகருக்கு    மோதகம், கொழுக்கட்டை படைப்பது வழக்கம். மோதகம் என்பது  தேங்காய் பூர்ணத்தை உள்ளே வைத்து செய்யப்படுவது.  மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம்.  உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம்.    அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்கு கிடைப்பதுப்போல நமக்குள் இருக்கும் இனிய குணங்களை அண்டத்திலுள்ள அனைத்துவித மாயைகளும் மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் பிரம்மத்தை அடையலாம் என்பதை இந்த மோதகம் உணர்த்துது.  விநாயகருக்கு முதன் முதலாக இந்தக் கொழுக்கட்டையை நிவேதனம் செய்தது வசிஷ்ட முனிவருடைய மனைவியான அருந்ததி.

விநாயகருக்கு யானை முகம் வந்ததுக்கு பல காரணம் சொல்றாங்க. அதுல ஒண்ணு, ”கஜமுகாசுரன்”ன்ற அசுரன், பிரம்மாவிடம் ஆண், பெண் சம்பந்தமில்லாமல் பிறந்த ஒருவனாலேயே தனக்கு அழிவு வரனும்ன்னு வரம் கேட்டான். ஆண், பெண் சம்பந்தமின்றி, உலகில், குழந்தை பிறப்பு என்பது சாத்தியம் இல்லைன்னு அவன் போட்ட கணக்கு.  அவன் நினைச்ச மாதிரியே அப்படி யாருமே உலகில் பிறக்கலை. எனவே, அவன் சர்வலோகங்களையும் வளைத்து, தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான். ’
தேவர்களை வதைத்தான். அவர்கள் துன்பம்  தாளாமல் தவித்தனர். அவர்களது துன்பம் தீர்க்க லோகமாதாவான பார்வதிதேவி முடிவு செய்தாள். தன் மேனியில்  பூசியிருந்த மஞ்சளை (அழுக்குன்னும் சிலர் சொல்றாங்க. நாம நல்லதையே எடுத்துப்போமே!)  வழித்தெடுத்து உருண்டையாக்கினாள். அந்த மஞ்சளில் உடல் உறுப்புகளையும், உயிரையும் கொடுத்தாள். அந்தக் குழந்தைக்கு, பிள்ளையார் என பெயர்  சூட்டினாள். அந்தப்பிள்ளை தன் அன்னையின் அந்தப்புர காவலனாக இருந்தான். சிவபெருமான் அங்கு வந்தார். அவர் மனதில் தேவர்கள் படும் துன்பத்தை  நினைத்து கருணை உண்டாயிற்று. இதற்காக ஒரு திருவிளையாடல் செய்தார். அம்மையார் குளிக்கும்போது, உள்ளே போக முயன்றார். அப்போது காவலுக்கு  இருந்த பிள்ளையார் தடுக்க,  என் அந்தப்புரத்தில் இருக்கும் நீ யாரடா? எனக் கேட்டு, பிள்ளையாரின் கழுத்தை  வெட்டிவிட்டார். தன் பிள்ளை மாண்டு கிடப்பதை பார்த்த பார்வதி தேவி, தன் மகனை மீண்டும் உயிர்ப்பிக்க சிவனை வேண்டி நின்றாள். “வடக்கு நோக்கி யார் படுத்திருந்தாலும் அவர் தலையை கொண்டு வந்தால், மீண்டும் உன் பிள்ளையை உயிர்ப்பிக்குறேன்னு வாக்கு கொடுத்தாராம் சிவன். அதன்படி, உலகை சுற்றி வந்தாள் பார்வதி தேவி, வடக்கு நோக்கி தலை வைத்து படுப்பது தனக்கும், தான் வாழும் உலகத்துக்கும் ஆகாது என்பதை  உணர்ந்த எல்லா ஜீவன்களும் அப்படி படுக்கலை. என்னை போல சொல்பேச்சு கேளாத ஒரே ஒரு யானை மட்டுமே வடக்கு நோக்கி படுத்திருந்தது. அதன் தலையை கொய்து கொண்டு வந்து சிவப்பெருமானிடம் தர, சிவன் மீண்டும் பிள்ளையாரை உயிர்பித்ததா ஒரு வரலாறு இருக்கு.

மனிதனின் வாயும், உதடும் தெளிவாக வெளியே  தெரிகிறது. மற்ற மிருகங்களுக்கும் கூட அப்படித்தான். ஆனால், யானையின் வாயை தும்பிக்கை மூடிக் கொண்டிருக்கிறது; அது வெளியே தெரியாது. தேவையின்றி பேசக்கூடாது என்பதும், தேவையற்ற பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும்உலகத்துக்கு உணர்த்தவே இப்படி ஒரு திருவிளையாடல்ன்னு அன்னையை சமாதானம் செய்தார் சிவன்.  
தன் பிறப்பின் நோக்கம் அறிந்து கஜமுகன்மீது படை எடுத்து சென்று அவன் மீது போர் தொடுத்தார். விநாயகரிடமிருந்து தப்பிக்க எலி உருக்கொண்டு தப்பிக்க பார்த்தான். அவனை வதம் செய்து. அவனின் வேண்டுக்கோளுக்கிணங்கி,  தன் வாகனமாக்கி கொண்டார்.

அனலாசுரன் என்ற அசுரன் தேவர்கள் மனிதர்களை துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பபர்களை அனலாய் மாறி தகித்து விடுவான், அவனை பிரம்மா, இந்திரனால் கூட அடக்க முடியவில்லை.  சிவனிடம் சென்று முறையிட்டனர். சிவன், பிள்ளையாருக்கு கட்டளை இட்டார், பிள்ளையார் அசுரனிடம் மோதினார். ஆனால், அவனை வெற்றி கொள்ள முடியலை.பிள்ளையாருக்கு கோவம் வந்து அனலாசுரனை விழுங்கி விட்டார். வயிற்றுக்குள் போன அனலாசுரன் அனலாய் தகிக்க தொடங்கினான், குடம் குடமாக கங்கை நீர் கொண்டு வந்து பிள்ளையார் மீது ஊற்றியும் பலனில்லை. இந்நிலையில் ஒரு முனிவர் ஒரு அருகம்புல்லை கொண்டு வந்து பிள்ளையார் தலையில் வைக்க அனல் மறைந்து அனலாசுரனும் ஜீரணமாகி விட்டான், தன்னை அருகம்புல் கொண்டு அர்சிக்க வேண்டுமென ஆணையிட்டார். 
விநாயகர் ஒரு கொம்பு (தந்தம்), இரண்டு காதுகள், மூன்று திருக்கண்கள், நான்கு தோள்கள்,  ஐந்து கரங்கள், ஆறுஎழுத்து மந்திரம் கொண்டவர். அவரை வழிபட்டால் ஏழேழு பிறவிகள் நீங்கும். எண்திசைகளும் புகழும். நவமணிகளும் பெற்று செல்வவளத்துடன் வாழச் செய்வார்.   விநாயகருக்கு இடைக்கு கீழே பூத உடம்பும், இடையிலிருந்து கழுத்துவரை தேவவுடம்பும், மிருகத்தலையும் உள்ளது. ஒரு கொம்பு ஆண்மையையும், கொம்பில்லாத பகுதி பெண்மையையும் கொண்டு உலகம் அனைத்தும்  தன்னுள்ளே  இருப்பதை விநாயகரின் உருவம் உணர்த்துது.
கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு,நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன்,பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலிய பொருட்களை விநாயகருக்கு நிவேதனம் செய்யலாம். இந்நிவேதனப் பொருட்களை அருணகிரிநாதர் திருப்புகழில் குறிப்பிடுகிறார்.
விநாயகரின் சக்திகளாக சித்தி, புத்தி உள்ளனர். அவர் எப்போதும் பிரம்மச்சாரியாக விளங்குபவர். தம்மை வழிபடும் அன்பர்களுக்கு காரிய சித்தியும், அதற்கு புத்தியும் அருள்பவர். அதனால், சித்தி புத்தி என்ற பண்புகளை இரு மனைவிகளாக்கி சித்தி புத்தி விநாயகர் ஆனார். அடியார்களின் இடையூறுகளை அகற்றுவதற்கு வல்லபம் (வல்லமை) வேண்டும். எனவே, இவர் வல்லபை என்னும் சக்தியுடனும் இருப்பார். விநாயகரின் சக்தியாகிய வல்லபை மரீச முனிவரது புதல்வி.

ஜமுகாசுரன் என்னும் அசுரன், தேவர்களுக்கு கொடுமைகள் செய்து வந்தான். தேவர்கள் தன்னைக் கண்டால் தோப்புக்கரணம் இடவேண்டும் என்று நிர்ப்பந்தித்தான். தேவர்களும் பயந்துபோய் இச்செயலைச் செய்து வந்தனர். அவனைச் சம்ஹாரம் செய்ய கிளம்பினார் விநாயகர். விநாயகரையும் தோப்புக்கரணம் இடுமாறு கஜமுகாசுரன் ஆணையிட்டான். கோபமடைந்த விநாயகர் தன் தந்தத்தால் அவனைக் குத்திக் கொன்றார். கஜமுகாசுரன் அழிந்ததும் அவனுக்கு போட்டு வந்த தோப்புக்கரணத்தை நன்றியுணர்வுடன் தேவர்கள் விநாயகப்பெருமானுக்குச் செய்யத் தொடங்கினர். இதுமுதல் தோப்புக்கரணம் போடும் வழக்கம் வந்தது.  தோப்புக்கரணம் போடுவதால் மூளைசெல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. நாடிகள் சுத்தம் பெறுகின்றன. நம் உடலிலுள்ள நரம்பு மண்டலங்கள் அனைத்தும் சேருமிடம் காது மடல்கள். தோப்புக்கரணம் செய்யும் போது காது மடல்களை இழுப்பதால் அனைத்து நரம்புகளும் தூண்டப்படுகின்றன.

கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரை வடித்து வழிபாடு செய்யலாம். இவற்றில் சுதை மற்றும் மரத்தாலான வடிவங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியாது என்பதால், மலர் அலங்காரம் மட்டும் செய்து கொள்ளலாம். மஞ்சள், சந்தனம், களிமண் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.  மூன்று, ஐந்து, ஏழு நாள்ன்னு பிள்ளையாரை கோலாகலமா பூஜித்து அவரை கொண்டு போய் கரைக்கனும்ன்னு உடைக்குறதும், ஏறி மிதிக்குறதும் காண சகிக்காத என் அம்மா வீட்டிலேயே கரைச்சு செடிகளுக்கு ஊத்திடுவாங்க, நானும் அப்படியே!
பிள்ளையார், சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வதற்கு கணபதி பஞ்சாயதனம் என்பர். இதில் விநாயகப்பெருமானை ஐந்து தெய்வங்களுக்கும் நடுவில் வைத்து வழிபட வேண்டும்.
அதிகாலை எழுந்து வீடுகளை சுத்தம் செய்து மனையில் களிமண்ணாலான பிள்ளையாரை வைத்து அலங்கரித்து பொரி, அவல், பழங்கள், கரும்பு, சோளம், வேர்க்கடலை, நாவல்ப்பழம்,  மோதகம், சுண்டல் செய்து படைத்து, விநாயகர் அகவல் பாடி தொழ வேண்டும். அவரவர் வசதிப்படி 3, 5, 7,9 நாட்கள் வைத்து பூஜிக்க வேண்டும்.  கடைசி நாளில் படைத்து ஏதாவது நீர்நிலையில் கரைத்து விடவேண்டும்.

விநாயகரை தொழுவோம்... எல்லா வளமும் பெறுவோம்..
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்....
மீள்பதிவு..
நன்றியுடன்,
ராஜி.

Friday, September 21, 2018

விநாயகரின் 16 உருவங்கள் - அறிவோம் ஆன்மீகம்

உலகத்துக்கே அன்னையும் பிதாவுமென கருதப்படும் சிவன்,பார்வதியின் மூத்தமகனாக கருதப்படுபவர் விநாயகர்.  சித்திரமா வரைஞ்சோ, அம்பிகையின் உடலிலிருந்து எடுத்த அழுக்கு(மஞ்சள்)க்கு அம்பிகை உயிர் கொடுத்திருந்தாலும், ஆகமொத்தம் எப்படியோ பிள்ளையார் சிவதம்பதியினரின் மூத்த மகனானார். மகாபாரதத்தை எழுத விரும்பிய வேதவியாசர், அதை எழுதுவதற்கு சரியான ஆளை தேடியபோது  முதலில் அவர் மனதில்தோன்றியது  விநாயகர்தான். விநாயகரிடம் சென்று, மகாபாரதம் எழுதித்தர வேண்டினார்.
‘நீ விரும்பிய வண்ணம் நாம் எழுதுவோம். ஆனால் நீ நிறுத்தாமல் சொல்லவேண்டுமென்ற நிபந்தனையுடன் வியாசகருக்கு மகாபாரதம் எழுதித்தர விநாயகர் ஒப்புக்கொண்டார்.  நிபந்தனை கடுமையானதாக இருந்தாலும், பாரத இதிகாசத்தை எழுதியே தீரனும்ன்ற வைராக்கியத்தோடு வியாசர் நிபந்தனையை ஏற்றுக்கொண்டு, பதிலுக்கு இவரும் ஒரு நிபந்தனை விதித்தார். பாரதத்தை நிறுத்தாமல் சொல்கிறேன்.  அதே  நேரத்தில், பாடலின் பொருளை அறிந்துக்கொண்டே எழுத வேண்டும் என எதிர் நிபந்தனை விதித்தார் வியாசர். 

இதைக்கேட்ட விநாயகர் நகைப்புடன் சம்மதித்தார். அதன்பின் மகரிஷி பாரத இதிகாசம் பாட ஆரம்பித்தார்.விநாயகர் எழுத ஆரம்பித்தார். ஒருக்கட்டத்தில் எழுத்தாணி உடைந்து போனது. வியாசர் நிறுத்தாமல் பாடலை சொல்லிச்சென்றதால்  தனது முகத்திலுள்ள வலப்புற தந்தத்தை உடைத்து எழுத ஆரம்பித்தார். இவ்வாறு மகாபாரத இதிகாசம் வியாசரால் பாடப்பட்டு  8,800 சுலோகங்கள் கொண்ட மகாபாரதம் விநாயகரால் வெற்றிகரமாக எழுதி முடிக்கப்பட்டது.  இதனாலேயே விநாயகரின் முகத்தில் ஒரு தந்தம் முழுமையாகவும், மற்றொரு தந்தம் ஒடிந்த நிலையிலும் இருக்கும். இந்த உருவத்திலுள்ள விநாயகரை வழிபட்டால் வாழ்க்கையில் அனைத்து வகையிலும் ஏற்றம், வெற்றி கிட்டும். குழந்தைகளின் நினைவாற்றல் கூடும். இப்படி தந்தத்தை உடைத்தது, வெளிப்புற பார்வைக்கு தெரிவதை நம்பாமல் எதையும் அறிவுக்கண் கொண்டு பார்க்க வேண்டுமென உணர்த்துது. 

விநாயகர் வழிபாடு ஐந்தாம் நூற்றாண்டுகளிலேயே இருந்ததுன்னு கூறப்பட்டாலும், அவர் நான்கு யுகங்களின் அதிபதியாக திகழ்கிறார் என்கிறது ஒரு புராண குறிப்பு. கிருதாயுகத்தில் காஷ்யபர்-அருந்ததி தம்பதிகளின் மகனாகவும் (மகோற்கடர்), திரேதாயுகத்தில் அம்பிகையின் பிள்ளையாக பிறந்து மயிலோடு விளையாடுவதில் நாட்டம் கொண்டவராகவும் (மயுரேசர்), துவாபராயுகத்தில் பரராசமுனிவர் - வத்ஸலா தம்பதியினரின் வளர்ப்பு குமாரராகவும் (விக்னராசர்), கலியுகத்தில் சிவன் - பார்வதிதேவியின் மகனாகவும் (விநாயகர்) அவதாரமெடுத்த அவரது பிறப்பு நீண்டுக்கொண்டே வந்துள்ளது. யுகங்களை கடந்தவர் என்பதால், காலந்தோறும் அவரை வழிபடுவது பின்பற்றப்பட்டு வருகின்றது. ஒரு காலகட்டத்தில் ஒரு கூட்டத்தினர் விநாயகரை மட்டுமே வணங்குவதை வழக்கம். அத்தகைய வழிப்பாட்டை ‘காணாபாத்யம்’ என்று குறிப்பிடுவர்.
விநாயகருக்கு யானைத்தலை அமைந்ததைக்கண்ட அம்பாள் வருத்தம் கொண்டாள். அவளை சிவன் சமாதானம் செய்தார். ‘இந்த உருவிலேயே அவன் உலகப்புகழ் பெறுவான். மக்கள் எந்தச் செயலைத் தொடங்கினாலும் விநாயகனை வழிபட்ட பின்னரே தொடங்குவர். காரிய தடை ஏற்படும் போதும், அதனை விலக்குமாறு அவனையே வேண்டுவர்’ என அருளினார்.
பிள்ளையாரின் முகத்தோற்றம் "ஓ" என்ற வடிவில் இருப்பதாலும்,  "ஓம்" என்றும் பிரணவத்தைச் சுருக்கமாக "உ" என முதலில் எழுதி, மற்றதெல்லாம்  எழுதுவது நம் மரபு. ஒலி வடிவிலும், வரி வடிவிலும் ஐந்தன் கூட்டமாகிய பிரணவத்தின் அகரம் சிவம்,  உகரம் சக்தி, மகரம் மலம்,  நாதம் மாயை, விந்து உயிர் ஆகும். இவற்றுள் அகர உகர வடிவாக உள்ள பிள்ளையார் சுழி சிவசக்தியின் சேர்க்கை. பிள்ளையார் தடைகளை வில‌க்குப‌வ‌ர் என்பதால், நாம் தொடங்கும் எந்த செயலும் தடையில்லாமல் நடக்க பிள்ளையாரை வணங்கி அல்லது பிள்ளையார் சுழி  ’உ’ போட்டு தொடங்க வேண்டும் என்பது வழக்கம். ஆனால் பிள்ளையார் தனது தாய் தந்தையாகிய உமையாள்,உமையவனை முதன்மையாக வைத்து குறிப்பதற்காக சுருக்கமாக "உ" என்ற சுழியை உருவாக்கினார் என்பதும் ஒரு கருத்து. எழுத்தாணியும், சுவடியும் எழுத சரிப்பட்டு வருமான்னு பார்க்க ஒரு வட்டம் மற்றும் நீள்கோட்டை கொண்ட ‘உ’ எழுத்தை எழுதி பார்த்து அதுவே வழக்கமானதாய் சொல்வோரும் உண்டு.

முருகனுக்கு ஆறுபடை வீடுகள் இருக்குறது எல்லாருக்கும் தெரியும். ஆனா, விநாயகருக்கும் ஆறு படைவீடுகள் இருக்குன்னு நமக்கு தெரியாதுல்ல! அது என்னன்னு இன்னிக்கு தெரிஞ்சுக்கலாம்.  திருநாரையூர் கோவிலிலுள்ள பொல்லாப் பிள்ளையார், திருமுதுகுன்றம் எனப்படும் விருத்தாசலம் கோவிலில் உள்ள ஆழத்து விநாயகர், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலுள்ள சித்தி விநாயகர், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திலுள்ள கள்ளவாரண பிள்ளையார், திருவண்ணாமலை அல்லல் தீர்த்த விநாயகர், காசி எனப்படும் வாரணாசியிலுள்ள துண்டிராஜகணபதி இவைகள்தான் விநாயகருக்கான அறுபடைவீடுகள். 
தெருவுக்கு தெரு விநாயகர் கோவில் இருந்தாலும், திருச்சி மலைக்கோட்டை விநாயகர், பிள்ளையார்பட்டி விநாயகர், மணக்குள விநாயகர், காணிப்பாக்கம்(சித்தூர் மாவட்டம்) விநாயகர் இதுமாதிரி சொற்பமான கோவில்களே பிரசித்தம். இவை இல்லாம, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள போஹ்ரா கணேஷ் கோவில், இரந்தாம்புர் கணேஷ் கோவில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவில் மற்றும் வரதவிநாயகர் கோவில், புனே ஸ்ரீமத் டக்குஷேர்ஹால்வி விநாயகர் கோவில், கர்நாடக மாநிலம் பெங்களூரு தொட்டகணபதி கோவில், இடார்கஞ்ச் ஸ்ரீவிநாயகருதேவரு கோவில், ஹம்பி விநாயகர் கோவில், ஆந்திர மாநிலம் காணிபாக்கம் விநாயகர் கோவில், கேரளாவில் உள்ள மாத்தூர் விநாயகர் கோவில், கொட்டாரக்காரா விநாயகர் கோவிலும் பிரசித்திப்பெற்ற கோவில்களாகும். 
சாணம், மஞ்சள், செம்பு, வெள்ளி, மரத்துண்டு, அரச இலைன்னு நினைச்ச பொருட்களில் விநாயகரை கொண்டு வந்து வணங்கினாலும், பொதுவா  16 உருவங்களில்தான்  அருள்புரிவார்.

தருண கணபதி: பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவற்பழம், முறித்த ஒற்றை தந்தம், நெற்கதிர், கரும்பு ஆகியவற்றை தம் எட்டுக்கைகளில் ஏந்தி, சூரியோதய கால ஆகாயத்தின் செந்நிற மேனியுடைய இளைஞனாகக் காட்சி தருபவர். இவரை வழிபடுவதால் முகத்தில் களை உண்டாகும்.
பக்த கணபதி: தேங்காய், மாங்காய், வாழைப்பழம், வெல்லத்தினாலான பாயசம் நிரம்பிய சிறுகுடம் ஆகியவற்றை தம் நான்கு கைகளில் ஏந்தி, நிலா ஒளியை ஒத்த வெண்மை நிற மேனியுடன் காட்சியளிப்பவர். இவரை வழிபடுவதால் இறை வழிபாடு, உபாசனை நன்கு அமையும். 

வீர கணபதி: தனது பதினாறு கரங்களில் ஒன்றில் வேதாளத்தையும், மற்ற கரங்களில் ஆயுதங்களும் ஏந்தி, ரவுத்ராகாரமாக வீரா வேசத்தில், செந்நிற மேனியுடன் விளங்கும் ரூபத்தை உடையவர். இவரை வழிபடுவதால் தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும். 

சக்தி கணபதி: பச்சை நிற மேனியுடைய சக்தியுடன் காட்சியளிப்பவர். பாசம், அங்குசம் ஏந்தியிருப்பவர். பயத்தை நீக்குபவர். செந்தூர வண்ணம் கொண்டவர். இவரை வழிபடுவதால் உடல் ஆரோக்கியம் ஏற்படும்.  

துவிஜ கணபதி: இரண்டு யானை முகங்களுடன் இடது கையில் சுவடி, அட்சய மாலையும், தண்டமும், கமண்டலமும் ஏந்தியவர். வெண்ணிற மேனி கொண்டவர். இவரை வழிபடுவதால் கடன் தொல்லை நீங்கும். 

சித்தி கணபதி: பழுத்த மாம்பழம், பூங்கொத்து, கரும்புத்துண்டு, பாசம், அங்குசம் ஆகியவற்றை ஏந்தி ஆற்றலைக் குறிக்கும். சித்தி சமேதராகவும் பசும்பொன் நிறமேனியானவரான இவரை வழிபடுவதால் சகல காரியங்களும் சித்தியாகும்.

உச்சிஷ்ட கணபதி: வீணை, அட்சமாலை, குவளை மலர், மாதுளம் பழம், நெற்கதிர், பாசம் ஆகியவற்றையும் ஏந்தியுள்ளார். கருநீல வண்ணமேனியுடைய இவரை வழிபடுவதால் வாழ்க்கை உயர்வு, பதவிகளை பெறலாம். 

விக்னராஜ கணபதி: சங்கு, கரும்பு, வில், மலர், அம்பு, கோடரி, பாசம், அங்குசம், சக்கரம், தந்தம், நெற்கதிர், சரம் ஆகியவற்றை தன் பன்னிரு கைகளில் ஏந்தி ஸ்வர்ண நிற மேனியுடன் பிரகாசமாக விளங்குபவர். இவரை வழிபடுவதால் விவசாயம் விருத்தியாகும்.  

சுப்ர கணபதி: கற்பகக்கொடி, தந்தம், பாசம், அங்குசம் ஆகியவற்றை தன் நான்கு கரங்களிலும் ரத்தினங்களை பதித்த கும்பத்தை தனது துதிக்கையிலும் ஏந்திய செம்பருத்தி மலரைப் போன்ற சிவந்த மேனியுடைய இவர் சீக்கிரமாக அருள்புரிபவராகக் கருதப்படுகிறார். இவரை வழிபடுவதால் கல்வி விருத்தியாகும். 

ஹேரம்ப கணபதி: அபய ஹஸ்தங்களுடன் (கரங்கள்), பாசம், அங்குசம், தந்தம், அட்சமாலை, கோடாரி, இரும்பினாலான வலக்கை, மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தி, பத்து கைகளும், ஐந்து முகங்களும் அமைந்து வெண்ணிற மேனியுடன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து இவர் காட்சி தருகிறார். நேபாள நாட்டில் காணப்படும் இவர், திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களும் உயரே நோக்கிய ஐந்தாவது முகத்துடனும் விளங்குகிறார். இவரை வழிபடுவதால் விளையாட்டு, வித்தைகள் இவற்றில் புகழ் பெறுவார்கள். 

லட்சுமி கணபதி: பச்சைக்கிளி, மாதுளம் பழம், பாசம், அங்குசம், கற்பகக்கொடி, கத்தி ஆகியவற்றை தன் ஆறு கைகளிலும், மாணிக்க கும்பத்தை தன் துதிக்கையிலும் ஏந்தி தன் இருபுறமும் இரு தேவிகளை அணைத்துக் கொண்டு வெள்ளைமேனியாய் அமர்ந்து அருள்புரிபவர். இவரை வழிபடுவதால் பணம், பொருள் அபிவிருத்தியாகும்.

மகா கணபதி: பிறை சூடி, மூன்று கண்களுடன் தாமரை மலர் ஏந்தி தன் சக்தி நாயகராகிய வல்லபையை அணைத்த வண்ணம் கைகளில் மாதுளம்பழம், கதை, சக்கரம், பாசம், நெய்தல், புஷ்பம், நெற்கதிர், தந்தம், கரும்பு, வில், தாமரை மலர் ஆகியவற்றையும் துதிக்கை யில் ரத்தின கவசத்தையும் ஏந்தி சிவப்புநிற மேனியாய் விளங்குபவர். இவரை வழிபடுவதால் தொழில் விருத் தியாகும். 

புவனேச கணபதி: விநாயகர் தன் தந்தத்தை முறித்து வீசியதால் அசுரனது சக்தி ஒடுங்கி சிறு மூஞ்சூறு வடிவத்துடன் ஓடினான் கஜமுகாசூரன். அவன் மீது பாய்ந்து ஏறி அவனை தன் வாகனமாக்கிக் கொண்ட இவர் செந்நிற மேனியுடன் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஏந்தி கற்பக விருட்சத்தின் கீழ் காட்சி தருகிறார். இவரால் விவகாரம், வழக்குகளில் வெற்றி கிட்டும்.

நிருத்த கணபதி: மஞ்சள் மேனியுடன் பாசம், அங்குசம், அப்பம், கோடரி, தந்தம் ஆகியவற்றை ஐந்து கைகளில் ஏந்திய மோதகம் இருக்கும் துதிக்கையை உயர்த்தி ஒற்றைக்காலில்நிருத்த கணபதியாகக் காட்சி தருகிறார். இவரை வழிபடுவதால் சங்கீதம், சாஸ்திரங்களில் சிறப்பு பெறுவார்கள். 

ஊர்த்துவ கணபதி: பொன்னிற மேனியுடைய இவர் எட்டு கைகள் கொண்டவர். தேவியை தன் இடதுபுறம் அணைத்துக் கொண்டு வீற்றிருக்கிறார். இவரை வழிபடுவதால் இல்வாழ்க்கை இன்பமாக இருக்கும்.
இந்த உருவ அமைப்பில்தான் விநாயகரை ஆலயங்களில் நிறுவி  வழிபடவேண்டுமென்பது நியதி. நம் பக்தியின் மிகுதியால் பலவித உருவங்களில் சிலாரூபம் அமைச்சு வழிப்பட்டு வருகிறோம். 

விநாயகர் துது...
ஓம் சுமுகாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணகாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் விநாயகாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் கணாத்பதியே நம
ஓம் தூமகேதுவே நம
ஓம் கணாத்ய க்ஷசாய நம
ஓம் பாலசந்திராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்ப கன்னாய நம
ஓம் ஏரம்பாய நம
ஓம் ஸ்காந்த பூர்வஜாய நம 

முழுமுதற் கடவுளை வணங்குவோம்! எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவோம்!

நன்றியுடன், 
ராஜி

Thursday, September 13, 2018

வினாயகனே! வினை தீர்ப்பவனே! வேழை முகத்தோனே! ஞான முதல்வனே!

’வி’ ன்னா சிறப்பு. “நாயகன்’ ன்னா தலைவர். சிறப்புமிக்க தலைவர்ன்னு குறிப்பதே வினாயகன்.  கடவுளுக்கெல்லாம் மேலான தலைமைக் கடவுளாக விநாயகப்பெருமான்னும்.  விக்னம்ன்னா பிழை, இடர்ன்னு பொருள். நமக்கு ஏற்படும் பிழைகளை, இடர்களை தீர்ப்பதால் விக்னேஸ்வரன்னும் பூதகணங்களுக்கு அதிபதியா இருக்குறதால கணேசன்னும்,  மனித உடலும், யானை தலையையும் கொண்டதால இந்த ’பிள்ளை’ யார்ன்னு கேட்க போய் பிள்ளையார்ன்னும்  பாசம், அங்குசம், அபயம், வரதம், மோதகம் ஆகியவற்றை தாங்கிய நான்கு கரங்களோடு தும்பிக்கையும் சேர்ந்து ஐந்து கரங்களை கொண்டதால் ஐங்கரன்னும் பேர் உண்டானது. 

ஐந்தாவது கரமான தும்பிக்கையின் மூலமா, படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைதல் என்னும் ஐந்தொழில்களை ஆற்றுவதால் மும்மூர்த்திகளும் இவருள் அடக்கம் என்கிறது விநாயக புராணம். அதன் அடிப்படையிலேயே இவரை முழுமுதற் கடவுளாக வழிபடுகின்றனர்.  இந்துக்கள் எந்தவொரு காரியத்தைத் தொடங்குவதற்கு முன்பும் விநாயகப்பெருமானை வணங்கியப்பின்னரே தங்கள் செயலை செய்ய தொடங்குவாங்க. பிள்ளையார் நம்ம அப்பாக்கள் போல எளிமையானவர். நாம எப்படி இழுத்தாலும் வந்துடுவார்.  சாணம், மஞ்சள், சந்தனம், அரச இலைன்னு எதிலும் வந்திடுவார்.

இன்று நாம கொண்டாடும் இந்த விரதத்தை அன்று பார்வதிதேவிதான் தொடங்கி வைத்தாள்.  தன் கணவரான சிவனை அவமதித்து யாகம் நடத்திய தந்தை தட்சனிடம் நியாயம் கேட்க போனாள் பார்வதி என்ற தாட்சாயணி. ஆனால், தட்சனோ மிகவும் கர்வம் பிடித்தவன். மருமகனை அவமானப்படுத்தியது போதாதென்று, மகளையும் கேலி பேசினான்.  இந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாத தாட்சாயணி, தட்சன் வளர்த்து வைத்திருந்த யாகக்குண்டத்தில் அப்படியே பாய்ந்துவிட்டாள்.
அதன்பிறகு, பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து பார்வதின்ற  பெயரில் வளர்ந்து வந்தாள்.  சிறு வயதிலிருந்தே கயிலைநாதன்தான் தன் கணவன் என்று தீர்மானமாக இருந்தாள். அவளுடைய அந்த எண்ணம் பலிக்க வேண்டும்ன்னா அவள் விநாயகரை நினைத்து சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டுமென்று அவளுடைய தந்தையான பர்வதராஜன் யோசனை சொன்னார்.  அவர் சொன்னபடியே, மண்ணால் ஒரு விநாயகர் உருவத்தை செய்து,  கூடவே தங்கத்தாலும் ஓர் உருவம் செய்து இரண்டையும் பொற்கும்பம் ஒன்றின் பக்கத்தில் வைத்தாள்.

 அந்த விக்ரகங்களுக்கு ஆகம விதிப்படி பூஜைகளை செய்தாள். ஆவணி மாத அமாவாசைக்கு அடுத்த சதுர்த்தியில் இப்படி பூஜையை ஆரம்பித்து, பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரையில் தினமும் பூஜை செய்தாள். அதற்குப் பிறகு மண் பிள்ளையாரை, மேள தாளத்தோடு ஊர்வலமாக எடுத்துப் போய் நதியிலே இறக்கி விட்டாள். அந்த பதினைந்து நாட்களும் நியம நிஷ்டைகளை மீறாமல் இருந்த விரதத்தின் பலனாக, தான் ஆசைப்பட்டாற்போல கயிலைநாதனை கைப்பிடித்தாள்.

விநாயகருக்கு    மோதகம், கொழுக்கட்டை படைப்பது வழக்கம். மோதகம் என்பது  தேங்காய் பூர்ணத்தை உள்ளே வைத்து செய்யப்படுவது.  மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம்.  உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம்.    அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்கு கிடைப்பதுப்போல நமக்குள் இருக்கும் இனிய குணங்களை அண்டத்திலுள்ள அனைத்துவித மாயைகளும் மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் பிரம்மத்தை அடையலாம் என்பதை இந்த மோதகம் உணர்த்துது.  விநாயகருக்கு முதன் முதலாக இந்தக் கொழுக்கட்டையை நிவேதனம் செய்தது வசிஷ்ட முனிவருடைய மனைவியான அருந்ததி.

விநாயகருக்கு யானை முகம் வந்ததுக்கு பல காரணம் சொல்றாங்க. அதுல ஒண்ணு, ”கஜமுகாசுரன்”ன்ற அசுரன், பிரம்மாவிடம் ஆண், பெண் சம்பந்தமில்லாமல் பிறந்த ஒருவனாலேயே தனக்கு அழிவு வரனும்ன்னு வரம் கேட்டான். ஆண், பெண் சம்பந்தமின்றி, உலகில், குழந்தை பிறப்பு என்பது சாத்தியம் இல்லைன்னு அவன் போட்ட கணக்கு.  அவன் நினைச்ச மாதிரியே அப்படி யாருமே உலகில் பிறக்கலை. எனவே, அவன் சர்வலோகங்களையும் வளைத்து, தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான். ’
தேவர்களை வதைத்தான். அவர்கள் துன்பம்  தாளாமல் தவித்தனர். அவர்களது துன்பம் தீர்க்க லோகமாதாவான பார்வதிதேவி முடிவு செய்தாள். தன் மேனியில்  பூசியிருந்த மஞ்சளை (அழுக்குன்னும் சிலர் சொல்றாங்க. நாம நல்லதையே எடுத்துப்போமே!)  வழித்தெடுத்து உருண்டையாக்கினாள். அந்த மஞ்சளில் உடல் உறுப்புகளையும், உயிரையும் கொடுத்தாள். அந்தக் குழந்தைக்கு, பிள்ளையார் என பெயர்  சூட்டினாள். அந்தப்பிள்ளை தன் அன்னையின் அந்தப்புர காவலனாக இருந்தான். சிவபெருமான் அங்கு வந்தார். அவர் மனதில் தேவர்கள் படும் துன்பத்தை  நினைத்து கருணை உண்டாயிற்று. இதற்காக ஒரு திருவிளையாடல் செய்தார். அம்மையார் குளிக்கும்போது, உள்ளே போக முயன்றார். அப்போது காவலுக்கு  இருந்த பிள்ளையார் தடுக்க,  என் அந்தப்புரத்தில் இருக்கும் நீ யாரடா? எனக் கேட்டு, பிள்ளையாரின் கழுத்தை  வெட்டிவிட்டார். தன் பிள்ளை மாண்டு கிடப்பதை பார்த்த பார்வதி தேவி, தன் மகனை மீண்டும் உயிர்ப்பிக்க சிவனை வேண்டி நின்றாள். “வடக்கு நோக்கி யார் படுத்திருந்தாலும் அவர் தலையை கொண்டு வந்தால், மீண்டும் உன் பிள்ளையை உயிர்ப்பிக்குறேன்னு வாக்கு கொடுத்தாராம் சிவன். அதன்படி, உலகை சுற்றி வந்தாள் பார்வதி தேவி, வடக்கு நோக்கி தலை வைத்து படுப்பது தனக்கும், தான் வாழும் உலகத்துக்கும் ஆகாது என்பதை  உணர்ந்த எல்லா ஜீவன்களும் அப்படி படுக்கலை. என்னை போல சொல்பேச்சு கேளாத ஒரே ஒரு யானை மட்டுமே வடக்கு நோக்கி படுத்திருந்தது. அதன் தலையை கொய்து கொண்டு வந்து சிவப்பெருமானிடம் தர, சிவன் மீண்டும் பிள்ளையாரை உயிர்பித்ததா ஒரு வரலாறு இருக்கு.

மனிதனின் வாயும், உதடும் தெளிவாக வெளியே  தெரிகிறது. மற்ற மிருகங்களுக்கும் கூட அப்படித்தான். ஆனால், யானையின் வாயை தும்பிக்கை மூடிக் கொண்டிருக்கிறது; அது வெளியே தெரியாது. தேவையின்றி பேசக்கூடாது என்பதும், தேவையற்ற பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும்உலகத்துக்கு உணர்த்தவே இப்படி ஒரு திருவிளையாடல்ன்னு அன்னையை சமாதானம் செய்தார் சிவன்.  
தன் பிறப்பின் நோக்கம் அறிந்து கஜமுகன்மீது படை எடுத்து சென்று அவன் மீது போர் தொடுத்தார். விநாயகரிடமிருந்து தப்பிக்க எலி உருக்கொண்டு தப்பிக்க பார்த்தான். அவனை வதம் செய்து. அவனின் வேண்டுக்கோளுக்கிணங்கி,  தன் வாகனமாக்கி கொண்டார்.

அனலாசுரன் என்ற அசுரன் தேவர்கள் மனிதர்களை துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பபர்களை அனலாய் மாறி தகித்து விடுவான், அவனை பிரம்மா, இந்திரனால் கூட அடக்க முடியவில்லை.  சிவனிடம் சென்று முறையிட்டனர். சிவன், பிள்ளையாருக்கு கட்டளை இட்டார், பிள்ளையார் அசுரனிடம் மோதினார். ஆனால், அவனை வெற்றி கொள்ள முடியலை.பிள்ளையாருக்கு கோவம் வந்து அனலாசுரனை விழுங்கி விட்டார். வயிற்றுக்குள் போன அனலாசுரன் அனலாய் தகிக்க தொடங்கினான், குடம் குடமாக கங்கை நீர் கொண்டு வந்து பிள்ளையார் மீது ஊற்றியும் பலனில்லை. இந்நிலையில் ஒரு முனிவர் ஒரு அருகம்புல்லை கொண்டு வந்து பிள்ளையார் தலையில் வைக்க அனல் மறைந்து அனலாசுரனும் ஜீரணமாகி விட்டான், தன்னை அருகம்புல் கொண்டு அர்சிக்க வேண்டுமென ஆணையிட்டார். 
விநாயகர் ஒரு கொம்பு (தந்தம்), இரண்டு காதுகள், மூன்று திருக்கண்கள், நான்கு தோள்கள்,  ஐந்து கரங்கள், ஆறுஎழுத்து மந்திரம் கொண்டவர். அவரை வழிபட்டால் ஏழேழு பிறவிகள் நீங்கும். எண்திசைகளும் புகழும். நவமணிகளும் பெற்று செல்வவளத்துடன் வாழச் செய்வார்.   விநாயகருக்கு இடைக்கு கீழே பூத உடம்பும், இடையிலிருந்து கழுத்துவரை தேவவுடம்பும், மிருகத்தலையும் உள்ளது. ஒரு கொம்பு ஆண்மையையும், கொம்பில்லாத பகுதி பெண்மையையும் கொண்டு உலகம் அனைத்தும்  தன்னுள்ளே  இருப்பதை விநாயகரின் உருவம் உணர்த்துது.
கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு,நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன்,பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலிய பொருட்களை விநாயகருக்கு நிவேதனம் செய்யலாம். இந்நிவேதனப் பொருட்களை அருணகிரிநாதர் திருப்புகழில் குறிப்பிடுகிறார்.
வினாயகரின் புது அவதாரமான சுற்றுச்சூழலை காக்கும் விதை வினாயகர்.
விநாயகரின் சக்திகளாக சித்தி, புத்தி உள்ளனர். அவர் எப்போதும் பிரம்மச்சாரியாக விளங்குபவர். தம்மை வழிபடும் அன்பர்களுக்கு காரிய சித்தியும், அதற்கு புத்தியும் அருள்பவர். அதனால், சித்தி புத்தி என்ற பண்புகளை இரு மனைவிகளாக்கி சித்தி புத்தி விநாயகர் ஆனார். அடியார்களின் இடையூறுகளை அகற்றுவதற்கு வல்லபம் (வல்லமை) வேண்டும். எனவே, இவர் வல்லபை என்னும் சக்தியுடனும் இருப்பார். விநாயகரின் சக்தியாகிய வல்லபை மரீச முனிவரது புதல்வி.

ஜமுகாசுரன் என்னும் அசுரன், தேவர்களுக்கு கொடுமைகள் செய்து வந்தான். தேவர்கள் தன்னைக் கண்டால் தோப்புக்கரணம் இடவேண்டும் என்று நிர்ப்பந்தித்தான். தேவர்களும் பயந்துபோய் இச்செயலைச் செய்து வந்தனர். அவனைச் சம்ஹாரம் செய்ய கிளம்பினார் விநாயகர். விநாயகரையும் தோப்புக்கரணம் இடுமாறு கஜமுகாசுரன் ஆணையிட்டான். கோபமடைந்த விநாயகர் தன் தந்தத்தால் அவனைக் குத்திக் கொன்றார். கஜமுகாசுரன் அழிந்ததும் அவனுக்கு போட்டு வந்த தோப்புக்கரணத்தை நன்றியுணர்வுடன் தேவர்கள் விநாயகப்பெருமானுக்குச் செய்யத் தொடங்கினர். இதுமுதல் தோப்புக்கரணம் போடும் வழக்கம் வந்தது.  தோப்புக்கரணம் போடுவதால் மூளைசெல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. நாடிகள் சுத்தம் பெறுகின்றன. நம் உடலிலுள்ள நரம்பு மண்டலங்கள் அனைத்தும் சேருமிடம் காது மடல்கள். தோப்புக்கரணம் செய்யும் போது காது மடல்களை இழுப்பதால் அனைத்து நரம்புகளும் தூண்டப்படுகின்றன.

கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரை வடித்து வழிபாடு செய்யலாம். இவற்றில் சுதை மற்றும் மரத்தாலான வடிவங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியாது என்பதால், மலர் அலங்காரம் மட்டும் செய்து கொள்ளலாம். மஞ்சள், சந்தனம், களிமண் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.  மூன்று, ஐந்து, ஏழு நாள்ன்னு பிள்ளையாரை கோலாகலமா பூஜித்து அவரை கொண்டு போய் கரைக்கனும்ன்னு உடக்குறதும், மிதிக்குறதும் காண சகிக்காத என் அம்மா வீட்டிலேயே கரைச்சு செடிகளுக்கு ஊத்திடுவாங்க, நானும் அப்படியே!