Showing posts with label ராதா. Show all posts
Showing posts with label ராதா. Show all posts

Friday, September 13, 2019

ஹேய்!! ஹோய்! டுடே நவரச நாயகன் கார்த்திக் பர்த்டே



1990களில்  திருத்தணில நாங்க குடியிருந்த தெருவில் கல்யாணம், திருவிழாக்களுக்கு மைக்செட், சீரியல் பல்ப் செட் போடும் கடை இருந்ததால் எல்லா புதுப்பாட்டும் புல் சவுண்ட்ல போடுவாங்க.  1989ல  சோலைக்குயில் படத்து கண்ணுல நிக்குது.. நெஞ்சுல சொக்குது மானே... பாட்டு கேட்க நேர என்னை ஈர்த்துச்சு...  மனசுக்குள் எப்பயும் அந்த பாட்டுதான் ரிவைண்டிங்... , ஸ்கூல் டான்ஸ்ல கங்கைக்கரை மன்னனடி... பாட்டுக்கு ஆட.. அப்பாவை கேசட் வாங்கி வரச்சொல்லும்போது அதுல, வருசம் 16, சோலைக்குயில் படமும் சேர்ந்து வர கேசட் கதறி கதறி அழுது கெஞ்சுற அளவுக்கு அதே பாட்டுதான். பாட்டு ஈர்த்ததே தவிர யார் நடிச்சாங்கன்னுலாம் தெரிஞ்சுக்க விரும்பல.  

இத்தனைக்கும் 1988ல நடந்த அக்கா கல்யாணத்துலயே கார்த்திக் நடிச்ச என் ஜீவன் பாடுது படம் பார்த்திருக்கேன். அப்பலாம் சின்ன பிள்ளைன்றதால   நடிகர்கள்மீது பெருசா ஈர்ப்பில்லை.  பிடித்தது காலப்போக்கில் பிடிக்காம போற அதிசயம்  நிகழும் ஈ லோகத்தில்,  இத்தனை காலமும் மாறாம இருக்குறது கார்த்திக் மீதான ரசனை மட்டுமே! அவர் ஈர்த்த அளவுக்கு எந்த நடிகரும் இன்னியவரைக்கும் இந்தளவுக்கு ஈர்த்ததில்லை....  அதுக்கப்புறம்,  எப்பயும் கார்த்திக்.. கார்த்திக்.. கார்த்திக்தான்.... 
 13/9/1960ல பிறந்திருக்கார் என் சின்ன பொண்ணை கருவுற்றிருக்கும்போது செப்.15 டெலிவரி டேட் கொடுத்தாங்க. ஆனா, செப் 13லயே அவ பிறந்திடனும்ன்னு சாமிக்கிட்டலாம் வேண்டிக்கிட்டேன். நாம கேட்டதைலாம் என்னிக்கு சாமி செஞ்சிருக்கு?! . 1981 அலைகள் ஓய்வதில்லை படம் வந்திச்சு.  எப்படி நடிப்பாரோன்னு பயந்துக்கிட்டிருந்த அவர் அப்பா முத்துராமனுக்கு  அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டுன்னுகூட  தெரியாது.  படம் வெளில வரும் முன்னயே முத்துராமன் நெஞ்சுவலியில் இறந்துட்டாரு. ஆலோசனை சொல்லி, கைக்கொடுக்க ஆளில்லாம  கொஞ்சம் வருசங்களுக்கு சரியான படம்  தேர்ந்தெடுக்க தெரியாம பெருசா எதும் ஹிட் கொடுக்கவே இல்ல. ரஜினி, ராதிகா நடிச்ச நல்லவனுக்கு நல்லவன் படத்துல, கிட்டத்தட்ட  வில்லன் வேஷம்ன்னு சொல்லி ஏ.வி.எம். நிறுவனத்தார் கேட்க வில்லன் வேஷமான்னு யோசிச்ச கார்த்திக்கை எங்க நிறுவனத்தின் அடுத்த படத்துல நீங்கதான் ஹீரோன்னு வாக்களிச்ச பின் நடிச்சதா ஏ.வி.எம் சரவணனே சொல்லி இருக்கார்...
கார்த்திக்கின் பொன்னுமணி, ரஜினியின்  எஜமான் படப்பிடிப்பும் ஒரே தளத்தில் நடந்தபோது எடுத்த படம்...

ஆவரேஜ் ஹீரோவா இருந்த கார்த்திக்கை நவரசநாயகனா காட்டுனது மௌனராகம் படத்துலதான்... மிஸ்டர் சந்திரமௌலீஈஈஈஈஈஈஈஈஈன்னு கூவி அதிகபட்சம் கால்மணிக்கூர் படத்துல வந்தாலும் காதல், குறும்பு, சோகம், கோபம்ன்னு அத்தனை அம்சத்தையும் காட்டி நடிச்சிருப்பார். படத்தின் நாயகன் மோகன்னாலும் படத்து பேரை கேட்டதும் நினைவுக்கு வர்றது கார்த்திக்தான். அந்த படத்துக்கப்புறம் கார்த்திக் கேரியர் டாப் கியர்ல போச்சு.. அக்னி நட்சத்திரம், வருசம் பதினாறு, கண் சிமிட்டும் நேரம், பாண்டி நாட்டு தங்கம், கிழக்கு வாசல், பொண்ணுமனி, முத்துக்காளைன்னு போய்க்கிட்டிருந்த கார்த்திக் கிராஃப்ல மீண்டும் ஒரு சறுக்கல்... எல்லாமே சொதப்பிக்கிட்டு வந்துச்சு...
ஆகாய கங்கை படத்துக்காக  கார்த்திக், சுகாசினி
மௌனராகத்துக்குபின் அக்னிநட்சத்திரத்தில் கார்த்திக்கை வச்சு இயக்கினார் மணிரத்தினம். பிரபு இன்னொரு நாயகன்.  பிரபு பெரிய வீட்டு பிள்ளையாய், போலீசாய் முறுக்கி காட்டி வருவார். காதல் காட்சியிலயும் அந்த ரஃப்னெஸ் தெரியும்.  ஆனா கார்த்திக் சாக்லேட் பாயா வந்து எல்லாரையும் கட்டிபோட்டார். நான் அந்த படத்துக்காக உடம்பை ஏத்தி கஷ்டப்பட்டு நடிச்சு வராத பேரை சும்மா கேமரா முன்னாடி நின்னு பேர் வாங்கிட்டு போயிட்டான் கார்த்திக்ன்னு பிரபுவே சொல்லி இருக்கார். 
அலைகள் ஓய்வதில்லை படத்துக்கான போட்டோ ஷூட்டிங்குக்கு வந்தபோது...

மணிரத்தினத்தின் தளபதி படத்துல கலெக்டர் வேசத்துக்கும், ரோஜா படத்து ஹீரோவாகவும் கார்த்திக்தான் முதல்ல நினைவுக்கு வந்திருக்கார். முதல்ல தளபதி படத்துக்காக போய் கேட்டபோது, என்ன நினைச்சாரோ தெரியல, அந்த படத்தை தவிர்க்க அதிக சம்பளம் கேட்டிருக்கார் கார்த்திக் அதனால் அந்த ரெண்டு படத்தையும் நடிக்க தவறவிட்டிருக்கார். பலவருசங்கழிச்சு ராவணன் படத்துலதான் மீண்டும் ரெண்டு பேரும் கைக்கோர்த்திருக்காங்க. பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய் என்ட்ரிக்கு பறக்காத விசில் கார்த்திக் என்ட்ரிக்கு பறந்துச்சாம். கார்த்திக்குண்டான இடம் இன்னும் சினிமாவில் நிரப்பப்படாமயே இருக்குன்னு மணிரத்தினமே ராவணன் படத்து புரமோஷன்ல சொன்னார். 

மிஸ்டர் சந்திரமௌலி... மிஸ்டர் சந்திரமௌலி... வசனத்தை எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லி நடிக்காத நடிகரும், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டும் இதுவரை இல்லை. மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டுக்கு கார்த்திக் குரல்ன்னா அல்வா சாப்பிடுறமாதிரி... கார்த்திக் ஹே.. ஹேய்..ன்னு சொல்லி கைகாலை ஆட்டி, குழைஞ்சு பேசி ஓவர் ஆக்டிங்க் செய்ய மட்டுமே தெரியும்ன்னு சொன்னவங்க வாய மூடுற மாதிரி உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்... படத்துலயும், ஆனந்தபூங்காற்றே... படத்துலயும் நடிச்சு அசத்தி இருப்பார். ஹீரோவா நடிச்சிட்டிருக்கும்போதே அஜீத், பிரபுதேவா, விஜயகாந்த்... மாதிரியான நடிகர்கள் படத்துல கெஸ்ட்ரோல்லயும் நடிச்சிருக்கார். ஆறு பாடல்களை பாடி இருக்கார். 

பொதுவா எல்லா நடிகர், நடிகைகளுக்கும் ரீ எண்ட்ரிங்குறது ஒருமுறைதான் வரும். ஆனா கார்த்திக்குக்கு ரெண்டாவது முறையும் வந்துச்சு..  சுந்தர் சி இயக்கத்துல 1995ல உள்ளத்தை அள்ளித்தா படத்துமூலமா மீண்டும் பிசியானார் கார்த்திக். பூவரசன், மேட்டுக்குடி, பிஸ்தா, கோகுலத்தில் சீதைன்னு அவர் கொடுத்த ஹிட்டுகள் ஏராளம். கோகுலத்தில் சீதை படத்துல கார்த்திக் ரிஷியாவே வாழ்ந்திருப்பார். அந்த படத்து சாயலும் எல்லா நடிகர்கள்கிட்டயும் பார்க்கலாம்.  இதுக்கிடையில், கார்த்திக்கின் கவனம் அரசியல் பக்கமும் பார்வை போனது ...  அரசியல்ல மூழ்கி முத்தெடுத்தவங்க வெகுசிலரே! மூழ்கி காணாம போனது நிறைய பேரு. ஆனானப்பட்ட சிவாஜியே அரசியல்ல ஜெயிக்க முடியாதபோது தான் எம்மாத்திரம்ன்னு கார்த்திக் நினைச்சிருக்கனும்.. சரியான வழிக்காட்டுதல் இல்லாததால் அரசியல்ல இறங்கி சினிமாவை இழந்துதான் மிச்சம்...
தனக்கு தம்பியா, வில்லனா நடிச்ச சக நடிகரான முத்துராமன் தன்னோட மகனின் வளர்ச்சியை பார்க்க உடனில்லையேன்னு எம்.ஜி.ஆர் கலங்கினது படத்துலயே தெரியும்.

பொதுவா, நீச்சல் தெரியாம நீரில் முங்குறவங்களை,  ரெண்டு முறை வெளித்தள்ளி காப்பாத்த பார்க்குமாம். அதுல தப்பிச்சுக்கலைன்னா மூணாவது முறை முங்கிதான் போகனும். ஆனா, கார்த்திக் விசயத்துல இந்த விதி உடைக்கப்பட்டிருக்கு...  மாஞ்சா வேலு படத்துல கெஸ்ட்ரோலும், அனேகன் படத்துல வில்லனாவும் மீண்டும் கைக்கொடுத்து அவருக்குன்னு இன்னும் ரசிக பட்டாளம் இருக்குங்குறதை  அவருக்கு உணர்த்தி இருக்கனும்.  சூர்யாவோடு ‘ இது தானா சேர்ந்த கூட்டம்’ படத்துல வில்லனா வந்தார்(இன்னமும் நான் படம் பார்க்கலை :( ). 

இப்ப சமீபத்துல வெளிவந்த மிஸ்டர்.சந்திரமௌலி படத்துல ஃபர்ஸ்ட் ஹீரோ கார்த்திக்தான். அவரோடு சேர்ந்து அவர் மகனும் நடிச்சிருக்கார். அப்பாவோடு சேர்ந்து நடிக்க கொடுத்து வைக்காத எனக்கு என் மகனோடு சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைச்சிருக்குன்னு ஆடியோ ரிலீஸ்ல கண்கலங்கினார்.  தன் மகள் வயதுடைய வரலட்சுமி சரத்குமாருக்கு பத்து பொருத்தமும் பக்காவா பொருந்தி போனார்.  

அக்னி நட்சத்திரம், வருசம் 16, கிழக்குவாசல், பொன்னுமணி  படத்துக்காக நான்கு முறை பிலிம்பேர் விருதையும், அலைகள் ஓய்வதில்லை, அக்னி நட்சத்திரம், கிழக்குவாசல், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்(1998)& பூவேலி(1998) படத்துக்காக நான்கு முறை தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்துக்காக சினிமா எக்ஸ்பிரஸ் விருதும்,  அபிநந்தனான்ற தெலுங்கு படத்துக்காக நந்தி விருதையும், அதுமட்டுமில்லாம கலைமாமணி பட்டமும் வாங்கி இருக்கார்.  சுயமரியாதை, அமரன், சின்ன ஜமீன், சிஷ்யா, பிஸ்தா, அரிச்சந்திரான்னு ஆறு படத்தில் சொந்தகுரலில் பாட்டு பாடி நடிச்சிருக்கார்.
 பல தடவை தவறவிட்டும் மீண்டும் கலை உலகில் இன்னொரு வாய்ப்பு வந்திருக்கு. பிரபு, சத்யராஜ் மாதிரி இந்த வாய்ப்பையாவது தக்க வச்சுப்பாரான்னு பொறுத்திருந்துதான் பார்க்கனும்..... உங்களுக்கு கைக்கொடுக்காத அரசியலை விட்டு, உங்களுக்குன்னு இன்னமும் இருக்கும் ரசிகர் பட்டாளத்தை கவனிங்க கார்த்திக் சார். 

காதல் மன்னன், காதல் இளவரசன், நடிகர் திலகம்ன்னு எத்தனை நட்சத்திரங்கள் இருந்தாலும் எல்லாரும் உணர்ச்சிகளை வெளிக்கொணர கொஞ்சம் மெனக்கெடனும்... உங்களுக்கு அதுலாம் வேண்டவே வேண்டாம். தானாவே வரும். நவரச நாயகன்ங்குற பட்டம் உங்களுக்கு மட்டுமே பொருந்தும்.  அந்த பட்டம் மௌனமாய் ராகம் பாடியப்படி... உங்கள் நடிப்பு திறமைக்கு மௌனச் சாட்சியாய் என்னிக்கும் உங்களுக்காகவே இருக்கும்... 


 இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்  கார்த்திக் சார்... 

மீள்பதிவு

நன்றியுடன்,
ராஜி. 

Sunday, September 30, 2018

வாழ்க நீயும் வளமுடன்.. என்றும் வாழ்கவே! - பாட்டு புத்தகம்


காதல் என்னலாம் செய்ய சொல்லும்?!  சிற்பம் வடிக்க சொல்லும்.  சித்திரம் எழுதச்சொல்லும்,  மார்க் எடுக்க சொல்லும், எந்த தனித்திறமையுமில்லாம பணமும் மனமுமிருந்தால் தாஜ்மகால் மாதிரி கட்டடம் எழுப்ப சொல்லும். பிச்சியாய் அலைய சொல்லும்.   அட, லவ்வுனவங்க நம்ம லவ்வை ஒத்துக்கலைன்னா ஒன்னு உசுரை கொடுக்க சொல்லும் இல்ல உயிரை எடுக்க சொல்லும்.  காதல் கொண்டவர் பாடல் எழுதினால்?! 

ஆத்மார்த்தமாய் வெளிவரும் அந்த பாடல் செமயா இருக்கும். அந்த பாட்டுக்கு அவரே இசையமைச்சிருந்தால்?! பாடலின் இனிமையை பத்தி சொல்லவே வேணாம், அந்த பாடலை அவரே பாடி இருந்தால்?! அந்த பாட்டுக்கு பொருத்தமான நடிகர் நடிச்சிருந்தால்?!  பட்டி தொட்டிலாம் அந்த பாட்டாவே இருக்கும். அப்படி ஒரு பாடல்தான் இதயக்கோவில் படத்தில் இதயம் ஒரு கோவில்...ன்ற  பாடல்தான் அந்த சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்.

தன் மனைவி ஜீவாமீது அலாதி பிரியம் இளையராஜாவுக்கு. தன்னோட பல பாடல்களை உருவாக்கும்போது தன் மனைவியின் நினைவாகவே உருவாக்குனதா ஒரு பேட்டியில் சொல்லி இருக்கார். இளையராஜா இசையமைப்பாளரா இருந்த காலத்தில் பாடலாசிரியரா உருவெடுக்கும் காலம் வந்தபோது, தன் காதல் மனைவி ஜீவாவை நினைச்சுக்கிட்டு எழுதின பாடல்தான்.  இந்த பாடலை எழுதனும்ன்னு ஆரம்பிக்கும்போது முதலின் தோன்றிய வரிதான் எனது ஜீவன் நீயடின்ற வரி..  அதை வச்சுதான் அந்த பாடலே உருவானதாம். இந்த பாடல் முழுக்க ஜீவன்ன்ற வார்த்தை அடிக்கடி வரும்.  இதயம் ஒரு கோயில்... அதில் உதயம் ஒரு பாடல்... இதில் வாழும் தேவி நீ.. எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே.. என் பாடலின் ஜீவன் எதுவோ?! அது நீயே!!.' எனது ஜீவன் நீதான் என்றும் புதிது... இதைவிட எப்படி தன்னோட காதலை ஒரு ஆணால் சொல்ல முடியும்?! அந்த காதலுக்கு பாத்திரமான ஜீவான்ற அந்த  பெண்மணி எத்தனை அதிர்ஷ்டசாலி?! 

இந்த பாட்டு மூணு விதமா நெட்ல கிடைக்குது. முதல்ல இளையராஜா குரலில் கிடைக்குது. இது சினிமாவில் இருக்காது. கேசட்ல மட்டுமே இருந்துச்சு. ரெண்டாவது இந்த படத்து கதாநாயகனான மோகனின் முதல் காதலி அம்பிகாவோடு சந்தோசமா பாடுவது. மூணாவது, கிளைமேக்ஸ் பாட்டு. ராதா திருமணத்து போது  மோகன் பாடுவது. கிட்டத்தட்ட அது சோகப்பாட்டுதான், ஆனா, அந்த சோகம் பாட்டுல தெரியாது..
இளையராஜா குரலில்....


முதல் காதல்..
கிளைமேக்ஸ் சோகம்..

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலரால் நாளும் சூட்டுவேன்...

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்


ஆத்மராகம் ஒன்றில்தான் வாழும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடியே நாதம் தாளம் ஆனதே!
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே!
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை.
ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதில்லை.
எனது ஜீவன் நீதான்... என்றும் புதிது!!

இதயம் ஒரு கோவில்……………
காமம் தேடும் உலகிலே, ஜீவன் என்னும் கீதத்தால்
ராம நாமன் மீதிலே நாதத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏற்றினாரம்மா!
அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்!
என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே!
நீயும் நானும் ஒன்றுதான் எங்கே பிரிவது?!


இதயம் ஒரு கோவில்…………
நீயும் நானும் போவது,
 காதல் என்னும் பாதையில்...
சேரும் நேரம் வந்தது..
 மீதி தூரம் பாதியில்..
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேரம்மா!!
எனது பாதை வேறு!
 உனது பாதை வேறம்மா!!
மீராவின் கண்ணன் மீராவிடமே!!
எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே!
வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே!!


படம்: இதயக்கோவில்
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: இளையராஜா
பாடியவர்: இளையராஜா, எஸ்.பி.பாலசுப்ரமணி
நடிகர்கள்; மோகன், அம்பிகா, ராதா

Monday, April 16, 2012

ரெண்டு பொண்டாட்டிகாரன் படும் பாடு..., ஐஞ்சுவை அவியல்

ரெண்டு பொண்டாட்டிகாரன் படும் பாடு...,     
                                  
ஒரு பொண்டாட்டி கட்டுனவனே உலகமே வெறுத்து போறளவுக்கு லோல் படுறான். இன்னும் ரெண்டு பொண்டாட்ட்டி கட்டிட்டாலோ கேட்கவே வேணாம். அவன் படுற இம்சை இருக்கே. இதுக்கு, மனிதன் மட்டுமல்ல இறைவனும் விதிவிலக்கல்ல.

   அலங்கார ஸ்வரூபனாக கண்ணன் பாமாவின் இல்லத்துள் புகுந்தான். அவனைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்தாள் பாமா. அவளைக் கண்ட கண்ணன் அவளின் முன்னால் அமர்ந்து அவளது முகவாயைப் பிடித்துக் கொஞ்சினான்.திரும்பிப் பாராமலேயே பேசினாள் பாமா. "இந்த அலங்காரங்களை அவளிடம்தான் செய்து கொள்ள வேண்டுமா?ஏன்?நான் செய்ய மாட்டேனா?"

"இதற்காகவா இத்தனை கோபம்?வேண்டுமானால் இந்த அலங்காரங்களைக் கலைத்து விடுகிறேன். நீ எனக்கு அலங்காரம் பண்ணி விடு."பாமாவின் கரங்களைப் பற்றிக்கொண்டு கெஞ்சினான் கண்ணன்.
ஒரு வழியாக சமாதானமானாள் பாமா. அன்று முழுவதும் கிருஷ்ணன் பாமாவின் இல்லத்திலேயே கழித்தான்.சிலநாட்கள் கழிந்தன. அன்றும் பாமாவிற்குக் கோபம். என்ன என்று புரியாமலேயே தவிப்பது போல நடித்தான்   கண்ணன்.  வெகுநேரம் கண்ணன் கெஞ்சவே சற்றே கோபம் தணிந்தாள் பாமா.
"நீங்கள் என்னிடம் இருப்பதை விட அந்த கோபிகையரிடமே அதிக நேரம் தங்கிவிடுகிறீர்களே. அதுதான் எனக்குப் பிடிக்கவேயில்லை."
      "இனி அந்த கோபியருடன் சேருவதில்லை. உனக்கு மகிழ்ச்சிதானே பாமா?" பாமா சற்றே புன்னகையை உதிர்த்தாள். சினம் தணிந்த பின் தன் கிருஷ்ணனின் மீது அன்பைப் பொழிந்தாள். கண்ணனும் அவள் அன்பில் திளைத்தான்.
      
    இரண்டு நாட்கள் கழிந்தன.அன்றும் பாமா கண்ணனை எதிர்பார்த்துக் காத்துக்கிடந்தாள்.  கண்ணன் வரவில்லை. ஆனால் கண்ணனைத் தேடி அவன் அன்பிற்குரியவளான ராதை,  பாமாவின் வீட்டிற்குள் நுழைந்தாள்.அவளைப் பார்த்ததும் அவள் மீது பொறாமையும் கோபமும் கொண்டாள் பாமா. தனக்கே உரிய கண்ணன் மீது அவள் அன்பு செலுத்துவது பாமாவிற்குப் பிடிக்கவில்லை.இருப்பினும் இல்லம் வந்தவளை கல்கண்டு கலந்த பால் கொடுத்து உபசரித்தாள்.
                          அதை மகிழ்ச்சியுடன் வாங்கிய ராதை" கிருஷ்ணார்ப்பணம்"  என்று சொல்லிப் பருகினாள். மீண்டும் கண்ணனைத் தேடி வெளியே ஓடிவிட்டாள் ராதை.
           வழக்கம்போல் மாலைவேளையில் கண்ணன் பாமாவைத் தேடி அவளது இல்லத்திற்கு வந்தான்.வரும்போதே மிகுந்த வேதனையை முகத்தில் தாங்கி வந்தான். நேராக ஊஞ்சலில் போய்ப் படுத்துக் கொண்டான். ஒருநாளும் இல்லாத் திருநாளாக கண்ணன் இப்படிச் செய்தது பாமாவுக்குப பேரதிர்ச்சியாக இருந்தது.கண்ணனின் அருகே ஓடி வந்தாள்.அவன் முகத்தை வருடினாள்."சுவாமி! என்னவாயிற்று தங்களுக்கு?ஏன் இந்தச் சோர்வு? " என்றாள்.

"பாமா! என் கால் மிகவும் வலிக்கிறது. ஏனென்று தெரியவில்லை." என்றபடியே கால்களைக் காட்டினான் அந்த மாயக் கள்ளன்.பாமாவும் அவன் காலடியில் அமர்ந்து கால்களைத் தன் மடிமீது வைத்துக் கொண்டு வருடினாள்.
திடுக்கிட்டாள். கண்ணனின் பாதங்கள் இரண்டிலும் பெரிய பெரிய கொப்புளங்கள் இருந்தன.துடித்து விட்டாள் பாமா. "தங்களுக்கு ஏனிந்த நிலை சுவாமி?"

"பாமா! நான் என்ன செய்வேன்? யாரோ என் பக்தைக்கு சூடான பானம் அருந்தக் கொடுத்துள்ளார். அவள் அதை எனக்கு அர்ப்பணித்துவிட்டுப் பின் பருகினாள். அந்தப் பானத்தில்  இருந்த சூட்டை நான் ஏற்றுக் கொண்டேன். அந்த பக்தை தன்  உள்ளத்தில் எப்போதும் என் பாதங்களை வைத்துப் பூஜிக்கிறாள்.அத்தகைய பக்தையைக் காக்க வேண்டியது இந்தப் பரந்தாமனின் கடமையல்லவா பாமா?" 

பாமா வெட்கித் தலை குனிந்தாள். ராதைக்குத் தான் கொடுத்த சூடான பால்தான் இந்த நிலைக்குக் காரணம் என்பதைத் தெரிந்து கொண்டாள்.அவள் கண்களில் கண்ணீர் பெருகியது.

"பரந்தாமா! என்னை மன்னித்து விடுங்கள். நான் செய்த தவறுதான் உங்களின் இந்த நிலைக்குக் காரணம்.தங்கள் மீது அளவு கடந்த அன்பைப் பொழியும் ராதையின் மீது நான் பொறாமைப் பட்டேன். அதன் காரணமாக மிகவும் சூடான பாலை அவள் பருகக் கொடுத்தேன்.அவள் துன்பப் படுவாள் என நினைத்தேன். நான் செய்த இந்தத் தவறை மன்னித்து விடுங்கள்.உண்மையான பக்தி கொண்ட ராதாவை நான் சோதித்து விட்டேன். என் தவறைப் பொறுத்தருளுங்கள்." கண்ணனின் கால்களைப் பற்றிக் கொண்டு பாமா கதறினாள்.

அவளது கண்ணீர் பட்ட மறுகணமே கொப்புளங்கள் மறைந்தன. அதனுடன் சேர்ந்து பாமாவின் பொறாமையும் மறைந்தது.

                                              
 புதிருக்கு விடை சொல்லுங்க?!.....
                                         
ஆதி காலத்தில் அப்பனை விட்டவள் ...
அறிவுள்ள கையில் வந்து அமர்ந்தவள் ...
வெட்டுக்கும் கட்டுக்கும்கட்டுப்பட்டவள்....
வேதனையில் மேனி கிழிந்தவள்...,
ஏற்றி மஞ்சளும் வைப்பாள்...
பொட்டும் வைப்பாள்...
ஆனால், அவள் பெண்ணல்ல..,
அப்படின்னா அது யாரு?விடை வழக்கம் போல் அடுத்த பதிவில்...
                                        
                                   

வாய்விட்டு சிரிங்க..., நோய் விட்டு போகும்...,

                                                                
நோயாளி : என்ன டாக்டர் இது, மருந்து சீட்டில் சா-வுக்கு முன், சா-வுக்கு பின் அப்படினு போட்டிருக்கீங்க.
 டாக்டர் : அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க! சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னுதானே  எழுதியிருக்கேன்.
                              
  ஹோம் வொர்க் செய்றாங்களாம்...,
எல்.கே.ஜி. படிக்கும்போது  என் பையன் அப்பு,  ஹோம் வொர்க் எழுதிக்கிட்டு இருந்தான், நோட்டைப் பார்க்காமல் முகத்தை மட்டும் வேறு பக்கம் திருப்பிக் கொண்டு எழுதினான். இரண்டு, மூன்று முறை அவன் முகத்தை நேராக வைத்து எழுத வைத்தேன். திரும்பவும் முகத்தைத் திருப்பி, நோட்டைப் பார்க்காமல் எழுதினான். புரியாமல்,
''ஏண்டா செல்லம் இப்படி பண்றே..?'' என்று கேட்க, அவன் சொன்ன பதில் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. ''அம்மா... மிஸ்தான் பார்க்காம இந்த ஹோம் வொர்க்கை எழுதிட்டு வரச் சொன்னாங்க... அதான் பார்க்காம எழுதறேன்!'' என்றான் சின்ஸியராக. பாட நோட்டை பார்க்காமல், ஹோம் வொர்க் எழுத வேண்டும் என்று கஷ்டப்பட்டு புரிய வைத்த பிறகு, அவன் சிரித்த சிரிப்பு... ஆஹா
                                      
செஞ்சுதான் பாருங்களேன்
சப்பாத்தி மாவுடன் சோயா மாவும் சேர்த்து சப்பாத்தி செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். புரோட்டின் சத்தும் கிடைக்கும்.
9. சேமியா பாயசம் செய்யும்போது குழைந்து போய்விட்டால் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு அதில் சேர்த்தால் சேமியா தனித்தனியாகிவிடும். 
மருதாணியால் ஆடையில் ஏற்படும் கறைபோக, அதை வெதுவெதுப்பான பாலில் அரை மணி நேரம் ஊற வைத்து, பின் சோப் போட்டு அலசினால் கறை போய்விடும்.
ஊதுவத்திகளை ஏற்றுவதற்கு முன் நீரில் நனைத்து பின்பு காற்றில் உலரவிட்டு ஏற்றினால், அதிக மணமாகவும் இருக்கும் நன்றாகவும் எரியும்.