Monday, April 16, 2012

ரெண்டு பொண்டாட்டிகாரன் படும் பாடு..., ஐஞ்சுவை அவியல்

ரெண்டு பொண்டாட்டிகாரன் படும் பாடு...,     
                                  
ஒரு பொண்டாட்டி கட்டுனவனே உலகமே வெறுத்து போறளவுக்கு லோல் படுறான். இன்னும் ரெண்டு பொண்டாட்ட்டி கட்டிட்டாலோ கேட்கவே வேணாம். அவன் படுற இம்சை இருக்கே. இதுக்கு, மனிதன் மட்டுமல்ல இறைவனும் விதிவிலக்கல்ல.

   அலங்கார ஸ்வரூபனாக கண்ணன் பாமாவின் இல்லத்துள் புகுந்தான். அவனைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்தாள் பாமா. அவளைக் கண்ட கண்ணன் அவளின் முன்னால் அமர்ந்து அவளது முகவாயைப் பிடித்துக் கொஞ்சினான்.திரும்பிப் பாராமலேயே பேசினாள் பாமா. "இந்த அலங்காரங்களை அவளிடம்தான் செய்து கொள்ள வேண்டுமா?ஏன்?நான் செய்ய மாட்டேனா?"

"இதற்காகவா இத்தனை கோபம்?வேண்டுமானால் இந்த அலங்காரங்களைக் கலைத்து விடுகிறேன். நீ எனக்கு அலங்காரம் பண்ணி விடு."பாமாவின் கரங்களைப் பற்றிக்கொண்டு கெஞ்சினான் கண்ணன்.
ஒரு வழியாக சமாதானமானாள் பாமா. அன்று முழுவதும் கிருஷ்ணன் பாமாவின் இல்லத்திலேயே கழித்தான்.சிலநாட்கள் கழிந்தன. அன்றும் பாமாவிற்குக் கோபம். என்ன என்று புரியாமலேயே தவிப்பது போல நடித்தான்   கண்ணன்.  வெகுநேரம் கண்ணன் கெஞ்சவே சற்றே கோபம் தணிந்தாள் பாமா.
"நீங்கள் என்னிடம் இருப்பதை விட அந்த கோபிகையரிடமே அதிக நேரம் தங்கிவிடுகிறீர்களே. அதுதான் எனக்குப் பிடிக்கவேயில்லை."
      "இனி அந்த கோபியருடன் சேருவதில்லை. உனக்கு மகிழ்ச்சிதானே பாமா?" பாமா சற்றே புன்னகையை உதிர்த்தாள். சினம் தணிந்த பின் தன் கிருஷ்ணனின் மீது அன்பைப் பொழிந்தாள். கண்ணனும் அவள் அன்பில் திளைத்தான்.
      
    இரண்டு நாட்கள் கழிந்தன.அன்றும் பாமா கண்ணனை எதிர்பார்த்துக் காத்துக்கிடந்தாள்.  கண்ணன் வரவில்லை. ஆனால் கண்ணனைத் தேடி அவன் அன்பிற்குரியவளான ராதை,  பாமாவின் வீட்டிற்குள் நுழைந்தாள்.அவளைப் பார்த்ததும் அவள் மீது பொறாமையும் கோபமும் கொண்டாள் பாமா. தனக்கே உரிய கண்ணன் மீது அவள் அன்பு செலுத்துவது பாமாவிற்குப் பிடிக்கவில்லை.இருப்பினும் இல்லம் வந்தவளை கல்கண்டு கலந்த பால் கொடுத்து உபசரித்தாள்.
                          அதை மகிழ்ச்சியுடன் வாங்கிய ராதை" கிருஷ்ணார்ப்பணம்"  என்று சொல்லிப் பருகினாள். மீண்டும் கண்ணனைத் தேடி வெளியே ஓடிவிட்டாள் ராதை.
           வழக்கம்போல் மாலைவேளையில் கண்ணன் பாமாவைத் தேடி அவளது இல்லத்திற்கு வந்தான்.வரும்போதே மிகுந்த வேதனையை முகத்தில் தாங்கி வந்தான். நேராக ஊஞ்சலில் போய்ப் படுத்துக் கொண்டான். ஒருநாளும் இல்லாத் திருநாளாக கண்ணன் இப்படிச் செய்தது பாமாவுக்குப பேரதிர்ச்சியாக இருந்தது.கண்ணனின் அருகே ஓடி வந்தாள்.அவன் முகத்தை வருடினாள்."சுவாமி! என்னவாயிற்று தங்களுக்கு?ஏன் இந்தச் சோர்வு? " என்றாள்.

"பாமா! என் கால் மிகவும் வலிக்கிறது. ஏனென்று தெரியவில்லை." என்றபடியே கால்களைக் காட்டினான் அந்த மாயக் கள்ளன்.பாமாவும் அவன் காலடியில் அமர்ந்து கால்களைத் தன் மடிமீது வைத்துக் கொண்டு வருடினாள்.
திடுக்கிட்டாள். கண்ணனின் பாதங்கள் இரண்டிலும் பெரிய பெரிய கொப்புளங்கள் இருந்தன.துடித்து விட்டாள் பாமா. "தங்களுக்கு ஏனிந்த நிலை சுவாமி?"

"பாமா! நான் என்ன செய்வேன்? யாரோ என் பக்தைக்கு சூடான பானம் அருந்தக் கொடுத்துள்ளார். அவள் அதை எனக்கு அர்ப்பணித்துவிட்டுப் பின் பருகினாள். அந்தப் பானத்தில்  இருந்த சூட்டை நான் ஏற்றுக் கொண்டேன். அந்த பக்தை தன்  உள்ளத்தில் எப்போதும் என் பாதங்களை வைத்துப் பூஜிக்கிறாள்.அத்தகைய பக்தையைக் காக்க வேண்டியது இந்தப் பரந்தாமனின் கடமையல்லவா பாமா?" 

பாமா வெட்கித் தலை குனிந்தாள். ராதைக்குத் தான் கொடுத்த சூடான பால்தான் இந்த நிலைக்குக் காரணம் என்பதைத் தெரிந்து கொண்டாள்.அவள் கண்களில் கண்ணீர் பெருகியது.

"பரந்தாமா! என்னை மன்னித்து விடுங்கள். நான் செய்த தவறுதான் உங்களின் இந்த நிலைக்குக் காரணம்.தங்கள் மீது அளவு கடந்த அன்பைப் பொழியும் ராதையின் மீது நான் பொறாமைப் பட்டேன். அதன் காரணமாக மிகவும் சூடான பாலை அவள் பருகக் கொடுத்தேன்.அவள் துன்பப் படுவாள் என நினைத்தேன். நான் செய்த இந்தத் தவறை மன்னித்து விடுங்கள்.உண்மையான பக்தி கொண்ட ராதாவை நான் சோதித்து விட்டேன். என் தவறைப் பொறுத்தருளுங்கள்." கண்ணனின் கால்களைப் பற்றிக் கொண்டு பாமா கதறினாள்.

அவளது கண்ணீர் பட்ட மறுகணமே கொப்புளங்கள் மறைந்தன. அதனுடன் சேர்ந்து பாமாவின் பொறாமையும் மறைந்தது.

                                              
 புதிருக்கு விடை சொல்லுங்க?!.....
                                         
ஆதி காலத்தில் அப்பனை விட்டவள் ...
அறிவுள்ள கையில் வந்து அமர்ந்தவள் ...
வெட்டுக்கும் கட்டுக்கும்கட்டுப்பட்டவள்....
வேதனையில் மேனி கிழிந்தவள்...,
ஏற்றி மஞ்சளும் வைப்பாள்...
பொட்டும் வைப்பாள்...
ஆனால், அவள் பெண்ணல்ல..,
அப்படின்னா அது யாரு?விடை வழக்கம் போல் அடுத்த பதிவில்...
                                        
                                   

வாய்விட்டு சிரிங்க..., நோய் விட்டு போகும்...,

                                                                
நோயாளி : என்ன டாக்டர் இது, மருந்து சீட்டில் சா-வுக்கு முன், சா-வுக்கு பின் அப்படினு போட்டிருக்கீங்க.
 டாக்டர் : அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க! சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னுதானே  எழுதியிருக்கேன்.
                              
  ஹோம் வொர்க் செய்றாங்களாம்...,
எல்.கே.ஜி. படிக்கும்போது  என் பையன் அப்பு,  ஹோம் வொர்க் எழுதிக்கிட்டு இருந்தான், நோட்டைப் பார்க்காமல் முகத்தை மட்டும் வேறு பக்கம் திருப்பிக் கொண்டு எழுதினான். இரண்டு, மூன்று முறை அவன் முகத்தை நேராக வைத்து எழுத வைத்தேன். திரும்பவும் முகத்தைத் திருப்பி, நோட்டைப் பார்க்காமல் எழுதினான். புரியாமல்,
''ஏண்டா செல்லம் இப்படி பண்றே..?'' என்று கேட்க, அவன் சொன்ன பதில் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. ''அம்மா... மிஸ்தான் பார்க்காம இந்த ஹோம் வொர்க்கை எழுதிட்டு வரச் சொன்னாங்க... அதான் பார்க்காம எழுதறேன்!'' என்றான் சின்ஸியராக. பாட நோட்டை பார்க்காமல், ஹோம் வொர்க் எழுத வேண்டும் என்று கஷ்டப்பட்டு புரிய வைத்த பிறகு, அவன் சிரித்த சிரிப்பு... ஆஹா
                                      
செஞ்சுதான் பாருங்களேன்
சப்பாத்தி மாவுடன் சோயா மாவும் சேர்த்து சப்பாத்தி செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். புரோட்டின் சத்தும் கிடைக்கும்.
9. சேமியா பாயசம் செய்யும்போது குழைந்து போய்விட்டால் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு அதில் சேர்த்தால் சேமியா தனித்தனியாகிவிடும். 
மருதாணியால் ஆடையில் ஏற்படும் கறைபோக, அதை வெதுவெதுப்பான பாலில் அரை மணி நேரம் ஊற வைத்து, பின் சோப் போட்டு அலசினால் கறை போய்விடும்.
ஊதுவத்திகளை ஏற்றுவதற்கு முன் நீரில் நனைத்து பின்பு காற்றில் உலரவிட்டு ஏற்றினால், அதிக மணமாகவும் இருக்கும் நன்றாகவும் எரியும்.

18 comments:

  1. ஐஞ்சுவை அவியல் அபார சுவையுடன் இருந்தது.

    ReplyDelete
  2. இன்றைய அவியல் கொஞ்சம் காரமாக நல்லாத்தான் இருக்கு (காரம் = ரெண்டு பொண்டாட்டி)

    ReplyDelete
  3. haa haaa haaa!

    sirikka vaiththathukku nantri!

    ReplyDelete
  4. அவியல் ரொம்பவே டேஸ்ட். அப்புவின் மழலை வெகுளித்தனம் ரசிக்க வைத்தது. அருமை. போன ரெண்டு புதிரும் நான் ஈஸியா கண்டுபிடிச்சுட்டேன்கறதால இந்த தடவை இப்படி புதிர் போட்டு (இருக்கற கொஞ்ச) முடியப் பிச்சுக்க வெக்கறது நியாயமா தங்கச்சி..?

    ReplyDelete
  5. ஜீ தமிழ் சொல்வதெல்லாம் நிகழ்ச்சியில் இப்படி நிறைய பேரை பார்த்திருக்கன் ஏன் நேரிலயும் பாத்திருக்கன் அவங்க படும் பாடு பெரும்பாடு.. சுவை சூப்பர்....

    ReplyDelete
  6. ரெண்டு பொண்டாட்டிக்காரன் பாடு செம திண்டாட்டம்தான். ரொம்ப அர்ப்பணிப்பு இருந்தாலும் கஷ்டம்தான் போலும்.

    ReplyDelete
  7. கண்ணன் பட்ட பாட்டை ரசித்தேன். நிபந்தனையற்ற பக்தி செலுத்துபவரை இறைவன் மனசுல தாங்கறான்றதை கதை அழகாச் சொல்லுது, அதுசரி சிஸ்டர்... ஊதுபத்தியை தண்ணியில ஈரமாக்கிட்டு எத்தனை மணி நேரம் காத்துல உலர வெக்கணும்னு சொல்லேவே இல்லையே..?

    ReplyDelete
  8. m suppar vivaatham parattukal

    ReplyDelete
  9. நல்ல சுவையான அவியல்.

    ஜோக் ரசித்தேன்..

    அப்புவின் பதில் - சரியாத் தானே சொல்லி இருக்கார்!

    தொடரட்டும் அவியல் பகிர்வு!

    ReplyDelete
  10. // ஹோம் வொர்க் செய்றாங்களாம்...,//

    நல்ல நகைச்சுவை

    ReplyDelete
  11. ஒரு பொண்டாட்டியை கட்டி கிட்டு கண் முழி பிதுங்குகிறது இதில் 2 பொண்டாட்டிக்கு ஆசை படுபவர் யாரப்பா?

    ReplyDelete
  12. //உண்மையான பக்தி கொண்ட ராதாவை நான் சோதித்து விட்டேன். என் தவறைப் பொறுத்தருளுங்கள்.//

    இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கொண்டால் நம் மீது பக்தியுள்ளவரை கட்டி கொண்டால் பிரச்சனை வராதுதானே?

    ReplyDelete
  13. அப்பு... எண்ணிப் போல் ஒருவன்... :) ஹி ஹி...

    சமையல் குறிப்பு மட்டும் cut பண்ணி draft ல வெச்சுருக்கேன்.. வீட்டுக்கு ஒரு புள்ள வரட்டும்.. அதுகிட்ட கொடுத்து செய்ய சொல்லி சாப்பிடுவோம்... :)

    ReplyDelete
  14. வணக்கம் சகோதரி..

    புதிருக்கான விடை...

    "பனை ஓலை" என நினைக்கிறேன் சரியா???

    ஐஞ்சுவை சமையல் மிக மிக ருசியாக
    இருக்கிறது சகோதரி...

    ReplyDelete
  15. தி முக கட்சில இருந்தும் கலைஞரை நக்கல் அடித்த திறமையைக்கண்டு நான் வியக்கேன்:)

    ReplyDelete
  16. மகேந்திரன் கூறியது...

    வணக்கம் சகோதரி..

    புதிருக்கான விடை...

    "பனை ஓலை" என நினைக்கிறேன் சரியா???

    ஐஞ்சுவை சமையல் மிக மிக ருசியாக
    இருக்கிறது சகோதரி..
    >>>
    உங்க விடை சரிதான் அண்ணா.

    ReplyDelete
  17. அவியல் மிகவும் சுவையுடன் நன்றாக இருந்தது . பாயசம் டிப்ஸ் செய்து பார்கிறேன் .

    ReplyDelete
  18. அனைத்தும் அருமை சகோதரி ! நன்றி !

    ReplyDelete