Sunday, September 30, 2018

வாழ்க நீயும் வளமுடன்.. என்றும் வாழ்கவே! - பாட்டு புத்தகம்


காதல் என்னலாம் செய்ய சொல்லும்?!  சிற்பம் வடிக்க சொல்லும்.  சித்திரம் எழுதச்சொல்லும்,  மார்க் எடுக்க சொல்லும், எந்த தனித்திறமையுமில்லாம பணமும் மனமுமிருந்தால் தாஜ்மகால் மாதிரி கட்டடம் எழுப்ப சொல்லும். பிச்சியாய் அலைய சொல்லும்.   அட, லவ்வுனவங்க நம்ம லவ்வை ஒத்துக்கலைன்னா ஒன்னு உசுரை கொடுக்க சொல்லும் இல்ல உயிரை எடுக்க சொல்லும்.  காதல் கொண்டவர் பாடல் எழுதினால்?! 

ஆத்மார்த்தமாய் வெளிவரும் அந்த பாடல் செமயா இருக்கும். அந்த பாட்டுக்கு அவரே இசையமைச்சிருந்தால்?! பாடலின் இனிமையை பத்தி சொல்லவே வேணாம், அந்த பாடலை அவரே பாடி இருந்தால்?! அந்த பாட்டுக்கு பொருத்தமான நடிகர் நடிச்சிருந்தால்?!  பட்டி தொட்டிலாம் அந்த பாட்டாவே இருக்கும். அப்படி ஒரு பாடல்தான் இதயக்கோவில் படத்தில் இதயம் ஒரு கோவில்...ன்ற  பாடல்தான் அந்த சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்.

தன் மனைவி ஜீவாமீது அலாதி பிரியம் இளையராஜாவுக்கு. தன்னோட பல பாடல்களை உருவாக்கும்போது தன் மனைவியின் நினைவாகவே உருவாக்குனதா ஒரு பேட்டியில் சொல்லி இருக்கார். இளையராஜா இசையமைப்பாளரா இருந்த காலத்தில் பாடலாசிரியரா உருவெடுக்கும் காலம் வந்தபோது, தன் காதல் மனைவி ஜீவாவை நினைச்சுக்கிட்டு எழுதின பாடல்தான்.  இந்த பாடலை எழுதனும்ன்னு ஆரம்பிக்கும்போது முதலின் தோன்றிய வரிதான் எனது ஜீவன் நீயடின்ற வரி..  அதை வச்சுதான் அந்த பாடலே உருவானதாம். இந்த பாடல் முழுக்க ஜீவன்ன்ற வார்த்தை அடிக்கடி வரும்.  இதயம் ஒரு கோயில்... அதில் உதயம் ஒரு பாடல்... இதில் வாழும் தேவி நீ.. எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே.. என் பாடலின் ஜீவன் எதுவோ?! அது நீயே!!.' எனது ஜீவன் நீதான் என்றும் புதிது..இதைவிட எப்படி தன்னோட காதலை ஒரு ஆணால் சொல்ல முடியும்?! அந்த காதலுக்கு பாத்திரமான ஜீவான்ற அந்த  பெண்மணி எத்தனை அதிர்ஷ்டசாலி?! 

இந்த பாட்டு மூணு விதமா நெட்ல கிடைக்குது. முதல்ல இளையராஜா குரலில் கிடைக்குது. இது சினிமாவில் இருக்காது. கேசட்ல மட்டுமே இருந்துச்சு. ரெண்டாவது இந்த படத்து கதாநாயகனான மோகனின் முதல் காதலி அம்பிகாவோடு சந்தோசமா பாடுவது. மூணாவது, கிளைமேக்ஸ் பாட்டு. ராதா திருமணத்து போது  மோகன் பாடுவது. கிட்டத்தட்ட அது சோகப்பாட்டுதான், ஆனா, அந்த சோகம் பாட்டுல தெரியாது..
இளையராஜா குரலில்....


முதல் காதல்..
கிளைமேக்ஸ் சோகம்..

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலரால் நாளும் சூட்டுவேன்...

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்


ஆத்மராகம் ஒன்றில்தான் வாழும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடியே நாதம் தாளம் ஆனதே!
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே!
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை.
ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதில்லை.
எனது ஜீவன் நீதான்... என்றும் புதிது!!

இதயம் ஒரு கோவில்……………
காமம் தேடும் உலகிலே, ஜீவன் என்னும் கீதத்தால்
ராம நாமன் மீதிலே நாதத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏற்றினாரம்மா!
அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்!
என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே!
நீயும் நானும் ஒன்றுதான் எங்கே பிரிவது?!


இதயம் ஒரு கோவில்…………
நீயும் நானும் போவது,
 காதல் என்னும் பாதையில்...
சேரும் நேரம் வந்தது..
 மீதி தூரம் பாதியில்..
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேரம்மா!!
எனது பாதை வேறு!
 உனது பாதை வேறம்மா!!
மீராவின் கண்ணன் மீராவிடமே!!
எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே!
வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே!!


படம்: இதயக்கோவில்
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: இளையராஜா
பாடியவர்: இளையராஜா, எஸ்.பி.பாலசுப்ரமணி
நடிகர்கள்; மோகன், அம்பிகா, ராதா

12 comments:

 1. இந்தப் பாடலுக்கு மூன்றாவது வெர்ஷன் இருப்பது தெரியாது. இளையராஜா பாடியதும், எஸ் பி பி பாடியதும் தெரியும். இளையராஜா ஜீவா பின்னணியும் புதுசு எனக்கு. இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களுமே இனிமையானவை.

  ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. எல்லாமே யூட்யூப்ல கிடக்கூ சகோ. இந்த பாடல் எல்லா வயதினருக்குமே பிடிக்கும்

   Delete
 2. இனிமையான பாடல். கேசட்டில் என்னிடமும் இருந்தது இப்பாடல்கள்.

  ReplyDelete
  Replies
  1. கேசட்,சிடி, டிவிடி, இப்ப மெமரி கார்ட், போன்... இப்படி எந்த ரூபத்தில் பாட்டு கேட்டாலும் இந்த படப்பாட்டுக்கு எப்பயும் இடமுண்டுண்ணே

   Delete
 3. இனிமையான பாடல்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

   Delete
 4. இந்தப் பாடல் கேட்கும்போதெல்லாம், தொண்டைக்குள் ஏதோ ஒன்று சிக்கிக் கொள்ளும்...

  ReplyDelete
  Replies
  1. சோகமான வரிகள் இல்லாம ஆனா நெஞ்சை கசிய வைக்கும் பாடல்

   Delete
 5. அருமையான பாடல் ராஜி ரசித்தேன்....ஜீவா ராஜா பற்றி கொஞ்சம் தெரியும் இப்போது உங்க பதிவின் மூல மேலும்சில தகவல்கல்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. 2012ல இளையராஜா மனைவி ஜீவா மாரடைப்பால் இறந்துட்டாங்க. அதிலிருந்து நிலை குலைந்து போன இளையராஜா பொதுவெளியில் ஏடாகூடாமாய் வார்த்தைகளை விட்டு அப்பப்ப கேலிக்கு ஆளாகுறார்.

   Delete