வணக்கம் உறவுகளே நலமா?
என்னடா! ராஜி கொஞ்ச நாளா பதிவேதும் போடாம இருக்கே, அப்பாடா இனி நிம்மதியா இருப்போம் னு..., நீங்க பெருமூச்சு விட்டுக்கிட்டு ஹாயா இருந்தால்.....,
SO, SORRY. ஏன்னா ? I CAME BACK . கொஞ்ச நாளா பதிவேதும் போடமுடியாத சூழல் . ஏறத்தாழ 2 வருசமா வலையில் எழுதி இருந்தாலும் சொல்லிக்குற மாதிரி ஏதும் எழுதலை. ம்க்கும். அதுக்கே உன்னோட அலம்பல் தாங்க முடியலை. எழுதியிருந்தால் அவ்வளவுதான்ன்னு நீங்க மனசுக்குள்ள நினைக்குறது எனக்கு கேட்குது.
SO, இனிமேலாவது எதாவது சொல்லிக்குறமாதிரி எழுதமுடியுதானு பார்க்கலாமினுதான் இந்த Re-Entry. யாருப்பா அது, மவுசை, குளோஸ் பட்டன்கிட்டக் கொண்டுப் போறது. பிச்சுப்புடுவேன் பிச்சு.
பதிவு எழுதி, கமென்ட் போடுறது அவ்வளவு ரொம்ப முக்கியமாக்கும்ன்னுலாம் கேட்கப்படாது..., கேட்டால் பதில் சொல்ல தெரியாது. அப்புறம் அழுதுப்புடுவேன் அழுது. சொல்லிப்புட்டேன் ஆமாம்.
இதுவரைக்கும் சைலண்டா இருந்த என் வலைப்பூ இனி, தாரை, தப்பட்டை, சங்குடன் கலக்க வருது (சனியனே தாரை தப்பட்டைலாம் கடைசி நேரத்துல வாசிக்கிறது.)
இனி, பொழுது போகாத வேளைகளில் பல மொக்கை பதிவுகளோடு வருவேன். நீங்களும் படிச்சுட்டு கமென்ட் போடணும். அது உங்க தலையெழுத்து நான்லாம் ஒண்ணும் பண்ண முடியாது. அடிக்கடி வந்து வலைப்பூவை எட்டிப் பார்த்துட்டு போகணும். இல்லாட்டி தூங்கும்போது எதிர்க்க நிக்குறவங்க யாருன்னு தெரியாம போய்டனும்ன்னு இஷ்ட தெயமான ஆஞ்சிநேய சாமிக்கிட்ட வரம் வாங்கி வந்திருக்கேன்.
டிஸ்கி: சில சொந்த சூழ்நிலைகளின் காரணமாக வலைப்பக்கம் வராம இருந்தாலும், நிறைய உறவுகளின் தரமான பதிவுகளை மிஸ் பண்ணி இருக்கேன். இனி தொடர்ந்து வந்து, படித்து, கருத்துக்களை சொல்வேன்.
