காலை, மதிய உணவினை காலையிலேயே முடித்துவிடுவேன். சமைத்துக்கொண்டே பாத்திரமும் கழுவி 9 மணிக்குலாம் கிச்சன் க்ளீன் ஆகிடும். வாஷிங் மெஷினில் துணிகளை துவைக்க போட்டுட்டு 10 மணிக்கு சன் லைஃபில் பாட்டு கேட்டுக்கொண்டே இணையம். மதியம் நேர சாப்பாட்டுக்கு பின் கொஞ்சம் உறக்கம். பிறகு, கிராஃப்ட், மாலை வேளையில் அம்மா வீடு.. விளக்கேத்திட்டு மீண்டும் கொஞ்ச நேரம் இணையம்.. இரவு உணவோடு இட்லி தோசைக்கு மாவரைத்தல், இப்படி மறுநாள் சமையலுக்கான ஆயத்தம், இரவு உணவுக்கு பின் கிச்சன் க்ளீன்... இதான் என் வழக்கம்...
Showing posts with label லஞ்ச் பேக். Show all posts
Showing posts with label லஞ்ச் பேக். Show all posts
Thursday, April 09, 2020
Thursday, May 02, 2019
சின்ன வயர்கூடை - கைவண்ணம்
நமக்கு பிடிச்ச கலர்ல எடுத்துக்கலாம். நான் ரோஸ், ப்ளூன்னு எடுத்துக்கிட்டேன். ரோஸ் வயர் குறைச்சலா இருந்ததால் அதை குறைச்சலா எடுத்துக்கிட்டேன். 3 ரோஸ் கலர் வயர், 18 ப்ளூ கலர் வயர்ல 5 1/2 கட் பண்ணிக்கிட்டேன்.
முதலில், நடுவி, கடைசியில் ரோஸ் கலர் வயரும், இடையில் 9 ப்ளூ கலர் வயரும்ன்னு கணக்கு பண்ணி 21 வயர்களை ரன்னிங்க் வயர் கொண்டு இணைச்சுட்டேன்..
7 வரிசையில் கூடையின் அடிப்பாகம் போட்டுக்கிட்டேன்.
கூடையை தரையில் வைக்கும்போது சாயாம இருக்க தென்னங்குச்சியை சொருகிட்டேன்...
அடியில் போட்டதுமாதிரியே முதலில், நடுவில், கடைசியில்ன்னு ரோஸ் கலர் வயரும் இடையில் 8 ப்ளூ கலர் வயரும் பின்னிக்கிட்டேன்.
கைப்பிடியும் ரெண்டு கலர் இருக்கமாதிரி பின்னிக்கிட்டேன்... சின்னதா ஒரு வயர் கூடை ரெடி...நாய்க்கு வேலை இல்லியாம்!! ஆனா, அது ஓடும் ஓட்டத்துக்கு குறைச்சல் இல்லன்னு பழமொழி சொல்வாங்க., அதுமாதிரி என் பொழப்பு. போன வாரம் முழுக்க புடுங்குன ஆணி இதுதான்.
நன்றியுடன்,
ராஜி.
Thursday, April 11, 2019
Thursday, April 04, 2019
லஞ்ச் பேக் - கைவண்ணம்
பின்னாடி வீட்டில் இருக்கவுங்க பள்ளிக்கு போகும் தன் பிள்ளைகள் மதியம் சாப்பாடு கொண்டு போக லஞ்ச் பேக் வேணும்ன்னு கேட்டாங்க. அதனால் போன வாரம் முழுக்க 2 கூடைதான் பின்னினேன்.
பிள்ளைகளில் பொண்ணு 4வதும், பையன் 2வதும் படிக்குறாங்க. ஒரு ரோலில் அளவுள்ள ரெண்டு கூடை கேட்டாங்க. வெவ்வேறு கலர்ல, மாடல்ல ரெண்டு கூட போட்டு கொடுத்தாச்சு.
இது கிராஸ் கட் கூடை....
ஸ்கூலுக்கு போக ரெண்டு கூடையும் ரெடி..
நாந்தான் ஸ்கூலுக்கு படிச்சு நல்ல புத்திய வளர்த்துக்கல. இதுவாவது நல்ல புத்தியோடு பொழைச்சுக்கட்டும்...
நன்றியுடன்,
ராஜி
Subscribe to:
Posts (Atom)